மாரியா, மேரியா: ஜாதியத்தை வெல்ல போராடும் தலித்துகள்!

மாரியா, மேரியா: ஜாதியத்தை வெல்ல போராடும் தலித்துகள்

வேதபிரகாஷ்

கண்ணநல்லூர் மாரியம்மனை வழிபட போராடிய தலித்துகள்: திருநெல்வேலி: நெல்லை அருகே பந்தப்புளி கோவிலில் தலித் மக்கள் கிடாவெட்டி பொங்கல் வைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மலைக்கு சென்ற ஏழு சமுதாய மக்கள் நேற்றும் ஊர் திரும்பவில்லை. நெல்லை மாவட்டம் பந்தப்புளி கிராமத்தில் உள்ள பழமையான கண்ணநல்லூர் மாரியம்மன் கோவில் உள்ளது. அதை பிற்படுத்தப்பட்ட ஏழு சமுதாய மக்கள் நிர்வகித்து வருகின்றனர். அந்த கோவிலில் வழிபட உரிமை கோரி, 2000ம் ஆண்டு முதல் தலித் மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இதுதொடர்பாக இரு தரப்பினர் இடையே சங்கரன்கோவில், மதுரை கோர்ட்டுகளில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், நேற்று கோவிலில் கொடை விழா நடத்த தலித் மக்களுக்கு அதிகாரிகள் அனுமதியளித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏழு சமுதாய மக்கள் கடந்த 23ம் தேதி பெட்டி, படுக்கைகள், கால்நடைகளுடன் சென்று மலையில் சமைத்து சாப்பிட்டு தங்கியுள்ளனர்.

திருநெல்வேலி : நெல்லை அருகே பந்தப்புளி கோவிலில் தலித் மக்கள் கிடாவெட்டி பொங்கல் வைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மலைக்கு சென்ற ஏழு சமுதாய மக்கள் நேற்றும் ஊர் திரும்பவில்லை.

நெல்லை மாவட்டம் பந்தப்புளி கிராமத்தில் உள்ள பழமையான கண்ணநல்லூர் மாரியம்மன் கோவில் உள்ளது. அதை பிற்படுத்தப்பட்ட ஏழு சமுதாய மக்கள் நிர்வகித்து வருகின்றனர். அந்த கோவிலில் வழிப

தலித் மக்களின் ஆசை நிறைவேறியது: பந்தப்புளியில் கிடாவெட்டி, பொங்கல்[1]: நேற்று 25-05-2010 அன்று தலித் மக்கள் மேளதாளத்துடன் புதுஉடைகள் அணிந்து, பொங்கல்பானையுடன் ஊர்வலமாக வந்து, மாரியம்மன் கோவில் முன் 41 பானைகளில் பொங்கலிட்டனர். கிடா, சேவல் வெட்டி அம்மனுக்கு படையலிட்டு, கோவிலில் பூஜை செய்து, காலை 7 முதல் 9.30 மணிக்குள் கொடை விழாவை நிறைவு செய்தனர். டி.ஐ.ஜி., சண்முகராஜேஸ்வரன், எஸ்.பி.,ஆஸ்ரா கார்க் தலைமையில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர். விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மலைக்கு சென்ற மற்ற சமுதாய மக்கள் நேற்று 3 வது நாளாக ஊர் திரும்பவில்லை. இத்தகைய சத்தியாகிரகம் செய்யத்துணிந்த இந்துக்கள், தமது சகோதரர்களை அனுசரித்து நடந்து கொண்டால் பிரச்சினையே இல்லையே? விழா முடிந்துவிட்டதால் இன்று ஏழு சமுதாய மக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி மலையில் இருந்து இறங்கச் செய்ய நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிகிறது.

இறையூர் தலித் கிருத்துவர்கள், வன்னியக் கிருத்துவர்கள்: உளுந்தூர்பேட்டை அருகே இருக்கும் இறையூர் கிராமத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தை பயன்படுத்துவதில் வன்னிய கிருத்துவர்கள் மற்றும் தலித் கிருத்துவர்களிடையே இடையே நீண்ட நாட்களாக மோதல் இருந்துவந்தது. தலித்துகள் கிறிஸ்தவ ஆலயத்துக்குள் வர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதையடுத்து, தலித்துகள் தங்களுக்கென தனியாக ஒரு ஆலயத்தை அமைத்து தரும்படி புதுவை மறைமாவட்ட பிஷ்ப்பிடம் கோரியிருந்தனர். இதனால், 2008-09 ஆண்டுகளில் கலவரம், போலீஸ் சூடு, இருவர் இறப்பு என பல நிகழ்ச்சிகள் துரதிருஷ்டமாக நடந்தேறியன.

மே 21 முதல் 31 2010 வரை நடக்கும் ஜெபமாலை மாதா தேர்த்திருவிழா: தலித் கிருத்துவர்களின் தெருக்களிலேயும் செல்லவேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது[2]. அதுமட்டுமல்லாது, தகுந்த பாதுகாப்பும் கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆகவே, கிருத்துவர்களும் தமது வித்தியாசத்தை மறந்து வழிபட இந்த சந்தர்ப்பத்தை உபயோகப் படுத்த வேண்டும்.

CAUGHT IN A ROW: Our Lady of Rosary Church in Eraiyur

இந்துக்களும், கிருத்துவர்களும்: உண்மையிலேயே, செக்யூலைஸக் கொள்கை பின்பற்றுவதாக இருந்தால், இரு மதத்தினரும் ஒற்றுமையாக அவரவர் கடவுளர்களை வழிபாடு செய்ய அரசு ஆவண செய்யவேண்டும்.  பந்தப்புளி கோவிலில் தலித் மக்கள் எப்படி வழிபட்டனரோ, அதே மாதிரி இங்கும் எறையூரில் கிருத்துவர்கள் ஒற்றுமையாக வழிபாடு செய்தால் அனைவருக்கும் நல்லது.

வேதபிரகாஷ்

26-05-2010


[1] தினமலர், தலித் மக்களின் ஆசை நிறைவேறியது : பந்தப்புளியில் கிடாவெட்டி, பொங்கல், மே.25, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=6445

[2] The Times of India,Take church cars through dalit areas in Eraiyur, says HC , http://epaper.timesofindia.com/Default/Client.asp?Daily=TOICH&showST=true&login=default&pub=TOI&Enter=true&Skin=TOINEW&GZ=T

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , ,

3 பதில்கள் to “மாரியா, மேரியா: ஜாதியத்தை வெல்ல போராடும் தலித்துகள்!”

 1. vedaprakash Says:

  Take church cars through dalit areas in Eraiyur, says HC
  TIMES NEWS NETWORK
  http://epaper.timesofindia.com/Default/Client.asp?Daily=TOICH&showST=true&login=default&pub=TOI&Enter=true&Skin=TOINEW&GZ=T

  Chennai: The Madras high court has directed Vanniyar Christians in Eraiyur village in Villupuram to ensure that a procession carrying a statue of ‘Jebamalai Matha’ (Our Lady of Rosary) passes through streets inhabited by dalit Christians during their ongoing annual festival.
  Disposing of a petition from Eraiyur village dalit Christians, Justice D Hariparanthaman said it really shocked one’s conscience that the statues were not being taken through of dalit habitations. “I am of the view that it amounts to practising untouchability, which is prohibited under Article 17 of the Constitution,” he observed.
  He noted that pursuant to a trial court order, the procession was taken out through dalit streets in the same village in May 2009. He directed the superintendent of police, Villupuram, to give adequate police protection to the procession.
  The festival is being held from May 21 to 31. The Eraiyur church was gripped by controversy last year over charges that the dominant Vanniyar Christians discriminated against dalits. Two persons were killed in police firing during a protest in March 2009 as a result of this caste divide.
  The dalit Christian group had originally filed a petition before the principal district munsiff court, Ulundurpet, seeking various forms of relief, including a direction to the Archbishop of Puducherry-Cuddalore, the Eraiyur Our Lady of Rosary Church parish priest and the Vanniyar Christian section of the congregation to take the procession of three cars carrying the statues if ‘Jebamalai Matha’ and St Anthony through dalit areas during the festival.
  The court granted the order, but the Vanniyar Christians filed a revision petition in the high court. The HC dismissed the petition and also made it clear that no fresh application need be filed for a similar order for the May 2010 festival.
  The high court also directed the trial court to dispose of the case pending before it within two weeks. However, the Ulundurpet court did not do so within the period. On April 30, it adjourned the matter to May 31. Aggrieved by this, dalit Christians approached the high court with a criminal revision petition.

 2. M. Nachiappan Says:

  வாஸ்கோட காமா இந்தியாவில் வந்து இறங்கியபோது, இந்துக்கள், “மாரி, மாரி, மாரி” என்று சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தனர். ஆனால், விஷயம் தெரியாத, அந்த கிருத்துவவாதி, அவர்கள், “மேரி, மேரி, மேரி”, என்றுதான் கும்பிட்டுக் கொண்டிருந்தார்கள் என்று எழுதி வைத்தான். பாவம், இன்னால் வந்த “கிருத்துவ ஆராய்ச்சியளர்களும்” அவ்வாறே ரீல் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

  அதுபோலத்தான், இந்த கதையும்.

  முதலில், இந்திய கிருத்துவர்கள், கிருத்துவத்தின் உண்மையை அறிந்தால், அதை விட்டுவிட்டு தாமாகவே, வெளிவந்து விடுவர்.

 3. vedaprakash Says:

  தலித் கிறிஸ்தவர்கள் டில்லியில் ஆர்ப்பாட்டம்
  பதிவு செய்த நாள் : ஜூலை 24,2010,00:27 IST
  http://www.dinamalar.com/News_Detail.asp?Id=46025

  சென்னை : தலித்களாக இருந்து கிறிஸ்தவர்களாகவோ அல்லது முஸ்லிம்களாகவே மதம் மாறிய தலித்துகளுக்கு உரிய சலுகைகளையும் வழங்க கோரி, நேற்று டில்லியில் பேரணி மற்றும் போராட்டம் நடத்தப்பட்டது.இந்த பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் தலைமை வகித்தார்.

  பீகாரைச் சேர்ந்த எம்.பி., அலி அன்வர் அன்சாரி, முனைவர் கோபால் சிங் தலைமையிலான சிறுபான்மையினர் கமிஷன் உறுப்பினர் ஜவகர் ராஜ், பிராங்க்ளின் தாமஸ், கிறிஸ்தவ வர்த்தகக் கழகத்தின் துணைத் தலைவர்கள் தயா தேவதாஸ் ஆகியோர் பேசினர்.ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி முடிவில், தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையிலான குழுவினர், ஜனாதிபதி மாளிகைக்கு சென்றனர்.அங்கு ஜனாதிபதிபிரதிபா பாட்டீலை சந்தித்து, தலித் கிறிஸ்தவர்களையும், தலித் முஸ்லிம்களையும், தாழ்ப்பட்டோர் பட்டியலில் சேர்க்க, ஆவன செய்யும்படி கேட்டுக் கொண்டனர்.மேலும், மத்திய அமைச்சர்கள் வாசன், வீரப்ப மொய்லி, முகுல் வாஸ்னிக், பெர்ணான்டஸ் ஆகியோரையும் சந்தித்து மனு அளித்தனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: