அமைச்சரைப் பற்றிய ஓரினப்புணர்ச்சி புகாரும், திருநங்கையின் கொலைமுயற்சி புகாரும்!

அமைச்சரைப் பற்றிய ஓரினப் புணர்ச்சி புகாரும், திருநங்கையின் கொலைமுயற்சி புகாரும்!

சென்னையில் சமீபத்தில் தான் தடபுடலாக ஒரு குறும்பட விழா, கலந்துரையாடல், விவாதம் எல்லாம் நடைப்பெற்றன[1]. ஆணல்ல-பெண்ணல்ல, ஆணும்-பெண்ணும், இருபாலர், அலி, ஓரின சேர்க்கையாலர், திருநங்கையர், திருக்காளை / திருமகன் என்றெல்லாம் சொல்லப்படுகின்றவர்களுக்கான இயக்கம் [ Lesbian, Gay and Bisexual Transgender (LGBT)] எல்.ஜி.பி.டி என்று சொல்லிக் கொண்டு எல்லாவிதமான முரண்பட்ட செக்ஸ் பழக்கதாரர்களுக்கு உரிமை கேட்டு விழா நடத்தின[2]. அந்நிகழ்சி நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் போதே கல்கி என்ற திருநங்கை பாண்டிச்சேரியில் தன்னை யாரோ கற்பழிக்க வந்தனர் என்று புகார் செய்து கொண்டிருந்தார். இப்பொழுது ஒரு பக்கம், ஒரு ஆண், அதிலும் ஒரு மாநில அமைச்சர் ஒருபாலியலில் ஈடுபட்டிருந்தார் என்று குற்றஞ்சாட்டப் பட்டு, அவரை பதவி விலக வைத்துள்ளனர். மறுபுறம், திருநங்கை ரோஸ் தன் கையைப் பிடித்து இழுத்ததுடன், கடத்தல் முயற்சியிலும் ஈடுபட்டனர் என்று புகார் செய்துள்ளார். வேடிக்கை என்னவென்றால் இந்த இயக்கங்கள் எல்லாம் இப்பொழுது வாயை மூடிக் கொண்டு இருக்கின்றன.

திருநங்கை நடிகையின் புகார்:  தான் நடித்து வரும் படத்தின் இயக்குனர், தூண்டுதலின் பேரில், மிரட்டிய உதவி இயக்குனர்கள் மீது நடவடிக்கை கோரி, திருநங்கை ரோஸ், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், மனு அளித்துள்ளார்[3]. சென்னை, தி.நகரைச் சேர்ந்தவர், ரோஸ் வெங்கடேசன், 33; திருநங்கை. இவர் தற்போது, “வாய்மை’ எனும் படத்தில், நடித்து வருகிறார். நேற்று, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த ரோஸ், புகார் ஒன்றை அளித்தார். அப்புகாரில், அவர் கூறியிருப்பதாவது:

காரில் சென்று கொண்டிருந்தவரை டூவீலரில் வழிமறித்த இருவர்: வாய்மைபடத்தில் நடித்து வருகிறேன். அப்படத்தின் இயக்குனர் செந்தில். படத்தில் நடிப்பதற்கான, “கால்ஷீட்கொடுக்கப்பட்டது. ஆனால், அதற்கான சம்பளத் தொகை, முழுவதும் கொடுக்கப்படவில்லை. அதன் பின், “கால்ஷீட்டை நீட்டித்த போது, அதற்கான ஒப்பந்தம் போடப்படவில்லை. வாய்மொழியாக உத்தரவாதம் கொடுக்கப்பட்டது. இந்நிலையில், “கால்ஷீட்நாட்களில், பெரும்பாலும் படப்பிடிப்பு நடப்பதில்லை.”கால்ஷீட்தொடர்பான பிரச்னையில், நேற்று முன்தினம், 3ம் தேதி, இரவு, 7:30 மணிக்கு காரில், தேனாம்பேட்டை பகுதியில் நான் வந்து கொண்டிருந்த போது, உதவி இயக்குனர் இருவர், டூவீலரில் வந்து, காரை வழிமறித்து நிறுத்தி, மிரட்டினர். கையைப் பிடித்து இழுத்ததுடன், கடத்தல் முயற்சியிலும் ஈடுபட்டனர். இதனால், என் உயிருக்கும், உடைமைகளுக்கும் ஆபத்து உள்ளது. யாரோ கொலை செய்ய முயல்வதாகவும் தெரிகிறது[4]. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்”,  இவ்வாறு, மனுவில் கூறியுள்ளார்.

மத்தியபிரதேச மாநில நிதி அமைச்சர் ஓரினச் சேர்க்கை புகாருக்காக ராஜினாமா செய்துள்ளார்: தன் வீட்டில் வேலையாளுடன், ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதாக, ம.பி., மாநில நிதி அமைச்சர், ராகவ்ஜிக்கு எதிராக, புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அமைச்சர் பதவியை, அவர் ராஜினாமா செய்தார்[5]. மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. நிதி அமைச்சராக, பா.ஜ.,வைச் சேர்ந்த, மூத்த தலைவரான, ராகவ்ஜி, 79, பதவி வகித்து வந்தார். இந்நிலையில், அவரின் வீட்டில் வேலை பார்த்து வந்த 30 வயதான ராஜ்குமார் டங்கி, அமைச்சருக்கு எதிராக, போலீசில், பரபரப்பு புகார் அளித்தார். அதில், அமைச்சர், தன்னுடன், ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக, அவர் தெரிவித்திருந்தார்[6]. இது தொடர்பான, “சிடி’ யையும், போலீசாரிடம் அளித்தார். இந்த தகவல் வெளியானதும், ம.பி., அரசியலில், பெரும் பரபரப்பும், அதிர்ச்சியும் ஏற்பட்டது. செக்ஸ் குற்றச்சாட்டுக்கு ஆளான, ராகவ்ஜி, அனுபவம் நிறைந்த அரசியல்வாதி. 10 ஆண்டுகளாக, நிதி அமைச்சராக பதவி வகிக்கிறார். அவர் மீதான புகார் எழுந்ததும், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும்படி, முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், அவருக்கு அறிவுறுத்தினார்.  இதையடுத்து, அவர், தன் பதவியை ராஜினாமா செய்தார்[7]. அவரின் ராஜினாமாவை, கவர்னர் ராம் நரேஷ் யாதவ், ஏற்றுக் கொண்டார்.

தினபூமியின் கற்பழிப்புப் புகார் செய்தி: இதில் வேடிக்கையென்னவென்றால், தினபூமி கற்பழிப்பு புகாரில் சிக்கிய மத்தியபிரதேச நிதி அமைச்சர் ராகவ்ஜி.  தனது நிதிஅமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். என்று எய்தி வெளியிட்டுள்ளது[8]. 79 வயதான அமைச்சர் ராகவ்ஜி மீது கற்பழிப்பு புகார் கூறியவர் வேறு யாருமல்ல. அவர் வீட்டு வேலைக்காரப் பெண் தான், அமைச்சர் மீது காவல் நிலையத்தில் அவர் கற்பழிப்புப்  புகாரை கொடுத்துள்ளார். இதுதொடர்பான ஆபாசப்பட கேசட்டை அவர் வழங்கியுள்ளார். இதையடுத்து ராகவ்ஜி தனது பதவி விலகல் கடிதத்தை முதல் அமைச்சரிடம் வழங்க, அதை அவர் கவர்னருக்கு சிபாரிசு செய்து அனுப்பினார். வேலைக் காரப் பெண் கொடுத்த சி.டி.ஆபாசம் நிறைந்தது. அதில் என்னை ராகவ்ஜி கற்பழித்தார் என்று கூறியதற்கான ஆதாரம் உள்ளது என்றும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு ஆண்-பெண்ணாகி உள்ளதும் விசித்திரம் தான். தினபூமிக்கு தனியாக விஷ்யங்கள் கிடைத்துள்ளன போலும். ஒருவேளை “ஆணல்ல-பெண்ணல்ல” என்றால் விசயமே மாறிவிடுமோ என்னமோ?

ராகவ்ஜி விசயத்தில் நடந்தது என்ன?: ஹீராபென் என்ற ராகவ்ஜியின் மனைவி கூறுவதாவது, “அவன் போபாலில் வீட்டு வாடகை அதிகம் என்பதால் எங்கள் வீட்டிலேயே தங்கியிருந்தான். எண்ணை மசாஜ் தான் அவன் செய்து வந்தான். அவன் சொல்வது போல எதுவும் இல்லை”. ஆனால் ராஜ்குமார் டங்கி, ராகவ்ஜி தனது ஆணுறுப்பிற்கு எண்ணை மற்றும் ஆன்டிசெப்டிக் களிம்பு பூசும்படியும், மசாஜ் செய்யும்படியும் வற்புறுத்துவதாக புகாரில் கூறியுள்ளான்[9]. ஒரு நர்ஸ் செய்யும் வேலை ஆபாசமாகுமா அல்லது ஓரினப்புணர்ச்சி ஆகுமா என்று தெரியவில்லை. “பிசியோ தெராபிஸ்ட்” என்று வீட்டிற்கு வந்து கை-கால்களை, உடம்பைப் பிடித்து விடுகின்றனர். நாளைக்கு அவர்களும் இத்தகைய புகாரை செய்யலாம். ஆக, இத்தகைய தனிப்பட்ட நபர்களின் விஷயங்களை பெரிது படுத்துகிறார்களா அல்லது அரசியலாக்குகிறார்களா என்று தெரியவில்லை.

பொதுவாக பிரபலம் இல்லாதவர் மீது திடீரென்று புகார்கள் கிள்ளம்பியுள்ள நிலை: சில ஆண்டுகளுக்கு முன்னர் இவரைப் பற்றிய ஒரு சிடி புழக்கத்தில் விடப்பட்டது[10]. ஆனால் அதைப் பற்றி அவர் கவலைப்படவில்லை. ரூ.40,000/- கொடுத்து கண்ணாடி வாங்கிக் கொண்டார் என்று இன்னொரு புகார் எழுந்தது. அப்பொழுது, அப்படி வாங்க தனக்கு உரிமை உண்டு என்று தெளிவு படுத்தினார்[11]. இதையெல்லாம் பார்க்கும் போது, இவர்மீது வேண்டுமென்றே யாரோ பிரச்சார நோக்கத்துடன் செயல்படுகின்றனர் என்றும் கூறப்படுகிறது[12]. மாநில காங்கிரஸ்காரர்கள் இதனை பெரிதுபடுத்த விரும்புகின்றனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த என். டி. திவாரி புகைப்பட ஆதாரங்களுடன் மாட்டிக் கொண்டார். அபிஷேக் சிங்வியும் வீடியோ ஆதாரத்துடன் பிடிபட்டார். திவாரி ஆந்திர கவர்னர் பதவிலிலிருந்து ராஜினாமா செய்து ஒதுங்கியிருக்கும் போது, சிங்வி மறுபடியும் வெளியே வந்து காங்கிரஸின் செய்தி தொடர்பாளராக பேசி வருகிறார். இதனால், காங்கிரஸ் தான் வேலையாள் மூலமாக இத்தகைய பிரச்சினையைக் கிளப்பிவிடுகிறது என்றும் சொல்லப்படுகிறது.

உபியிலும் ஆளும் கட்சியின் அமைச்சர் மீது செக்ஸ் புகார் எழுப்பப் பட்டுள்ளது. முல்லாயம் சிங் கட்சியின் அமைச்சர், போனில் கட்சி பெண் தொண்டரிடம் 18-20 வயதில் உள்ள பெண்களைக் கொண்டு வா என்று சொல்வது போல “ஹெட்லைன்ஸ் டுடே” உரையாடலை வெளியிட்டுள்ளது. ஆனால், முல்லாயம் இதற்கெல்லாம் மசியவில்லை. பிஜேபிதான் அந்த 79-80 கிழவரை பதவியில் இருந்து நீக்கியதோடு, உறுப்பினர் ஸ்தானத்திலிருந்தும் நீக்கியுள்ளது.

வேதபிரகாஷ்

© 06-07-2013


[9] Mr. Raghavji’s wife Hiraben said, “He used to stay with us because rents are high in Bhopal. He used to only massage him [Raghavji]. All these accusations in the media did not happen.” In a separate affidavit accessed by this paper, Kushwah accused Mr. Raghavji of forcing him to massage his genitals with oil and antiseptic ointment.

http://www.thehindu.com/news/national/other-states/madhya-pradesh-minister-quits-after-sodomy-charge/article4885926.ece

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: