Archive for the ‘ஆன்மிக பிரசங்கங்கள்’ Category

நித்யானந்தாவும், திலீபனும்!

ஜூலை 10, 2010

நித்யானந்தாவும், திலீபனும்!

ஆன்மிக பிரசாரம்: நித்யானந்தாவுக்கு அனுமதி
First Published : 10 Jul 2010 01:18:58 AM IST

http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=India&artid=269645&SectionID=130&MainSectionID=130&SEO=&Titlஎ……………0%AE%BF

பெங்களூர், ஜூலை 9: ஆன்மிக பிரசாரம் செய்ய நித்யானந்தாவுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பெங்களூர் அருகே பிடுதியில் தியான பீடம், ஆசிரமம் நடத்தி வரும்  நித்யானந்தா, நடிகை ஒருவருடன் நெருக்கமாக இருப்பது போன்ற விடியோ காட்சிகள் கடந்த மே மாதம் தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பப்பட்டன. இதை அடுத்து நித்யானந்தா மீது பலாத்காரம், மோசடி உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இமாசல பிரதேசத்தில் தலைமறைவாக இருந்த நித்யானந்தாவும் அவரது சீடர்களும் ஏப்ரல் 21-ம் தேதி கைது செய்யப்பட்டனர். இதை அடுத்து நீதிமன்றக் காவலில் நித்யானந்தா ராம்நகர் சிறையில் அடைக்கப்பட்டார். இந் நிலையில் அவருக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் ஜூன் 11-ம் தேதி நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கியது.  விடுதலைக்குப் பிறகு ஆசிரமத்திலேயே தங்கியிருக்க வேண்டும். பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை பிடுதி காவல் நிலையத்தில் போலீஸார் முன் ஆஜராகி கையெழுத்திட  வேண்டும். பக்தர்கள் மத்தியில் ஆன்மிக பிரசங்கங்கள் செய்யக்கூடாது. போலீஸôரின் அனுமதியின்றி பிடுதியைவிட்டு வெளியே செல்லக்கூடாது என்று நீதிமன்றம் நிபந்தனைகளை விதித்தது.  இந் நிலையில் நிபந்தனைகளை தளர்த்துமாறு உயர் நீதிமன்றத்தில் அண்மையில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு நீதிபதி சுபாஷ் பி ஆதி முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.   அப்போது நித்யானந்தாவின் நிபந்தனை ஜாமீன் விதிகளை தளர்த்தினார் நீதிபதி. நித்யானந்தா இனிமேல் ஆன்மிக பிரசாரம் செய்யலாம். வழக்கு உள்ள குறிப்பிட்ட காவல் நிலையத்தில் 30 நாட்களுக்கு ஒரு முறை ஆஜரானால் போதும் என்று சுபாஷ் ஆதி உத்தரவிட்டார். இதனிடையே தன்னை சி.ஐ.டி. போலீஸôர் கைது செய்யும்போது பறிமுதல் செய்யப்பட்ட லேப்-டாப் கணினி, செல்போன், 22 கணினி ஹார்டு டிஸ்குகள், 10 விடியோ கேமராக்கள் உள்ளிட்ட பொருட்களை திருப்பி ஒப்படைக்க போலீஸôருக்கு உத்தரவிடுமாறு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை நித்யானந்தா மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு வரும் 16-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போலீஸ் பாதுகாப்புடன் விடுதலைப்புலி திலீபன் காமாட்சியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=36169

பதிவு செய்த நாள் : ஜூலை 10,2010,01:09

காஞ்சிபுரம் 09-07-2010: வெடிபொருட்கள் கடத்தல் வழக்கில் கியூ பிராஞ்ச் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த திலீபன், நேற்று காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் போலீஸ் பாதுகாப்புடன் சிறப்பு வழிபாடு நடத்தினார்.

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு வெடிபொருட்கள் கடத்தியதாக கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் திலீபன்(23) என்பவரை, சென்னை அருகே கியூ பிராஞ்ச் போலீசார் கைது செய்தனர். பூந்தமல்லி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டார். இவர் நேற்று காலை 10.30 மணிக்கு போலீஸ் வேனில் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு வந்தார்.

அவருக்கு பாதுகாப்பாக டி.எஸ்.பி., சாம்பசிவம் தலைமையில் 10 போலீசார் உடன் வந்தனர். போலீசார், திலீபனை நேரடியாக பக்தர்கள் வெளியே வரும் வாசல் வழியாக கோவில் உள்ளே அழைத்துச் சென்றனர். கோவிலுக்குள் சென்ற திலீபன், கருவறைக்கு முன்புள்ள அறையில் அமர்ந்து, அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தினார். கோவிலில் உச்சிகால பூஜை அபிஷேகத்திற்கு பணம் செலுத்தியிருந்தார். அபிஷேகம் முடிந்ததும் அம்மனுக்கு பட்டுப்புடவை சாத்தி வழிபட்டார்.

வழிபாடு முடிந்து புறப்படும் போது, கோவில் ஸ்தானீகர்களிடம் தாலிக்கயிறு இருந்தால் அம்மன் பாதத்தில் வைத்து கொடுக்கும்படி கோரினார். அவர்களும் இரண்டு தாலிக்கயிறுகளை அம்மன் பாதத்தில் வைத்து பூஜை செய்த பின், அவரிடம் வழங்கினர்.

தாலிக்கயிறு மற்றும் பிரசாதத்தை திலீபன் பயபக்தியுடன் பெற்றுக் கொண்டார். பகல் 12.30 மணிக்கு திலீபன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். திருமணத் தடை நீங்க வேண்டும் என்பதற்காக திலீபன் கோவிலுக்கு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Advertisements