Archive for the ‘உபி’ Category

ராகுலின் தலித் சித்தாந்த சொற்பொழிவு – தேர்தலுக்காக வேண்டி பேசிய மசாலா பேச்சு!

ஒக்ரோபர் 11, 2013

ராகுலின் தலித் சித்தாந்த சொற்பொழிவு – தேர்தலுக்காக வேண்டி பேசிய மசாலா பேச்சு!

அரசியலில் பௌதிகவியலை சேர்க்கும் அறிவுஜீவி: “தலித்துகளின்” மீது திடீரென்று ராகுலுக்கு கரிசனம் வந்து விட்டது. அதிலும் அவர்கள் அதிக வேகத்தைக் கொண்டிருக்க வேண்டும், புவியீர்ப்பு விசையிலிருந்து தப்பித்துச் செல்லும் அளவிற்கு வேகம் கொண்டிருக்க வேண்டும், பூமியின் அத்தகைய வேகம் 11.2 கிமீ/நொடி, ஜூபிடருக்கு 60 கிமீ/நொடி, இந்தியாவில் ஜாதி என்ற முறை இருப்பதால், தலித்துகளுக்கு ஜூபிடரைப் போன்ற வேகம் தேவை என்றெல்லாம் பேச ஆரம்பித்து விட்டார். அப்படி பேசும் போது, எதிர்கட்சிகளையும் விட்டு வைக்கவில்ல. “இந்தியா ஒளிர்கிறது”, என்று அவர்கள் சொன்னார்கள், ஆனால், 2004 மற்றும் 2009 தேர்தல்களில் தோல்வி அடைந்தார்கள். 2014 தேர்தலிலும் தோல்வி அடைவார்கள் என்றெல்லாம் பேசினார்[1]. இதில் வேடிக்கை என்னவென்றால், ஊழலைப் பற்றி துளிக்கூட மூச்சுவிடாமல், மற்றவற்றைப் பற்றி பேசிக் கொண்டிருப்பது இவரைக் கவனிப்பவர்கள் வெகுவாகவே அறிந்து கொள்கிறார்கள்.

மாயாவதியை ஆதரிப்பதுஎதிர்ப்பது,  காங்கிரஸின் அரசியல் விளையாட்டு: விக்யான் பவனில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, தேசிய விழிப்புணர்வு கூட்டத்தில் பேசும் போது, அம்பேத்கார் தான் முதல் முதலில் தப்பித்துச் செல்லும் வேகத்தைக் கொண்டிருந்தார். அதற்குப் பிறகு கன்ஷிராம் கொண்டிருந்தார்.  ஆனால், மாயாவதி தான் உயர்ந்தாலும், மற்ற தலித்துகள் உயரவிடாமல் தடுத்தார்[2]. இப்படி மாயாவதியை விமர்சிக்கும் அதே நாளில்தான், சோனியாவின் கைப் பொம்மையான அல்லது குண்டுக்கிளியான சிபிஐ மாயவதியின் மீது போடப்பட்ட “வருமானத்திற்கு அதிகமான சொத்துக் குவிப்பு” வழக்கிலிருந்து விடுவித்தது. அதாவது, ஒரு பக்கம் விடுவிப்பு, மற்றொரு பக்கம் சாடல் என்று ஆனால், தான் காங்கிரஸ் தலைவர்களிடம் தலித்துகளை பஞ்சாயத்து, எம்.எ.ஏ, எம்.பி மற்றும் கொள்கை அளவில் முன்னேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகக் கூறினார். தல்கடோரா ஸ்டேடியத்தில் நடைபெற்ற கூட்டத்தில், “தலித்துகள் காங்கிரஸின் முதுகெலும்பு”, என்றெல்லாம் பேசினார்[3].

காங்கிரஸ்பி.எஸ்.பி கூட்டணியில் உள்ள சிக்கல்: கன்ஷிராமின் இறந்த தினத்தை அனுஷ்டிக்கும் நாளில், மாயாவதி பதிலுக்கு காங்கிரஸ்தான் ஜாதியவாதத்துடன் செயல்படுகிறது என்று சாடியுள்ளார்[4]. கன்ஷிராமை காங்கிரஸ் என்றுமே மதிக்கவில்லை, அதுமட்டுமல்லாது எதிர்த்தும் உள்ளது, குறிப்பாக அவர் காலமான போது, துக்கம் கூட தெரிவிக்கவில்லை. இதனால் இந்நாட்டு தலித்துகள் என்றுமே காங்கிரஸை மன்னிக்காது[5] என்று எடுத்துக் காட்டினார். காங்கிரஸ் என்றுமே தலித்-எதிரியாகத்தன் இருந்துள்ளது[6]. 1996க்குப் பிறகு, காங்கிரஸ்-பி.எஸ்.பி கூட்டணி இருந்ததில்லை. மேலும், உபியைத் தவிர மற்ற மாநிலங்களில் தலித் ஓட்டுகள் காங்கிரஸுக்குப் பதிலாக பி.எஸ்.பிக்குத்தான் சென்றுள்ளன[7]. இதனை காங்கிரஸ் விரும்பவில்லை. அதனால் தான், இப்பொழுதும் கூட்டணி இல்லாமல், மாவாயதியை தாஜா செய்ய வழி பார்க்கிறது[8]. போதாகுறைக்கு சமஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளால், உபியை முன்னேற்ற முடியாது, காங்கிரஸால் தான் முடியும் என்றும் ராகுல் பேசியிருக்கிறார்[9]. ஆனால், உபியை எப்படி நேரு குடும்பம் ஆண்டுள்ளது என்பது எல்லோருக்கும் தெரிந்த விசயம் தான்.

தூங்கிக் கொண்டிருந்த தலித்குழுவை எழுப்பியது: காங்கிரஸின் எஸ்.சி குழு வருடங்களாக செயல்படாமல் இருந்தது. சமீபத்தில் தான், தலித்துகளின் ஓட்டுக்களை கவரலாம் என்ற எண்ணத்தில் அதனை உயிர்ப்பித்துள்ளனர். இக்குழுவில், ஓய்வு பெற்ற அரசு-அதிகாரிகள், சமூக-ஆர்வலர்கள், வக்கீல்கள் மற்றும் NSUI ன் ஒரு இருப்பினர் என்றுள்ளனர்[10]. இருப்பினும், இத்தனை ஆண்டுகளாகத் தூங்கிக் கொண்டிருந்த காங்கிரஸ், இப்பொழுது ஏதோ “தலித்துகளுக்காக” வேலை செய்வது போலக் காட்டிக் கொள்கிறது.

பட்டியல் இனத்தவர்களுக்கு அதிகாரமளித்தல்நிகழ்சியில்பேசியது[11]: புது தில்லியில் செவ்வாய்க்கிழமை (08-10-2013) நடைபெற்ற “பட்டியல் இனத்தவர்களுக்கு அதிகாரமளித்தல்’ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் ராகுல் காந்தி பேசியது:

  • இந்தியாவில் தலித்துகள் எழுச்சி பல கட்டங்களாக நடைபெற்றது.
  • முதல் கட்டம், காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து அரசியல்சாசனம் உருவாகவும், தலித்துகளுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கவும் காரணமாக இருந்த அம்பேத்கரின் எழுச்சி.
  • இரண்டாவது கட்டம், இட ஒதுக்கீட்டில் இருந்து ஒரு இயக்கம் உருவாக காரணமாக இருந்த பிஎஸ்பி நிறுவனத் தலைவர் கான்ஷிராமின் பிரவேசம். அதில் மாயாவதிக்கும் பங்கு இருந்தது.
  • தற்போது தலித் தலைவர்களை உருவாக்குவது என்ற முக்கியமான மூன்றாவது கட்டத்தில் நாடு இருக்கிறது.

தலித்துகள் மேம்பாட்டுக்கு பல்வேறு நிலைகளில் பங்களிப்பைச் செய்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு இது ஒரு மிகப் பெரிய வாய்ப்பாகும். பஞ்சாயத்து அளவில் தொடங்கி எம்எல்ஏ, எம்.பி., மற்றும் கட்சியின் கொள்கைகளை வரையறுக்கும் குழுக்கள் வரை தலித் தலைவர்களை உருவாக்க வேண்டும். காங்கிரஸ்வசம் இருந்த தலித்துகளை மண்டல் கமிஷன் விவகாரம் மற்றும் ராமர் கோயில் பிரச்னையின்போது தன் பக்கம் பிஎஸ்பி இழுத்துக் கொண்டதாக கூறும் காங்கிரஸார், அவர்களை மீண்டும் நமது கட்சியின் பக்கம் கொண்டு வர வேண்டும் என்று ராகுல் காந்தி கூறினார்.

சீதாராம் கேசரியை அவமதித்தது: சீதாராம் கேசரி (1916 – 24 October 2000) என்ற தலித் காங்கிரஸ் தலைவர் எங்கு சோனியாவிற்கு போட்டியாக வந்து விடுவாரோ என்று 1997ல் நடந்த பொதுக்குழு கூட்டத்தின் போது, அவரை பாத்ரூமில் பூட்டிவிட்டு, காங்கிரஸ்காரர்கள் சோனியாவை காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுத்தனர். அதுதான், அவர்கள் தலித் தலலைவருக்கு அளித்த மரியாதை, யோக்கியதை. சோனியாவும், ஐயோ, ஒரு தலித் காங்கிரஸ் தலைவரை இவ்வாறு அவமதித்து விட்டனரே என்று ஏதும் வருத்தப் பட்டதாகவும், அந்த தலைவர் பதவியை அவருக்கே ஒப்புவித்து மரியாதை செய்ததாகவும், தலித்துகளை அப்படியே தூக்கி நிறுத்தியதாகவும் இல்லை. மாறாக, தான்தான் தலைவி என்று நிரந்தரமாக இருந்து விட்டார், இருந்து வருகிறார். சீதாராம் கேசரி பாவம், பிறகு அவர் நொந்து போய் 2000ல் காலமாகி விட்டார்!  தருண் தேஜ்பால் என்பவர் அவரை “1997 வருடத்தின் வில்லன்” என்றே கடுமையாக சாடியுள்ளார்[12]. காங்கிரஸையே கெடுத்துவிட்டார் என்று வர்ணித்தார்[13]. வீர் சிங்வி என்ற காங்கிரஸ் அடிவருடி பத்திரிக்கையாளரும், காங்கிரஸின் தலைமையை தீர்மானிப்பதில் இவருக்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்றேல்லாம் கேட்டு அவமானப் படுத்தினார்[14]. இவர் 2ஜி ஊழலில், பர்கா தத் என்ற என்டிடிவி நிருபருடன், மந்திரி பதவிக்காக பறிந்துரைக்கும் “ஏஜென்டு / தரகர்” வேலையில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. ஆனால், அத்தகைய எல்லா மெகா ஊழல்களிலும் ஊறி, நாறிப் போன கட்சியின் தலைவரான ராகுல், சீதாராம் கேசரியை தூக்கியெரிந்த சோனியாவின் மகன், இன்று தலித்துகளின் விடுதலை, முன்னேற்றம் அவற்றில் இருக்க வேண்டிய வேகம், வேகத்தின் தன்மை என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்!

© வேதபிரகாஷ்

10-10-2013


[2] Addressing a function at Vigyan Bhavan on National Awareness Camp for Scheduled Castes Empowerment, Rahul Gandhi said B.R. Ambedkar was the first Dalit to attain escape velocity and after him Kanshi Ram channelised “the energy that was created due to reservation” and helped many Dalits attain escape velocity. But he said Mayawati, Bahujan Samaj Party (BSP) leader and former Uttar Pradesh chief minister, had captured the Dalit leadership and was not allowing others to rise.

[5] Addressing party workers here at Bahujan Prerna Kendra to mark the seventh death anniversary of Kanshi Ram, Mayawati said parties opposed to the party founder, especially Congress, had a “casteist” and “disdainful” attitude towards him. “This is the reason why the Congress-led government at the Centre did not declare even a day’s mourning on his death for which our people will never forgive Congress. This is a proof of their anti-Dalit mentality for which we criticise them in strong words,” she said in a statement issued here.

http://www.dnaindia.com/india/1901088/report-mayawati-attacks-rahul-gandhi-says-congress-has-a-bias-against-dalits

[7] UP Congress chief Nirmal Khatri said, “As of now, we are preparing to contest all 80 seats in UP. Under Rahul ji’s leadership, we are confident of winning at least 40.” Asked about the chances of an alliance with the BSP, he said, “I am not aware of any talks in this regard. We will act if and when the party high command takes a decision in this regard.” The Congress is wary that a nationwide alliance with the BSP could transfer its traditional Dalit votes in other states to the BSP forever. That is what happened in UP after the Congress-BSP alliance in the 1996 assembly elections. For now, it’s a question of who blinks first.

http://daily.bhaskar.com/article-ht/UP-facing-strong-narendra-modi-challenge-in-up-congress-seeks-alliance-with-bsp-4391648-NOR.html

[13] Sitaram Kesri’s notoriety is firmly in place, sealed for history in 1997. For our villain of the year has not only derailed governments, but has also ravaged the party that bred him. Not to Rajiv  Gandhi, not to Narasimha Rao, but to Sitaram Kesri will go the honours for burying the party of Nehru and Gandhi. In a curious way, things for the Congress have come a full circle. The party founded by an ornithologist 112 years back essentially as a forum for elite Indians has, after a glittering history of mass struggle and mass acceptance, retreated into the politics of closed rooms, headed appropriately by the master of closed-room deals and strategies. http://www.outlookindia.com/article.aspx?204883

Advertisements

அமைச்சரைப் பற்றிய ஓரினப்புணர்ச்சி புகாரும், திருநங்கையின் கொலைமுயற்சி புகாரும்!

ஜூலை 6, 2013

அமைச்சரைப் பற்றிய ஓரினப் புணர்ச்சி புகாரும், திருநங்கையின் கொலைமுயற்சி புகாரும்!

சென்னையில் சமீபத்தில் தான் தடபுடலாக ஒரு குறும்பட விழா, கலந்துரையாடல், விவாதம் எல்லாம் நடைப்பெற்றன[1]. ஆணல்ல-பெண்ணல்ல, ஆணும்-பெண்ணும், இருபாலர், அலி, ஓரின சேர்க்கையாலர், திருநங்கையர், திருக்காளை / திருமகன் என்றெல்லாம் சொல்லப்படுகின்றவர்களுக்கான இயக்கம் [ Lesbian, Gay and Bisexual Transgender (LGBT)] எல்.ஜி.பி.டி என்று சொல்லிக் கொண்டு எல்லாவிதமான முரண்பட்ட செக்ஸ் பழக்கதாரர்களுக்கு உரிமை கேட்டு விழா நடத்தின[2]. அந்நிகழ்சி நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் போதே கல்கி என்ற திருநங்கை பாண்டிச்சேரியில் தன்னை யாரோ கற்பழிக்க வந்தனர் என்று புகார் செய்து கொண்டிருந்தார். இப்பொழுது ஒரு பக்கம், ஒரு ஆண், அதிலும் ஒரு மாநில அமைச்சர் ஒருபாலியலில் ஈடுபட்டிருந்தார் என்று குற்றஞ்சாட்டப் பட்டு, அவரை பதவி விலக வைத்துள்ளனர். மறுபுறம், திருநங்கை ரோஸ் தன் கையைப் பிடித்து இழுத்ததுடன், கடத்தல் முயற்சியிலும் ஈடுபட்டனர் என்று புகார் செய்துள்ளார். வேடிக்கை என்னவென்றால் இந்த இயக்கங்கள் எல்லாம் இப்பொழுது வாயை மூடிக் கொண்டு இருக்கின்றன.

திருநங்கை நடிகையின் புகார்:  தான் நடித்து வரும் படத்தின் இயக்குனர், தூண்டுதலின் பேரில், மிரட்டிய உதவி இயக்குனர்கள் மீது நடவடிக்கை கோரி, திருநங்கை ரோஸ், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், மனு அளித்துள்ளார்[3]. சென்னை, தி.நகரைச் சேர்ந்தவர், ரோஸ் வெங்கடேசன், 33; திருநங்கை. இவர் தற்போது, “வாய்மை’ எனும் படத்தில், நடித்து வருகிறார். நேற்று, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த ரோஸ், புகார் ஒன்றை அளித்தார். அப்புகாரில், அவர் கூறியிருப்பதாவது:

காரில் சென்று கொண்டிருந்தவரை டூவீலரில் வழிமறித்த இருவர்: வாய்மைபடத்தில் நடித்து வருகிறேன். அப்படத்தின் இயக்குனர் செந்தில். படத்தில் நடிப்பதற்கான, “கால்ஷீட்கொடுக்கப்பட்டது. ஆனால், அதற்கான சம்பளத் தொகை, முழுவதும் கொடுக்கப்படவில்லை. அதன் பின், “கால்ஷீட்டை நீட்டித்த போது, அதற்கான ஒப்பந்தம் போடப்படவில்லை. வாய்மொழியாக உத்தரவாதம் கொடுக்கப்பட்டது. இந்நிலையில், “கால்ஷீட்நாட்களில், பெரும்பாலும் படப்பிடிப்பு நடப்பதில்லை.”கால்ஷீட்தொடர்பான பிரச்னையில், நேற்று முன்தினம், 3ம் தேதி, இரவு, 7:30 மணிக்கு காரில், தேனாம்பேட்டை பகுதியில் நான் வந்து கொண்டிருந்த போது, உதவி இயக்குனர் இருவர், டூவீலரில் வந்து, காரை வழிமறித்து நிறுத்தி, மிரட்டினர். கையைப் பிடித்து இழுத்ததுடன், கடத்தல் முயற்சியிலும் ஈடுபட்டனர். இதனால், என் உயிருக்கும், உடைமைகளுக்கும் ஆபத்து உள்ளது. யாரோ கொலை செய்ய முயல்வதாகவும் தெரிகிறது[4]. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்”,  இவ்வாறு, மனுவில் கூறியுள்ளார்.

மத்தியபிரதேச மாநில நிதி அமைச்சர் ஓரினச் சேர்க்கை புகாருக்காக ராஜினாமா செய்துள்ளார்: தன் வீட்டில் வேலையாளுடன், ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதாக, ம.பி., மாநில நிதி அமைச்சர், ராகவ்ஜிக்கு எதிராக, புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அமைச்சர் பதவியை, அவர் ராஜினாமா செய்தார்[5]. மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. நிதி அமைச்சராக, பா.ஜ.,வைச் சேர்ந்த, மூத்த தலைவரான, ராகவ்ஜி, 79, பதவி வகித்து வந்தார். இந்நிலையில், அவரின் வீட்டில் வேலை பார்த்து வந்த 30 வயதான ராஜ்குமார் டங்கி, அமைச்சருக்கு எதிராக, போலீசில், பரபரப்பு புகார் அளித்தார். அதில், அமைச்சர், தன்னுடன், ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக, அவர் தெரிவித்திருந்தார்[6]. இது தொடர்பான, “சிடி’ யையும், போலீசாரிடம் அளித்தார். இந்த தகவல் வெளியானதும், ம.பி., அரசியலில், பெரும் பரபரப்பும், அதிர்ச்சியும் ஏற்பட்டது. செக்ஸ் குற்றச்சாட்டுக்கு ஆளான, ராகவ்ஜி, அனுபவம் நிறைந்த அரசியல்வாதி. 10 ஆண்டுகளாக, நிதி அமைச்சராக பதவி வகிக்கிறார். அவர் மீதான புகார் எழுந்ததும், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும்படி, முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், அவருக்கு அறிவுறுத்தினார்.  இதையடுத்து, அவர், தன் பதவியை ராஜினாமா செய்தார்[7]. அவரின் ராஜினாமாவை, கவர்னர் ராம் நரேஷ் யாதவ், ஏற்றுக் கொண்டார்.

தினபூமியின் கற்பழிப்புப் புகார் செய்தி: இதில் வேடிக்கையென்னவென்றால், தினபூமி கற்பழிப்பு புகாரில் சிக்கிய மத்தியபிரதேச நிதி அமைச்சர் ராகவ்ஜி.  தனது நிதிஅமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். என்று எய்தி வெளியிட்டுள்ளது[8]. 79 வயதான அமைச்சர் ராகவ்ஜி மீது கற்பழிப்பு புகார் கூறியவர் வேறு யாருமல்ல. அவர் வீட்டு வேலைக்காரப் பெண் தான், அமைச்சர் மீது காவல் நிலையத்தில் அவர் கற்பழிப்புப்  புகாரை கொடுத்துள்ளார். இதுதொடர்பான ஆபாசப்பட கேசட்டை அவர் வழங்கியுள்ளார். இதையடுத்து ராகவ்ஜி தனது பதவி விலகல் கடிதத்தை முதல் அமைச்சரிடம் வழங்க, அதை அவர் கவர்னருக்கு சிபாரிசு செய்து அனுப்பினார். வேலைக் காரப் பெண் கொடுத்த சி.டி.ஆபாசம் நிறைந்தது. அதில் என்னை ராகவ்ஜி கற்பழித்தார் என்று கூறியதற்கான ஆதாரம் உள்ளது என்றும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு ஆண்-பெண்ணாகி உள்ளதும் விசித்திரம் தான். தினபூமிக்கு தனியாக விஷ்யங்கள் கிடைத்துள்ளன போலும். ஒருவேளை “ஆணல்ல-பெண்ணல்ல” என்றால் விசயமே மாறிவிடுமோ என்னமோ?

ராகவ்ஜி விசயத்தில் நடந்தது என்ன?: ஹீராபென் என்ற ராகவ்ஜியின் மனைவி கூறுவதாவது, “அவன் போபாலில் வீட்டு வாடகை அதிகம் என்பதால் எங்கள் வீட்டிலேயே தங்கியிருந்தான். எண்ணை மசாஜ் தான் அவன் செய்து வந்தான். அவன் சொல்வது போல எதுவும் இல்லை”. ஆனால் ராஜ்குமார் டங்கி, ராகவ்ஜி தனது ஆணுறுப்பிற்கு எண்ணை மற்றும் ஆன்டிசெப்டிக் களிம்பு பூசும்படியும், மசாஜ் செய்யும்படியும் வற்புறுத்துவதாக புகாரில் கூறியுள்ளான்[9]. ஒரு நர்ஸ் செய்யும் வேலை ஆபாசமாகுமா அல்லது ஓரினப்புணர்ச்சி ஆகுமா என்று தெரியவில்லை. “பிசியோ தெராபிஸ்ட்” என்று வீட்டிற்கு வந்து கை-கால்களை, உடம்பைப் பிடித்து விடுகின்றனர். நாளைக்கு அவர்களும் இத்தகைய புகாரை செய்யலாம். ஆக, இத்தகைய தனிப்பட்ட நபர்களின் விஷயங்களை பெரிது படுத்துகிறார்களா அல்லது அரசியலாக்குகிறார்களா என்று தெரியவில்லை.

பொதுவாக பிரபலம் இல்லாதவர் மீது திடீரென்று புகார்கள் கிள்ளம்பியுள்ள நிலை: சில ஆண்டுகளுக்கு முன்னர் இவரைப் பற்றிய ஒரு சிடி புழக்கத்தில் விடப்பட்டது[10]. ஆனால் அதைப் பற்றி அவர் கவலைப்படவில்லை. ரூ.40,000/- கொடுத்து கண்ணாடி வாங்கிக் கொண்டார் என்று இன்னொரு புகார் எழுந்தது. அப்பொழுது, அப்படி வாங்க தனக்கு உரிமை உண்டு என்று தெளிவு படுத்தினார்[11]. இதையெல்லாம் பார்க்கும் போது, இவர்மீது வேண்டுமென்றே யாரோ பிரச்சார நோக்கத்துடன் செயல்படுகின்றனர் என்றும் கூறப்படுகிறது[12]. மாநில காங்கிரஸ்காரர்கள் இதனை பெரிதுபடுத்த விரும்புகின்றனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த என். டி. திவாரி புகைப்பட ஆதாரங்களுடன் மாட்டிக் கொண்டார். அபிஷேக் சிங்வியும் வீடியோ ஆதாரத்துடன் பிடிபட்டார். திவாரி ஆந்திர கவர்னர் பதவிலிலிருந்து ராஜினாமா செய்து ஒதுங்கியிருக்கும் போது, சிங்வி மறுபடியும் வெளியே வந்து காங்கிரஸின் செய்தி தொடர்பாளராக பேசி வருகிறார். இதனால், காங்கிரஸ் தான் வேலையாள் மூலமாக இத்தகைய பிரச்சினையைக் கிளப்பிவிடுகிறது என்றும் சொல்லப்படுகிறது.

உபியிலும் ஆளும் கட்சியின் அமைச்சர் மீது செக்ஸ் புகார் எழுப்பப் பட்டுள்ளது. முல்லாயம் சிங் கட்சியின் அமைச்சர், போனில் கட்சி பெண் தொண்டரிடம் 18-20 வயதில் உள்ள பெண்களைக் கொண்டு வா என்று சொல்வது போல “ஹெட்லைன்ஸ் டுடே” உரையாடலை வெளியிட்டுள்ளது. ஆனால், முல்லாயம் இதற்கெல்லாம் மசியவில்லை. பிஜேபிதான் அந்த 79-80 கிழவரை பதவியில் இருந்து நீக்கியதோடு, உறுப்பினர் ஸ்தானத்திலிருந்தும் நீக்கியுள்ளது.

வேதபிரகாஷ்

© 06-07-2013


[9] Mr. Raghavji’s wife Hiraben said, “He used to stay with us because rents are high in Bhopal. He used to only massage him [Raghavji]. All these accusations in the media did not happen.” In a separate affidavit accessed by this paper, Kushwah accused Mr. Raghavji of forcing him to massage his genitals with oil and antiseptic ointment.

http://www.thehindu.com/news/national/other-states/madhya-pradesh-minister-quits-after-sodomy-charge/article4885926.ece