Archive for the ‘கார்ப்பரேசன்’ Category

கழிவு நீர் கால்வாய் சீரமைப்பு, அடைப்பு நீக்கம், பழுதமைப்பு – பொது மக்கள் படும் அவதி!

ஒக்ரோபர் 8, 2013

கழிவு நீர் கால்வாய் சீரமைப்பு, அடைப்பு நீக்கம், பழுதமைப்பு – பொது மக்கள் படும் அவதி!

ஒரு வீட்டின் முன் அரைகுறையாக திறந்து கிடக்கும் நிலை. உள்ளே கழிவு நீர் தேங்கியிருப்பதையும் காணலாம்!

ஒரு வீட்டின் முன் அரைகுறையாக திறந்து கிடக்கும் நிலை. உள்ளே கழிவு நீர் தேங்கியிருப்பதையும் காணலாம்!

மேற்கு மாம்பலம் அல்லது பழைய மாம்பலத்தின் கழிவு நீர் கால்வாய் சீரமைப்பு, அடைப்பு நீக்கம், பழுதமைப்பு முதலியவற்றைப் பற்றி அதிகமாகவே ஊடகங்களில் வந்துள்ளன[1]. ஆனால், முழுமையாக நிலைமையைப் பற்றி தெரிவிக்காமல் “செய்தி-வெளியீடு” ரீதியில் சில விசயங்களை, அதற்கேற்றவாறான புகைப்படங்களுடன் வெளியிட்டார்கள்[2]. ரூ. 123.53 கோடிகளில் இவ்வேலை நடக்கிறது என்றெல்லாம் செய்திகள் வந்தன. ஆனால், அதற்கேற்றபடி, நாணயமாக வேலை செய்தால் போல தெரியவில்லை[3]. டைம்ஸ் ஆப் இந்தியாவில் “பழைய மாம்பலத்தில் சேறு தான் ஓடுகிறது, தெருக்கள் இல்லை”, என்று நக்கலாகத் தலைப்பிட்டு செய்தி வெளியிட்டது[4]. உண்மையில், அந்த வேலை செய்பவர்களின் அக்கிரம் தாங்கமுடியவில்லை என்பதனை, இன்னொரு தெருவில் தெரிய வருகிறது. அதுதான் வெங்காடாஜல ஐயர் என்கின்ற வெங்காடாஜலம் தெரு.

பச்சை பசேல் என்று தேங்கியிருக்கும் கழிநீர்! பைப்புகளை உடைத்த சீரமைப்பு வீரர்கள்!

பச்சை பசேல் என்று தேங்கியிருக்கும் கழிநீர்! பைப்புகளை உடைத்த சீரமைப்பு வீரர்கள்!

ஆமாம், “வெங்காடாஜலம்” என்ற பெயருக்கேற்றபடி, அத்தெருவில் முன்பெல்லாம், “ஜலம்”, அதிலும் சாணித்தண்ணீர், பீத்தண்ணீர் என்றெல்லாம் ஓடிக்கொண்டிருக்கும், தெருவே அஜ்ஜலத்தில் மூழ்கியிருக்கும். மு.க. ஸ்டாலின், சா. கணேசன், ஷீலா நாயர், பல போலீஸ் அதிகாரிகள் என்று எத்தனையோ பேர் வந்து சென்றனர். ஒன்றும் நடக்கவில்லை. பிறகு அத்தகைய வேலைகளை செய்து வந்த மாட்டுக்காரர்களே, வேறு காரணங்களுக்காக அடங்கி விட்டதால், பிரச்சினை ஓரளவிற்கு கட்டுப் படுத்தப் பட்டது. இந்நிலையில் தான் இப்பொழுது, இந்த சீரமைப்பு வீரர்கள் வந்திருக்கிறார்கள்!

Photo1681

கடந்த மாதம் செப்டம்பர் இரண்டாம் வாரத்திலிருந்து சீரமைப்பு பணி துவங்கினாலும், குறிப்பாக வெங்கடாசலம் தெருவில், வெள்ளிக் கிழமையன்று அப்படியே வேலையை விட்டுவிட்டது போன்ற தோற்றம் காணப்படுகிறது.

மின்சார பெட்டி தொங்கிய நிலையில், கேபிள்கள் வெளியே, வீட்டு வாசலில் திறந்த நிலையில்!

மின்சார பெட்டி தொங்கிய நிலையில், கேபிள்கள் வெளியே, வீட்டு வாசலில் திறந்த நிலையில்!

அக்டோபர் 4, 2013 அன்று எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. இன்று – 08-10-2013 காலை வரை இதே நிலை தான் உள்ளது.

அதே நிலை - இன்னொரு கோணத்தில்

அதே நிலை – இன்னொரு கோணத்தில் – காளிகள் விரிந்து கிடக்கும் அழகைப் பார்க்கலாம்!

ஏரிக்கரைத் தெருவின் முனையிலிருந்து, இத்தெருவில் நுழையும் போது, வலது பக்கத்தில் உள்ள வீடுகளில் வசிப்பர்கள் தாம் தம் வீடுகளிலேயே சிறைப் பட்டது போன்ற நிலைமைக்குத் தள்ளப் பட்டுள்ளார்கள். இரண்டு சக்கர வாகனங்களைக் கூட வெளியே எடுக்கமுடியாத நிலை. காருள்ளவர்கள் பற்றிய கதையே வேறு. ஆனால், யாரும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.

மேலே குறிப்பிட்ட வீட்டிலிருந்து காணப்படும் காட்சி !

மேலே குறிப்பிட்ட வீட்டிலிருந்து காணப்படும் காட்சி !

குறிப்பாக ஏரிக்கரைத் தெருவின் முனையிலிருந்து, இத்தெருவிற்கு வராத நிலையில், சேறு, உடைக்கப் பட்ட கான்கிரீட் பாகங்கள் குவிக்கப்பட்டுள்ளன. கழிவுநீர் இணைப்புகள் உடைக்கப்பட்டுள்லதால், துர்நாற்றம் வீசும் வண்ணம் உள்ளது. போதாகுறைக்கு, குடிநீர் கைக்குழாய்களில் அந்த கழிவுநீர் வர ஆரம்பித்துள்ளது. வேலையாட்கள் மற்றும் சூபர்வைசர்கள் அல்லது மேற்பார்வையாளர்கள் என்பவர்கள் அடாவடித்தனமாக பேசுகிறார்கள்.

தெரு முழுவதும் அடைக்கப் பட்ட நிலை!

தெரு முழுவதும் அடைக்கப் பட்ட நிலை!

ஏரிக்கரைத் தெருவிலிருந்து, உள்ளே நுழைய முடியாத நிலை!

Photo1688

குறிப்பாக, வீடுகளின் பக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள கேபிள்கள் அடங்கிய மின்சார வாரிய சிறு பெட்டிகள் சுற்றி தோண்டப் பட்டு அப்படியே விட்டுச் சென்றுள்ளனர். கேபிள்கள் தாறுமாறாக வெளியே இழுத்துப் போடப் பட்டுள்ளன. கடந்த இரண்டு வாரங்களாக இந்நிலநப்படியே உள்ளது.

Photo1682

சிலர் வீடுகளின் முன்பாக மட்டும், வேலையை முடித்தது போன்று, அதாவது ரெடிமேட் கான்கிரீட் பாகங்களை போட்டு மூடியுள்ளார்கள்.

ஆஹா, கோலம் வேறு போட்டிருக்கிறார்கள்!

ஆஹா, கோலம் வேறு போட்டிருக்கிறார்கள்!

விசாரித்தபோது, அவர்கள் பணம் கொடுத்து அவ்வாறு செய்து கொண்டிருக்கிறார்கள்.

Photo1683

ஆஹா வாசல் நன்றாக இருக்கிறதே!

Photo1685

ஏன் இது நன்றாக இல்லையா?

Photo1686

வாங்கும் காசுக்கு வேலை செய்யவேண்டும் என்ற மனப்பாங்கு இருந்தால், எல்லோரும் ஒழுங்காகத்தான் வேலை செய்வார்கள்.

Photo1690

ஆனால், செய்ய வேண்டிய வேலைக்கு சம்பளம், கூலி, முதலியவை கொடுத்த பிறகு கூட, காசு கொடுத்தால் ஒரு மாதிரியாக வேலை செய்வது, காசு கொடுக்கா விட்டால், வேறு மாதிரி வேலை செய்வது என்பதெல்லாம் எதைக் காட்டுகிறது?

Photo1691

ஒரு வேளை, இந்த வேலை செய்பவர்களின் வீடுகள் முன்பாக மற்றவர்கள் இப்படி வேலை செய்தால், அவர்கள் என்ன நினைப்பார்கள்?

Photo1692

ஒழுங்காக வேலை செய்யும் தொழிலாளி, முதலியோரின் நாணயம், லட்சணம் இதுதானா?

Photo1693

இப்போக்கை மாற்றுவது எப்படி?

Photo1694

மாற்றத் தயராக உள்ளவர்கள் யார்?

Photo1695

யார் மாற்றப் போகிறார்கள்?

Photo1696

மாறுவார்களா?

Photo1697

இல்லை, மாற்ற முயல்பவர்களை மாற்றி விடுவார்களா?

 


[3]  Mayor  M. Subramanian said a total of Rs.121.53 crore would be spent to construct stormwater drains and restore the canals. A total of 63.38 km length of stormwater drains would be constructed. Apart from desilting, widening, deepening and laying concrete floor, the civic body would construct an 8-foot compound wall and a 4-foot barbed wire fence along the three canals. The canal work would be taken up for a length of 7.40 km at a cost of Rs. 38.52 crore.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/stormwater-drain-work-begins/article772552.ece

Advertisements