Archive for the ‘மேரி’ Category

மாரியா, மேரியா: ஜாதியத்தை வெல்ல போராடும் தலித்துகள்!

மே 26, 2010

மாரியா, மேரியா: ஜாதியத்தை வெல்ல போராடும் தலித்துகள்

வேதபிரகாஷ்

கண்ணநல்லூர் மாரியம்மனை வழிபட போராடிய தலித்துகள்: திருநெல்வேலி: நெல்லை அருகே பந்தப்புளி கோவிலில் தலித் மக்கள் கிடாவெட்டி பொங்கல் வைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மலைக்கு சென்ற ஏழு சமுதாய மக்கள் நேற்றும் ஊர் திரும்பவில்லை. நெல்லை மாவட்டம் பந்தப்புளி கிராமத்தில் உள்ள பழமையான கண்ணநல்லூர் மாரியம்மன் கோவில் உள்ளது. அதை பிற்படுத்தப்பட்ட ஏழு சமுதாய மக்கள் நிர்வகித்து வருகின்றனர். அந்த கோவிலில் வழிபட உரிமை கோரி, 2000ம் ஆண்டு முதல் தலித் மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இதுதொடர்பாக இரு தரப்பினர் இடையே சங்கரன்கோவில், மதுரை கோர்ட்டுகளில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், நேற்று கோவிலில் கொடை விழா நடத்த தலித் மக்களுக்கு அதிகாரிகள் அனுமதியளித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏழு சமுதாய மக்கள் கடந்த 23ம் தேதி பெட்டி, படுக்கைகள், கால்நடைகளுடன் சென்று மலையில் சமைத்து சாப்பிட்டு தங்கியுள்ளனர்.

திருநெல்வேலி : நெல்லை அருகே பந்தப்புளி கோவிலில் தலித் மக்கள் கிடாவெட்டி பொங்கல் வைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மலைக்கு சென்ற ஏழு சமுதாய மக்கள் நேற்றும் ஊர் திரும்பவில்லை.

நெல்லை மாவட்டம் பந்தப்புளி கிராமத்தில் உள்ள பழமையான கண்ணநல்லூர் மாரியம்மன் கோவில் உள்ளது. அதை பிற்படுத்தப்பட்ட ஏழு சமுதாய மக்கள் நிர்வகித்து வருகின்றனர். அந்த கோவிலில் வழிப

தலித் மக்களின் ஆசை நிறைவேறியது: பந்தப்புளியில் கிடாவெட்டி, பொங்கல்[1]: நேற்று 25-05-2010 அன்று தலித் மக்கள் மேளதாளத்துடன் புதுஉடைகள் அணிந்து, பொங்கல்பானையுடன் ஊர்வலமாக வந்து, மாரியம்மன் கோவில் முன் 41 பானைகளில் பொங்கலிட்டனர். கிடா, சேவல் வெட்டி அம்மனுக்கு படையலிட்டு, கோவிலில் பூஜை செய்து, காலை 7 முதல் 9.30 மணிக்குள் கொடை விழாவை நிறைவு செய்தனர். டி.ஐ.ஜி., சண்முகராஜேஸ்வரன், எஸ்.பி.,ஆஸ்ரா கார்க் தலைமையில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர். விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மலைக்கு சென்ற மற்ற சமுதாய மக்கள் நேற்று 3 வது நாளாக ஊர் திரும்பவில்லை. இத்தகைய சத்தியாகிரகம் செய்யத்துணிந்த இந்துக்கள், தமது சகோதரர்களை அனுசரித்து நடந்து கொண்டால் பிரச்சினையே இல்லையே? விழா முடிந்துவிட்டதால் இன்று ஏழு சமுதாய மக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி மலையில் இருந்து இறங்கச் செய்ய நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிகிறது.

இறையூர் தலித் கிருத்துவர்கள், வன்னியக் கிருத்துவர்கள்: உளுந்தூர்பேட்டை அருகே இருக்கும் இறையூர் கிராமத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தை பயன்படுத்துவதில் வன்னிய கிருத்துவர்கள் மற்றும் தலித் கிருத்துவர்களிடையே இடையே நீண்ட நாட்களாக மோதல் இருந்துவந்தது. தலித்துகள் கிறிஸ்தவ ஆலயத்துக்குள் வர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதையடுத்து, தலித்துகள் தங்களுக்கென தனியாக ஒரு ஆலயத்தை அமைத்து தரும்படி புதுவை மறைமாவட்ட பிஷ்ப்பிடம் கோரியிருந்தனர். இதனால், 2008-09 ஆண்டுகளில் கலவரம், போலீஸ் சூடு, இருவர் இறப்பு என பல நிகழ்ச்சிகள் துரதிருஷ்டமாக நடந்தேறியன.

மே 21 முதல் 31 2010 வரை நடக்கும் ஜெபமாலை மாதா தேர்த்திருவிழா: தலித் கிருத்துவர்களின் தெருக்களிலேயும் செல்லவேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது[2]. அதுமட்டுமல்லாது, தகுந்த பாதுகாப்பும் கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆகவே, கிருத்துவர்களும் தமது வித்தியாசத்தை மறந்து வழிபட இந்த சந்தர்ப்பத்தை உபயோகப் படுத்த வேண்டும்.

CAUGHT IN A ROW: Our Lady of Rosary Church in Eraiyur

இந்துக்களும், கிருத்துவர்களும்: உண்மையிலேயே, செக்யூலைஸக் கொள்கை பின்பற்றுவதாக இருந்தால், இரு மதத்தினரும் ஒற்றுமையாக அவரவர் கடவுளர்களை வழிபாடு செய்ய அரசு ஆவண செய்யவேண்டும்.  பந்தப்புளி கோவிலில் தலித் மக்கள் எப்படி வழிபட்டனரோ, அதே மாதிரி இங்கும் எறையூரில் கிருத்துவர்கள் ஒற்றுமையாக வழிபாடு செய்தால் அனைவருக்கும் நல்லது.

வேதபிரகாஷ்

26-05-2010


[1] தினமலர், தலித் மக்களின் ஆசை நிறைவேறியது : பந்தப்புளியில் கிடாவெட்டி, பொங்கல், மே.25, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=6445

[2] The Times of India,Take church cars through dalit areas in Eraiyur, says HC , http://epaper.timesofindia.com/Default/Client.asp?Daily=TOICH&showST=true&login=default&pub=TOI&Enter=true&Skin=TOINEW&GZ=T

Advertisements