Archive for the ‘விமானக் கழிவறை’ Category

கழிவறை மறைவிடம்: ரகசிய விமானப் பயணம்!

திசெம்பர் 28, 2009

கழிவறை மறைவிடம்: ரகசிய விமானப் பயணம்!

இன்றைய செய்திகளில் இரண்டு ஒரே மாதிரியாக இருந்தாலும், விவகாரங்கள் வேறாக உள்ளன!

இருவர்ம் முஸ்லிம்கள், கழிவறையில் இருந்துள்ளனர்.

ஒருவன் பாஸ்போர்டே இல்லாமல் இந்தியாவிற்கு வந்து மட்டிக்கொண்டான்.

மற்றொருவனோ, மேலேயே மாட்டிக் கொண்டான்.

அமெரிக்க விமானத்தை தகர்க்க பெரும் சதி: ஐரோப்பாவில் உஷார் பாதுகாப்பு கெடுபிடி
டிசம்பர் 28,2009,00:00  IST

http://www.dinamalar.com/world_detail.asp?news_id=4494

வாஷிங்டன்: அமெரிக்க விமானத்தை நடு வானில் தகர்க்க முயன்ற சம்பவத்தை அடுத்து, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டெல்டா ஏர் – லைன்ஸ் க்கு சொந்தமான பயணிகள் விமானம், 278 பயணிகளுடன் நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் நகரில் இருந்து, அமெரிக்காவின் டெட்ராயிட் நகருக்கு நேற்று முன்தினம் புறப்பட்டது. விமானம், டெட்ராயிட் நகரை நெருங்கிக் கொண்டிருந்தபோது, அதில் அமர்ந்திருந்த ஒரு பயணி, தனது காலின் கீழே குனிந்து, தீப்பற்ற வைப்பதற்கு முயற்சித்துக் கொண்டிருந்தான். இதை அறிந்த விமான ஊழியர்கள், சக பயணிகள் உதவியுடன் அந்த மர்ம நபரை மடக்கி பிடித்தனர். உடனடியாக, டெட்ராயிட் விமான நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டு சில நிமிடங்களில், விமானம் பாதுகாப்பாக தரை இறங்கியது. பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்தை சுற்றி வளைத்து அந்த மர்ம நபரையும் கைது செய்தனர்.அவனிடம் பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. இதுகுறித்து அமெரிக்காவின் எப்.பி.ஐ., அதிகாரிகள் கூறியதாவது:கைது செய்யப்பட்டுள்ள நபர் நைஜீரியாவைச் சேர்ந்தவன். அவன் பெயர் உமர் பரூக் அப்துல் முதாலப்(23). லண்டனில் இன்ஜினியரிங் படித்துள்ளான். அல் – குவைதா அமைப்புடன் இவனுக்கு தொடர்பு உண்டு.அமெரிக்க விமானத்தை நடு வானில் தகர்த்து, மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்துவதே இவனது நோக்கம்.

Main Image
Main Image
Main Image

இதற்காக, பயங்கர விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய வெடிமருந்தை, தனது காலில் “டேப்’போட்டு ஒட்டியிருந்தான். அந்த வெடி மருந்துகளுக்குள், ஊசி மூலம் திரவத்தை செலுத்தினால், பயங்கரமான விளைவுகள் ஏற்படும். இதற்கு முயற்சித்தபோது தான், சக பயணிகள் பார்த்து விட்டனர்.இதனால், பெரும் சதித் திட்டம் முறியடிக்கப்பட்டது. முதாலப்புக்கு கடுமையான தீக் காயம் ஏற்பட்டுள்ளது. மிச்சிகன் மருத்துவமனையில் அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வெடிமருந்துகளை பெறுவதற்காகவும், அதை எப்படி வெடிக்க வைக்க வேண்டும் என பயிற்சி பெறுவதற்காகவும், அவன் ஓமன் சென்றதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

கழிவறையில்தயாரிப்பு வேலை:விமானத்தை வெடிக்கச் செய்வதற்காக, விமானத்தில் உள்ள கழிவறையில் முதாலப் 20 நிமிடங்கள் தயாரிப்பு வேலையில் ஈடுபட்டுள்ளான். மீண்டும் அவன் இருக்கைக்கு திரும்பிய போது, அவனிடமிருந்து வெடிமருந்து பொருள் நாற்றம் வீசியுள்ளது. அரை அடிநீளமுள்ள பாக்கெட்டில் வெடிமருந்து பொருளை அவன் மறைத்து வைத்திருந்தான். அதுமட்டுமல்லாது, அவனது பேன்ட் அடிபாகத்தில் தீ எரிந்துள்ளது. அப்போது சக பயணிகள் சந்தேகப்பட்டு, அவனை மடக்கி பிடித்துள்ளனர்.அப்துல் முதாலப்பின் தந்தை, நைஜீரியாவில் ரிசர்வ் வங்கியின் தலைவராக பொறுப்பு வகித்தவர். தற்போது அவர் ஓய்வு பெற்று விட்டார்.

விமானத்தின் கழிவறையில் மறைந்திருந்து சவுதியிலிருந்து ஜெய்ப்பூர் வந்தவர் கைது
டிசம்பர் 28,2009,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=14998

Important incidents and happenings in and around the worldஜெய்ப்பூர்:டிக்கெட், பாஸ்போர்ட் இல்லாமல் விமானத்தின் கழிவறையில் மறைந்திருந்து, சவுதியில் இருந்து இந்தியா வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். அவர் மீது, பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம், மொரதாபாத்தைச் சேர்ந்தவர் ஹபீப் உசேன் (25). இவர், சவுதி அரேபியாவில் உள்ள மெதினா விமான நிலையத்தில், துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த வெள்ளியன்று மெதினாவில் இருந்து ஜெய்ப்பூர் புறப்பட்ட ஏர் – இந்தியா விமானத்தில் யாருக்கும் தெரியாமல், அதிலுள்ள கழிவறையில் மறைந்து கொண்டார்.

கழிவறையில் மறைந்து கொண்டான்: விமானம் மெதினாவில் இருந்து புறப்பட்ட அரை மணி நேரத்தில், அவர் கழிவறையில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. பயணி ஒருவர் கழிவறைக்குச் சென்ற போது, உசேன் உள்ளே இருப்பது தெரியவந்தது. விமானம் வெள்ளியன்று இரவு ஜெய்ப்பூரில் தரையிறங்கியது. விமான நிலைய அதிகாரிகள் மற்றும் போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய போது, அவரிடம் பாஸ்போர்ட்டோ, விமானத்தில் பயணம் செய்வதற்கான டிக்கெட்டோ இல்லை என்பது தெரியவந்தது. உடன், ராஜஸ்தான் பயங்கரவாத தடுப்புப் படை போலீசார், சிறப்பு அதிரடிப் படை போலீசார் மற்றும் ராணுவ உளவுத் துறையினர் ஆகியோர் உசேனிடம் விசாரணை நடத்தினர். அதில், விமானத்தில் பயணித்தவர்களுக்கோ அல்லது விமானத்திற்கோ எந்த விதமான ஊறு விளைவிக்கும் நோக்கத்தோடு, உசேன் அதில் ஏறவில்லை. மெதினாவில் தான் வேலை பார்த்த நிறுவனத்திடம் இருந்து தப்பிக்கவே, இப்படி திருட்டுத் தனமாக விமானத்தில் ஏறியது தெரியவந்தது. இருந்தாலும், இந்த விவகாரம் பெரிய அளவிலான பாதுகாப்பு மீறல் என்பதால், அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து, மெதினா விமான நிலையத்தில் துப்புரவு பணிகளை கையாளும் நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு, ஏர் – இந்தியா நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது. விமானத்தின் கழிவறையில் உசேன் இருப்பது தெரியவந்ததும், அவரால், யாருக்கும் எந்த விதமான ஆபத்தும் ஏற்படாது என்பதை உறுதி செய்த பின்னரே, விமானத்தை ஜெய்ப்பூருக்கு கொண்டு செல்ல அதன் பைலட் தீர்மானித்துள்ளார். ஏர் – இந்தியா நிறுவனத்தின் தகவல் தொடர்பாளர் இதுபற்றி கூறுகையில், உசேன் இந்தியாவைச் சேர்ந்தவர். சவுதியில் வேலை பார்த்த நிறுவனத்தின் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, இப்படி தப்பிக்க முற்பட்டுள்ளார்,” என்றார்.போலீஸ் விசாரணையில் உசேன் மேலும் கூறியதாவது:ஆறு மாதங்களுக்கு முன், நான் வேலைக்காக சவுதி அரேபியா சென்றேன். அங்கு நான் எதிர்பார்த்த வேலை கிடைக்கவில்லை. அதற்கு பதிலாக, மெதினா விமான நிலையத்தில் துப்புரவுப் பணி வழங்கப்பட்டது. எனக்கு வேலை கொடுத்த நிறுவனமே பாஸ்போர்ட்டை வைத்துக் கொண்டது. தினமும் கடுமையாக வேலை வாங்கினர். அதனால், சொந்த நாட்டுக்கே திரும்பி விட நினைத்தேன். அதற்கு ஏற்றார் போல், அன்றைக்கு ஜெய்ப்பூர் செல்லும் விமானத்தை சுத்தம் செய்யும் பணி எனக்கு வழங்கப்பட்டது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி கழிவறையில் ஒளிந்து கொண்டேன். விமானம் பறந்த பின்னரே நான் கழிவறையில் இருப்பது தெரியவந்தது. இவ்வாறு உசேன் கூறினார்.

Advertisements