Archive for the ‘விளக்கு ஏற்றுவது’ Category

சித்தாந்த தீபாவளி 2010: உலக-தேசிய-மாநில கொண்டாட்டங்கள் (1)

நவம்பர் 9, 2010

சித்தாந்த தீபாவளி 2010: உலக-தேசிய-மாநில கொண்டாட்டங்கள் (1)

நாத்திகர்களை பெரிதும் பாதித்துள்ள தீபாவளி: இப்பொழுது எல்லோருமே தீபாவளியைப் பிடித்துக் கொண்டு ஆடி-ஆட்டி வருகிறார்கள். அதுவும் ஒபாமா தம்பதியர் விளக்கு வைத்து, பாடி-ஆடி தீபாவளி கொண்டாடியதும், எல்லோருக்குமே ஆட ஆரம்பித்து விட்டது! குறிப்பாக தமிழக நாத்திகர்களுக்கு, பகுத்தறிவாளிகளுக்கு சொல்லவே வேண்டாம், “பெரியார் பிறந்த பூமியில் தீபாவளியா” என்றெல்லாம் புலம்பி ஓய்ந்து, மழை சாக்கு வைத்துக் கொண்டு வீடுகளில் அடைப்பட்டு விட்டன[1]. ஆனால், வீட்ட்டிற்குள்ளேயிருந்தே வெடிகளை வெளியே வீசிக்கொண்டிருந்தன. பாவம், அவர்கள் விட்ட வெடிகள் எல்லாமே “புஸ்ஸாகி” விட்டன! ஒபாமாயாகிவிடவில்லை! நன்றாக நமுத்து / நமித்து / நமிதாப் போய் விட்டன போலும்! நமீதாவை வைத்து வெடித்திருக்கலாம், குஷ்புபைவிட்டு[2] புஸ்வானமவது விட சொல்லியிருக்கலாம்!!

கமலஹாசனுக்கு / கமலாசனுக்கு[3] முதல்வர் வாழ்த்தும் பல்லாண்டு பாடலும்[4]: குல்லா போட்டு கஞ்சி குடிக்கும் கருணாநிதி 06-11-2010 அன்று தனது 56வது பிறந்த நாளைக் கொண்டாடும் நடிகர் கமலஹாசனுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி வாழ்த்து[5] தெரிவித்துள்ளாராம்! இன்று அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் அவர் கூறியிருப்பதாவது: “தமிழ் திரையுலகின் கவுரவமாகவும், மகுடமாகவும் திகழ்பவர் கமல்; தமிழ் சினிமாவில் கமலுக்கு என்றுமே தனியிடம் உண்டு; சிறுவனாக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த கமல், தற்போது உலக அரங்கிற்கு தமிழ் சினிமாவை கொண்டு செல்லும் நிலைக்கு உயர்ந்துள்ளார்; அவர் பல்லாண்டு காலம் வாழ்ந்து மேலும் பல பெருமைகளை பெற வாழ்த்துகிறேன்; மனதளவில் அவர் கவிஞராக இருப்பதே அவரின் இந்த முன்னேற்றத்திற்கு காரணம்; அவர் சிறந்த நடிகர் என்பதை ஏற்கனவே நிரூபித்துவிட்டார்”, இவ்வாறு அவர் வாழ்த்தியுள்ளாராம்! வேடிக்கைதான், ஏன் நாத்திக மரபுபடி “நாசமா போக, உன்வீட்டில் இழவு வர………………..”, என்று பாராட்டியிருக்கலாமே? எல்லாவற்றையும் நாங்கள் தலைகீழாக செய்வோம்[6] என்றுதானே பீழ்த்திக்கொள்வர்?  பிறகென்ன “பல்லாண்டு”?

“அவர் பல்லாண்டு காலம் வாழ்ந்து மேலும் பல பெருமைகளை பெற வாழ்த்துகிறேன்”: திருமாவிற்கு போட்டியாக ராமசாமி நாயக்கரின் மகனாக நடித்ததால்[7], நன்றாகவே நாமம் போட்டுள்ளார். அதென்ன “பல்லாண்டு காலம் வாழ்ந்து மேலும் பல பெருமைகளை பெற வாழ்த்துகிறேன்”, வெங்காயம்! இதென்ன நாத்திகமா, ஆத்திகமா, வெங்காயமா, எள்ளுருண்டையா? “வாழ்க, ஒழிக” என்பது என்ன வாழ்த்தா, சாபமா, பலித்துவிட? இதென்ன பிறகு இந்த திராவிட ரிஷி இப்படி கிளம்பிவிட்டார், இந்த வயதில்? நாத்திக மரபுபடி “நாசமா போக, உன்வீட்டில் இழவு வர………………..”, என்று பாராட்டியிருக்கலாமே? எல்லாவற்றையும் நாங்கள் தலைகீழாக செய்வோம்[8] என்றுதானே பீழ்த்திக்கொள்வர்?  பிறகென்ன “பல்லாண்டு”?

“மனதளவில் அவர் கவிஞராக இருப்பதே அவரின் இந்த முன்னேற்றத்திற்கு காரணம்”: ஆமாம், நல்லவேளை, உடலளவில் கவிஞராக, கலைஞனாகி விடவில்லை! சமீபத்தில் கமல் நானும் கலைஞன் தான் என்று “ஆட்டம் பாம்” வெடித்தது உறுத்திவிட்டது போலும், பதிலுக்கு சரத்தை வீசியுள்ளார். அதாவது, இனி திமுகவில் உடலளவில் சேர்ந்து முன்னேற வேண்டியது தான் பாக்கி! கலைஞனுக்கு எப்படியெல்லாம் பொறாமை வருகிறது? முன்பு மாமியார்-மறுமகள் வெடி – ஒன்று வெடித்துக் கொண்டே முன்னால் சென்றால், இன்னொன்று எதிர்பக்கத்தில் வெடித்துக் கொண்டே வரும் – என்றேல்லாம் விற்பார்கள், இப்பொழுது கிடைக்கிறதா என்று தெரியவில்லை.

“அவர் சிறந்த நடிகர் என்பதை ஏற்கனவே நிரூபித்துவிட்டார்”!: ஐயோ, இதென்ன இப்படி சீனவெடியைக் கிள்ளிப் போட்டுவிட்டார்? ஊர்வசி வேறு கமல் நெருக்கத்தில் வந்து நடித்தால் ஏதோ செய்வார் என்று வேறு குண்டு விட்டிருக்கிறார்! அவர் நடித்ததால்தானே, எத்தனை நடிகைகளின் வாழ்க்கை பாழானது, தற்கொலை செய்து கொண்டனர், இத்யாதி…………….படாபட்! வீரமணியிடம் சொல்லி, இன்னொரு சிறப்பு மலரை “காதல் இளவரசன்” அல்லது “நடிகைகளின் நரகாசுரன்” என்று வெளியிட செய்யலாம்! இனி கமல் “அரசியல்வாதி” ஆனால் தான், பிரச்சினை!

ஒபாமா வருகை முழுக்க முழுக்க வர்த்தக ரீதியிலானது[9]: பா.., புகார் புலம்பல்: “அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வருகை, முழுக்க முழுக்க வணிக நோக்கம் கொண்டது’ என,  பா.ஜ., மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் புகார் தெரிவித்துள்ளன. ஒபாமா இந்தியாவிற்கு வரும் முன், இந்திய வெளியுறவு செயலர் நிருபமாராவ் விடுத்த அறிக்கைக்கும், ஒபாமா தரப்பில் விடுக்கப்பட்ட அறிக்கைக்கும் ஏராளமான முரண்பாடுகள் உள்ளன. இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கிடையேயான உறவை மேம்படுத்தும் வகையில் ஒபாமாவின் வருகை அமையும் என, ராவ் தெரிவித்திருந்தார்.  ஆனால், ஒபாமாவின் பயணமோ, முழுக்க முழுக்க வர்த்தக ரீதியில் அமைந்துள்ளது.

கம்யூனிஸ்ட்டுகளின் சில்லறை ஒப்பாரி[10]: இரட்டை வேடம் போடுவதில் இவர்களும் சளைத்தவர்கள் அல்லர்[11]. நன்றாக தீபாவளி கொண்டாடி விட்டு, ஊசிவெடி வெடிக்க தெருவில் வந்து பூச்சாண்டி காட்டியது வேடிக்கையாக இருந்தது. டில்லியில் ஆட்டம் பாம் வெடிக்கிறது என்றால், இங்கு புஸ்ஸான வெடிகளை நெருப்பில் போடு கொளுத்துகிறார்கள்[12], பாவம்! ஒப்பாரி வைத்த அனைத்து எம்.பிக்களும் ஒபாமா பேச்சைக் கேட்டு புல்லரித்து பாராட்ட வேறு செய்தார்கள்!

வேதபிரகாஷ்

© 08-11-2010


[1] டாக்டர் சொல்லியும் கேட்காமல் விதவிதமான ஸ்வீட்டுகளை சுவைத்ததால் பத்தினிகள் வேறு சாபமிட்டிருக்கிறார்களாம்! என்ன செய்வது இலவசமாக வந்து குவிந்து விட்டதாம்! ஊச் வெடியை வெடிக்கலாம், கொளுத்தலாம், ஸ்வீட் ஊசி விட்டால் என்ன செய்வது?

[2] பாவம், சுந்தர் கழட்டிவிடுவேன் என்று பயமுறுத்தியதாக வேறு செய்திகள் வந்துள்ளன.

[3] கமலம் + ஹாசன் = கமல் + ஆசன் = கமலாசன் என்று மாற்றிக் கொள்ளாலாமா? இங்கு எப்படி “ஸ” வந்தது என்று தெரியவில்லை, பார்ப்பன சதியே அலாதியானது தான்!

[4] தினமலர், கமலஹாசனுக்கு முதல்வர் வாழ்த்து, நவம்பர் 07, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=121755

[5] 50 ஆண்டுகளில் இல்லாதது இப்பொழுது எப்படி வந்தது? அதுவும் சரியாக 2010ல்?

[6] உண்ணாவிரதம் என்றாள் உண்ணும் விரதம் என்று கவிச்சை வைத்துக் கொண்டு சாப்பிடுவார்கள்; நல்லநாள் எல்லாம் பார்ப்பதில்லை என்று ராகுகாலம்-எமகண்டத்தில் கல்யாணம் செய்து கொள்வார்கள்….இப்படி பல நாத்திக கூத்துகள், வெடிகள் எல்லாம் தமிழகத்தில் தமிழர்கள் பார்த்திருக்கிறார்கள்.

[7] இந்த நடிகன் “நாயகர்” என்றதும் தசாவதாரத்தில் அந்த நடிகை எதோ ஊளையிடுவாள், பாவம்! ஆஸௌசம் தான்!! ஆமாம், வசனத்தை “கட்” செய்திருப்பர்!

[8] உண்ணாவிரதம் என்றாள் உண்ணும் விரதம் என்று கவிச்சை வைத்துக் கொண்டு சாப்பிடுவார்கள்; நல்லநாள் எல்லாம் பார்ப்பதில்லை என்று ராகுகாலம்-எமகண்டத்தில் கல்யாணம் செய்து கொள்வார்கள்….இப்படி பல நாத்திக கூத்துகள், வெடிகள் எல்லாம் தமிழகத்தில் தமிழர்கள் பார்த்திருக்கிறார்கள்.

[10] இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மாக்ஷிச கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளைச் சார்ந்தவர்கள் மற்றும் பல்கழலக்கழக மாணவர்கள் என சுமார் 700 பேர் டெல்லியின் முக்கிய பகுதியான ஜந்தர் மந்திர் பகுதியில் கண்டனப் பேரணி நடத்தியுள்ளனர்..

http://www.bbc.co.uk/tamil/news/story/2010/11/101108_protestagainstobama.shtml

[11] சோவியத் படைகள் ஆப்கானிஸ்தானில் குவிக்கப்பட்டதற்கு  கம்யூனிஸ்டுகள் கண்டனம் தெரிவிக்கவில்லை.

இந்திய மாநிலமான அருணாசல பிரதேசத்தை  தங்கள் பகுதி என்று சீன வரைபடத்தில் வெளியிட்டதற்கும்,

ஜம்மு காஷ்மீரிலிருந்து செல்பவர்களுக்கு சீனா தனி விசா கொடுப்பதற்கும்,

பாகிஸ்தான் ஆக்கிரமித்து உள்ள இந்திய பகுதியை பாகிஸ்தானுக்கு உரியது என்று சீனா அதிகாரப்பூர்வமாக சொல்லி வருவதற்கும் கம்யூனிஸ்டுகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

இலங்கை தீவில் லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவிக்க சீன அரசு ஆயுதங்களை வழங்கிய போது, கம்யூனிஸ்டுகள் கண்டிக்கவில்லை. இப்படி அடுக்கடுக்காக கூறியுள்ளவர், இல்லை 1000 வாலா வெடித்தவர் வைகோ!

Advertisements