Archive for the ‘ஸ்பைஸ் ஜெட் நிறுவனம்’ Category

சித்தாந்த தீபாவளி 2010: உலக-தேசிய-மாநில கொண்டாட்டங்கள் (2)

நவம்பர் 10, 2010

சித்தாந்த தீபாவளி 2010: உலக-தேசிய-மாநில கொண்டாட்டங்கள் (2)

2007லிருந்து ஆரம்பித்த தீபாவளி டிப்ளோமெஸி: 2007ல் போப்பே தீபாவளி வாழ்த்து தெரிவித்தபோது[1], வீரமணிக்கு பொத்துக் கொண்டு வந்துவிட்டது. விடுதலையில் விலாசி தள்ள ஆரம்பித்துவிட்டார். பூமிக்கும், பன்றிக்கும் குழந்தை பிறக்குமா என்ற ரீதியில் உளற ஆரம்பித்து விட்டார். பெரியார் மணியம்மை பல்கலைகழகத்தில் படிக்கும் மாணவர்கள் எல்லோருக்கும் அசிங்கமாக ஆகிவிட்டது, ஏனெனில், அவர்களுக்கு ஈ-மெயில்களில், அவர்களது நண்பர்கள், “என்னடா உன்னுடைய சேன்ஸலர் இப்படியெல்லாம் உளறுகிறார்”, என கேட்க ஆரம்பித்துவிட்டனர். 2009ல் பிரிடிஷ்காரர்கள் வேறு “தீபாவளி மனிதகுலத்திற்கே ஒரு நற்செய்தி சொல்கிறது” என்றேல்லாம் பேசினார்கள்[2]. சென்ற தீபாவளியன்று ஒபாமா விளக்கேற்றி பேசியது:

I think it’s fitting that we begin this work in the week leading up to the holiday of Diwali — the festival of lights — when members of some of the world’s greatest faiths celebrate the triumph of good over evil.

This coming Saturday, Hindus, Jains, Sikhs and some Buddhists, here in America and around the world, will celebrate this holiday by lighting Diyas, or lamps, which symbolize the victory of light over darkness, and knowledge over ignorance. And while this is a time of rejoicing, it’s also a time for reflection, when we remember those who are less fortunate and renew our commitment to reach out to those in need.

Lighting of WhiteHouse Diya @14:00

While the significance of the holiday for each faith varies, all of them mark it by gathering with family members to pray and decorate the house and enjoy delicious food and sweet treats. And in that spirit of celebration and contemplation, I am happy to light the White House Diya, and wish you all a Happy Diwali, and a Saal Mubarak.

The White House Diya is lit.

ஆகவே, இந்த வருடம், கருணாநிதி குடும்பம் அமுக்கி வாசித்தது. போதாகுறைக்கு “ஸ்பைஸ்ஜெட்” பிரச்சினை வேறு! “எந்திரன் விழாவில்” விவேக் வேறு தனது கவிதையில் உளறி வைத்தது!

ஒபாமா முன்னிலையில் 500 கோடி டாலர் ஒப்பந்தம் கையெழுத்து[3]: மூன்று நாள் அரசுப் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா முன்னிலையில் 500 கோடி டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் பவர் நிறுவனமும், குறைந்த கட்டணத்தில் விமானங்களை இயக்கும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனமும் அமெரிக்க நிறுவனங்களுடன்  ஒப்பந்தம் செய்து கொண்டன. ரிலையன்ஸ் பவர் நிறுவனம் மேற்கொள்ளவுள்ள 2,400 மெகாவாட் மின்னுற்பத்தித் திட்டத்துக்குத் தேவையான டர்பைன்களை அமெரிக்காவின் ஜிஇ நிறுவனம் சப்ளை செய்யும். ரிலையன்ஸ் பவர் ஆந்திர மாநிலம் சாமல்கோட்டில் உள்ள மின்னுற்பத்தி நிலையத்தை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது. ரூ. 10 ஆயிரம் கோடி முதலீட்டிலான விரிவாக்கத் திட்டத்துக்குத் தேவையான டர்பைன்களை ஜிஇ நிறுவனம் அளிக்கும். இத்திட்ட மதிப்பு 75 கோடி அமெரிக்க டாலராகும்.  இதற்கான ஒப்பந்தத்தில் அனில் அம்பானியும், ஜிஇ நிறுவனத்தின் தலைவர் ஜெஃப்ரி இமெல்டும் கையெழுத்திட்டனர்.

போயிங்குடன் ஸ்பைஸ்ஜெட் (மாறன் பங்குள்ள) ஒப்பந்தம்: அமெரிக்காவின் விமானங்கள் தயாரிக்கும் நிறுவனமான போயிங் நிறுவனத்துடன் இந்தியாவில் குறைந்த கட்டணத்தில் விமானங்களை இயக்கும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதன்படி போயிங் நிறுவனத்திடமிருந்து 33 விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 270 கோடி டாலராகும். இதற்கான ஒப்பந்தத்தில் ஸ்பைஸ்ஜெட் நிறுவன இயக்குநர் புலோ கன்ஸக்ராவும் போயிங் நிறுவன தலைவர் கிறிஸ்டோபர் சாட்விக்கும் கையெழுத்திட்டனர். குறைந்த செலவு விமான சேவை நிறுவனமான ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தில் சன் தொலைக்காட்சி குழுமங்களின் நிறுவனர்[4] கலாநிதி மாறனின் பங்கு 31 சதவீதமாக சமீபடத்தில் தான் உயர்த்தியுள்ளார்[5]. போயிங்கிடமிருந்து விமானங்களை வாங்க மாற ஏற்கெனெவே தீர்மானம் செய்தாகி விட்டது[6]. முப்பது விமானங்களை வாங்க ரூ. 12,660/- கோடிகள் மத்திப்பில் பர்சேஸ் ஆர்டர் கொடுத்தாகிவிட்டது[7] (It now plans to operate 50 aircraft by 2014, having recently ordered for 30 new aircraft with Boeing, at a cost of $2.7 billion (Rs 12,660 crore). Delivery is to start from 2014.) கன்ஸக்ராவிற்கும் மாறனுக்கும் ஏற்கெனெவே பிரச்சினையுள்ளது[8].

ஒபாமா முன்னிலையில் மொத்தம் 1,000 கோடி டாலர் மதிப்பிலான பல்வேறு முதலீட்டுத் திட்டங்கள் கையெழுத்தாக உள்ளன. இதில் இவ்விரு ஒப்பந்தங்களும் குறிப்பிடத்தக்கவையாகும். இந்த ஒப்பந்தங்கள் மூலம் அமெரிக்காவில் 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கும். இதன் மூலம் 200 கோடி டாலர் மதிப்பிலான பொருள்கள் அடுத்த 2 ஆண்டுகளில் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதியாகும். இந்தியாவுடன் மேற்கொள்ளப்படும் பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் அமெரிக்காவில் 54 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவதே ஒபாமாவின் நோக்கமாகும்.

வர்த்தகக் குழுவினருடனான பேச்சுவார்த்தையில் பார்மசூடிகல்ஸ், உற்பத்தித் துறை, போக்குவரத்து, தூய எரிசக்தி துறைகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள் பங்கேற்றனர். இரு நாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள் பங்கேற்ற கூட்டத்தில் பேசிய ஒபாமா இரு நாடுகளிடையிலான வர்த்தக உறவு மேலும் வலுப்பெற இத்தகைய ஒப்பந்தங்கள் உதவும் என்றார். மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் துணைத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, பிரமிள் பார்மசூடிக்கல்ஸ் குழுமத்  தலைவர் அஜய் பிரமிள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இவர்கள் தவிர 15 இளம் தொழில் முனைவோரும் ஒபாமாவுடனான சந்திப்பில் கலந்து கொண்டனர். சூழல் பாதிப்பில்லாத கார்களை மஹிந்திரா நிறுவனம் ரேவா நிறுவனத்தின் கூட்டுடன் தயாரிக்கிறது. இப்போது இந்நிறுவனம் அமெரிக்காவின் கர்டிஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளது. கிராமப்புற மக்களுக்கு சுகாதாரமான பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கு பிரமிள் நிறுவனத்துடன் மின்னசோட்டாவைச் சேர்ந்த பென்ட்ஏர் நிறுவனம் கூட்டு சேரும் என தெரிகிறது. ஏற்றுமதி விதிகளை தளர்த்துவது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் மற்றும் மத்திய அரசு நிறுவனமான டிஆர்டிஓ, இஸ்ரோவுக்கு தொழில்நுட்பங்களை அளிப்பது தொடர்பான அறிவிப்புகளையும் ஒபாமா வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒபாமாவின் தீபாவளி வாழ்த்தும் (2009), கொண்டாட்டமும் (2010): சென்ற வருடமே ஒபாமா இந்தியர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்திருந்தது ஞாபகம் இருக்கலாம். இப்பொழுது இந்தியாவிற்கு வந்து விளக்கேற்றி தீபாவளியை கொண்டாடியுள்ளார். இந்த வருடம் இப்படி இந்தியாவிற்கு வந்து தீபாவளி கொண்டாடி, குழந்தைகளுடன் ஆடி மகிழ்வார், மகிழ்விப்பார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஒபாமா-மிட்செல் தம்பதியினர் தீபாவளி கொண்டாடியதை குழந்தைகள் நிச்சயம் வாழ்வெல்லாம் நினைவு கொள்வர். நம்மூர் அரசியல்வாதிகளுக்கோ வாழ்த்துச் சொல்லவே வலியெடுத்துள்ளது. குடிக்கக் கஞ்சி கூட கிடைக்காது என்ற பயமோ என்னமோ?

தீபாவளி கொண்டாட்டத்தில் குழந்தைகளுடன் ஒபாமா தம்பதியர் ஆடிய ஆட்டம்: ஒபாமா ஆடிய ஆட்டத்தைப் பார்த்து நிச்சயமாக இந்திய அரசியல்வாதிகள் ஆடியே போய் விட்டனர். “பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்” என்ற பாட்டுதான் ஞாபகம் வந்தது. நிச்சயமாக நாத்திக கருணாநிதியே இதை பார்க்கும் போது, பொறாமைப் பட்டிருப்பார். இப்பொழுதுகூட சக்கர நாற்காலியை விட்டு எழுந்திருக்க முயற்சி செய்திருப்பார். நல்லவேளை, அமைதியாக உட்கார்ந்துவிட்டார், ஏனெனில், ஜெயலலிதா ஞாபகம் வந்ததால்தான்! ஆமாம், அப்படத்தில் எம்.ஜி.ஆர் பாடியது ஜெயலலிதாவை ஆட வைப்பதற்காகத்தான்! இனி ஒபாமா ஆட்டத்தால், யாரெல்லாம் ஆடப்போகின்றனரோ தெரியவில்லை!

தீபாவளியன்று மிட்செல் குழந்தைகளுடன் விளையாடியது, ஆடியது: மிட்செல் மிகவும் சாதாரணமாக குழந்தைகளுடன் “பாண்டி” விளையாடினார். செருப்பை அவிழ்த்து வைத்து விட்டு கட்டங்களில் குதித்து தாண்டியபோது, குழந்தைகள் கைக்கொட்டி மகிழ்ச்சியுடன் ஆர்பரித்தனர். எந்த ஜனாதிபதியும், அரசியல்வாதியும் அல்லது அவர்களது மனைவியும் இப்படி தங்களுடன் ஆடி மகிழ்வர் என்று கனவிலும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அனால், பலர் உலக அளவில், தேசிய அளவில், மாநில அளவில் கருவிக்கொண்டுதான் இருக்கின்றனர்.

வேதபிரகாஷ்

© 09-11-2010


[2] The Hindu, Deepavali reaffirms a clear message of hope ti humanity: Miliband, October 15, 2009,  http://beta.thehindu.com/news/international/article34307.ece

[3] தினமணி, ஒபாமா முன்னிலையில் 500 கோடி டாலர் ஒப்பந்தம் கையெழுத்து, First Published : 07 Nov 2010, http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=India&artid=328667&SectionID=130&MainSectionID=130…81

 

[4] Sun Network Chairman Kalanithi Maran and his company, Kal Airways Pvt Ltd (KAPL), which was incorporated on May 6, are the acquirers of the airline. KAPL is promoted by Maran and his wife Kavery.

http://www.business-standard.com/india/news/maran-open-to-spicejets-name-change/12/57/398528/

[5] Maran, the only serious bidder for a majority stake in SpiceJet, has acquired 37.7 per cent stake in the carrier by buying out Wilbur Ross and Bhupendra Kansagara. The acquisition took place at Rs 47.25 per share amounting to Rs 750 crore.

http://www.business-standard.com/india/news/maran-takeover-speeds-decisions-at-spicejet/406694/

[6] It now plans to operate 50 aircraft by 2014, having recently ordered for 30 new aircraft with Boeing, at a cost of $2.7 billion (Rs 12,660 crore). Delivery is to start from 2014.

Advertisements