மழை, பெரும்மழை, புயல், வெள்ளம் வந்தால், மாம்பலம், பழைய மாம்பலம், மேற்கு மாம்பலம், மா-பள்ளம் பிரச்சினை என்ன? மழைநீர் தேங்குவது ஏன், வெள்ளம் வீடுகளில் புகுவது எப்படி? (3)

மழை, பெரும் மழை, புயல், வெள்ளம் வந்தால், மாம்பலம், பழைய மாம்பலம், மேற்கு மாம்பலம், மாபள்ளம் பிரச்சினை என்ன? மழை நீர் தேங்குவது ஏன், வெள்ளம் வீடுகளில் புகுவது எப்படி?  (3)

சேகர்பாபு கொடுத்த விளக்கம்: அதைத் தொடர்ந்து பேசிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, “வடசென்னையில், முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு கொசஸ்தலை மழைநீர் வடிகாலுக்காகக் கால்வாய் அமைக்கப்பட்டிருக்கிறது[1]. சென்னையில் சாலை 5,500 கி.மீ நீளம் இருந்தாலும், சென்னையைச் சுற்றி பழைய கால்வாய்களை இடித்து அகலப்படுத்தி, புதிய கால்வாய்களை ஏற்படுத்தியதில் 1,450 கோடி செலவு செய்யப்பட்டிருக்கிறது[2]. அடையாற்றில் வரும் செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீரால் மாம்பலம் கால்வாயில் நீர் வெளியேறாதது தெரியவந்தது[3]. இதையடுத்து, செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவை குறைக்க அறிவுறுத்தினார்[4]. இவ்வாறு இவர்கள் பேசியது, அரசு-ரீதியில் தான் இருந்ததே தவிர, தொடரும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் போக்கில் இல்லை.

மின்சாரத்தால் பாதிக்கப் பட்டு, இரண்டு பேர் உயிரிழப்பு: தியாகராயநகர் பகுதியில் பாண்டிபஜார் சிவஞானம் சாலை, பசுல்லா சாலை, வடக்கு உஸ்மான் சாலை ஆகியவணிக பகுதிகளிலும் மழைநீர் தேங்கிபோக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னை புது பெருங்களத்தூரைச் சேர்ந்த மணிகண்டன் (23), நேற்று முன்தினம் இரவு மேற்கு மாம்பலம் ஏரிக்கரை சாலை வழியாகக் கொட்டும் மழையில் சாலையில் தேங்கிய நீரில் செல்போனில் பேசியபடி சென்றார். அப்போது அவர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்தார்[5]. தியாகராயநகர் வாணி மஹால் முன்புறம் உள்ள மேம்பாலத்தின் கீழ்பகுதியில் மின்விளக்கு கம்பத்தின் அருகே, மின்சாரம் தாக்கி, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இசாசுல் (19) உயிரிழந்தார்[6]. “லோடு” அதிகமாகிறது என்று இப்பொழுதெல்லாம் பத்து வீடுகளுக்கு இடையில் ஒரு மின்சார கேபிள் இணைப்புப் பெட்டிகள் வைக்கப் பட்டு வருகின்றன. மின்சார துண்டிப்புப் பிரச்சினை வந்தால், அங்கங்கு ஆர்த்து, சரிசெய்யலாம் என்ற நோக்கில் இவை வைக்கப் படுகின்றன. ஆனால், இவையெல்லாமே அவசரம்-அவசரமாக வைக்கப் பட்டவைப் போலத் தான் இருக்கின்றன. கேபிள்கள், கேபிள் இணைப்புகள் முதலியவை தெரிவது போலத் தான் இருக்கின்றன. சரியாக கதவுகள் மூடப் படுவதில்லை. சாலை இருக்கும் அதே உயரத்தில் இருப்பதாலும், தொடர்ந்து சாலை உயர்த்தப் படுவதாலும், அவை கீழே செல்கின்றன. இதனால், தண்ணீரில் முழுகும் நிலை ஏற்படுகிறது. இதுதான் னின் கசிவு, ஷாக்க்கிற்கு காரணமாகிறது.

Photo courtesy – The Hindu

1950-60களிலிருந்து தொடர்ந்து இருக்கும் பிரச்சினை: மழைக்காலத்தில் 1950களிலிருந்து, அப்பொழுது மாம்பலம் இப்பொழுது மேற்கு மாம்பலம் என்று அழைக்கப்படுகின்ற இடத்தில், ஒவ்வொரு ஆண்டிலும் பொதுவாக மழை நீர் தெருக்குறளில் தேங்கி நிற்கும். குறிப்பாக மூன்று, ஐந்து, ஏழு என்றெல்லாம் விட்டு ஆண்டுகளில் மழையினால்  அதிக நீர் வரும். வெள்ளம், பெருவெள்ளம், புயல், சுனாமி போன்ற காலங்களிலும் இயற்கையாகவும் மற்றும் சென்னை சுற்றியுள்ள ஏரிகளில் நீர்நிலை தேக்கம் அதிகமாக இருக்கும் பொழுது, அந்த நீரை திறந்து விடுவதாலும் இத்தகைய வெள்ளம் இப்பகுதியில் ஏற்படுகிறது. இதனால் நிச்சயமாக வீடுகளில் 1940-60 என்று பார்த்தால், அக்காலகட்டத்தில் கட்டியுள்ள வீடுகளில் முதலில் ஒரு அடி, 2 அடி 3 அடி என்று, 2000 ஆண்டுகளில் 5 அடிக்கு நீர் தங்க ஆரம்பித்தது. இதனால், அத்தகைய பழைய வீடுகளில் வசித்தவர்கள், பெரும்பாலான மக்கள் மிகவும் அவதிப்பட்டு தான் வந்திருக்கின்றனர். ஏனென்றால் அத்தகைய நீர் வரும்போது அவர்கள் வீடுகளில் இருக்கும் எல்லா பொருள்களுமே மூழ்கிவிட்டு நாசமாகின்றன அதிலிருந்து மீட்கப்படுகின்ற பொருட்கள் என்பது நிச்சயமாக ஒரு 30 இருந்து 50 சதவீதம் கூட உருப்படியாக இருக்காது.

Photo courtesy – The Hindu

மாபள்ளம்,” ஏரிக்கரைத் தெரு பிரிந்திருக்கிறது, ஆறியிருக்கிறது, ஆனால், மழையில் சேர்ந்து விடுகிறது: மாம்பலம் என்பது “மா பள்ளம்” அதாவது இங்கு கிழக்குப் பக்கத்தில் ஒரு பெரிய ஏரி இருந்தது. அந்த ஏரியானது சைதாப்பேட்டை, மாம்பலம் நுங்கம்பாக்கம் வரை பரவி பெரிதாக இருந்தது. அதனால்தான், மாம்பலத்தில் இருந்து ஆரம்பிக்கும் இந்த “ஏரிக்கரை தெரு” என்பது நுங்கம்பாக்கம் வரைக்கும் சென்றது. பிறகு நுங்கம்பாக்கம், மாம்பலம் இடைப்பட்ட பகுதியில் வீடுகள், தெருக்கள், ரயில் தடங்கள் என்று வளர்ச்சி ஏற்பட்ட பொழுது, அது தனித்தனியாக பிரிந்தது, அதாவது “ஏரிக்கரைத் தெரு” இங்கும் உள்ளது, அங்கும் உள்ளது. எனவே இது ஏரிக்கரையில் பகுதியில் அமைந்திருந்த இடமானதால் பள்ளமாக தான் இருந்திருக்கிறது. இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் அதாவது 1920 முப்பது நாற்பதுகளில் இந்த இடங்களை வாங்கி வீடு கட்ட ஆரம்பித்துள்ளனர். அந்த காலத்தில் அதாவது சுமார் நூறாண்டுகள் முன்பு கட்டப்பட்ட வீடுகள் இப்பொழுது நிச்சயமாக ஐந்து முதல் ஏழு அடி வரை தெருவின் அந்த நிலைக்கு கீழே தான் உள்ளன. அதனால் தான் பழைய வீடுகள் 2000 ஆண்டிலிருந்து ஒவ்வொரு மழை காலத்திலும் மூழ்கி வருகின்றன. ஆனால் நூறாண்டுகளில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்றாலும், டிரைனேஜ் என சொல்லப்படுகின்ற கழிவுநீர்-மழை நீர் எல்லாம் முறையாக நிலத்தடிக்குச் செல்லுத்தப் பட்டு, குழாய்கள் மூலம் செலுத்தப்பட்டு, வெளியேற்றும் முறை சரியாக செய்யப் படவில்லை.

Photo courtesy – The Hindu

கிழக்கு உயர்ந்து, மேற்கு தேய்ந்த விதம்: 1947க்கு – விடுதலைக்கு முன்னர் தெருக்களில் பூமிக்கு அடியில் பதிக்கப் பட்ட அதே குழாய்கள் தான் இப்பொழுதும் பயன் படுத்தப் படுகின்றன. “வெள்ளக் காரன் காலத்தில் போடப் பட்ட பைப்பு” என்றும் வயதான மக்கள் கூருகின்றனர். இந்த 100 ஆண்டுகளில் மாம்பலம் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது, அதாவது கிழக்கு பக்கம் மட்டும் தியாகராய நகர் /டி.நகர் / தி.நகர் என்று மற்றும் மேற்கு பக்கம் மேற்கு மாம்பலம் என்றும் அழைக்கப்படுகிறது. எல்லாவித வளர்ச்சி அதே போல கிழக்கு பக்கத்தில் அதிகமாக இருந்து வருகிது, ஆனால் மேற்கு பக்கம் குறைவாகவே உள்ளது. “சரவணா ஸ்டோர்ஸ், குமரன், பொத்தீஸ்” என்றால் இந்தியா முழுவதும் தெரிந்துள்ளது. ஆனால் அசோக் நகர் என்ற குடியிருப்பு உருவானதால், அதை சுற்றிலும் முக்கியமான அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பிரமுகர்கள், பணக்காரர்கள் என்று இடம் வாங்கி, அதிகமாக வீடுகள் கட்டிக் கொண்டு, குடியேறியுள்ள படியால், அங்கு இருப்பவர்கள் தி.நகர் மற்றும் மவுண்ட் ரோடு செல்ல இந்த மேற்கு மாம்பலம் வழியாகத்தான் செல்ல வேண்டி இருந்தது. அதனால் தான் 1960களில் துரைசாமி ரோடு சப்வே அதாவது தரைக்கீழ் சொல்லும் பாலமாக இருந்தது, அமைக்கப்பட்டது, ஆகையால் இந்த அப்பகுதியில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது மிக சாதாரணமாக இருக்கிறது.

Photo courtesy – The Hindu

குடிநீர்கழிவு வடிகால் வாரியம் ஏன் முறையாக வேலை செய்யவில்லை?: இது ஒரு பக்கம் இருக்க, நமது பழைய பிரச்சனைக்கு செல்வதானால், இந்த நூறாண்டுகளில் இத்தனை வளர்ச்சிகளில், தெருக்களும் போடப்படுகின்றன. அவற்றின் உயரமும் அதிகமாகி வருகிறது. அதாவது ஒவ்வொரு தடவையும் “ரோடு” போடும் போதும், மூன்று ஐந்து இஞ்சுகள், அங்குலங்கள் உயரமாகி, சென்ற 50-100 ஆண்டுகளில் மேலும் உயர்த்தப்பட்டுள்ளது எனலாம். ஆனால் அதே நிலையில் 1920-30 களில் பதிக்கப்பட்ட அந்த குழாய்கள், அதே அளவுக்கு பூமியின் கீழே சென்று விட்டன. ஆனால் ஒவ்வொரு தடவை ரோட் போடும் பொழுது, பாதை மட்டும் உயர்த்தப்பட்டு வருகிறது. மழைநீர் செல்லும் பாதைகள் எப்பொழுதாவது உயர்த்திக் கட்டப் படுகின்றன. ஆனால், கட்டிட கழிவுகள், குப்பைகள் மூலம் பெரும்பாலும் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் சொல்லாமல் அந்த நீர் எப்போதும் தெருக்குறளில் தான் தேங்கி இருக்கும் நிலை இருந்டு வருகிறது. இது எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான். இதில் இருக்கும் ஊழல் போன்றவை பற்றி எல்லாம் பற்றி பேச வேண்டிய அவசியம் கிடையாது. ஏனெனில் மக்கள் தான் அவதிபடுகிறார்கள் தவிர, வந்து செல்லும் அரசுத்துறை அதிகாரிகளுக்கு எந்த அக்கரையும் இல்லை என்றே தெரிந்து வருகிறது.

© வேதபிரகாஷ்

02-12-2023

Photo courtesy – The Hindu


[1] தினபூமி, 2 ஆண்டுகளாக செய்த மழைநீர் வடிகால் பணிகளுக்கு தற்போது பலன் கிடைத்துள்ளது: அமைச்சர், வியாழக்கிழமை, 30 நவம்பர் 2023 

[2] https://www.thinaboomi.com/2023/11/30/214952.html

[3] தமிழ்.ஏபிபி.லைவ், கோடம்பாக்கம் , மேற்கு மாம்பலம் மழைநீர் தேங்க இதுதான் காரணம் | Chennai Rain, 30-11-2023, 9.00 PM.

[4] https://tamil.abplive.com/short-videos/news/chennai-chennai-rain-precaution-on-chennai-cropration-commissnor-speech-latest-news-watch-video-153430

[5] தமிழ்.இந்து, சென்னையில் கனமழையால் குடியிருப்புகள், சாலைகளில் வெள்ளம்: 2 பேர் உயிரிழப்பு, செய்திப்பிரிவு, Published : 01 Dec 2023 08:02 AM, Last Updated : 01 Dec 2023 08:02 AM.

[6]  https://www.hindutamil.in/news/tamilnadu/1161744-flood-in-chennai-flats-and-roads-4.html

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

பின்னூட்டமொன்றை இடுக