2023 மிக்ஜாம் புயல் 2015ஐ மீறி சென்னை மக்களை பாதித்தது – விஞ்ஞானம்-தொழிற்நுட்பங்கள் முன்னேறியும் பேரிடர் எதிர்ப்பு-தடுப்பு-கட்டுப்பாட்டு முறைகள் ஏன் பலனிக்கவில்லை? (3)

2023 மிக்ஜாம் புயல் 2015 மீறி சென்னை மக்களை பாதித்ததுவிஞ்ஞானம்தொழிற்நுட்பங்கள் முன்னேறியும் பேரிடர் எதிர்ப்புதடுப்புகட்டுப்பாட்டு முறைகள் ஏன் பலனிக்கவில்லை? (3)

பாதிக்கப் பட்ட மக்களின் கோரிக்கை: நிவாரணப் பணி என்ற பெயரில், அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள், படகுகளை எடுத்துச் சென்று, போட்டோவுக்கு ‘போஸ்’ கொடுப்பதில் மட்டும் ஆர்வம் காட்டுவதால், மீட்பு பணி தாமதமாவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் கூறியதாவது: :வீடுகளை சுற்றி மழை நீர் தேங்கி நிற்பதால், வெளியில் செல்ல முடியவில்லை. மொபைல் போன் இணைப்பு இல்லை; மின்சாரம் இல்லை. குடிநீர் மற்றும் உணவுக்கு சிரமப்படும் நிலை உள்ளது. தண்ணீர் வடிந்த பகுதிகளில், பொருட்கள் விலை கடுமையாக உள்ளது. விலையை கட்டுப்படுத்த, அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.மழை நீர் சூழ்ந்துள்ள பகுதியில் உள்ள, அனைத்து வீடுகளுக்கும் உடனடியாக குடிநீர், உணவு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்,” இவ்வாறு அவர்கள் கூறினர்.

சில இடங்களுக்கு ஆவின் பால் இலவசமாக சப்ளை என்று அறிவிப்பு: செம்மஞ்சேரி, பெரும்பாக்கம்பகுதி மக்களுக்கு நாளை (7 ம் தேதி) 20 ஆயிரம் ஆவின் பால்பாக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்படும் என அமைச்சர் மெய்யநாதன் அறிவித்து உள்ளார்[1]. 15 வது மண்டல மழை நிவாரணப்பணி பொறுப்பாளரான அமைச்சர் மெய்யநாதன் கூறுகையில் செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் பகுதிக்கு கூடுதலாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்[2].

1960களிலிருந்து நிலை மாறவில்லை: இந்த 21ம் நூற்றாண்டிலேயே, இத்தனை விஞ்ஞான-தொழிற்நுட்ப முன்னேற்ற வசதிகள் இருந்தாலும், சில நாட்களில் பெய்த மழையில் சிங்காரச் சென்னையில் உள்ள மக்கள் பலவிதங்களிலும் அவதியுற்றதை கவனிக்கலாம். 1960களிலிருந்து சென்னையில் வசித்து, பல புயல்கள், பெரும் மழை, சுழற்காற்று, வெள்ளம் என்றெல்லாம் பார்த்து, அனுபவித்து அவதியுற்று, ஏன் பொருட்சேதமும் ஏற்பட்டு, இன்றும் இத்தகைய அலங்கோலங்களைப் பார்க்கும் பொழுது, ஆட்சி, அதிகாரம், மக்கள்-தொடர்பு சேவை பொறுப்பு முதலியவற்றில் இருப்பவர்கள் இந்த 60-70 ஆண்டுகளில் தரமிழந்து, மோசமாகி விட்டார்கள் என்று தான் தெரிகிறது. அவர்கள் கடந்த கால அனுபவங்களிலிருந்து எந்த பாடத்தையும் கற்றுக் கொள்ளாமல், வாய்-சவடால் மூலம் ஏமாற்றி வந்ததும் மெய்ப்பிக்கப் படுகிறது. இவர்கள் எல்லோருமே நன்றாக சகல வசதிகளுடன் வீடுகளில் இருந்து வருவதால், நிச்சயமாக கஷ்டப் படும் பொது மக்களைப் பற்றி எந்த கவலையும் இல்லை, கவலை கொள்ளமாட்டார்கள் என்பதும் வெளிப்படுகிறது. அக்கஷ்டங்களை அனுபவிக்காத வரைக்கும் அவர்களுக்கு அந்த உணர்வும் வராது. வேண்டுமென்றால், வாய்பேச்சில் சமாளிக்கப் பார்ப்பார்கள்.

மழைநீர், வெள்ளநீர் கட்டுப்படுத்தும், முறைப்படுத்தும் மற்றும் கற்றும்நீக்கும் வழிகளில் முன்னேற்றம் இல்லை: மழைத் தண்ணீர் தாழ்வாக உள்ள பகுதிகளில் சாலைகளில் தேங்குவது, வீடுகளில் நுழைவது, சுரங்கப்பாதைகளில் நீர் நிற்பது, போக்குவரத்து பாதிப்பது, பொது போக்குவரத்து நிறுத்தப் படுவது, முதலியவை தொடர்ச்சியாக மழைகாலங்களில் நடந்து வருகிறது என்றால், அத்துறைகளில் உள்ள பொறுப்பானவர்கள் ஏன் முன்னேற்றம் அடையவில்லை, பிரச்சினைகளைத் தீர்க்க முடியவில்லை என்ற முக்கியமான கேள்விகள் எழுகின்றன. அதிலும் குறிப்பிட்ட இடங்கள், சுரங்கப்பாதைகள், சாலைகள் மட்டும் திரும்ப-திரும்ப பாதிக்கப் படுவது, அவர்களது இயலாமை மட்டுமல்லாது, இது வரை செய்து வந்த பணிகளின் மீதும் சந்தேகம் எழுகின்றது. இது வரை பலநூறு கோடிகள் செலவழிக்கப் பட்டிருக்கின்றன. ஆனால், அதே இடங்களில் அதே பிரச்சினைகள் மறுபடி-மறுபடி ஏற்படுகின்றன. இதனால், பெரும் பேச்சு, அறிக்கைகள், ஊடகங்களில் திணிக்க்ப்படும் வாக்குறுதிகள் எல்லாமே பொய்த்து போய் விடுகின்றன.

21ம்நூற்றாண்டிலேயே நவீன வசதி சேவைகள் முடங்குவது கேவலமான விசயம்; மின்சாரம் இல்லை, இன்டெர்நெட் இல்லை, மொபைல் சேவை (நெட்வொர்க்) இல்லை என்று ஒருபக்கம் விஞ்ஞான-தொழிற்நுட்ப முன்னேற்றங்கள் இளித்து விட்டன.  இவற்றுடன் சம்பத்தப் பட்டவர்களின் இயலாமை அவர்களது உதவாக்கரை தன்மையினைத் தான் அப்பட்டமாக மெய்ப்பித்துள்ளது. இந்த ஒருவாரத்தில் 29-11-2023 / 30-11-2023 மற்றும் டிசம்பர் 4 முதல் 6 வரை ஏற்பட்டுள்ள இழப்பிற்கு, சம்பந்தப் பட்ட நிறுவனங்கள் என்ன இழப்பீடு கொடுக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. எப்படியோ 5-12-2023 அல்லது 06-12-2023 அன்று மின்சார சப்ளை வந்து, மொபைலுக்கு சார்ஜ் போட்டு, புகார் கொடுத்தாலும், “நாங்கள் பிரியாரிடி பேசிஸில் வேலை செய்கிறோம், ஐந்து மணி நேரம் ஆகும்,” என்று பதில் கொடுத்தது தான். 10 மணி நேரங்கள் கழித்தும் ஒன்றும் நடக்கவில்லை. அதாவது, மக்கள் தொடர்பு கொள்ள முடியாத நிலைக்கு இரண்டு நாட்கள் வைக்கப் பட்டிருக்கிறார்கள். 07-12-2023 அன்று வருமென்று எதிர்பார்க்கப் படுகிறது என்கின்றனர்.

மின்சார வெட்டு, தடை போன்றவை தொடர்வது: மின்சாரத்தை வைத்து வியாபாரம் செய்வது, அரசியல் விளையாடுவது என்றெல்லாம் ஒரு பக்கம் இருக்கும்நிலையில், இப்படியும் நடப்பது வேடிக்கை தான். மின்சாரத்தை நம்பித்தான், இன்றைக்கு எல்லா மக்களும் வாழ்கிறார்கள். மின்சாரம் இல்லையென்றால், நீர் கிடைக்காது; நீர் கிடைக்கவில்லை என்றால் என்னாகும் என்று சொல்லவேண்டிய அவசியம் இல்லை. வீட்டு உபயோகப் பொருட்கள்-கருவிகள் வேலை செய்யாது; சமைக்க மிக்க கஷ்டப் பட வேண்டியிருக்கும். இரவில் பேன் / மின்-விசிறி இல்லாமல் தூங்க முடியாது; கொசுக்கள் கடிக்கும்; குழந்தைகள் வைத்திருப்பவர்கள் பெருங்கஷ்டங்களுக்கு உள்ளாவார்கள். பிறந்த குழந்தைகள், மாத குழந்தைகள், சிறு குழந்தைகள் அழுது கொண்டே இருக்கும். இதனால்,பெற்றோர்களும் கவலையுன் அவர்களைத் தேற்றிக் கொன்டிருக்க வேண்டும். ஒரு இரவு இப்படி கழித்து, இன்னொரு இரவையும் அது போல கழிப்பது என்பது, பெரிய கொடுமை.

பால் விநியோகம் நிறுத்தம்பாதிப்பு, ரேஷன் முறையில் கொடுப்பது முதலியன: இன்னொரு பக்கம் பால் சப்ளை இல்லை. ஒட்டு மொத்த சென்னைவாசிகள் ஆவின் பாலை எதிர்பார்த்து இருக்கும் நிலையில் இரண்டு நாட்கள் தொடர்ந்து பால் விநியோகம் இல்லை. அதாவது, அங்கங்கு இருக்கும் டிபோக்களுக்கே பால் வரவில்லை என்கிறார்கள். 06-12-2023 அன்று பெரிய வரிசையில் நின்று அரை லிட்டர் பால் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பால் விற்பவர்களும் அடாவடித் தனமாக நடந்து கொண்டிருக்கிறார்கள். அதிக விலைக்கு விற்பது, மீதி சில்லரை சரியாகக் கொடுக்காதது என்றெல்லாம் செய்துள்ளனர். இத்தனை அவதி, கஷ்டம், துன்பம் என்றெல்லாம் இருக்கும் நிலையிலும், இவ்வாறெல்லாம் நடந்து கொள்ள இவர்களுக்கு எப்படி மனம் இருக்கிறது என்பது ஆய்வுக்குரியது. லட்சக் கணக்கில் குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள் என்று கஷ்டப் பட்டுள்ளனர். பிறகு என்ன சித்தாந்தம் பேசி என்ன செய்து சாதிக்கப் போகிறார்கள்.

விஞ்ஞானம்தொழிற்துறை முன்னேற்றம் இருந்தும், இவற்றில் முன்னேற்றம் ஏன் இல்லை?:

  • பொதுப்பணித் துறை, குடிநீர்-வடிகால் வாரியம், சாலைத்துறை, மின்சார வாரியம், இத்தறைகளுக்கு அமைச்சர்கள், பெரிய-பெரிய அதிகாரிகள், தொழிற்நுட்ப வல்லுனர்கள், பலநிலைகளில் வேலை செய்யும் லட்சக் கணக்கான அரசு ஊழியர்கள் என்று எல்லோரும் பொறுப்பேற்பார்களா?
  • இந்த 60-70 ஆண்டுகளில் அவர்கள் என்ன கற்றுக் கொண்டார்கள். விஞ்ஞான-தொழிற்நுட்பங்க்ளை அறிந்து தத்தமது  சேவைகளில் சிறந்தார்கள்?
  • பொது மக்கள் முன்னர் வெட்கம், மானம், சூடு, சொரணை இருந்தால், தத்தம் கார்களில் வலம் வருவார்களா?
  • இணைப்புகளுக்கு லஞ்சம் கேட்பார்களா?
  • கொடுக்கவில்லை என்றால், இணைப்புகள் கொடுப்பார்களா? 2024ல் இவையெல்லாம் நடக்காமல் இருக்குமா?

கொஞ்சம் மனிதத்தன்மை இருந்தாலே, ஒவ்வொரு மனிதனும் கொஞ்சமாவது, மனசாட்சியுடன் யோசிப்பான், அயோக்கியத் தனம் செய்ய யோசிப்பான், லஞ்சம் வாங்கத் தயங்குவான்……ஆனால், நடந்து கொண்டு தானே இருக்கின்றன… இன்னும் சில நாட்களில் எல்லாமே சரியாகி, இயல்பு நிலைகளுக்கு வந்து விட்டால், பிழைப்புக்கு-வேலைக்கு செல்ல வேண்டும் என்பதால், மறந்தும் விடுவர். டிவி-மொபை சேவை தொடங்கியவுடன் டிவி-சீரியல், சினிமா என்றும் பார்க்க ஆரம்பித்து விடுவர். அரசியல்வாதிகள், சிலை திறப்பு, மணிமண்டம் கட்ட அடிக்கல் நாட்டுவது என்று கிளம்பி விடுவர்.

© வேதபிரகாஷ்

07-12-2023


[1] தினமலர், 20 ஆயிரம் பால் பாக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்படும்: அமைச்சர் மெய்யநாதன், மாற்றம் செய்த நாள்: டிச 06, 2023 23:23.

[2] https://m.dinamalar.com/detail.php?id=3497602

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

பின்னூட்டமொன்றை இடுக