Archive for the ‘விளக்கு ஏற்றுவது’ Category

2023 மிக்ஜாம் புயல் 2015ஐ மீறி சென்னை மக்களை பாதித்தது – விஞ்ஞானம்-தொழிற்நுட்பங்கள் முன்னேறியும் பேரிடர் எதிர்ப்பு-தடுப்பு-கட்டுப்பாட்டு முறைகள் ஏன் பலனிக்கவில்லை? (3)

திசெம்பர் 7, 2023

2023 மிக்ஜாம் புயல் 2015 மீறி சென்னை மக்களை பாதித்ததுவிஞ்ஞானம்தொழிற்நுட்பங்கள் முன்னேறியும் பேரிடர் எதிர்ப்புதடுப்புகட்டுப்பாட்டு முறைகள் ஏன் பலனிக்கவில்லை? (3)

பாதிக்கப் பட்ட மக்களின் கோரிக்கை: நிவாரணப் பணி என்ற பெயரில், அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள், படகுகளை எடுத்துச் சென்று, போட்டோவுக்கு ‘போஸ்’ கொடுப்பதில் மட்டும் ஆர்வம் காட்டுவதால், மீட்பு பணி தாமதமாவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் கூறியதாவது: :வீடுகளை சுற்றி மழை நீர் தேங்கி நிற்பதால், வெளியில் செல்ல முடியவில்லை. மொபைல் போன் இணைப்பு இல்லை; மின்சாரம் இல்லை. குடிநீர் மற்றும் உணவுக்கு சிரமப்படும் நிலை உள்ளது. தண்ணீர் வடிந்த பகுதிகளில், பொருட்கள் விலை கடுமையாக உள்ளது. விலையை கட்டுப்படுத்த, அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.மழை நீர் சூழ்ந்துள்ள பகுதியில் உள்ள, அனைத்து வீடுகளுக்கும் உடனடியாக குடிநீர், உணவு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்,” இவ்வாறு அவர்கள் கூறினர்.

சில இடங்களுக்கு ஆவின் பால் இலவசமாக சப்ளை என்று அறிவிப்பு: செம்மஞ்சேரி, பெரும்பாக்கம்பகுதி மக்களுக்கு நாளை (7 ம் தேதி) 20 ஆயிரம் ஆவின் பால்பாக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்படும் என அமைச்சர் மெய்யநாதன் அறிவித்து உள்ளார்[1]. 15 வது மண்டல மழை நிவாரணப்பணி பொறுப்பாளரான அமைச்சர் மெய்யநாதன் கூறுகையில் செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் பகுதிக்கு கூடுதலாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்[2].

1960களிலிருந்து நிலை மாறவில்லை: இந்த 21ம் நூற்றாண்டிலேயே, இத்தனை விஞ்ஞான-தொழிற்நுட்ப முன்னேற்ற வசதிகள் இருந்தாலும், சில நாட்களில் பெய்த மழையில் சிங்காரச் சென்னையில் உள்ள மக்கள் பலவிதங்களிலும் அவதியுற்றதை கவனிக்கலாம். 1960களிலிருந்து சென்னையில் வசித்து, பல புயல்கள், பெரும் மழை, சுழற்காற்று, வெள்ளம் என்றெல்லாம் பார்த்து, அனுபவித்து அவதியுற்று, ஏன் பொருட்சேதமும் ஏற்பட்டு, இன்றும் இத்தகைய அலங்கோலங்களைப் பார்க்கும் பொழுது, ஆட்சி, அதிகாரம், மக்கள்-தொடர்பு சேவை பொறுப்பு முதலியவற்றில் இருப்பவர்கள் இந்த 60-70 ஆண்டுகளில் தரமிழந்து, மோசமாகி விட்டார்கள் என்று தான் தெரிகிறது. அவர்கள் கடந்த கால அனுபவங்களிலிருந்து எந்த பாடத்தையும் கற்றுக் கொள்ளாமல், வாய்-சவடால் மூலம் ஏமாற்றி வந்ததும் மெய்ப்பிக்கப் படுகிறது. இவர்கள் எல்லோருமே நன்றாக சகல வசதிகளுடன் வீடுகளில் இருந்து வருவதால், நிச்சயமாக கஷ்டப் படும் பொது மக்களைப் பற்றி எந்த கவலையும் இல்லை, கவலை கொள்ளமாட்டார்கள் என்பதும் வெளிப்படுகிறது. அக்கஷ்டங்களை அனுபவிக்காத வரைக்கும் அவர்களுக்கு அந்த உணர்வும் வராது. வேண்டுமென்றால், வாய்பேச்சில் சமாளிக்கப் பார்ப்பார்கள்.

மழைநீர், வெள்ளநீர் கட்டுப்படுத்தும், முறைப்படுத்தும் மற்றும் கற்றும்நீக்கும் வழிகளில் முன்னேற்றம் இல்லை: மழைத் தண்ணீர் தாழ்வாக உள்ள பகுதிகளில் சாலைகளில் தேங்குவது, வீடுகளில் நுழைவது, சுரங்கப்பாதைகளில் நீர் நிற்பது, போக்குவரத்து பாதிப்பது, பொது போக்குவரத்து நிறுத்தப் படுவது, முதலியவை தொடர்ச்சியாக மழைகாலங்களில் நடந்து வருகிறது என்றால், அத்துறைகளில் உள்ள பொறுப்பானவர்கள் ஏன் முன்னேற்றம் அடையவில்லை, பிரச்சினைகளைத் தீர்க்க முடியவில்லை என்ற முக்கியமான கேள்விகள் எழுகின்றன. அதிலும் குறிப்பிட்ட இடங்கள், சுரங்கப்பாதைகள், சாலைகள் மட்டும் திரும்ப-திரும்ப பாதிக்கப் படுவது, அவர்களது இயலாமை மட்டுமல்லாது, இது வரை செய்து வந்த பணிகளின் மீதும் சந்தேகம் எழுகின்றது. இது வரை பலநூறு கோடிகள் செலவழிக்கப் பட்டிருக்கின்றன. ஆனால், அதே இடங்களில் அதே பிரச்சினைகள் மறுபடி-மறுபடி ஏற்படுகின்றன. இதனால், பெரும் பேச்சு, அறிக்கைகள், ஊடகங்களில் திணிக்க்ப்படும் வாக்குறுதிகள் எல்லாமே பொய்த்து போய் விடுகின்றன.

21ம்நூற்றாண்டிலேயே நவீன வசதி சேவைகள் முடங்குவது கேவலமான விசயம்; மின்சாரம் இல்லை, இன்டெர்நெட் இல்லை, மொபைல் சேவை (நெட்வொர்க்) இல்லை என்று ஒருபக்கம் விஞ்ஞான-தொழிற்நுட்ப முன்னேற்றங்கள் இளித்து விட்டன.  இவற்றுடன் சம்பத்தப் பட்டவர்களின் இயலாமை அவர்களது உதவாக்கரை தன்மையினைத் தான் அப்பட்டமாக மெய்ப்பித்துள்ளது. இந்த ஒருவாரத்தில் 29-11-2023 / 30-11-2023 மற்றும் டிசம்பர் 4 முதல் 6 வரை ஏற்பட்டுள்ள இழப்பிற்கு, சம்பந்தப் பட்ட நிறுவனங்கள் என்ன இழப்பீடு கொடுக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. எப்படியோ 5-12-2023 அல்லது 06-12-2023 அன்று மின்சார சப்ளை வந்து, மொபைலுக்கு சார்ஜ் போட்டு, புகார் கொடுத்தாலும், “நாங்கள் பிரியாரிடி பேசிஸில் வேலை செய்கிறோம், ஐந்து மணி நேரம் ஆகும்,” என்று பதில் கொடுத்தது தான். 10 மணி நேரங்கள் கழித்தும் ஒன்றும் நடக்கவில்லை. அதாவது, மக்கள் தொடர்பு கொள்ள முடியாத நிலைக்கு இரண்டு நாட்கள் வைக்கப் பட்டிருக்கிறார்கள். 07-12-2023 அன்று வருமென்று எதிர்பார்க்கப் படுகிறது என்கின்றனர்.

மின்சார வெட்டு, தடை போன்றவை தொடர்வது: மின்சாரத்தை வைத்து வியாபாரம் செய்வது, அரசியல் விளையாடுவது என்றெல்லாம் ஒரு பக்கம் இருக்கும்நிலையில், இப்படியும் நடப்பது வேடிக்கை தான். மின்சாரத்தை நம்பித்தான், இன்றைக்கு எல்லா மக்களும் வாழ்கிறார்கள். மின்சாரம் இல்லையென்றால், நீர் கிடைக்காது; நீர் கிடைக்கவில்லை என்றால் என்னாகும் என்று சொல்லவேண்டிய அவசியம் இல்லை. வீட்டு உபயோகப் பொருட்கள்-கருவிகள் வேலை செய்யாது; சமைக்க மிக்க கஷ்டப் பட வேண்டியிருக்கும். இரவில் பேன் / மின்-விசிறி இல்லாமல் தூங்க முடியாது; கொசுக்கள் கடிக்கும்; குழந்தைகள் வைத்திருப்பவர்கள் பெருங்கஷ்டங்களுக்கு உள்ளாவார்கள். பிறந்த குழந்தைகள், மாத குழந்தைகள், சிறு குழந்தைகள் அழுது கொண்டே இருக்கும். இதனால்,பெற்றோர்களும் கவலையுன் அவர்களைத் தேற்றிக் கொன்டிருக்க வேண்டும். ஒரு இரவு இப்படி கழித்து, இன்னொரு இரவையும் அது போல கழிப்பது என்பது, பெரிய கொடுமை.

பால் விநியோகம் நிறுத்தம்பாதிப்பு, ரேஷன் முறையில் கொடுப்பது முதலியன: இன்னொரு பக்கம் பால் சப்ளை இல்லை. ஒட்டு மொத்த சென்னைவாசிகள் ஆவின் பாலை எதிர்பார்த்து இருக்கும் நிலையில் இரண்டு நாட்கள் தொடர்ந்து பால் விநியோகம் இல்லை. அதாவது, அங்கங்கு இருக்கும் டிபோக்களுக்கே பால் வரவில்லை என்கிறார்கள். 06-12-2023 அன்று பெரிய வரிசையில் நின்று அரை லிட்டர் பால் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பால் விற்பவர்களும் அடாவடித் தனமாக நடந்து கொண்டிருக்கிறார்கள். அதிக விலைக்கு விற்பது, மீதி சில்லரை சரியாகக் கொடுக்காதது என்றெல்லாம் செய்துள்ளனர். இத்தனை அவதி, கஷ்டம், துன்பம் என்றெல்லாம் இருக்கும் நிலையிலும், இவ்வாறெல்லாம் நடந்து கொள்ள இவர்களுக்கு எப்படி மனம் இருக்கிறது என்பது ஆய்வுக்குரியது. லட்சக் கணக்கில் குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள் என்று கஷ்டப் பட்டுள்ளனர். பிறகு என்ன சித்தாந்தம் பேசி என்ன செய்து சாதிக்கப் போகிறார்கள்.

விஞ்ஞானம்தொழிற்துறை முன்னேற்றம் இருந்தும், இவற்றில் முன்னேற்றம் ஏன் இல்லை?:

  • பொதுப்பணித் துறை, குடிநீர்-வடிகால் வாரியம், சாலைத்துறை, மின்சார வாரியம், இத்தறைகளுக்கு அமைச்சர்கள், பெரிய-பெரிய அதிகாரிகள், தொழிற்நுட்ப வல்லுனர்கள், பலநிலைகளில் வேலை செய்யும் லட்சக் கணக்கான அரசு ஊழியர்கள் என்று எல்லோரும் பொறுப்பேற்பார்களா?
  • இந்த 60-70 ஆண்டுகளில் அவர்கள் என்ன கற்றுக் கொண்டார்கள். விஞ்ஞான-தொழிற்நுட்பங்க்ளை அறிந்து தத்தமது  சேவைகளில் சிறந்தார்கள்?
  • பொது மக்கள் முன்னர் வெட்கம், மானம், சூடு, சொரணை இருந்தால், தத்தம் கார்களில் வலம் வருவார்களா?
  • இணைப்புகளுக்கு லஞ்சம் கேட்பார்களா?
  • கொடுக்கவில்லை என்றால், இணைப்புகள் கொடுப்பார்களா? 2024ல் இவையெல்லாம் நடக்காமல் இருக்குமா?

கொஞ்சம் மனிதத்தன்மை இருந்தாலே, ஒவ்வொரு மனிதனும் கொஞ்சமாவது, மனசாட்சியுடன் யோசிப்பான், அயோக்கியத் தனம் செய்ய யோசிப்பான், லஞ்சம் வாங்கத் தயங்குவான்……ஆனால், நடந்து கொண்டு தானே இருக்கின்றன… இன்னும் சில நாட்களில் எல்லாமே சரியாகி, இயல்பு நிலைகளுக்கு வந்து விட்டால், பிழைப்புக்கு-வேலைக்கு செல்ல வேண்டும் என்பதால், மறந்தும் விடுவர். டிவி-மொபை சேவை தொடங்கியவுடன் டிவி-சீரியல், சினிமா என்றும் பார்க்க ஆரம்பித்து விடுவர். அரசியல்வாதிகள், சிலை திறப்பு, மணிமண்டம் கட்ட அடிக்கல் நாட்டுவது என்று கிளம்பி விடுவர்.

© வேதபிரகாஷ்

07-12-2023


[1] தினமலர், 20 ஆயிரம் பால் பாக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்படும்: அமைச்சர் மெய்யநாதன், மாற்றம் செய்த நாள்: டிச 06, 2023 23:23.

[2] https://m.dinamalar.com/detail.php?id=3497602

2023 மிக்ஜாம் புயல் 2015ஐ மீறி சென்னை மக்களை பாதித்தது – விஞ்ஞானம்-தொழிற்நுட்பங்கள் முன்னேறியும் இந்நிலை ஏன்? (1)

திசெம்பர் 7, 2023

2023 மிக்ஜாம் புயல் 2015 மீறி சென்னை மக்களை பாதித்ததுவிஞ்ஞானம்தொழிற்நுட்பங்கள் முன்னேறியும் இந்நிலை ஏன்? (1)

05-12-2023 மற்றும் 06-12-2023 நாட்களில் சென்னை மக்களின் அவதி: சென்னைவாசிகளுக்கு மழை, பெரும்-மழை, சூறாவளி, சூறைக்காற்று, வெள்ளம், சாலைகளில் தண்ணீர் தேங்குவது-ஓடுவது; ஏரிகளைத் திறந்து விடுவதால் வெள்ளம் புகுவது, தாழ்வான இடங்களில் வெள்ளம் பாய்வது, வீடுகளில் நீர் வருவது-தேங்குவது, மின்சாரம் துண்டிப்பு, என்பனவெல்லாம் புதியதல்ல. 1950-60களிலிருந்து கவனித்து வருவர்களுக்கு நன்றாகத் தெரிந்த விசயம் தான். ஆனால், 2015ற்குப் பிறகும், அதே நிலை அல்லது அதை விட மோசமான நிலை தொடர்வது திகைப்பாக உள்ளது. இப்பொழுது டிசம்பர் 2023ல் தொடர்மழை காரணமாக, சென்னையில் பல்வேறு பகுதிகளில் மக்கள் அத்தியாவசிய தேவையான ஆவின்பால் கிடைக்காமல் கடும் அவதிப்பட்டனர்[1]. மேலும், சில இடங்களில் அதிக விலைக்கு பழைய பால் பாக்கெட்டுகளை வாங்கி செல்லும் நிலையும் ஏற்பட்டது[2]. இப்படி கொஞ்சம்-கொஞ்சமாக செய்திகள் வெளிவர ஆரம்பித்தன. துரதிருஷ்டவசமாக, இம்முறை ஊடகங்களே விவரங்களை மறைப்பது வேதனையாக உள்ளது. ஏனெனில், இதனால், கஷ்டப் பட்ட, தொடர்ந்து சொல்லொனா இன்னல்களை அனுபவித்து வரும்பொது மக்களின் நிலை, அவர்களது இழப்பு மாறப் போவதில்லை.

05-12-2023 மற்றும் 06-12-2023 நாட்களில் ஆவின் பால் விநோகம் இலாமல் இருந்தது: `மிக்ஜாம்’ புயல் காரணமாக, சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. பெரும்பாலான இடங்களில் 3 முதல் 5 அடிகள் வரை மழைநீர் தேங்கியுள்ளது. தாழ்வாக உள்ள வீடுகளில் நீர் புகுந்துள்ளது. மழைநீர் வடியாத நிலையில், பல இடங்களில் போக்குவரத்து முடங்கி, வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் பல்வேறு பகுதிகளில் ஆவின் பால் கிடைக்காமல் பொதுமக்கள் கடும்அவதிப்பட்டனர். குறிப்பாக, குழந்தைகள் வைத்திருப்பவர்கள் பெரும் இன்னலை சந்தித்தனர். சென்னையில் வியாசர்பாடி, எம்கேபி நகர்பகுதி, நுங்கம்பாக்கம், சூளைமேடு, செனாய்நகர், கோயம்பேடு, அம்பத்தூர், மயிலாப்பூர் உட்படபல்வேறு இடங்களில் ஆவின் பால் விநியோகம் பாதிக்கப்பட்டது. இங்கு பழைய மாம்பலம் ஏன் விடுபட்டது என்று தெரியவில்லை. சென்னையில் ஆவின் பாலைபொருத்தவரை 14.75 லட்சம் லிட்டர் பால் தினசரி விநியோகம் செய்யப்படுவது வழக்கம். ஆனால், தொடர்மழை காரணமாக, சென்னை மற்றும் புறநகரில் பெரும்பாலான இடங்களில் 05-12-2023 அன்று காலையில் பால் விநியோகம் மிகக்குறைவாகவே இருந்தது.

ரேஷன் முறையில் ஆவின் பால் விற்கப்பட்ட நிலை: சென்னையில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பெரும் கனமழை மற்றும் வெள்ளத்தால் சாலை முழுதும் தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது[3]. பல சுரங்கபாதைகளில் நீர் நிரம்பியதால் மூடப் பட்டன. குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆங்காங்கே போக்குவரத்து தடைபட்டுள்ள காணத்தால் சென்னை முழுதும் பால் விநியோகம் தடைபட்டுள்ளதாக தெரிகிறது[4]. ஒரு சில இடங்களில் மட்டுமே பால் விநியோகம் செய்யப்பட்டது. இந்த பாலை வாங்க பொதுமக்கள் நெடுந்தொலைவு வரை வரிசையில் காத்திருந்தனர். ஆவின் பால் மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களின் பால் பாக்கெட் விநியோகமும் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் கூறும்போது, “ஆவின் பால் மட்டுமின்றி தனியார் பால் பாக்கெட்டும் கிடைக்கவில்லை. சில இடங்களில் அதிக விலைக்கு பால் பாக்கெட் விநியோகம் செய்யப்பட்டது. இந்த பால், பழைய பாக்கெட் என்பதால், திரிந்து கெட்டுப்போனது. எனவே, அத்தியா வசிய தேவையான பாலை தட்டுப்பாடு இன்றி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

தமிழக பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்த ஆய்வு: ஒரு பக்கம் இவ்வாறு இர்க்கும்நிலையில், தமிழக பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு செய்தார் என்ற செய்திகளும் வந்துள்ளன. சிலபால் பூத்துகளுக்குச் சென்றார். பார்வையிட்டார், என்றெல்லாம் செய்திகள் உள்ளன. இருப்பினும், அவர் என்ன, எத்தகைய ஆய்வு செய்தார் என்று தெரியவில்லை பால் விநியோகம் பாதிக்கப்பட்டதற்கு அமைச்ச்சரும் அதிகாரிகளும் பல காரணங்களைக் கூறினர்.

  1. ஆவின் தொழிற்சாலைகளில் வேலையாட்கள் குறைவாக வேலை செய்தனர். அதாவது, மழை என்பதால் வரமுடியவில்லை.
  2. பால் விநியோக வண்டிகள் சாலைகளில் செல்ல முடியவில்லை. சாலை குண்டு-குழி, நீர் தேக்கம், ஒரு இடத்தில் வண்டி கவிழ்ந்தது முதலியன.
  3. சப்ளை-டிமான்ட் பிரச்சினை – அம்பத்தூர்-சோழிங்க நல்லூர்-மாதவரம் தொழிற்சாலைகளிலிருந்து உற்பத்தி, விநியோகம் குறைந்தது;
  4. குறிப்பாக அம்பத்தூரில் பால் பண்ணைகளில் அதிகளவு தண்ணீர் தேங்கியதால் பல்வேறு பிரச்சினைகள் எழுந்தது
  5. அதிக விலைக்கு டிப்போ-காரர்கள், கடைக்காரர்கள் விற்றது;
  6. மக்கள் அதிகமாக வாங்கி வைத்துக் கொண்டது….

 தமிழக பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்: ஆவின் பால் விநியோகம் செய்வதில் சிரமம் ஏற்பட்டது ஏன் என்பது குறித்து தமிழக பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம் அளித்துள்ளார்[5]. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரலாறு காணாத மழையால் பால் உற்பத்தியிலும், விநியோகத்திலும் பாதிப்பு ஏற்பட்டது[6]. குறிப்பாக பல இடங்களில் தண்ணீர் சூழ்ந்த நிலையில் வாகன போக்குவரத்து மிகப்பெரிய சவாலாக இருந்தது[7]. சென்னை மாநகரை பொறுத்தவரையில் வெளி மாவட்டங்களில் இருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டு சென்னை அம்பத்தூர், சோழிங்கநல்லூர், மாதவரம் பால் பண்ணைகளில் பதப்படுத்தப்பட்டு விநியோகிக்கப்படுகிறது[8]. தனியார் பால் நிறுவனங்களை பொறுத்த வரையில் அவர்களும் வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு பால் கொண்டு வருவது வழக்கம்[9]. சென்னை பெருநகர் பகுதியில் கால்நடை இல்லாத காரணத்தால் பால் உற்பத்தி செய்யப்படுவதில்லை[10]. இந்த சூழ்நிலையில் தான் 2 நாட்கள் ஆவின், தனியார் பால் விநியோகஸ்தர்கள் கூட பாதிக்கப்பட்ட இடங்களுக்கு பால் கொண்டு சேர்ப்பதில் மிகப்பெரிய சவால்களை சந்திக்க நேரிட்டது[11]. அதிலும் குறிப்பாக அம்பத்தூரில் பால் பண்ணைகளில் அதிகளவு தண்ணீர் தேங்கியதால் பல்வேறு பிரச்சினைகள் எழுந்தது[12]. அதனால் போர்கால நடவடிக்கை மேற்கொண்டு பால் விநியோகத்தை சீரமைத்து தற்போது ஓரளவுக்கு பால் விநியோகிக்கப்பட்டுள்ளது. அரசு தரப்பில் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. பால் தேவையில் இடைவெளி ஏற்படாமல் தவிர்ப்பதற்கு பால் பவுடர் விநியோகமும் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. பல இடங்களில் பொதுமக்கள் பால் தொடர்ந்து கிடைக்காதோ என்ற அச்சத்தில் அதிகமான பால் வாங்கும் நிலை உள்ளது. அதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

© வேதபிரகாஷ்

07-12-2023


[1] தமிழ்.இந்து, தொடர்மழை எதிரொலியால் விநியோகம் பாதிப்பு: சென்னையில் பால் கிடைக்காமல் மக்கள் அவதி, Published : 06 Dec 2023 07:42 AM; Last Updated : 06 Dec 2023 07:42 AM.

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/1163807-people-are-suffering-due-to-lack-of-milk-in-chennai.html

[3] தினமலர், பால் விநியோகம் முடங்கியது, மாற்றம் செய்த நாள்: டிச 05,2023 06:29

[4] https://m.dinamalar.com/detail.php?id=3496673

[5] தினத்தந்தி, ஆவின் பால் விநியோகம் செய்வதில் சிரமம் ஏற்பட்டது ஏன்..? அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம், டிசம்பர் 6, 11:26 pm.

[6] https://www.dailythanthi.com/News/State/why-was-there-difficulty-in-distributing-milk-minister-mano-thangaraj-explained-1085101

[7] சமயம்,  நிலைமை சீராயிடுச்சு.. நாளை முதல் ஆவின் பால் விநியோகத்தில் எந்த தடையும் இருக்காது.. மனோ தங்கராஜ் சொன்ன குட் நியூஸ்!,  Authored By பஹன்யா ராமமூர்த்தி | Samayam Tamil | Updated: 6 Dec 2023, 4:48 pm.

[8] https://tamil.samayam.com/latest-news/state-news/minister-mano-thangaraj-says-situation-stabilized-and-there-will-be-no-interruption-in-aavin-milk-supply-from-tomorrow/articleshow/105784396.cms

[9] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், Avian milk : பதற்றமடைந்து தேவையை விட அதிகமாக பால் வாங்கி இருப்பு வைக்க வேண்டாம்மனோ தங்கராஜ், Ajmal Khan, First Published Dec 6, 2023, 8:51 AM IST; Last Updated Dec 6, 2023, 8:51 AM IST

[10] https://tamil.asianetnews.com/tamilnadu/mano-thangaraj-requested-that-the-public-should-not-buy-too-much-milk-and-stock-up-kak-s586o8

[11] தமிழ்.ஏபிபி.லைவ், Aavin Milk: நிறுத்தப்பட்ட உற்பத்தி.. இரண்டாவது நாளாக முடங்கியது ஆவின் பால் விநியோகம்! காரணம் என்ன..?, By: முகேஷ் | Updated at : 06 Dec 2023 01:01 PM (IST), Published at : 06 Dec 2023 01:01 PM (IST)

[12] https://tamil.abplive.com/news/chennai/there-has-been-severe-shortage-of-milk-in-chennai-and-its-surrounding-areas-for-more-than-2-days-due-to-cyclone-michuang-154322

சித்தாந்த தீபாவளி 2010: உலக-தேசிய-மாநில கொண்டாட்டங்கள் (1)

நவம்பர் 9, 2010

சித்தாந்த தீபாவளி 2010: உலக-தேசிய-மாநில கொண்டாட்டங்கள் (1)

நாத்திகர்களை பெரிதும் பாதித்துள்ள தீபாவளி: இப்பொழுது எல்லோருமே தீபாவளியைப் பிடித்துக் கொண்டு ஆடி-ஆட்டி வருகிறார்கள். அதுவும் ஒபாமா தம்பதியர் விளக்கு வைத்து, பாடி-ஆடி தீபாவளி கொண்டாடியதும், எல்லோருக்குமே ஆட ஆரம்பித்து விட்டது! குறிப்பாக தமிழக நாத்திகர்களுக்கு, பகுத்தறிவாளிகளுக்கு சொல்லவே வேண்டாம், “பெரியார் பிறந்த பூமியில் தீபாவளியா” என்றெல்லாம் புலம்பி ஓய்ந்து, மழை சாக்கு வைத்துக் கொண்டு வீடுகளில் அடைப்பட்டு விட்டன[1]. ஆனால், வீட்ட்டிற்குள்ளேயிருந்தே வெடிகளை வெளியே வீசிக்கொண்டிருந்தன. பாவம், அவர்கள் விட்ட வெடிகள் எல்லாமே “புஸ்ஸாகி” விட்டன! ஒபாமாயாகிவிடவில்லை! நன்றாக நமுத்து / நமித்து / நமிதாப் போய் விட்டன போலும்! நமீதாவை வைத்து வெடித்திருக்கலாம், குஷ்புபைவிட்டு[2] புஸ்வானமவது விட சொல்லியிருக்கலாம்!!

கமலஹாசனுக்கு / கமலாசனுக்கு[3] முதல்வர் வாழ்த்தும் பல்லாண்டு பாடலும்[4]: குல்லா போட்டு கஞ்சி குடிக்கும் கருணாநிதி 06-11-2010 அன்று தனது 56வது பிறந்த நாளைக் கொண்டாடும் நடிகர் கமலஹாசனுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி வாழ்த்து[5] தெரிவித்துள்ளாராம்! இன்று அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் அவர் கூறியிருப்பதாவது: “தமிழ் திரையுலகின் கவுரவமாகவும், மகுடமாகவும் திகழ்பவர் கமல்; தமிழ் சினிமாவில் கமலுக்கு என்றுமே தனியிடம் உண்டு; சிறுவனாக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த கமல், தற்போது உலக அரங்கிற்கு தமிழ் சினிமாவை கொண்டு செல்லும் நிலைக்கு உயர்ந்துள்ளார்; அவர் பல்லாண்டு காலம் வாழ்ந்து மேலும் பல பெருமைகளை பெற வாழ்த்துகிறேன்; மனதளவில் அவர் கவிஞராக இருப்பதே அவரின் இந்த முன்னேற்றத்திற்கு காரணம்; அவர் சிறந்த நடிகர் என்பதை ஏற்கனவே நிரூபித்துவிட்டார்”, இவ்வாறு அவர் வாழ்த்தியுள்ளாராம்! வேடிக்கைதான், ஏன் நாத்திக மரபுபடி “நாசமா போக, உன்வீட்டில் இழவு வர………………..”, என்று பாராட்டியிருக்கலாமே? எல்லாவற்றையும் நாங்கள் தலைகீழாக செய்வோம்[6] என்றுதானே பீழ்த்திக்கொள்வர்?  பிறகென்ன “பல்லாண்டு”?

“அவர் பல்லாண்டு காலம் வாழ்ந்து மேலும் பல பெருமைகளை பெற வாழ்த்துகிறேன்”: திருமாவிற்கு போட்டியாக ராமசாமி நாயக்கரின் மகனாக நடித்ததால்[7], நன்றாகவே நாமம் போட்டுள்ளார். அதென்ன “பல்லாண்டு காலம் வாழ்ந்து மேலும் பல பெருமைகளை பெற வாழ்த்துகிறேன்”, வெங்காயம்! இதென்ன நாத்திகமா, ஆத்திகமா, வெங்காயமா, எள்ளுருண்டையா? “வாழ்க, ஒழிக” என்பது என்ன வாழ்த்தா, சாபமா, பலித்துவிட? இதென்ன பிறகு இந்த திராவிட ரிஷி இப்படி கிளம்பிவிட்டார், இந்த வயதில்? நாத்திக மரபுபடி “நாசமா போக, உன்வீட்டில் இழவு வர………………..”, என்று பாராட்டியிருக்கலாமே? எல்லாவற்றையும் நாங்கள் தலைகீழாக செய்வோம்[8] என்றுதானே பீழ்த்திக்கொள்வர்?  பிறகென்ன “பல்லாண்டு”?

“மனதளவில் அவர் கவிஞராக இருப்பதே அவரின் இந்த முன்னேற்றத்திற்கு காரணம்”: ஆமாம், நல்லவேளை, உடலளவில் கவிஞராக, கலைஞனாகி விடவில்லை! சமீபத்தில் கமல் நானும் கலைஞன் தான் என்று “ஆட்டம் பாம்” வெடித்தது உறுத்திவிட்டது போலும், பதிலுக்கு சரத்தை வீசியுள்ளார். அதாவது, இனி திமுகவில் உடலளவில் சேர்ந்து முன்னேற வேண்டியது தான் பாக்கி! கலைஞனுக்கு எப்படியெல்லாம் பொறாமை வருகிறது? முன்பு மாமியார்-மறுமகள் வெடி – ஒன்று வெடித்துக் கொண்டே முன்னால் சென்றால், இன்னொன்று எதிர்பக்கத்தில் வெடித்துக் கொண்டே வரும் – என்றேல்லாம் விற்பார்கள், இப்பொழுது கிடைக்கிறதா என்று தெரியவில்லை.

“அவர் சிறந்த நடிகர் என்பதை ஏற்கனவே நிரூபித்துவிட்டார்”!: ஐயோ, இதென்ன இப்படி சீனவெடியைக் கிள்ளிப் போட்டுவிட்டார்? ஊர்வசி வேறு கமல் நெருக்கத்தில் வந்து நடித்தால் ஏதோ செய்வார் என்று வேறு குண்டு விட்டிருக்கிறார்! அவர் நடித்ததால்தானே, எத்தனை நடிகைகளின் வாழ்க்கை பாழானது, தற்கொலை செய்து கொண்டனர், இத்யாதி…………….படாபட்! வீரமணியிடம் சொல்லி, இன்னொரு சிறப்பு மலரை “காதல் இளவரசன்” அல்லது “நடிகைகளின் நரகாசுரன்” என்று வெளியிட செய்யலாம்! இனி கமல் “அரசியல்வாதி” ஆனால் தான், பிரச்சினை!

ஒபாமா வருகை முழுக்க முழுக்க வர்த்தக ரீதியிலானது[9]: பா.., புகார் புலம்பல்: “அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வருகை, முழுக்க முழுக்க வணிக நோக்கம் கொண்டது’ என,  பா.ஜ., மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் புகார் தெரிவித்துள்ளன. ஒபாமா இந்தியாவிற்கு வரும் முன், இந்திய வெளியுறவு செயலர் நிருபமாராவ் விடுத்த அறிக்கைக்கும், ஒபாமா தரப்பில் விடுக்கப்பட்ட அறிக்கைக்கும் ஏராளமான முரண்பாடுகள் உள்ளன. இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கிடையேயான உறவை மேம்படுத்தும் வகையில் ஒபாமாவின் வருகை அமையும் என, ராவ் தெரிவித்திருந்தார்.  ஆனால், ஒபாமாவின் பயணமோ, முழுக்க முழுக்க வர்த்தக ரீதியில் அமைந்துள்ளது.

கம்யூனிஸ்ட்டுகளின் சில்லறை ஒப்பாரி[10]: இரட்டை வேடம் போடுவதில் இவர்களும் சளைத்தவர்கள் அல்லர்[11]. நன்றாக தீபாவளி கொண்டாடி விட்டு, ஊசிவெடி வெடிக்க தெருவில் வந்து பூச்சாண்டி காட்டியது வேடிக்கையாக இருந்தது. டில்லியில் ஆட்டம் பாம் வெடிக்கிறது என்றால், இங்கு புஸ்ஸான வெடிகளை நெருப்பில் போடு கொளுத்துகிறார்கள்[12], பாவம்! ஒப்பாரி வைத்த அனைத்து எம்.பிக்களும் ஒபாமா பேச்சைக் கேட்டு புல்லரித்து பாராட்ட வேறு செய்தார்கள்!

வேதபிரகாஷ்

© 08-11-2010


[1] டாக்டர் சொல்லியும் கேட்காமல் விதவிதமான ஸ்வீட்டுகளை சுவைத்ததால் பத்தினிகள் வேறு சாபமிட்டிருக்கிறார்களாம்! என்ன செய்வது இலவசமாக வந்து குவிந்து விட்டதாம்! ஊச் வெடியை வெடிக்கலாம், கொளுத்தலாம், ஸ்வீட் ஊசி விட்டால் என்ன செய்வது?

[2] பாவம், சுந்தர் கழட்டிவிடுவேன் என்று பயமுறுத்தியதாக வேறு செய்திகள் வந்துள்ளன.

[3] கமலம் + ஹாசன் = கமல் + ஆசன் = கமலாசன் என்று மாற்றிக் கொள்ளாலாமா? இங்கு எப்படி “ஸ” வந்தது என்று தெரியவில்லை, பார்ப்பன சதியே அலாதியானது தான்!

[4] தினமலர், கமலஹாசனுக்கு முதல்வர் வாழ்த்து, நவம்பர் 07, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=121755

[5] 50 ஆண்டுகளில் இல்லாதது இப்பொழுது எப்படி வந்தது? அதுவும் சரியாக 2010ல்?

[6] உண்ணாவிரதம் என்றாள் உண்ணும் விரதம் என்று கவிச்சை வைத்துக் கொண்டு சாப்பிடுவார்கள்; நல்லநாள் எல்லாம் பார்ப்பதில்லை என்று ராகுகாலம்-எமகண்டத்தில் கல்யாணம் செய்து கொள்வார்கள்….இப்படி பல நாத்திக கூத்துகள், வெடிகள் எல்லாம் தமிழகத்தில் தமிழர்கள் பார்த்திருக்கிறார்கள்.

[7] இந்த நடிகன் “நாயகர்” என்றதும் தசாவதாரத்தில் அந்த நடிகை எதோ ஊளையிடுவாள், பாவம்! ஆஸௌசம் தான்!! ஆமாம், வசனத்தை “கட்” செய்திருப்பர்!

[8] உண்ணாவிரதம் என்றாள் உண்ணும் விரதம் என்று கவிச்சை வைத்துக் கொண்டு சாப்பிடுவார்கள்; நல்லநாள் எல்லாம் பார்ப்பதில்லை என்று ராகுகாலம்-எமகண்டத்தில் கல்யாணம் செய்து கொள்வார்கள்….இப்படி பல நாத்திக கூத்துகள், வெடிகள் எல்லாம் தமிழகத்தில் தமிழர்கள் பார்த்திருக்கிறார்கள்.

[10] இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மாக்ஷிச கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளைச் சார்ந்தவர்கள் மற்றும் பல்கழலக்கழக மாணவர்கள் என சுமார் 700 பேர் டெல்லியின் முக்கிய பகுதியான ஜந்தர் மந்திர் பகுதியில் கண்டனப் பேரணி நடத்தியுள்ளனர்..

http://www.bbc.co.uk/tamil/news/story/2010/11/101108_protestagainstobama.shtml

[11] சோவியத் படைகள் ஆப்கானிஸ்தானில் குவிக்கப்பட்டதற்கு  கம்யூனிஸ்டுகள் கண்டனம் தெரிவிக்கவில்லை.

இந்திய மாநிலமான அருணாசல பிரதேசத்தை  தங்கள் பகுதி என்று சீன வரைபடத்தில் வெளியிட்டதற்கும்,

ஜம்மு காஷ்மீரிலிருந்து செல்பவர்களுக்கு சீனா தனி விசா கொடுப்பதற்கும்,

பாகிஸ்தான் ஆக்கிரமித்து உள்ள இந்திய பகுதியை பாகிஸ்தானுக்கு உரியது என்று சீனா அதிகாரப்பூர்வமாக சொல்லி வருவதற்கும் கம்யூனிஸ்டுகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

இலங்கை தீவில் லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவிக்க சீன அரசு ஆயுதங்களை வழங்கிய போது, கம்யூனிஸ்டுகள் கண்டிக்கவில்லை. இப்படி அடுக்கடுக்காக கூறியுள்ளவர், இல்லை 1000 வாலா வெடித்தவர் வைகோ!