Archive for the ‘ஆவின் டிப்போ’ Category

2023 மிக்ஜாம் புயல் 2015ஐ மீறி சென்னை மக்களை பாதித்தது – விஞ்ஞானம்-தொழிற்நுட்பங்கள் முன்னேறியும் பேரிடர் எதிர்ப்பு-தடுப்பு-கட்டுப்பாட்டு முறைகள் ஏன் பலனிக்கவில்லை? (3)

திசெம்பர் 7, 2023

2023 மிக்ஜாம் புயல் 2015 மீறி சென்னை மக்களை பாதித்ததுவிஞ்ஞானம்தொழிற்நுட்பங்கள் முன்னேறியும் பேரிடர் எதிர்ப்புதடுப்புகட்டுப்பாட்டு முறைகள் ஏன் பலனிக்கவில்லை? (3)

பாதிக்கப் பட்ட மக்களின் கோரிக்கை: நிவாரணப் பணி என்ற பெயரில், அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள், படகுகளை எடுத்துச் சென்று, போட்டோவுக்கு ‘போஸ்’ கொடுப்பதில் மட்டும் ஆர்வம் காட்டுவதால், மீட்பு பணி தாமதமாவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் கூறியதாவது: :வீடுகளை சுற்றி மழை நீர் தேங்கி நிற்பதால், வெளியில் செல்ல முடியவில்லை. மொபைல் போன் இணைப்பு இல்லை; மின்சாரம் இல்லை. குடிநீர் மற்றும் உணவுக்கு சிரமப்படும் நிலை உள்ளது. தண்ணீர் வடிந்த பகுதிகளில், பொருட்கள் விலை கடுமையாக உள்ளது. விலையை கட்டுப்படுத்த, அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.மழை நீர் சூழ்ந்துள்ள பகுதியில் உள்ள, அனைத்து வீடுகளுக்கும் உடனடியாக குடிநீர், உணவு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்,” இவ்வாறு அவர்கள் கூறினர்.

சில இடங்களுக்கு ஆவின் பால் இலவசமாக சப்ளை என்று அறிவிப்பு: செம்மஞ்சேரி, பெரும்பாக்கம்பகுதி மக்களுக்கு நாளை (7 ம் தேதி) 20 ஆயிரம் ஆவின் பால்பாக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்படும் என அமைச்சர் மெய்யநாதன் அறிவித்து உள்ளார்[1]. 15 வது மண்டல மழை நிவாரணப்பணி பொறுப்பாளரான அமைச்சர் மெய்யநாதன் கூறுகையில் செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் பகுதிக்கு கூடுதலாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்[2].

1960களிலிருந்து நிலை மாறவில்லை: இந்த 21ம் நூற்றாண்டிலேயே, இத்தனை விஞ்ஞான-தொழிற்நுட்ப முன்னேற்ற வசதிகள் இருந்தாலும், சில நாட்களில் பெய்த மழையில் சிங்காரச் சென்னையில் உள்ள மக்கள் பலவிதங்களிலும் அவதியுற்றதை கவனிக்கலாம். 1960களிலிருந்து சென்னையில் வசித்து, பல புயல்கள், பெரும் மழை, சுழற்காற்று, வெள்ளம் என்றெல்லாம் பார்த்து, அனுபவித்து அவதியுற்று, ஏன் பொருட்சேதமும் ஏற்பட்டு, இன்றும் இத்தகைய அலங்கோலங்களைப் பார்க்கும் பொழுது, ஆட்சி, அதிகாரம், மக்கள்-தொடர்பு சேவை பொறுப்பு முதலியவற்றில் இருப்பவர்கள் இந்த 60-70 ஆண்டுகளில் தரமிழந்து, மோசமாகி விட்டார்கள் என்று தான் தெரிகிறது. அவர்கள் கடந்த கால அனுபவங்களிலிருந்து எந்த பாடத்தையும் கற்றுக் கொள்ளாமல், வாய்-சவடால் மூலம் ஏமாற்றி வந்ததும் மெய்ப்பிக்கப் படுகிறது. இவர்கள் எல்லோருமே நன்றாக சகல வசதிகளுடன் வீடுகளில் இருந்து வருவதால், நிச்சயமாக கஷ்டப் படும் பொது மக்களைப் பற்றி எந்த கவலையும் இல்லை, கவலை கொள்ளமாட்டார்கள் என்பதும் வெளிப்படுகிறது. அக்கஷ்டங்களை அனுபவிக்காத வரைக்கும் அவர்களுக்கு அந்த உணர்வும் வராது. வேண்டுமென்றால், வாய்பேச்சில் சமாளிக்கப் பார்ப்பார்கள்.

மழைநீர், வெள்ளநீர் கட்டுப்படுத்தும், முறைப்படுத்தும் மற்றும் கற்றும்நீக்கும் வழிகளில் முன்னேற்றம் இல்லை: மழைத் தண்ணீர் தாழ்வாக உள்ள பகுதிகளில் சாலைகளில் தேங்குவது, வீடுகளில் நுழைவது, சுரங்கப்பாதைகளில் நீர் நிற்பது, போக்குவரத்து பாதிப்பது, பொது போக்குவரத்து நிறுத்தப் படுவது, முதலியவை தொடர்ச்சியாக மழைகாலங்களில் நடந்து வருகிறது என்றால், அத்துறைகளில் உள்ள பொறுப்பானவர்கள் ஏன் முன்னேற்றம் அடையவில்லை, பிரச்சினைகளைத் தீர்க்க முடியவில்லை என்ற முக்கியமான கேள்விகள் எழுகின்றன. அதிலும் குறிப்பிட்ட இடங்கள், சுரங்கப்பாதைகள், சாலைகள் மட்டும் திரும்ப-திரும்ப பாதிக்கப் படுவது, அவர்களது இயலாமை மட்டுமல்லாது, இது வரை செய்து வந்த பணிகளின் மீதும் சந்தேகம் எழுகின்றது. இது வரை பலநூறு கோடிகள் செலவழிக்கப் பட்டிருக்கின்றன. ஆனால், அதே இடங்களில் அதே பிரச்சினைகள் மறுபடி-மறுபடி ஏற்படுகின்றன. இதனால், பெரும் பேச்சு, அறிக்கைகள், ஊடகங்களில் திணிக்க்ப்படும் வாக்குறுதிகள் எல்லாமே பொய்த்து போய் விடுகின்றன.

21ம்நூற்றாண்டிலேயே நவீன வசதி சேவைகள் முடங்குவது கேவலமான விசயம்; மின்சாரம் இல்லை, இன்டெர்நெட் இல்லை, மொபைல் சேவை (நெட்வொர்க்) இல்லை என்று ஒருபக்கம் விஞ்ஞான-தொழிற்நுட்ப முன்னேற்றங்கள் இளித்து விட்டன.  இவற்றுடன் சம்பத்தப் பட்டவர்களின் இயலாமை அவர்களது உதவாக்கரை தன்மையினைத் தான் அப்பட்டமாக மெய்ப்பித்துள்ளது. இந்த ஒருவாரத்தில் 29-11-2023 / 30-11-2023 மற்றும் டிசம்பர் 4 முதல் 6 வரை ஏற்பட்டுள்ள இழப்பிற்கு, சம்பந்தப் பட்ட நிறுவனங்கள் என்ன இழப்பீடு கொடுக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. எப்படியோ 5-12-2023 அல்லது 06-12-2023 அன்று மின்சார சப்ளை வந்து, மொபைலுக்கு சார்ஜ் போட்டு, புகார் கொடுத்தாலும், “நாங்கள் பிரியாரிடி பேசிஸில் வேலை செய்கிறோம், ஐந்து மணி நேரம் ஆகும்,” என்று பதில் கொடுத்தது தான். 10 மணி நேரங்கள் கழித்தும் ஒன்றும் நடக்கவில்லை. அதாவது, மக்கள் தொடர்பு கொள்ள முடியாத நிலைக்கு இரண்டு நாட்கள் வைக்கப் பட்டிருக்கிறார்கள். 07-12-2023 அன்று வருமென்று எதிர்பார்க்கப் படுகிறது என்கின்றனர்.

மின்சார வெட்டு, தடை போன்றவை தொடர்வது: மின்சாரத்தை வைத்து வியாபாரம் செய்வது, அரசியல் விளையாடுவது என்றெல்லாம் ஒரு பக்கம் இருக்கும்நிலையில், இப்படியும் நடப்பது வேடிக்கை தான். மின்சாரத்தை நம்பித்தான், இன்றைக்கு எல்லா மக்களும் வாழ்கிறார்கள். மின்சாரம் இல்லையென்றால், நீர் கிடைக்காது; நீர் கிடைக்கவில்லை என்றால் என்னாகும் என்று சொல்லவேண்டிய அவசியம் இல்லை. வீட்டு உபயோகப் பொருட்கள்-கருவிகள் வேலை செய்யாது; சமைக்க மிக்க கஷ்டப் பட வேண்டியிருக்கும். இரவில் பேன் / மின்-விசிறி இல்லாமல் தூங்க முடியாது; கொசுக்கள் கடிக்கும்; குழந்தைகள் வைத்திருப்பவர்கள் பெருங்கஷ்டங்களுக்கு உள்ளாவார்கள். பிறந்த குழந்தைகள், மாத குழந்தைகள், சிறு குழந்தைகள் அழுது கொண்டே இருக்கும். இதனால்,பெற்றோர்களும் கவலையுன் அவர்களைத் தேற்றிக் கொன்டிருக்க வேண்டும். ஒரு இரவு இப்படி கழித்து, இன்னொரு இரவையும் அது போல கழிப்பது என்பது, பெரிய கொடுமை.

பால் விநியோகம் நிறுத்தம்பாதிப்பு, ரேஷன் முறையில் கொடுப்பது முதலியன: இன்னொரு பக்கம் பால் சப்ளை இல்லை. ஒட்டு மொத்த சென்னைவாசிகள் ஆவின் பாலை எதிர்பார்த்து இருக்கும் நிலையில் இரண்டு நாட்கள் தொடர்ந்து பால் விநியோகம் இல்லை. அதாவது, அங்கங்கு இருக்கும் டிபோக்களுக்கே பால் வரவில்லை என்கிறார்கள். 06-12-2023 அன்று பெரிய வரிசையில் நின்று அரை லிட்டர் பால் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பால் விற்பவர்களும் அடாவடித் தனமாக நடந்து கொண்டிருக்கிறார்கள். அதிக விலைக்கு விற்பது, மீதி சில்லரை சரியாகக் கொடுக்காதது என்றெல்லாம் செய்துள்ளனர். இத்தனை அவதி, கஷ்டம், துன்பம் என்றெல்லாம் இருக்கும் நிலையிலும், இவ்வாறெல்லாம் நடந்து கொள்ள இவர்களுக்கு எப்படி மனம் இருக்கிறது என்பது ஆய்வுக்குரியது. லட்சக் கணக்கில் குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள் என்று கஷ்டப் பட்டுள்ளனர். பிறகு என்ன சித்தாந்தம் பேசி என்ன செய்து சாதிக்கப் போகிறார்கள்.

விஞ்ஞானம்தொழிற்துறை முன்னேற்றம் இருந்தும், இவற்றில் முன்னேற்றம் ஏன் இல்லை?:

  • பொதுப்பணித் துறை, குடிநீர்-வடிகால் வாரியம், சாலைத்துறை, மின்சார வாரியம், இத்தறைகளுக்கு அமைச்சர்கள், பெரிய-பெரிய அதிகாரிகள், தொழிற்நுட்ப வல்லுனர்கள், பலநிலைகளில் வேலை செய்யும் லட்சக் கணக்கான அரசு ஊழியர்கள் என்று எல்லோரும் பொறுப்பேற்பார்களா?
  • இந்த 60-70 ஆண்டுகளில் அவர்கள் என்ன கற்றுக் கொண்டார்கள். விஞ்ஞான-தொழிற்நுட்பங்க்ளை அறிந்து தத்தமது  சேவைகளில் சிறந்தார்கள்?
  • பொது மக்கள் முன்னர் வெட்கம், மானம், சூடு, சொரணை இருந்தால், தத்தம் கார்களில் வலம் வருவார்களா?
  • இணைப்புகளுக்கு லஞ்சம் கேட்பார்களா?
  • கொடுக்கவில்லை என்றால், இணைப்புகள் கொடுப்பார்களா? 2024ல் இவையெல்லாம் நடக்காமல் இருக்குமா?

கொஞ்சம் மனிதத்தன்மை இருந்தாலே, ஒவ்வொரு மனிதனும் கொஞ்சமாவது, மனசாட்சியுடன் யோசிப்பான், அயோக்கியத் தனம் செய்ய யோசிப்பான், லஞ்சம் வாங்கத் தயங்குவான்……ஆனால், நடந்து கொண்டு தானே இருக்கின்றன… இன்னும் சில நாட்களில் எல்லாமே சரியாகி, இயல்பு நிலைகளுக்கு வந்து விட்டால், பிழைப்புக்கு-வேலைக்கு செல்ல வேண்டும் என்பதால், மறந்தும் விடுவர். டிவி-மொபை சேவை தொடங்கியவுடன் டிவி-சீரியல், சினிமா என்றும் பார்க்க ஆரம்பித்து விடுவர். அரசியல்வாதிகள், சிலை திறப்பு, மணிமண்டம் கட்ட அடிக்கல் நாட்டுவது என்று கிளம்பி விடுவர்.

© வேதபிரகாஷ்

07-12-2023


[1] தினமலர், 20 ஆயிரம் பால் பாக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்படும்: அமைச்சர் மெய்யநாதன், மாற்றம் செய்த நாள்: டிச 06, 2023 23:23.

[2] https://m.dinamalar.com/detail.php?id=3497602

2023 மிக்ஜாம் புயல் 2015ஐ மீறி சென்னை மக்களை பாதித்தது – விஞ்ஞானம்-தொழிற்நுட்பங்கள் முன்னேறியும் ஏன் பாடம் கற்க முடியவில்லை? (2)

திசெம்பர் 7, 2023

2023 மிக்ஜாம் புயல் 2015 மீறி சென்னை மக்களை பாதித்ததுவிஞ்ஞானம்தொழிற்நுட்பங்கள் முன்னேறியும் ஏன் பாடம் கற்க முடியவில்லை? (2)

அதிக விலைக்கு விற்பவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப் படும்: சென்னையில் பல்வேறு இடங்களில் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வில் ஈடுபட்டுள்ளார்[1]. அதிகளவு பால் வாங்கி இருப்பு வைக்க வேண்டாம் என கோரிக்கை வைத்துள்ளார்[2]. ஆவின் பாலை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்[3]. ஆவின் பாலின் தேவை 4 மடங்கு அதிகரித்துள்ளது[4]. சென்னையில் வழக்கமாக 15 லட்சம் லிட்டர் பால் தேவை இருக்கும் நிலையில் தற்போது 60 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது[5]. இருப்பினும் ஆவின் பால் விநியோகத்தை சீராக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு பால் அனுப்பி வைக்கப்படுகிறது[6]. ஆவின் பால் பவுடர் போதிய அளவு கையிருப்பில் உள்ளது. ஆவின் முகவர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உடனடியாக தேவையான அளவு கொள்முதல் செய்து மக்களுக்கு தடையின்றி விற்பனை செய்ய வேண்டும். பால் சென்றடைய முடியாத இடங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும். அதேபோல் ஆவின் முகவர்கள், விற்பனையாளர்கள் உடனடியாக தேவையான அளவு கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பால் விநியோகம் பாதிப்பு பற்றி அரசு அதிகாரிகளின் விளக்கம்: இதுகுறித்து ஆவின் அதிகாரிகள் கூறும்போது, “அம்பத்தூர், சோழிங்கநல்லூர் ஆகிய பால் பண்ணைகளில் மழைநீர் பாதிப்பு ஏற்பட்டது. இதுதவிர, மழையால், தொழிலாளர்கள் பற்றாக்குறை நிலவியது. இதனால், பால் விநியோகம் பாதித்தது. புதன்கிழமை ஆவின்பால் விநியோகம் சீராகிவிடும்” என்றனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை புரட்டிப் போட்ட, ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக, இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. ஒரு லிட்டர் பால், 200 ரூபாய்; குடிநீர் கேன், 250 ரூபாய்; படகில் மீட்க, 2,500 ரூபாய். வெள்ளக்காடாக கிடக்கும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் நிலவரம் இதுதான். வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு, ஒரு வேளை உணவு கிடைப்பது கூட அரிதாகிப் போன நிலையில், நிவாரணம் என்ற பெயரில் போட்டோவுக்கு மட்டும், ‘போஸ்’ கொடுக்கும் அரசியல் மற்றும் சுய விளம்பரப் பிரமுகர்களால், மீட்புப்பணிகள் தாமதமாகி வருகின்றன.

மழைநீர் நிற்குமிடங்களில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு: வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, மேடவாக்கம், சித்தாலப்பாக்கம், முடிச்சூர் உட்பட பல பகுதிகளில், அடுக்குமாடி குடியிருப்புகளில் முதல் தளம் வரை, வெள்ளம் புகுந்துள்ளது. தரை தளத்தில் வசிப்போர், மேல் தளங்களில் உள்ள வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். புயல் முன்னெச்சரிக்கையாக, சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள், இரண்டு நாட்களுக்கு தேவையான குடிநீர், அரிசி, காய்கறி, பால் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வாங்கி இருப்பு வைத்திருந்தனர். தற்போது, அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் தவிக்கின்றனர். வெள்ள நீர் வடியாததால், வீடுகளை விட்டு வெளியேற முடியவில்லை. இதனால், பால், குடிநீர், காய்கறிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பாலுக்கு மக்கள், மணிக்கணக்கில் காத்துக் கிடக்கும் பரிதாப நிலை காணப்படுகிறது. ஆனால், வழக்கம்போல் பால் வினியோகம் நடப்பதாக, ஆவின் தரப்பிலும் அதன் அமைச்சராலும் சொல்லப்படுகிறது.

சேவை செய்கிறோம் என்று விளம்பரத்தில் ஈடுபடும் அரசியல்வாதிகள் முதலியோர்: கள நிலவரமே தெரியாமல் அதிகாரிகளும், அமைச்சர்களும் இருப்பதாக, பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஒரு பக்கம், அரசியல்வாதிகள் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, பால் பாக்கெட்டுகளை முகவர்களிடம் மொத்தமாக வாங்கிக் கொள்கின்றனர். இதனால், வீடுகளுக்கு பால் கிடைக்கவில்லை. இவர்கள் பெரும்பாலும் விளம்பரத்திற்காக சேவை செய்வடு போலவே தெரிகிறது. ஏனெனில் கொடுக்கும்பொழுது செல்வி எடுத்துக் கொள்வது, போட்டோ-வீடியோ எடுப்பது, பேட்டி காண்பது போன்றவையும் சேர்ந்துள்ளது. குறிப்பாக, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், பால் வினியோகம் முற்றிலும் தடையாகி உள்ளது. ஆவின் மட்டுமின்றி, தனியார் பால் பாக்கெட்டுகளும் கிடைக்காததால், விலை தாறுமாறாக ஏறி விட்டது[7]. ஒரு லிட்டர் பால், 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்கப்படுகிறது[8].

பாலைத் தொடர்ந்து, குடிநீர் விலையும் ஏறிவிட்டது: அதேபோல், குடிநீருக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது[9]. மழைக்கு முன்பு, 30 ரூபாய்க்கு விற்கப்பட்ட, 25 லிட்டர் குடிநீர் கேன், 250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது[10]. காய்கறிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. பல கடைகளில் தண்ணீர் புகுந்ததால், பொருட்கள் சேதமடைந்துள்ளன. இன்னமும் முழு அளவில் கடைகள் திறக்கப்படவில்லை. ஒன்றிரண்டு கடைகள் திறந்திருக்கும் நிலையில், பொருட்கள் அனைத்தும் விற்று தீர்ந்துள்ளன. இதனால், அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அரசு சார்பில் மீட்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. நடந்து செல்ல முடியாத பகுதிகளுக்கு, படகுகள் வழியாக சென்று, உணவு பொட்டலங்கள் வழங்குவது, வெளியில் வர விரும்புவோரை அழைத்து சென்று, நிவாரண முகாம்களில் தங்க வைப்பது போன்ற பணிகள் நடந்து வருகின்றன. மாநில, தேசிய பேரிடர் மீட்பு படையினர், காவல் துறையினர், தீயணைப்பு துறையினர், முப்படை வீரர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். எனினும், அவர்கள் செல்லாத பகுதிகளுக்கு, சிலர் தனிப்பட்ட முறையில் படகுகளை வாடகைக்கு எடுத்து சென்றுள்ளனர். அவர்கள் ஒரு குடும்பத்தை மீட்க, 2,500 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றனர்.

அதிகமாக வாங்கி வைக்க வேண்டாம் என்று அதிகாரிகள் மக்களுக்கு எச்சரிக்கை: பேரிடா் காலத்தைப் பயன்படுத்தி அத்தியாவசியப் பொருள்களைக் கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனா எச்சரித்தார்[11]. இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது[12]: “அத்தியாவசியப் பொருள்கள் அனைவருக்கும் சென்று சேர வேண்டும். பால் விநியோகத்தைப் பொருத்தவரை சென்னையில் 19 லட்சம் லிட்டா் வழக்கமாக விநியோகிக்கப்படும்[13]. புதன்கிழமை 14 லட்சம் லிட்டா் வழங்கப்பட்டது. வியாழக்கிழமைமுதல் இயல்பான அளவுக்கு பால் விநியோகம் செய்யப்படும்[14]. 8 மாவட்டங்களிலிருந்து 6,650 கிலோ பால் பவுடா் விநியோகிக்கப்படுகிறது. 50 ஆயிரம் குடிநீா் பாட்டில்கள் வழங்கப்படுகின்றன. சென்னை குடிநீா் வாரியம் மூலம் 15 ஆயிரம் 20 லிட்டா் கேன்கள் தயாரித்து விநியோகிக்கப்படுகிறது. 34,000 ரொட்டி பாக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. வியாழக்கிழமை 50,000 ரொட்டி பாக்கெட்டுகள் பெங்களூரிலிருந்து வரவழைக்கப்படும். தேவைக்கு மேல் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை பொதுமக்கள் வாங்கி வைக்க வேண்டாம்[15]. குடிநீா், பால் விநியோகத்தில் தேவைக்கும், கையிருப்புக்கும் இடையே அதிக இடைவெளி உள்ளது[16]. வியாபாரிகள் குடிநீா் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை கூடுதல் விலைக்கு விற்க வேண்டாம்[17]. அத்தியாவசியப் பொருள்களைப் பதுக்கக் கூடாது. இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.[18]

© வேதபிரகாஷ்

07-12-2023


[1] நக்கீரன், பதற்றமடைந்து அதிக பால் பாக்கெட்டுகளை வாங்கி இருப்பு வைக்க வேண்டாம்‘ – அமைச்சர் வேண்டுகோள், நக்கீரன் செய்திப்பிரிவு  Photographer, Published on 06/12/2023 | Edited on 06/12/2023.

[2] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/people-should-not-panic-and-buy-more-milk-packets-and-stock-minister-mano

[3] தினகரன், சென்றடைய முடியாத இடங்களுக்கு சிறப்பு கவனம் ஆவின் பால் பவுடர் போதிய அளவு கையிருப்பு: அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல், December 7, 2023, 4:51 am

[4] https://www.dinakaran.com/special-attention-avin-milk-powder-minister-mano-thangaraj/

[5] தமிழ்.ஒன்.இந்தியா, வெள்ளத்தில் கிடைத்தவரை லாபம் .. பாலுக்கு கூடுதல் விலை.. நடவடிக்கை பாயும்.. மனோ தங்கராஜ் வார்னிங், By Jeyalakshmi C, Published: Wednesday, December 6, 2023, 10:56 [IST].

[6] https://tamil.oneindia.com/news/chennai/minister-mano-thangaraj-warns-of-strict-action-if-milk-is-sold-at-a-higher-price-563515.html

[7] தினமலர், ஒரு லிட்டர் பால், 200 ரூபாய்; குடிநீர் கேன், 250 ரூபாய்; படகில் மீட்க, 2,500 ரூபாய். மாற்றம் செய்த நாள்: டிச 06,2023 23:38

[8] https://m.dinamalar.com/detail.php?id=3497645

[9] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், கேன் தண்ணீர் ரூ. 200… அரை லிட்டர் பால் ரூ. 100; ஆத்திரம் அடைந்த செம்மஞ்சேரி பொதுமக்கள் சாலை மறியல், WebDesk, Dec 07, 2023 04:31 IST.

[10] https://tamil.indianexpress.com/tamilnadu/floods-affected-semmancheri-people-road-block-protest-need-basic-facilities-1812977

[11] தினமணி, கூடுதல் விலைக்கு பொருள்கள்:தலைமைச் செயலா் எச்சரிக்கை, By DIN  |   Published On : 07th December 2023 01:09 AM  |   Last Updated : 07th December 2023 01:09 AM

[12] https://www.dinamani.com/tamilnadu/2023/dec/07/chief-secretary-warns-of-additional-cost-of-goods-4118299.html

[13] எக்ஸ்சாம்.டெய்லி, பால், தண்ணீர் பாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கைமுக்கிய எச்சரிக்கை!!, By Sivarangani -December 6, 2023.

[14] https://tamil.examsdaily.in/strict-action-to-take-if-milk-and-water-bottle-sale-in-extra-amount-in-tamilnadu/

[15] தமிழ்.நியூஸ்.18, அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை” – தலைமைச் செயலர் எச்சரிக்கை, LAST UPDATED : DECEMBER 6, 2023, 3:00 PM IST.

[16] https://tamil.news18.com/tamil-nadu/strict-action-if-essential-commodities-are-sold-at-higher-prices-1259931.html

[17] நியூஸ்.7.தமிழ், ஆவின்பால் நாளையும் இலவசமாக வழங்கப்படும்!” – தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல்!, by Web Editor, December 5, 2023

[18] https://news7tamil.live/aavinpal-will-be-given-free-tomorrow-too-chief-secretary-shivdas-meena-information.html