Archive for the ‘எலும்புக்கூடு’ Category

கனடா சிலையுடைப்புகள், காலனிய-அடிமைப் போக்கை எதிர்க்கும் நிலை மற்ற முந்தைய காலனி நாடுகள் கற்றுக் கொள்ள வேண்டிய படிப்பினை என்ன?

ஜூலை 5, 2021

கனடா சிலையுடைப்புகள், காலனிய-அடிமைப்போக்கை எதிர்க்கும் நிலை மற்ற முந்தைய காலனி நாடுகள் கற்றுக் கொள்ள வேண்டிய படிப்பினை என்ன?

ஐயோப்பிய காலனித்துவத்தால் உலக மக்கள் பாதிக்கப் பட்டது: ஐரோப்பிய காலனிய அடக்குமுறை, யதேச்சதிகார,, பொருளாதாரா சுரண்டல்-கொள்ளை, அடிமை வியாபாரம், மலிவான வேலையாட்கள், கூலித் தொழில், என்றெல்லாம் வைத்து ஆப்பிட்ரிக்க, ஆசிய, அமெரிக்க மக்களை சதாய்த்து வந்தது. டச்சு, டேனிஸ், போர்ச்சுகீசிய, பிரெரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர் என்று அனைவரும், ஒவ்வொரு வகையில் கொள்ளையடித்தனர். பல நேரங்களில், அவர்கள் ஒத்துழைத்து கொள்ளை அடித்தனர். குறிப்பாக, பண்ணைத் தொழில், தொழிற்சாலைகளுக்கு, அடிமைமைகளை விற்பதில் அவர்களுக்குள் இருந்த பரஸ்பர வியாபார உறவுகள், நிறவெறுத்துவ சித்தாந்தங்கள் முதலியவற்றைப் புரிந்து கொள்ளலாம். ஆப்பிரிக்க “அபார்த்யிட்” என்கின்ற பிரித்து வைத்து வாழவைத்த நகரங்கள், கிராமங்கள் வெள்ளையர்களின் நிறவெறித்துவ அடக்குமுறையின் உச்சத்தின் உதஆணம் ஆகும். அமெரிக்காவிலும் சொல்லொணா கொடுமைகளை, குரூரங்களை அரங்கேற்றியுள்ளனர். அஸ்டெம், மாயா மற்றும் இன்கா போன்ற உயர்ந்த நாகரிகங்களை, அம்மக்களை, அவர்களது கலாச்சார-சரித்திர சின்னங்கள், ஆதாரங்கள் முதலியவற்றை அடியோடு அழித்துள்ளனர். ஆசிய நாடுகளிலும், அவர்களது குரூர-கொடுமைகள் அதிகமே. இந்தியா போன்ற நாடுகள் இன்றும் அனுபவித்து வருகின்றன.

18ம் நூற்றாண்டிலும் அடிமை வியாபாரம் நடந்த நிலை: ஏப்ரல் 13, 1709 அன்று ஜேக்கஸ் ரௌடட் (Jacques Raudot), பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவன் அடிமை வியாபாரத்தை நியாயப் படுத்தினான். இந்தியர்களின் கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, நாகரிகம் முதலியவற்றை அழித்து, அவர்களது பழங்காலத்தை மறக்க ஐரோப்பியர் முயன்றனர். இக்காலத்தவரையும் முழுமையாக மாற்ற, பள்ளிகளிகளேயே இருந்து படிக்கும் முறையை உண்டாக்கி, ஆயிரக் கணக்கான இந்திய சிறுவர்-சிறுமியர்களை அடைத்து வைத்தனர். முடிந்த வரையில் தமது போதனைகளால். அவர்களை மாற்ற முயன்றனர். பிறகு மதம் மாற்றாம் மூலம் பழமையை மறக்க வைத்தனர். இவற்றிற்கும் மீறி, முடியாத குழந்தைகளை சரியாக உணவு கொடுக்காமல் இருப்பது, உடல் அசுகரியம் ஏற்பட்டால், முறையாக சிகிச்சை கொடுக்காமல் இறக்க வைப்பது போன்ற கொடூர முறைகளையும் பின்பற்றினர். இத்தகைய குரூரக் கொடுமைகள் வெளிவந்த நிலையில் அப்பள்ளிகள் மூடப் பட்டன. இருப்பினும், இப்பொழுது, நூற்றுக்கணக்கான குழந்தைகள் புதைக்கப் பட்டிருப்பது கண்டு பிடிக்கப் பட்டதால், நிலைமை மோசமாகியுள்ளது.

கனடா ஆங்கிலேய காலனிய அடக்குமுறைகளில் கொடுமைப் படுத்தப் பட்டது: கனாடா தொடக்கத்தில் பிரான்ஸ் கட்டுப்பாட்டில் இருந்தாலும், 15ம் நூற்றாண்டின் இறுதியில் நாட்டிற்குள் நுழைந்த ஐரோப்பியர்கள் 1763ல் கனடாவை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். 1763களிலிருந்து பிரிட்டன் கனடாவை ஆண்டு வந்தது. இந்த காலகட்டத்தில் உண்டு உறைவிட பள்ளிகள் கத்தோலிக்க கிருத்துவ அமைப்புகளால் நடத்தப்பட்டது. இப்பள்ளிகளில் வலுக்கட்டாயமாக 1,50,000க்கும் அதிகமான கனடா பூர்வீகக்குடிகளின் குழந்தைகள் சேர்க்கப்பட்டனர். குழந்தைப் பருவத்திலிருந்தே, அவர்கள் தங்களது மூலங்களை அடியோடு மறக்க, அத்தகைய கல்விமுறையைக் கையாண்டார்கள். ஐரோப்பியர்களின் வருகைக்கு கனடாவின் பூர்வீகக்குடிகள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து பள்ளியில் குழந்தைகள் சேர்க்கை அமல்படுத்தப்பட்டது. அதாவது, காலனிய ஆதிக்கத்தை முழுமையாக ஸ்திரப் படுத்த அத்தகைய மனோதத்துவ மற்றுமதூடல் ரீதியிலான தாக்குதல்கள், அடக்குமுறைகள் முதலியவற்றையும் பிரயோகித்தார்கள். இதற்கு இணங்காத பெற்றோர்கள் சிறைசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் 1982ல் கனடா தனி நாடாக உருவானது. ஆனாலும், பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் கனடாவின் ராணியாக தொடர்கிறார். இது “காமன்வெல்த்” என்ற போர்வையிலும் செயல்பட்டு வருகின்றது.

குழந்தைகளின் சடலங்கள் கண்டு பிடிக்கப் பட்டதால், கன மக்கள் கொதித்து போயிருக்கிறாற்கள்: கனடாவில் உள்ள பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளிகளில் புதைக்கப்பட்ட குழந்தைகளின் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகின்றன. இந்த உண்டு உறைவிட பள்ளிகளில் குழந்தைகள் துன்புறுத்தப்பட்டதாகவும், 6,000க்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும் தற்போது வரலாற்று ஆய்வாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இப்படியான சூழலில், கனடாவின் பழங்குடியின அமைப்பு சார்பில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள காம்லூப்ஸ் உண்டு உறைவிட பள்ளியில் ரேடார் உதவியுடன் நடத்தப்பட்ட ஆய்வில் 215 குழந்தைகளின் எலும்புக் கூடுகள் கண்டறியப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பிரிட்டன் அரசு மன்னிப்பு கோர வேண்டும் என்று கனடா பழங்குடியின அமைப்பு வலியுறுத்தியுள்ளது. ஆனால், அடிப்படைவாதியான, கத்தோலிக்க மதத் தலைமை, அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை, வெறுமனே வருத்தப் படுவதாகக் கூறியது.

ஜூன் 21 முதல் 26 வரை நான்கு சர்ச்சுகள் எரிக்கப் படுதல்: மேற்கு கனடாவில் 26-06-2021 அன்று சனிக்கிழமை அதிகாலை மேலும் இரண்டு கத்தோலிக்க தேவாலயங்கள் (St Ann’s Church and Chopaka Church ) தீப்பற்றி எரிந்துள்ளன[1]. செயின்ட் ஆன் மற்றும் சோப்கா சர்ச் இந்தியர்கள் வாழும் பகுதிகளில் உள்ளவை[2]. பிரிட்டிஷ் கொலம்பியாவில் செயின்ட் ஆன் தேவாலயம் மற்றும் சோபகா தேவாலயத்தில் சுமார் ஒரு மணி நேர இடைவெளியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது[3]. இரண்டு தேவாலயங்களும் முற்றிலுமாக சேதமடைந்துள்ள நிலையில் இந்த தீவிபத்து சந்தேகத்திற்குரியவை என அதிகாரிகள் தெரிவித்தனர்[4]. கடந்த திங்கட்கிழமை 21-06-2021 அன்று தேசிய பழங்குடி மக்கள் தினம் அனுஸ்டிக்கப் பட்டபோது மாகாணத்தில் உள்ள இரண்டு கத்தோலிக்க தேவாலயங்கள் (the Sacred Heart church, the St Gregory’s church) தீக்கிரையாக்கப்பட்டன[5]. தூய இருதய சர்ச்சும், செயின்ட் ஜார்ஜ் சர்ச்சும் அம்மக்கள் வாழும் இடங்களில் இருக்கின்றவை[6]. எனவே முந்தைய தீ விபத்து மற்றும் புதிய தீ விபத்து பற்றிய விசாரணைகள் எந்தவொரு கைதுகளும் குற்றச்சாட்டுகளும் இன்றி நடந்து கொண்டிருப்பதாக அதிகாரிகள் கூறியிள்ளனர். இவ்விசயத்தில், மேலும் கலவரத்தை உண்டாக்க அரசு விரும்பவில்லை.

ஜூலை 1 கனடா தினத்தன்று எழுச்சி ஏற்பட்டது: இது நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஆத்திரமடைந்த பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், கனடாவின் தேசிய தினத்தையொட்டி, உண்டு உறைவிட பள்ளிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டும், பழங்குடி சமூகங்களுக்கான ஆதரவை திரட்டுவதற்காகவும் மானிட்டோபா தலைநகர் வின்னிபெக்கில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊர்வலமாகச் சென்ற அவர்கள், சட்டமன்ற வளாகத்தில் விக்டோரியா மகாராணியின் முக்கிய சிலையை தகர்த்து கீழே தள்ளினர்[7]. இதனால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது[8].   பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளிகளில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பட்டதால், ஜூலை 1, கனடா தினத்தன்று தேசிய கொண்டாட்டங்களை ரத்து செய்ய வேண்டும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் ஏற்கனவே வலியுறுத்தினர்[9]. இதனால் கனடா முழுவதிலும் உள்ள நகராட்சிகள் கொண்டாட்டங்களை ரத்து செய்தன[10].  போராட்டங்களின்போது, பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளிகளுடன் தொடர்புடைய நபர்களின் சிலைகள் அழிக்கப்பட்டன. சில சிலைகள் அகற்றப்பட்டுள்ளன.

இங்கிலாந்தின் எதிர்வினையும், அறிக்கைகளும், அதிகாரஆணவ தோரணைகளைத்தான் வெளிப் படுத்துகின்றன: சிலை தகர்ப்பு சம்பவத்திற்கு பிரிட்டன் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது[11]. மேலும், தாங்கள் கனட பழங்குடியினருக்கு ஆதரவாக இருப்பதாகவும், இந்த சூழலை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் பிரிட்டனின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது[12]. பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில், விக்டோரியா மகாராணி சிலையையும், இளவரசி இரண்டாம் எலிசெபத் சிலையையும் அவர்கள் தகர்த்தெறிந்தது மட்டுமல்லாமல், அவற்றின் மீது சிவப்பு வர்ணம் பூசி அவமதித்தனர்[13]. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், எங்கள் அரச குடும்பத்தினர் அவமதிக்கப்படுவதை, பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்றார்[14]. சிலை தகர்ப்பு சம்பவத்திற்கு பிரிட்டன் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது மற்றும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், எங்கள் அரச குடும்பத்தினர் அவமதிக்கப்படுவதை, பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்றது, போப்பை விட, ஆணவ-அகம்பாவ போக்கைக் காட்டுகிறது. எதிர்வினையும், அறிக்கைகளும், அதிகார-ஆணவ தோரணைகளைத்தான் வெளிப் படுத்துகின்றன.

இந்தியாவில் காலனிய போக்கு, கூலிமனோபாவம், அடிமைத்துவம் செயல்படும் முறை: இதன் படிப்பினைகளை மற்ற நாடுகள் எப்படி புரிந்து கொள்ளும் என்று கவனிக்க வேண்டும். இந்தியாவைப் பொறுத்த வரையில், இப்பொழுது நிர்வாகப் படுத்தப் பட்டுள்ள படிப்புமுறையே,  மெக்காலே திட்டத்தின் மூலம், “வெள்ளை காலர்”  மெத்தப் படித்த கூலிகளை கடந்த 70 ஆண்டுகளில் உருவாக்கியுள்ளது.  அரசில்வாதிகளுக், கட்சிகளும் ஐரோப்பிய அரசியல் சித்தாந்தங்களைப் பின்பற்றுவதால், மறைமுகமாக, மக்களை அடக்கியாளும் முறைகள் கையாளப் படுகின்றன. ஐரோப்பிய சின்னங்கள், ஆங்கிலேயர் சிலைகள், அடிமைத்தள சித்தாந்தங்கள், இன்னும் வேலைசெய்து கொண்டிருக்கின்றன. புதிய சிலைகள் நிறுவப் பட்டு வருகின்றன. அவையும், அடக்குமுறைகளை எதிர்ப்பது, புத்துலகத்தைப் படைப்பது போன்ற கவர்ச்சி முழக்கங்களுடன் அவைகள் வைக்கப் பட்டாலும், அதேஅடிமைபாங்கைத்தான் வளர்த்து வருகிறார்கள். சிலைகள் மோதப்படுகின்றன. காலனிய ஆதிக்க சக்திகளை எதிர்க்காமல், தமக்குள்  சண்டையிட்டுக் கொண்டு வருகிறார்கள். இத்தகைய பிரிவினைகள் நிறவெறுத்துவம் பதிலாக, ஜாதித்துவம் உபயோகப் படுத்தப் பட்டு வருகிறது. எதை எதிர்ப்பது போல காட்டிக் கொள்கிறார்களோ, அதை ஆதரித்து பொருளாதார சுரண்டல்களை பக்குவமாக செய்து வருகிறனர்.

© வேதபிரகாஷ்

06-07-2021


[1] The Guardian, Canada: two more Catholic churches on First Nations reserves destroyed by fire,  Leyland Cecco in Toronto, Mon 28 Jun 2021 16.48 BST.

[2] https://www.theguardian.com/world/2021/jun/28/canada-catholic-churches-fires

[3] [3] The Independent,  More churches burn down on indigenous Canadian land ‘The investigations into the previous fires and these two new fires are ongoing with no arrests or charges,’ say Canadian police, Sean Russell, @SAntoniRussell, 28-06-2021.

[4]https://www.independent.co.uk/news/world/americas/churches-burn-down-canada-indigenous-b1873706.html

[5] The Guardian, Two Catholic churches destroyed by fire on First Nations reserves in Canada, Leyland Cecco in Toronto, Tue 22 Jun 2021 19.59 BST.

[6]  https://www.theguardian.com/world/2021/jun/22/canada-church-fires-first-nation-reserves

[7] பிரிட்டன்.தமிழ்.காம், கனடாவில் விக்டோரியா மகாராணி, இரண்டாம் எலிசெபத் சிலை அவமதிப்பு,  July 2, 2021; https://www.britaintamil.com/victoria/

[8] https://www.britaintamil.com/victoria/

[9] மாலைமலர், கனடாவில் விக்டோரியா மகாராணியின் சிலை தகர்ப்பு, பதிவு: ஜூலை 02, 2021 16:58 IST.

[10] https://www.maalaimalar.com/news/world/2021/07/02165850/2783022/Queen-Victoria-statue-torn-down-at-Canada-protest.vpf

[11] நியூஸ்.7.தமிழ், கனடாவில் விக்டோரிய மகாராணியின் சிலை தகர்ப்பு, by Karthick, July 3, 2021.

[12] https://news7tamil.live/statues-of-queen-victoria-and-queen-elizabeth-ii-torn-down-in-canada.html

[13] பிரிட்டன்.தமிழ்.காம், கனடாவில் விக்டோரியா மகாராணி, இரண்டாம் எலிசெபத் சிலை அவமதிப்பு,  July 4, 2021

[14]https://www.britaintamil.com/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0/

கனடாவில் 215 குழந்தை எலும்புக் கூடுகள் பள்ளி வளாகத்தில் புகைக்கப் பட்டிருப்பது கண்டுபிடிக்கப் பட்டது! பூர்வீக மக்களின் கொந்தளிப்பு – 4 சர்ச்சுகள் எரியூட்டப் பட்டன, போப் சிலை அவமதிக்கப் பட்டுள்ளது! (2)

ஜூன் 29, 2021

கனடாவில் 215 குழந்தை எலும்புக் கூடுகள் பள்ளி வளாகத்தில் புகைக்கப் பட்டிருப்பது கண்டுபிடிக்கப் பட்டது! பூர்வீக மக்களின் கொந்தளிப்பு 4 சர்ச்சுகள் எரியூட்டப் பட்டன, போப் சிலை அவமதிக்கப் பட்டுள்ளது! (2)

ஜூன் 21 முதல் 26 வரை நான்கு சர்ச்சுகள் எரிக்கப் படுதல்: மேற்கு கனடாவில் 26-06-2021 அன்று சனிக்கிழமை அதிகாலை மேலும் இரண்டு கத்தோலிக்க தேவாலயங்கள் (St Ann’s Church and Chopaka Church ) தீப்பற்றி எரிந்துள்ளன[1]. செயின்ட் ஆன் மற்றும் சோப்கா சர்ச் இந்தியர்கள் வாழும் பகுதிகளில் உள்ளவை[2]. பிரிட்டிஷ் கொலம்பியாவில் செயின்ட் ஆன் தேவாலயம் மற்றும் சோபகா தேவாலயத்தில் சுமார் ஒரு மணி நேர இடைவெளியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது[3]. இரண்டு தேவாலயங்களும் முற்றிலுமாக சேதமடைந்துள்ள நிலையில் இந்த தீவிபத்து சந்தேகத்திற்குரியவை என அதிகாரிகள் தெரிவித்தனர்[4]. கடந்த திங்கட்கிழமை 21-06-2021 அன்று தேசிய பழங்குடி மக்கள் தினம் அனுஸ்டிக்கப் பட்டபோது மாகாணத்தில் உள்ள இரண்டு கத்தோலிக்க தேவாலயங்கள் ( the Sacred Heart church, the St Gregory’s church) தீக்கிரையாக்கப்பட்டன[5]. தூய இருதய சர்ச்சும், செயின்ட் ஜார்ஜ் சர்ச்சும் அம்மக்கள் வாழும் இடங்களில் இருக்கின்றவை[6]. எனவே முந்தைய தீ விபத்து மற்றும் புதிய தீ விபத்து பற்றிய விசாரணைகள் எந்தவொரு கைதுகளும் குற்றச்சாட்டுகளும் இன்றி நடந்து கொண்டிருப்பதாக அதிகாரிகள் கூறியிள்ளனர். இவ்விசயத்தில், மேலும் கலவரத்தை உண்டாக்க அரசு விரும்பவில்லை.

போப்பின் சிலை சிகப்பு பெயின்டினால் பூசப் பட்டது (26-06-2021): சனிக்கிழமை 26-06-2021 அன்று, எட்மாண்டன் என்ற நகரில் ரோசரி கத்தோலிக்க சர்ச் வாசலில் இருக்கும் போப் ஜான் பால் II சிலையின் மீது சிகப்பு பெயின்டினால், கைகள் பதிக்கப் பட்டிருந்தன[7]. சர்ச்சிலிருந்து, ரத்தக்கரை படிந்த பாதங்கள் வெளியே வருவது போன்றும் சிவப்பு பெயின்டினால் பதிக்கப் பட்டிருந்தன[8]. குழந்தைகள் விலையாடும் பொம்மைகள் அச்சிலை அடியில் கிடந்தன[9]. அதாவது சர்ச்சில் குழந்தைகளைக் கொல்லும் அரக்கன் இருக்கிறான், அவன் போப் உருவத்தில் இருக்கிறான். குழந்தைகளைக் கொன்று விட்டு, ரத்தக் கரை படிந்த பாதங்களுடன் வெளியே வந்து, சிலையில் மறைந்து விட்டான். அதனால், சிலை படிப்பத்தின் அடிப்பாகத்திலும், ரத்தக் கரைப் படிந்த கை-சின்னங்கள் காணப் படுகின்றன[10]. குழதைகள் விளையாடிய பொம்மைகளும், அடியில், பாதங்களில் இரைந்து கிடக்கின்றன[11], என்பது போல சித்தரிக்கப் பட்டிருந்தது தெரிகிறது. அங்கு போளீஸார் பாதுகாப்பு போட்டதுடன், பூசப்பட்ட சிகப்பு பெயின்டினை நீக்கும் பணியிலும், போலீஸார் ஈடுபட்டுள்ளனர்[12].

கனடாவின் பூர்வீக மக்களின் ஜனத்தொகை குறைந்தது ஏன், எப்படி?: கனடாவின் பழங்குடி மக்கள் என்பது ஐரோப்பியர்கள் கனடாவிற்கு குடியேற வர முன்பு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இங்கு வாழ்ந்த மக்கள் ஆவர். இவர்கள் பல பிரதேங்களைக் சார்ந்தவர்களாக, பல மொழிகளை, பண்பாடுகளை, தொழில்நுட்பங்களை, சமூகப் பொருளாதார முறைமைகளைக் கொண்டவர்களாக இருந்தார்கள். இன்று இவர்கள் முதற் குடிமக்கள், இனுவிட், மேட்டிசு மூன்று வகையாக அடையாளம் படுத்தப்படுகிறார்கள். 2006 புள்ளிவிபரங்களின் படி, கனடாவின் மொத்த சனத்தொகையில் 1,172,790 அல்லது 3.8% விழுக்காட்டு மக்கள் பழங்குடிகள் ஆவர். இதில் 600 தனித்துவமான முதற்குடி அரசுகள், அவர்களின் தனித்துவமான பண்பாடு, மொழி, கலைகளோடு இருக்கிறார்கள். ஆனால், ஐரோப்பியர் குடியேறி வருவதற்கு முன்னர், கனடா இந்தியர்கள் தான் முழுவதுமாக வசித்து வந்தனர். ஐரோப்பிய காலனி ஆதிக்கம், உள்ளூர் மக்களை அடிமைகள் ஆக்குவது கொன்று தீர்ப்பது போன்ற செயல்களினால், அவர்களது மக்கட்தொகை குறைந்தது.

18ம் நூற்றாண்டிலும் அடிமை வியாபாரம் நடந்த நிலை: ஏப்ரல் 13, 1709 அன்று ஜேக்கஸ் ரௌடட் (Jacques Raudot), பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவன் அடிமை வியாபாரத்தை நியாயப் படுத்தினான். இந்தியர்களின் கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, நாகரிகம் முதலியவற்றை அழித்து, அவர்களது பழங்காலத்தை மறக்க ஐரோப்பியர் முயன்றனர். இக்காலத்தவரையும் முழுமையாக மாற்ற, பள்ளிகளிகளேயே இருந்து படிக்கும் முறையை உண்டாக்கி, ஆயிரக் கணக்கான இந்திய சிறுவர்-சிறுமியர்களை அடைத்து வைத்தனர். முடிந்த வரையில் தமது போதனைகளால். அவர்களை மாற்ற முயன்றனர். பிறகு மதம் மாற்றாம் மூலம் பழமையை மறக்க வைத்தனர். இவற்றிற்கும் மீறி, முடியாத குழந்தைகளை சரியாக உணவு கொடுக்காமல் இருப்பது, உடல் அசுகரியம் ஏற்பட்டால், முறையாக சிகிச்சை கொடுக்காமல் இறக்க வைப்பது போன்ற கொடூர முறைகளையும் பின்பற்றினர். இத்தகைய குரூரக் கொடுமைகள் வெளிவந்த நிலையில் அப்பள்ளிகள் மூடப் பட்டன. இருப்பினும், இப்பொழுது, நூற்றுக்கணக்கான குழந்தைகள் புதைக்கப் பட்டிருப்பது கண்டு பிடிக்கப் பட்டதால், நிலைமை மோசமாகியுள்ளது.

கிருத்துவ மதமாற்றமும் ஜனத்தொகை குறைய காரணம்: முதலில் வந்த ஐரோப்பியர்கள் இந்தக் குளிர் தேசத்தில் எவ்வாறு தப்பிப் பிழைத்தல் என்பதை பழங்குடி மக்களிடம் இருந்தே கற்றுக் கொண்டார்கள். எனினும் தொடர்ந்த ஐரோப்பியர்களின் குடியேற்றமும் ஆதிக்கமும் இவர்களின் மக்கள் தொகையையும் வாழ்வியலையும் சிதைத்தது. ஐரோப்பியர் வந்தபோது தனிச் சொத்துரிமை என்ற கருத்துருவையே கொண்டிருக்காத இந்த மக்களிடம் இருந்து பெரும் நிலப் பகுதிகளை மிகக் சொற்ப விலைக்கு வாங்கினர். ஐரோப்பியர்களை இவர்கள் எதிர்த்தார்கள் என்றாலும், தொழில்நுட்பத்திலும் ஒழுங்கமைப்பிலும் மேம்பட்டு இருந்த ஐரோப்பியர்கள் இவர்களை வெற்றி கொண்டார்கள். பண்பாட்டு தகவமைத்துக் கொள்ளுதல் கொள்கையை வலியுறுத்திய ஐரோப்பிய கனேடிய அரசுகளால் இவர்களில் கணிசமான பகுதியினர் கட்டாயமாக கிறித்தவ சமயத்துக்கு மதம் மாற்றப்பட்டார்கள், கிறித்தவ கல்லூரிகளில் கட்டாயப் கல்வி பெற்றார்கள். இவர்களின் வாழ்வியல் பொருளாதார மூலங்கள் சிதைக்கப்பட்டதால் இவர்கள் கனேடிய அரசைத் தங்கி வாழும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்கள்.

பூர்வீக மக்களின் ஜனத்தொகை குறைந்தது எப்படி?: கத்தோலிக்க கிருத்துவ காலனியக் காரர்கள், அமெரிக்க-ஆப்பிரிக்க-ஆஸ்திரேலிய நாடுகளில் அப்பாகஸ், மாயா, யாகுஸ், இன்கா, அஸ்டெக், யஜ்தி, கோடிக்கணக்கான கருப்பினத்தவர் என்று, போர்ச்சுகீசிய, டச்சு, டேனிஸ், பிரெஞ்சு, ஆங்கில மற்றும் அமெரிக்கர், பற்பல மக்களைக் கொன்று குவித்துள்ளனர். இன-அழிப்பு ரீதியில் அவர்கள் செயல் பட்டதால் தான், இன்று பூர்வீகக் குடிமக்கள், சொந்தநாட்டு பிரஜைகள், தாய்வழி வந்த மண்ணின் மைந்தர் என்பரெல்லாம், சதவீத எண்ணிகையில் குறைவாகக் காணப் படுகின்றனர். ஐரோப்பியர் குடியேறிய இடங்களில் எல்லாம், இன்றும் வெள்ளையர்களே ஆட்சி செய்து வருவதை காணலாம். கலப்பின மக்கள், வெள்ளை-கருப்பு மக்கள் புனைந்து உருவான பழுப்பு நிறத்தவர், மற்றும் சீதோஷ்ண நிலைகளினால், ஆயிர-நூற்றாண்டு காலத்தில், கொஞ்சம் நிறமாறியவர் என்றெல்லாம் இருப்பவர்கள், அவர்களுக்குக் கீழே வேலை செய்ய வேண்டிய நிலை இருந்து வருகிறது. ஆங்கில நிறவெறித்துவம், இன்றும், அவர்களது சந்ததியர்களை நடத்தும் முறைகளில் வெளிப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதி, ஆங்கில பிரதம மந்திரி மற்றும் ஆஸ்திரேலியாவில் வெள்ளை-அல்லாதவர்கள் ஜனாதிபதி-பிரதமந்திரி பதவிகளுக்கு தேர்தெடுக்கப் படுவது அபூர்வமே.

© வேதபிரகாஷ்

29-06-2021


[1] The Guardian, Canada: two more Catholic churches on First Nations reserves destroyed by fire,  Leyland Cecco in Toronto, Mon 28 Jun 2021 16.48 BST

[2] https://www.theguardian.com/world/2021/jun/28/canada-catholic-churches-fires

[3] The Independent,  More churches burn down on indigenous Canadian land ‘The investigations into the previous fires and these two new fires are ongoing with no arrests or charges,’ say Canadian police, Sean Russell, @SAntoniRussell, 28-06-2021.

[4] https://www.independent.co.uk/news/world/americas/churches-burn-down-canada-indigenous-b1873706.html

[5] The Guardian, Two Catholic churches destroyed by fire on First Nations reserves in Canada, Leyland Cecco in Toronto, Tue 22 Jun 2021 19.59 BST

[6] https://www.theguardian.com/world/2021/jun/22/canada-church-fires-first-nation-reserves

[7] Ed Monton News, Statue outside Polish Catholic Church in Edmonton vandalized with red paint, Adam Lachacz, CTVNewsEdmonton.ca Digital Journalist.

[8] A statue outside a church in north-central Edmonton was vandalized Saturday evening. The Pope John Paul II statue outside Holy Rosary Catholic Church at 11485 106 Street in Edmonton was covered in red paint and red handprints. Red footprints could be seen around the statue and on the steps leading up to the main entrance of the church. Teddy bears and other stuffed animals were laid at the base of the statue.

https://edmonton.ctvnews.ca/statue-outside-polish-catholic-church-in-edmonton-vandalized-with-red-paint-1.5487780

[9] Global News, Pope John Paul II statue vandalized with red paint at Edmonton church, By Karen Bartko  Global News, Posted June 27, 2021 4:36 pm.

[10] https://globalnews.ca/news/7985009/edmonton-church-pope-john-paul-ii-statue-vandalized/

[11] CNN,  Canada: Pope John Paul II statue vandalized, June 28, 2021 

[12] https://www.wnky.com/canada-pope-john-paul-ii-statue-vandalized/

கனடாவில் 215 குழந்தை எலும்புக் கூடுகள் பள்ளி வளாகத்தில் புகைக்கப் பட்டிருப்பது கண்டுபிடிக்கப் பட்டது! கதோலிக்கர் செய்த பூர்வீக இன-அழிப்பு கொலை என்று மக்கள் கொதித்துள்ள நிலை (1)

ஜூன் 29, 2021

கனடாவில் 215 குழந்தை எலும்புக் கூடுகள் பள்ளி வளாகத்தில் புகைக்கப் பட்டிருப்பது கண்டுபிடிக்கப் பட்டது! கதோலிக்கர் செய்த பூர்வீக இனஅழிப்பு கொலை என்று மக்கள் கொதித்துள்ள நிலை (1)

1982ல் கனடா தனிநாடாக மாறினாலும், காலனிய மனப்பாங்கு தொடர்வது: கனடா பழங்குடியின பள்ளி வளாகத்தில் 215 குழந்தைகளின் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன[1]. அந்த குழந்தைகள் இனப் படுகொலை செய்யப் பட்டிருப்பதாக பழங்குடியின தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்[2]. கடந்த 15-ம் நூற்றாண்டின் இறுதியில் கனடாவில் ஐரோப்பியர்கள் கால்பதித்தனர். ஆரம்பத்தில் பிரான்ஸ் ஆட்சியின் கீழ் இருந்த அந்த நாடு கடந்த 1763-ம்ஆண்டில் பிரிட்டன் கட்டுப்பாட்டில் வந்தது. 1982-ல் கனடா தனிநாடாக உதயமானது. தற்போது வரை பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தே கனடாவின் ராணியாகவும் இருக்கிறார். ஐரோப்பியர்கள் கனடாவில் குடியேறியபோது அங்கு இனுவிட், மெயிரி உள்ளிட்ட பல்வேறு பழங்குடி மக்கள் வசித்துவந்தனர். அவர்கள் செவ்விந்தியர்கள் அல்லது இந்தியர்கள் என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுகின்றனர். ஐரோப்பியர்களின் குடியேற்றத்துக்கு கனடாவின் பூர்வகுடி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த மக்களை ஐரோப்பியர்கள் இனப் படுகொலை செய்தனர். லட்சக்கணக்கான பழங்குடி மக்கள் கொல்லப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

உறைவிட பள்ளிகளில் படித்த குழந்தைகள் கொல்லப் பட்டது: பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவ அமைப்புகள் சார்பில்பூர்வகுடி குழந்தைகளுக்காக விடுதியுடன்கூடிய பள்ளிகள் நடத்தப்பட்டன. கடந்த 1863 முதல் 1998 ஆண்டு வரையிலான காலத்தில் சுமார் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பழங்குடி குழந்தைகள், பெற்றோரிடம் இருந்து வலுக்கட்டாயமாக பிரிக்கப்பட்டு உறைவிட பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர். குழந்தைகளை அனுப்ப மறுக்கும் பெற்றோர் சிறையில் அடைக்கப் பட்டனர். அப்போது ஏராளமான குழந்தைகள் இனப்படுகொலை செய்யப் பட்டதாகக் கூறப்படுகிறது[3]. இதை உறுதிப்படுத்தும் வகையில் கனடாவின் பழங்குடியின பள்ளி வளாகத்தில் 215 குழந்தைகளின் எலும்புக் கூடுகள் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது[4].

215 எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப் பட்டது: கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், கம்லூப்ஸ் நகரில் கடந்த 1890 முதல் 1969 வரை பழங்குடியின குழந்தைகளுக்காக உறைவிடப் பள்ளி செயல்பட்டு வந்தது[5]. கடந்த 1969-ம்ஆண்டில் கனடா அரசு, பள்ளி நிர்வாகத்தை தனது பொறுப்பில் எடுத்தது. கடந்த 1978-ல்பள்ளி மூடப்பட்டது[6]. கனடா பழங்குடியின அமைப்பு சார்பில் கம்லூப்ஸ் பள்ளியில் அண்மையில் ரேடார் உதவியுடன் ஆய்வு நடத்தப்பட்டது[7]. அப்போது பூமிக்கடியில் ஏராளமான உடல்கள் புதைக்கப் பட்டிருப்பது கண்டுபிடிக்கப் பட்டது[8]. ரேடாரில் இதுவரை 215 குழந்தைகளின் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இதுகுறித்து உள்ளூர் பழங்குடியின தலைவர் லிசா கூறும்போது, “ரேடாரில் மட்டுமே எலும்பு கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றை தோண்டி எடுத்துஆய்வு செய்ய வேண்டும். 3 வயது குழந்தையின் எலும்பு கூடும் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. பள்ளி வளாகத்தில் வேறு எங்கேனும் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்,” என்றார். கனடா முழுவதும் சுமார் 130-க்கும் மேற்பட்ட பழங்குடியின உறைவிட பள்ளிகள் செயல்பட்டு வந்தன. இந்த பள்ளிகளின் செயல்பாடு குறித்து விமர்சனம் எழுந்ததால் கடந்த 2008-ல் கனடா அரசு பழங்குடி உறைவிட பள்ளி நடைமுறையை முழுமையாக ஒழித்தது.

பள்ளிக் குழந்தைகள் இறப்பு பற்றி கனடா பிரதமர் வருத்தப் பட்டது, போப் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொன்னது: இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 2017-ல் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறும்போது, “கனடா பழங்குடியின உறைவிட பள்ளி நடைமுறைக்காக கத்தோலிக்க மதத் தலைவர் போப்பாண்டவர் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும்,” என்று வலியுறுத்தினார்[9]. தற்போது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “கம்லூப்ஸ் பள்ளியில் குழந்தைகளின் எலும்புக் கூடுகள் கண்டறியப்பட்டிருப்பது இதயத்தை உடைக்கிறது. நமது நாட்டின் இருண்ட காலத்தை வேதனையுடன் நினைவுபடுத்துகிறது. இந்த செய்தியால் வேதனையில் ஆழ்ந்திருக்கும் அனைவரின் சோகத்தில் நானும் பங்கு எடுக்கிறேன். உங்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம்,” என்று கூறியுள்ளார்[10].

மாகாண பழங்குடியின மக்களின் பிராந்திய தலைவர் விசாரணை தேவை என்றது: கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண பழங்குடியின மக்களின் பிராந்திய தலைவர் டெரி கூறும்போது, “பழங்குடி உறைவிட பள்ளிகளில் படித்த குழந்தைகள் கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டனர். பெண் குழந்தைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டனர். எங்களது தாய் மொழியை அழித்து பிரெஞ்சு, ஆங்கிலத்தை திணித்தனர். நாட்டில் முதல்முறையாக மிக அதிக எண்ணிக்கையில் குழந்தைகளின் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றை தோண்டியெடுத்து மரபணு பரிசோதனை நடத்த வேண்டும். இதைஇனப்படுகொலை என்றே குற்றம் சாட்டுகிறோம். இந்த குற்றங்களில் ஈடுபட்டவர்கள் இப்போது உயிரோடு இருக்க வாய்ப்பில்லை. எனினும் கனடா அரசு முழுமையாக விசாரணை நடத்த வேண்டும்” என்றார்.

400-க்கும் மேற்பட்ட இடங்களில் எங்கள் சமுதாய குழந்தைகள் புதைக்கப் பட்டிருக்கலாம்: பழங்குடி அமைப்பின் தேசிய தலைவர்ரோஸ்னே கேஸ்மிர் கூறும்போது, “கனடா உறைவிட பள்ளிகளில் பயின்ற குழந்தைகளுக்கு முறையான உணவு வழங்கப் படவில்லை. பள்ளி நிர்வாகங்களின் கொடுமை, தொற்று நோய்களால் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். ஏராளமான குழந்தைகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். அவ்வாறு குழந்தைகளை கொலை செய்து புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 100 இடங்களை கண்டறிந்துள்ளோம். இதில் கம்லூப்ஸ் பள்ளியில் மட்டும் 215 குழந்தைகளின் எலும்பு கூடுகளை கண்டுபிடித்துள்ளோம். நாடு முழுவதும் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் எங்கள் சமுதாய குழந்தைகள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதுகிறோம். அந்த இடங்களை தேடி கண்டுபிடித்து ஆய்வு செய்வோம்” என்றார்.

இதுவரை 4,100 குழந்தைகள் மாயம்: ஓட்டாவா: கனடாவைச் சேர்ந்த உண்மை கண்டறியும் கமிஷன் (டிஆர்சி) என்ற அமைப்பு, கத்தோலிக்க தேவாலய நிர்வாகங்கள் நடத்திய பழங்குடி உறைவிட பள்ளிகள் குறித்து சுமார் 6 ஆண்டுகள் விசாரணை நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: “கனடாவில் சுமார் 150 ஆண்டுகளாக நடத்தப்பட்ட பழங்குடியின உறைவிட பள்ளிகளில் எத்தனை மாணவ, மாணவியர் உயிரிழந்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது. பல குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். எங்களது ஆய்வின்படி சுமார் 4,100 பேர் மாயமாகி உள்ளதாக கணக்கிட்டுள்ளோம். அவர்களுக்கு என்ன ஆனது என்பது தெரியவில்லை,” இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பழங்குடியின தலைவர்கள் கூறும்போது, “உறைவிட பள்ளிகளில் கல்வி பயின்ற சுமார் 6,000 பேர் உயிரிழந்திருக்கலாம். அவர்களின் இறப்பை அந்தந்த பள்ளி நிர்வாகங்கள் மறைத்துள்ளன. அவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கவில்லை. கம்லூப்ஸ் பள்ளியில் 52 குழந்தைகள் மட்டுமே உயிரிழந்திருப்பதாக ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போது நாங்கள் 215 குழந்தைகளின் எலும்புகூடுகளை கண்டறிந்துள்ளோம்” என்று தெரிவித்தனர்.

© வேதபிரகாஷ்

29-06-2021


[1] தமிழ்.இந்து, கனடா பழங்குடியின பள்ளியில் 215 குழந்தைகளின் எலும்பு கூடுகள் கண்டுபிடிப்பு: இனப் படுகொலை என குற்றச்சாட்டு, Published : 31 May 2021 03:11 AM; Last Updated : 31 May 2021 06:08 AM.

[2] https://www.hindutamil.in/news/world/676864-canada-school.html

[3] தினத்தந்தி, மூடப்பட்ட பள்ளியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட 215 குழந்தைகளின் உடல்கள்; கனடா பிரதமர் அதிர்ச்சி, மே 29, 06:03 PM.

[4] https://www.dailythanthi.com/amp/News/World/2021/05/29180330/Remains-of-215-children-found-at-indigenous-school.vpf

[5] கடனா.மிர்ரர், கனடா பாடசாலை வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளின் எலும்புக்கூடுகள்: குற்றம்சாட்டும் பழங்குடியினர்!, 31 May 2021

[6] https://canadamirror.com/article/children-found-on-a-school-campus-in-canada-1622505632

[7] ஐ.பி.சி.தமிழ், கனடாவிலுள்ள பழங்குடியின பாடசாலையில் 215 குழந்தைகளின் எச்சம் மீட்பு!, 31 May 2021.

[8] https://ibctamil.com/article/children-rescued-from-aboriginal-school-in-canada-1622458492

[9] விகடன், `கனடா வரலாற்றின் இருண்ட பக்கங்கள்.. பள்ளி வளாகத்தில் 215 குழந்தைகளின் எலும்புக்கூடுகள்! அதிர்ச்சி, அந்தோணி அஜய்.ர, Published:30 May 2021 6 PM; Updated:30 May 2021 6 PM

[10] https://www.vikatan.com/government-and-politics/international/215-bodies-found-at-indigenous-school-in-canada