Archive for the ‘கூலி மனோபாவம்’ Category

கனடா சிலையுடைப்புகள், காலனிய-அடிமைப் போக்கை எதிர்க்கும் நிலை மற்ற முந்தைய காலனி நாடுகள் கற்றுக் கொள்ள வேண்டிய படிப்பினை என்ன?

ஜூலை 5, 2021

கனடா சிலையுடைப்புகள், காலனிய-அடிமைப்போக்கை எதிர்க்கும் நிலை மற்ற முந்தைய காலனி நாடுகள் கற்றுக் கொள்ள வேண்டிய படிப்பினை என்ன?

ஐயோப்பிய காலனித்துவத்தால் உலக மக்கள் பாதிக்கப் பட்டது: ஐரோப்பிய காலனிய அடக்குமுறை, யதேச்சதிகார,, பொருளாதாரா சுரண்டல்-கொள்ளை, அடிமை வியாபாரம், மலிவான வேலையாட்கள், கூலித் தொழில், என்றெல்லாம் வைத்து ஆப்பிட்ரிக்க, ஆசிய, அமெரிக்க மக்களை சதாய்த்து வந்தது. டச்சு, டேனிஸ், போர்ச்சுகீசிய, பிரெரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர் என்று அனைவரும், ஒவ்வொரு வகையில் கொள்ளையடித்தனர். பல நேரங்களில், அவர்கள் ஒத்துழைத்து கொள்ளை அடித்தனர். குறிப்பாக, பண்ணைத் தொழில், தொழிற்சாலைகளுக்கு, அடிமைமைகளை விற்பதில் அவர்களுக்குள் இருந்த பரஸ்பர வியாபார உறவுகள், நிறவெறுத்துவ சித்தாந்தங்கள் முதலியவற்றைப் புரிந்து கொள்ளலாம். ஆப்பிரிக்க “அபார்த்யிட்” என்கின்ற பிரித்து வைத்து வாழவைத்த நகரங்கள், கிராமங்கள் வெள்ளையர்களின் நிறவெறித்துவ அடக்குமுறையின் உச்சத்தின் உதஆணம் ஆகும். அமெரிக்காவிலும் சொல்லொணா கொடுமைகளை, குரூரங்களை அரங்கேற்றியுள்ளனர். அஸ்டெம், மாயா மற்றும் இன்கா போன்ற உயர்ந்த நாகரிகங்களை, அம்மக்களை, அவர்களது கலாச்சார-சரித்திர சின்னங்கள், ஆதாரங்கள் முதலியவற்றை அடியோடு அழித்துள்ளனர். ஆசிய நாடுகளிலும், அவர்களது குரூர-கொடுமைகள் அதிகமே. இந்தியா போன்ற நாடுகள் இன்றும் அனுபவித்து வருகின்றன.

18ம் நூற்றாண்டிலும் அடிமை வியாபாரம் நடந்த நிலை: ஏப்ரல் 13, 1709 அன்று ஜேக்கஸ் ரௌடட் (Jacques Raudot), பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவன் அடிமை வியாபாரத்தை நியாயப் படுத்தினான். இந்தியர்களின் கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, நாகரிகம் முதலியவற்றை அழித்து, அவர்களது பழங்காலத்தை மறக்க ஐரோப்பியர் முயன்றனர். இக்காலத்தவரையும் முழுமையாக மாற்ற, பள்ளிகளிகளேயே இருந்து படிக்கும் முறையை உண்டாக்கி, ஆயிரக் கணக்கான இந்திய சிறுவர்-சிறுமியர்களை அடைத்து வைத்தனர். முடிந்த வரையில் தமது போதனைகளால். அவர்களை மாற்ற முயன்றனர். பிறகு மதம் மாற்றாம் மூலம் பழமையை மறக்க வைத்தனர். இவற்றிற்கும் மீறி, முடியாத குழந்தைகளை சரியாக உணவு கொடுக்காமல் இருப்பது, உடல் அசுகரியம் ஏற்பட்டால், முறையாக சிகிச்சை கொடுக்காமல் இறக்க வைப்பது போன்ற கொடூர முறைகளையும் பின்பற்றினர். இத்தகைய குரூரக் கொடுமைகள் வெளிவந்த நிலையில் அப்பள்ளிகள் மூடப் பட்டன. இருப்பினும், இப்பொழுது, நூற்றுக்கணக்கான குழந்தைகள் புதைக்கப் பட்டிருப்பது கண்டு பிடிக்கப் பட்டதால், நிலைமை மோசமாகியுள்ளது.

கனடா ஆங்கிலேய காலனிய அடக்குமுறைகளில் கொடுமைப் படுத்தப் பட்டது: கனாடா தொடக்கத்தில் பிரான்ஸ் கட்டுப்பாட்டில் இருந்தாலும், 15ம் நூற்றாண்டின் இறுதியில் நாட்டிற்குள் நுழைந்த ஐரோப்பியர்கள் 1763ல் கனடாவை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். 1763களிலிருந்து பிரிட்டன் கனடாவை ஆண்டு வந்தது. இந்த காலகட்டத்தில் உண்டு உறைவிட பள்ளிகள் கத்தோலிக்க கிருத்துவ அமைப்புகளால் நடத்தப்பட்டது. இப்பள்ளிகளில் வலுக்கட்டாயமாக 1,50,000க்கும் அதிகமான கனடா பூர்வீகக்குடிகளின் குழந்தைகள் சேர்க்கப்பட்டனர். குழந்தைப் பருவத்திலிருந்தே, அவர்கள் தங்களது மூலங்களை அடியோடு மறக்க, அத்தகைய கல்விமுறையைக் கையாண்டார்கள். ஐரோப்பியர்களின் வருகைக்கு கனடாவின் பூர்வீகக்குடிகள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து பள்ளியில் குழந்தைகள் சேர்க்கை அமல்படுத்தப்பட்டது. அதாவது, காலனிய ஆதிக்கத்தை முழுமையாக ஸ்திரப் படுத்த அத்தகைய மனோதத்துவ மற்றுமதூடல் ரீதியிலான தாக்குதல்கள், அடக்குமுறைகள் முதலியவற்றையும் பிரயோகித்தார்கள். இதற்கு இணங்காத பெற்றோர்கள் சிறைசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் 1982ல் கனடா தனி நாடாக உருவானது. ஆனாலும், பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் கனடாவின் ராணியாக தொடர்கிறார். இது “காமன்வெல்த்” என்ற போர்வையிலும் செயல்பட்டு வருகின்றது.

குழந்தைகளின் சடலங்கள் கண்டு பிடிக்கப் பட்டதால், கன மக்கள் கொதித்து போயிருக்கிறாற்கள்: கனடாவில் உள்ள பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளிகளில் புதைக்கப்பட்ட குழந்தைகளின் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகின்றன. இந்த உண்டு உறைவிட பள்ளிகளில் குழந்தைகள் துன்புறுத்தப்பட்டதாகவும், 6,000க்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும் தற்போது வரலாற்று ஆய்வாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இப்படியான சூழலில், கனடாவின் பழங்குடியின அமைப்பு சார்பில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள காம்லூப்ஸ் உண்டு உறைவிட பள்ளியில் ரேடார் உதவியுடன் நடத்தப்பட்ட ஆய்வில் 215 குழந்தைகளின் எலும்புக் கூடுகள் கண்டறியப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பிரிட்டன் அரசு மன்னிப்பு கோர வேண்டும் என்று கனடா பழங்குடியின அமைப்பு வலியுறுத்தியுள்ளது. ஆனால், அடிப்படைவாதியான, கத்தோலிக்க மதத் தலைமை, அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை, வெறுமனே வருத்தப் படுவதாகக் கூறியது.

ஜூன் 21 முதல் 26 வரை நான்கு சர்ச்சுகள் எரிக்கப் படுதல்: மேற்கு கனடாவில் 26-06-2021 அன்று சனிக்கிழமை அதிகாலை மேலும் இரண்டு கத்தோலிக்க தேவாலயங்கள் (St Ann’s Church and Chopaka Church ) தீப்பற்றி எரிந்துள்ளன[1]. செயின்ட் ஆன் மற்றும் சோப்கா சர்ச் இந்தியர்கள் வாழும் பகுதிகளில் உள்ளவை[2]. பிரிட்டிஷ் கொலம்பியாவில் செயின்ட் ஆன் தேவாலயம் மற்றும் சோபகா தேவாலயத்தில் சுமார் ஒரு மணி நேர இடைவெளியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது[3]. இரண்டு தேவாலயங்களும் முற்றிலுமாக சேதமடைந்துள்ள நிலையில் இந்த தீவிபத்து சந்தேகத்திற்குரியவை என அதிகாரிகள் தெரிவித்தனர்[4]. கடந்த திங்கட்கிழமை 21-06-2021 அன்று தேசிய பழங்குடி மக்கள் தினம் அனுஸ்டிக்கப் பட்டபோது மாகாணத்தில் உள்ள இரண்டு கத்தோலிக்க தேவாலயங்கள் (the Sacred Heart church, the St Gregory’s church) தீக்கிரையாக்கப்பட்டன[5]. தூய இருதய சர்ச்சும், செயின்ட் ஜார்ஜ் சர்ச்சும் அம்மக்கள் வாழும் இடங்களில் இருக்கின்றவை[6]. எனவே முந்தைய தீ விபத்து மற்றும் புதிய தீ விபத்து பற்றிய விசாரணைகள் எந்தவொரு கைதுகளும் குற்றச்சாட்டுகளும் இன்றி நடந்து கொண்டிருப்பதாக அதிகாரிகள் கூறியிள்ளனர். இவ்விசயத்தில், மேலும் கலவரத்தை உண்டாக்க அரசு விரும்பவில்லை.

ஜூலை 1 கனடா தினத்தன்று எழுச்சி ஏற்பட்டது: இது நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஆத்திரமடைந்த பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், கனடாவின் தேசிய தினத்தையொட்டி, உண்டு உறைவிட பள்ளிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டும், பழங்குடி சமூகங்களுக்கான ஆதரவை திரட்டுவதற்காகவும் மானிட்டோபா தலைநகர் வின்னிபெக்கில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊர்வலமாகச் சென்ற அவர்கள், சட்டமன்ற வளாகத்தில் விக்டோரியா மகாராணியின் முக்கிய சிலையை தகர்த்து கீழே தள்ளினர்[7]. இதனால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது[8].   பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளிகளில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பட்டதால், ஜூலை 1, கனடா தினத்தன்று தேசிய கொண்டாட்டங்களை ரத்து செய்ய வேண்டும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் ஏற்கனவே வலியுறுத்தினர்[9]. இதனால் கனடா முழுவதிலும் உள்ள நகராட்சிகள் கொண்டாட்டங்களை ரத்து செய்தன[10].  போராட்டங்களின்போது, பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளிகளுடன் தொடர்புடைய நபர்களின் சிலைகள் அழிக்கப்பட்டன. சில சிலைகள் அகற்றப்பட்டுள்ளன.

இங்கிலாந்தின் எதிர்வினையும், அறிக்கைகளும், அதிகாரஆணவ தோரணைகளைத்தான் வெளிப் படுத்துகின்றன: சிலை தகர்ப்பு சம்பவத்திற்கு பிரிட்டன் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது[11]. மேலும், தாங்கள் கனட பழங்குடியினருக்கு ஆதரவாக இருப்பதாகவும், இந்த சூழலை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் பிரிட்டனின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது[12]. பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில், விக்டோரியா மகாராணி சிலையையும், இளவரசி இரண்டாம் எலிசெபத் சிலையையும் அவர்கள் தகர்த்தெறிந்தது மட்டுமல்லாமல், அவற்றின் மீது சிவப்பு வர்ணம் பூசி அவமதித்தனர்[13]. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், எங்கள் அரச குடும்பத்தினர் அவமதிக்கப்படுவதை, பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்றார்[14]. சிலை தகர்ப்பு சம்பவத்திற்கு பிரிட்டன் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது மற்றும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், எங்கள் அரச குடும்பத்தினர் அவமதிக்கப்படுவதை, பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்றது, போப்பை விட, ஆணவ-அகம்பாவ போக்கைக் காட்டுகிறது. எதிர்வினையும், அறிக்கைகளும், அதிகார-ஆணவ தோரணைகளைத்தான் வெளிப் படுத்துகின்றன.

இந்தியாவில் காலனிய போக்கு, கூலிமனோபாவம், அடிமைத்துவம் செயல்படும் முறை: இதன் படிப்பினைகளை மற்ற நாடுகள் எப்படி புரிந்து கொள்ளும் என்று கவனிக்க வேண்டும். இந்தியாவைப் பொறுத்த வரையில், இப்பொழுது நிர்வாகப் படுத்தப் பட்டுள்ள படிப்புமுறையே,  மெக்காலே திட்டத்தின் மூலம், “வெள்ளை காலர்”  மெத்தப் படித்த கூலிகளை கடந்த 70 ஆண்டுகளில் உருவாக்கியுள்ளது.  அரசில்வாதிகளுக், கட்சிகளும் ஐரோப்பிய அரசியல் சித்தாந்தங்களைப் பின்பற்றுவதால், மறைமுகமாக, மக்களை அடக்கியாளும் முறைகள் கையாளப் படுகின்றன. ஐரோப்பிய சின்னங்கள், ஆங்கிலேயர் சிலைகள், அடிமைத்தள சித்தாந்தங்கள், இன்னும் வேலைசெய்து கொண்டிருக்கின்றன. புதிய சிலைகள் நிறுவப் பட்டு வருகின்றன. அவையும், அடக்குமுறைகளை எதிர்ப்பது, புத்துலகத்தைப் படைப்பது போன்ற கவர்ச்சி முழக்கங்களுடன் அவைகள் வைக்கப் பட்டாலும், அதேஅடிமைபாங்கைத்தான் வளர்த்து வருகிறார்கள். சிலைகள் மோதப்படுகின்றன. காலனிய ஆதிக்க சக்திகளை எதிர்க்காமல், தமக்குள்  சண்டையிட்டுக் கொண்டு வருகிறார்கள். இத்தகைய பிரிவினைகள் நிறவெறுத்துவம் பதிலாக, ஜாதித்துவம் உபயோகப் படுத்தப் பட்டு வருகிறது. எதை எதிர்ப்பது போல காட்டிக் கொள்கிறார்களோ, அதை ஆதரித்து பொருளாதார சுரண்டல்களை பக்குவமாக செய்து வருகிறனர்.

© வேதபிரகாஷ்

06-07-2021


[1] The Guardian, Canada: two more Catholic churches on First Nations reserves destroyed by fire,  Leyland Cecco in Toronto, Mon 28 Jun 2021 16.48 BST.

[2] https://www.theguardian.com/world/2021/jun/28/canada-catholic-churches-fires

[3] [3] The Independent,  More churches burn down on indigenous Canadian land ‘The investigations into the previous fires and these two new fires are ongoing with no arrests or charges,’ say Canadian police, Sean Russell, @SAntoniRussell, 28-06-2021.

[4]https://www.independent.co.uk/news/world/americas/churches-burn-down-canada-indigenous-b1873706.html

[5] The Guardian, Two Catholic churches destroyed by fire on First Nations reserves in Canada, Leyland Cecco in Toronto, Tue 22 Jun 2021 19.59 BST.

[6]  https://www.theguardian.com/world/2021/jun/22/canada-church-fires-first-nation-reserves

[7] பிரிட்டன்.தமிழ்.காம், கனடாவில் விக்டோரியா மகாராணி, இரண்டாம் எலிசெபத் சிலை அவமதிப்பு,  July 2, 2021; https://www.britaintamil.com/victoria/

[8] https://www.britaintamil.com/victoria/

[9] மாலைமலர், கனடாவில் விக்டோரியா மகாராணியின் சிலை தகர்ப்பு, பதிவு: ஜூலை 02, 2021 16:58 IST.

[10] https://www.maalaimalar.com/news/world/2021/07/02165850/2783022/Queen-Victoria-statue-torn-down-at-Canada-protest.vpf

[11] நியூஸ்.7.தமிழ், கனடாவில் விக்டோரிய மகாராணியின் சிலை தகர்ப்பு, by Karthick, July 3, 2021.

[12] https://news7tamil.live/statues-of-queen-victoria-and-queen-elizabeth-ii-torn-down-in-canada.html

[13] பிரிட்டன்.தமிழ்.காம், கனடாவில் விக்டோரியா மகாராணி, இரண்டாம் எலிசெபத் சிலை அவமதிப்பு,  July 4, 2021

[14]https://www.britaintamil.com/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0/