Archive for the ‘ராகேஷ் சர்மா’ Category

ராகேஷ்சர்மா, முதல் இந்திய விண்வெளி வீரர், சாதனையாளர், சந்திராயன்-3 வெற்றியை முன்னரே கணித்தவர் – கண்டுக் கொள்ளப்படாமல் அமைதியாக வாழும் விமான வீரர்!

ஓகஸ்ட் 27, 2023

ராகேஷ் சர்மா, முதல் இந்திய விண்வெளி வீரர், சாதனையாளர், சந்திராயன்-3 வெற்றியை முன்னரே கணித்தவர் – கண்டுக்கொள்ளப் படாமல் அமைதியாக வாழும் விமான வீரர்!

இந்திய முதல் விண்வெளி வீரரை தெரியாது என்ற போலீஸார்: ராகுல் மறுபடியும் “யாத்திரை” செய்வதாகத் தெரிகிறது[1]. குன்னுாரில் வசிக்கும் நம் நாட்டின் விண்வெளிக்கு சென்ற வீரர் ஓய்வு பெற்ற விங் கமாண்டர் ராகேஷ் சர்மா, எம்.பி., ராகுல் கலந்துரையாடல் நிகழ்ச்சி, கேத்தி மைனலா தனியார் ரிசார்ட்டில் நடப்பது தொடர்பாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது[2]. இருவரும் அங்கு சந்திப்பார்கள்[3], அங்கு, சாக்கிலேட் செய்வது எப்படி என்பது பற்றி பார்த்துக் கற்றுக் கொள்வார் என்றெல்லாம் செய்திகள் வெளிவந்தன[4]. இதையொட்டி தன் காரில், 11:30 மணியளவில் வந்த ராகேஷ் சர்மாவை, ரிசார்ட் கேட் முன் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர்[5]. அப்போது, வாகன டிரைவர், விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா வந்துள்ளதாக தெரிவித்த போதும், பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு அவர் யார் என்று தெரியாததால், ‘இறங்கி உள்ளே நடந்து செல்லுங்கள்’ என, தெரிவித்தனர்[6]. அங்கிருந்த நிருபர்கள், கேமரா மேன்கள் சூழ்ந்து, ‘இவர் முதல் விண்வெளி வீரர்; அவரிடம் கலந்துரையாட தான் ராகுல் வந்துள்ளார்’ என, தெரிவித்த பின், அவரை காரில் உள்ளே செல்ல போலீசார் அனுமதித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

12-08-2023 அன்று ராஹுல், ராகேஷ் சர்மாவை குன்னூரில் சந்திப்பார் என்று சில ஹிந்தி ஊடகங்கள் சுருக்கமாக செய்தி வெளியிட்டன…

விமான படிப்பு, தேர்ச்சி, விமானப் படையில் சேர்ந்தது: ராகேஷ் ஷர்மா (Rakesh Sharma, பிறப்பு: சனவரி 13, 1949) விண்வெளியில் பறந்த முதல் இந்தியராவார். இவர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள பாட்டியாலா என்னும் ஊரில் பிறந்தவர். ராகேஷ் ஷர்மா விண்வெளிக்குச் சென்ற 128-வது மனிதராவார். இவர், 7 நாள் 21 மணி நேரம் 40 நிமிடங்கள் விண்வெளியில் தங்கியிருந்தார்.பிறந்தது பஞ்சாப் என்றாலும் தனது பள்ளிப் படிப்பை ஐதராபாத்தில் உள்ள புனித ஜார்ஜ் பள்ளியில் முடித்தார். அதன்பின்னர் 1966-இல் அவர் தேசிய இராணுவப் பள்ளியில் விமானப் படைப் பிரிவில் மாணவராக சேர்ந்து, படிப்பை முடித்தார். இவர் 1970இல் இந்திய விமானப் படையில் பயிற்சி விமானியாக பணியாற்றினார். 1984ஆம் ஆண்டில் விமானப் படைப்பிரிவின் ஒரு குழுவுக்கு ராகேஷ் தலைவராக நியமிக்கப்பட்டார்.நூற்றுக்கும் மேற்பட்டோர் விண்வெளிப் பயணத்திற்கு விண்ணப்பத்தில் ராகேஷ் 1982ஆம் ஆண்டு செப்தம்பர் 20 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். சுமார் ஒன்றரை ஆண்டுகள் அவருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

1984ல் விண்கலத்தில் வான்வெளிக்குச் சென்றது: 1984ஆம் ஆண்டு ஏப்ரல் 2 அன்று அவர் விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டார். அவருடன் ரஷ்ய விண்வெளி வீரர்கள் இருவரும் சோயுஸ் டி 11 விண்கலத்தில் பயணம் மேற்கொண்டனர். சல்யூட் 7 என்ற விண்வெளி மையத்தில் அவர் தங்கி இருந்தார். அங்கே பல அறிவியல் ஆய்வுகளை இந்தக் குழு மேற்கொண்டது.ராகேஷ் சர்மாவுக்கு அவரது பணிகளை பாராட்டி அசோகா சக்ரா விருது கிடைத்தது. சோவியத் ரஷ்யாவின் நாயகன், ஆர்டர் ஆப் தி லெனின் ஆகிய விருதுகளைப் பெற்றார். சோவியத் ஒன்றியத்தின் யூரி ககாரின் 1961இல் விண்வெளியை அடைந்த முதல் மனிதர் என்னும் பெருமையைப் பெற்றார். இது நடந்து 23 ஆண்டுகள் கழித்து, விண்வெளிக்கு மனிதரை அனுப்பும் முயற்சியில் இந்தியா வெற்றிபெற்றது. இந்தியாவின் தடத்தை விண்வெளியில் பதித்தவர் ராகேஷ் சர்மா. சோவியத் ஒன்றியத்தின் உதவியுடன் 1984 ஏப்ரல் 2 அன்று அவர் விண்வெளிப் பயணம் மேற்கொண்டார். விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியர் எனும் பெருமைக்குச் சொந்தக்காரராகத் திகழ்கிறார் ராகேஷ் சர்மா. அதற்குப் பிறகு இப்போதுவரை இந்தியக் குடிநபர் எவரும் விண்வெளிக்குச் செல்லவில்லை. ராகேஷ் சர்மா சோயுஸ் டி-11 விண்கலத்தின் மூலம் விண்வெளிக்குச் சென்றபோது அவருடைய வயது 35.

விண்வெளியில் மேற்கொண்ட ஆராய்ச்சி: விண்வெளியிலிருந்த சால்யுட் – 7 விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் தங்கிப் புவி அறிவியல், உயிரி மருத்துவம், உலோகவியல் ஆகியவை சார்ந்து அவர் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். நிறப்பிரிகை கேமராவைக் கொண்டு இந்தியாவை அவர் எடுத்த ஒளிப்படங்கள் மதிப்புமிக்கவை. விண்வெளியில் 13 ஆய்வுகளை அவர் மேற்கொண்டார். ராகேஷ் சர்மா விண்வெளியில் 7 நாட்கள் 21 மணி 40 நிமிடங்கள் இருந்தார். விண்வெளியிலிருந்தபோது ராகேஷ் சர்மாவுடன் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி தொலைபேசியில் உரையாடியது வரலாற்றுப் புகழ்பெற்ற நிகழ்வு. ’இந்தியா எப்படிக் காட்சியளிக்கிறது’ எனப் பிரதமர் அவரிடம் கேட்டார். அதற்கு ராகேஷ் சர்மா ‘சாரே ஜஹான் சே அச்சா’ என்று பதிலுரைத்தார். உலகில் இந்தியாவே சிறந்ததாகக் காட்சியளிக்கிறது என்பது அதன் அர்த்தம்.

ஊடகங்கள் கண்டுகொள்ளாத சாதனையாளர்: ஓய்வு பெற்றப் பிறகு, குன்னூரில் தன் மனைவியுடன் தங்கியிருக்கிறார். இன்றைக்கு, இந்தியர்கள் பெரும்பாலோர் இவரை மறந்திருக்கலாம். அதுதான் இப்பொழுது நடந்திருக்கிறது. இன்றைக்கு பொது மக்களுக்கு சினிமா நடிகை, நடிகர்களை நன்றாகத் தெரிந்திருக்கிறது. அதே போல, போலீசாருக்கும், சினிமா, கிரிக்கெட் போன்றவற்றைப் பற்றித் தெரிந்திருக்கிறது. ஆனால், அவர்களது போலீஸ்துறைப் பற்றியே தெரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள் எனலாம். பிறகு, குன்னூரில் இருக்கும் போலீசார், அங்கேயே இருந்து வாழும் ராகேஷ் சர்மாவைத் தெரியவில்லை என்றால் என்னென்பது? இந்நிலையில் இந்தியர்கள் இருப்பது, மிகவும் வருத்தப் படக் கூடிய விசயம் ஆகும். கண்டவர்களை எல்லாம் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளும் இக்காலத்தில், முதல் விண்வெளி வீரரை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளமுடியவில்லை என்றால் திகைப்பாக இருக்கிறது. தினமலர் ஒன்றுதான், இதைப் பற்றி செய்தி வெளியிட்டுள்ளது. மற்ற ஊடகங்கள் இதைப் பற்றி கண்டுகொள்ளவில்லை போலும்.

சந்திரயான்-3 வெற்றியை இந்தியா கொண்டாடும், என்று தீர்க்கதரிசனமாக.. இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா பேசினார்: 12-08-2023 அன்று இது நடந்தேறியப் பிறகு, சந்திரயான்-3 வெற்றியை இந்தியா கொண்டாடும், என்று தீர்க்கதரிசனமாக.. இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா பேசினார்[7]. இந்தியாவின் விண்வெளி ஆய்வுப் பயணம் குறித்த தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார் ராகேஷ் சர்மா[8]. மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் சமீபத்தில் கூறுகையில், “நமது சொந்த நிலத்தில் இருந்து ஏவுதல் மற்றும் புவி கண்காணிப்பு, செயற்கைக்கோள் தொடர்பு, வானிலை, விண்வெளி போன்ற திட்டங்களை செயல்படுத்தும் திறன் உட்பட, விண்வெளி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் இறுதி முதல் இறுதி திறன் கொண்ட விண்வெளிப் பயண நாடுகளில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது. உண்மையில் கடந்த நான்கு அல்லது ஐந்து தசாப்தங்களாக இஸ்ரோ செய்து வரும் பயணம் மற்றும் அது உண்மையில் அற்புதமானது. தொழில்நுட்ப மறுப்பு இருந்தபோதிலும், மிகச் சிறிய குழந்தைப் படிகளில் தொடங்கி நிலையான முன்னேற்றத்தை அடைந்து வருகிறோம். இன்று, மனிதர்கள் கொண்ட விண்வெளித் திட்டம் மற்றும் நமது சொந்த விண்வெளி வீரர்களைத் தொடங்குவதற்குத் தயாராகி வருகிறோம்.

ஆராய்ச்சிகள் சிறப்பாக நடந்து கொண்டிருக்கின்றன: ஆளில்லா காப்ஸ்யூல் விண்வெளியில் இருந்து பாதுகாப்பாக திரும்புவதையும், தன்னியக்கமாக தரையிறங்கும் ரிமோட் பைலட் வாகனத்தையும் நிரூபித்துள்ளோம். இது விண்வெளி விண்கலத்தின் மாதிரியாகக் கூறப்படுகிறது. இன்று நாம் முடிவிற்கு முடிவடையும் திறன்களைப் பெற்றுள்ளோம். ரஷ்ய முயற்சி வெற்றி பெற்றிருந்தால், ஓரிரு நாட்கள் முன்னதாகவே தரையிறங்கியிருப்பார்கள். நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன், இந்த முறை வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன். எங்களின் முந்தைய முயற்சியான சந்திரயான் 2 தோல்வியடைந்துவிட்டதை நீங்கள் நன்கு அறிவீர்கள். அந்தக் குறைபாடுகள் இஸ்ரோவால் சரி செய்யப்பட்டுள்ளன. ஜூன் 2020 இல் அரசாங்கம் அறிவித்த விண்வெளித் துறை சீர்திருத்தங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், நாங்கள் எங்கள் விண்வெளி திட்டங்களை மிகவும் சிக்கனமாக இயக்குகிறோம்.

சந்தையில் நாங்கள் மிகவும் போட்டித்தன்மையுடன் இருக்கிறோம்: இந்த சந்தையில் நாங்கள் மிகவும் போட்டித்தன்மையுடன் இருக்கிறோம் – செயற்கைக்கோள்களை விண்வெளியில் வைப்பது. எனவே, எங்கள் சேவைகளைப் பயன்படுத்த ஏராளமான வாடிக்கையாளர்கள் வரிசையில் நிற்பதால், இஸ்ரோவின் அலைவரிசை மீண்டும் அடைக்கப்பட்டது. இது அவர்களின் கவனத்தை அறிவியல் ஒத்துழைப்பு மற்றும் ஆளில்லா இடைவெளி திட்டத்தில் இருந்து விலக்கியது. இரண்டையும் நிர்வகிப்பது இஸ்ரோவுக்கு மிகவும் கடினமாக இருந்தது. எனவே, வளர்ந்த நாடுகளில் செய்யப்பட்டுள்ளதைப் போலவே, தனியார் துறையால் வழக்கமான விஷயங்கள் செய்யப்படுகின்றன, மேலும் இஸ்ரோ தொடர்ந்து ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் மேலும் ஆய்வுகளை வெற்றிகரமாக செய்து வருகிறது” என்று கூறினார்.

© வேதபிரகாஷ்

14-08-2023 / 27-08-2023


[1] DTNext, Rahul to meet Rakesh Sharma today in Nilgiris, DTNEXT Bureau 12 Aug 2023 6:49 AM

[2] https://www.dtnext.in/news/tamilnadu/rahul-to-meet-rakesh-sharma-today-in-nilgiris-729488

[3] Jantaserishta, राहुल आज नीलगिरी में राकेश शर्मा से मिलेंगे,  Kunti Dhruw12 Aug 2023 2:45 PM

[4] https://jantaserishta.com/national/rahul-to-meet-rakesh-sharma-today-in-nilgiris-2704708

[5] தினமலர், ராகேஷ் சர்மாவை தெரியாத போலீசார்!, பதிவு செய்த நாள்: ஆக 13,2023 10:58.

[6] https://m.dinamalar.com/detail.php?id=3402897

[7] ஏசியாநெட்.நியூஸ், Chandrayaan-3 : சந்திரயான்-3 வெற்றியை இந்தியா கொண்டாடும்.. இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா பேச்சு, Author, Raghupati R, First Published Aug 23, 2023, 9:38 AM IST

[8] https://tamil.asianetnews.com/india/india-will-certainly-celebrate-chandrayaan-3-says-rakesh-sharma-rztsu8