Archive for the ‘காதல்’ Category

காதலர் தினம்: கருணாநிதி, ஜெயலலிதா கொண்டாடும் விதம்!

பிப்ரவரி 14, 2010

காதலர் தினம்: கருணாநிதி, ஜெயலலிதா கொண்டாடும் விதம்!

குறிப்பு:

  1. இங்கு கருணாநிதி, ஜெயலலிதா, காங்கிரஸ், திமுக, அதிமுக, முதலிய பெயர்கள் உருவகங்களாக உபயோகப் படுத்தப் படுகின்றன. தனி நபர்களைக் குறிப்பதாக ஆகாது.
  2. 1970 முதல், 2010 வரையிலான அரசியல் பின்னணியை மனதில் வைத்துக் கொண்டு இதனை படிக்கவேண்டும்.
  3. அரசியல் கட்சிகள் விபச்சாரிகளைப் போலத்தான் செயல்படுகின்றன. ஏனெனில், அவை குறிப்பிட்ட கட்சியுடன் மட்டும் என்றுமே தொடர்ந்து உறவு வைத்துக் கொல்வதில்லை.
  4. அனுவவிக்கக் கிடைப்பது கிடைத்தால், அனுபவிக்கத்தான் அத்தகைய கூட்டணிகள் ஏற்படுகின்றன.
  5. மக்களால் ஒரு கட்சியில் தேர்தலில் நின்று தேர்ந்தெடுக்கப் பட்டப் பிறகு, திடீரென்று உறவை முறித்துக் கொண்டு, இன்னொரு கட்சியுடன் உறவு வைத்துக் கொள்வது, கட்சியில் சேருவது முதலிய கள்ளக்காதல்களும், சரசங்களும், கொக்கோகங்களும் தமிழகத்திற்கே உரியவை. ஏனெனில், அவர்களே அதை தமது பேச்சுகளில், உரைகளில், எழுத்துகளில் தமக்கேயுரிய தமிழில் சொல்லிவைப்பர்கள்.
  6. இங்கு முக்கியமான விஷயம் என்னவென்றால், காலத்திற்கேற்றபடி, காதலன் காதலியாவாள், காதலி காதலன் ஆவான்.
  7. ஆணல்ல-பெண்ணல்ல, அவனல்ல-நானல்ல என்பதெல்லாம் சகஜம் தான்!

 

காதலர் தினம் என்றால் அரசியல்வாதிகளும் விட்டுவைப்பதில்லை. ஏதோ சடங்கு, சம்பிரதாயங்கள் போன்று சிலவற்றை நேரிடையாகவோ, மறைமுகமாகவோ செய்து கொண்டிருக்கிறர்கள். அயல்நாட்டவர்களுக்கு குடித்துக் கொண்டேயிருக்க வேண்டும், முறையற்ற உடலுறவு கொள்ள வேண்டும். அப்படியென்றால், அத்தகையோர் நம் நாட்டில் அதிகம் ஆக-ஆக அத்தகையவற்றை அவர்களுக்கு கிடைக்க வேண்டும், கிடைக்கச் செய்ய வேண்டும். அதனால்தான் இந்த காதல் தினம், குடி, கும்மாளம், கூத்து……………….எல்லாம். இங்கோ, இப்பொழுது கூட்டணி ஆரம்பித்தாகி விட்டது.

காங்கிரஸ் என்ற காதலன் திமுக, அதிமுக காதலிகளை மாறி, மாறி காதலிப்பது: காங்கிரஸின் அரசியல் பலம் குறையக் குறைய, 1970களிலிருந்தே அது, மாநில கட்சிகளுடன் ரகசிய உறவு வைத்துக் கொண்டுதான் இருந்தது. திமுகவும், அக்கள்ளக் காதலனை / காதலியை வைத்துக் கொண்டாலும், வைது-வதைத்தாலும் கொஞ்சி சரசமாடுவது சகஜமான விஷயமே. காங்கிரஸிலோ எப்பொழுதும் தலைவிகள்தாம்! ஆகவே தலைவன்களுக்கு இப்பொழுதும் பிரச்சினை. அத்தலைவியின் கண்பார்வை என்மேலே விழுமோ, தன்னை அழைப்பாளோ என்றுதான் ஒவ்வொரு தலைவனும் ஏங்கிக் கொண்டிருக்கிறான். வயதானாலும் கவலையில்லை இவ்விவகாரங்களில்.

பிஜேபி, நடுவிலே வந்த அழகி: புதியதற்கு என்றுமே மௌசு / கவர்ச்சி அதிகமாகத்தான் இருக்கும். கிடைத்தால் சந்தோஷம், கிடைக்காவிட்டால், இந்த பழம் கசக்கும் பாட்டுதான். இதை அனுபவித்ததில் திமுக, பாமக என்ற இருவர்களும் வல்லவர்கள் தாம். தெற்கில்தான், இந்த கதை என்றால் வடக்கில் கேட்கவே வேண்டாம். அங்கு மாயா என்ற கன்னி இந்த காதலனை ஆறுமாதம்-ஆறுமாதம் என்று கணக்க்கு வைத்துக் கொண்டாலும், ஆறுமாதம் அனுபவித்து, பலமுறை கழட்டிவிட்டாள். இருப்பினும் அவ்வப்போது, பழைய மோகம் வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கும். பாவம், இதில் ஒருமுறை ஒரு பிரம்மச்சாரி மூன்று கன்னிகளுடன் மாட்டிக் கொண்டு அவதிபட்டான். அந்த ஜெயா-மாயா-மம்தா பிடியிலிருந்து தப்பவே பெரும்பாடு பட்டான். போதாகுறைக்கு “பயங்கர ஜொல்லு பார்ட்டி” என்று வேறு சொல்லிவிட்டார்கள்!

இப்பொழுது சோனியாவிடம் காதல்: ஜெயலலிதா சோனியாவைப் பார்த்து பேசிவிட்டாராம். வந்து விட்டது ஊடல் கருணாநிதிக்கு! அதெப்படி தன்னுடைய சோனியாவிடம் பேசலாம்? போதாகுறைக்கு சம்பந்தம் பேசும் பேச்சுகள் வேறு வெளிவந்துக் கொண்டிருக்கின்றன! தாங்கவில்லைத் தலைவனுக்கு! காங்கிரஸ்-அ.தி.மு.க.வுக்கு இடையே உடன்பாடு ஏற்படுவதுபோன்ற தோற்றத்தை உருவாக்கியதே ஜெயலலிதாதான் என்று கருணாநிதி கூறியுள்ளார். வேடிக்கை என்னவன்றால், அத்தலைவன் இங்கிருக்க, தனயனோ ஏற்கெனவே தானும் சென்று பார்த்து பேசிவிட்டான்!

காதலில் தூது என்பதும் சகஜமே: “நவீன் சாவ்லா, ஜெயலலிதாவிற்கு சாதகமாக நடந்து கொண்டு விட்டார்’ என்ற ஒரு தோற்றத்தை நீங்கள் உருவாக்க முயல்வதாக, ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுள்ளாரே? இப்படி கேட்டதற்கு, கருணாநிதியின் பதில்: “அந்தத் தோற்றத்தை நான் உருவாக்கவில்லை. சாவ்லா இரண்டு முறை தனக்கு அழைப்பு அனுப்பினார் என்றும், தொலைபேசியில் அழைத்து தேர்தல் கமிஷன் வைர விழாவில் கலந்து கொள்ள கேட்டுக் கொண்டார் என்றும், தன்னை வரவேற்று முக்கியப் பிரமுகர்கள் அமரும் இடத்தில் அமரச் சொன்னார் என்றும் சொன்னவரே ஜெயலலிதா தான். அப்படியெல்லாம் கூறி, நவீன் சாவ்லா, ஜெயலலிதாவிற்கு சாதகமாக நடந்து கொண்டதைப் போன்றும், காங்கிரஸ் கட்சிக்கும், அ.தி.மு.க.,விற்கும் இடையே உடன்பாடு ஏற்படுவதைப் போன்றும் தோற்றத்தை உருவாக்கியதே ஜெயலலிதா தான்”.

தங்கபாலு என்ற தூதர் கூறுவது: திமுக, காங்கிரஸ் கூட்டணியைப் பிரிக்க சூழ்ச்சி நடக்கிறது. ஆனால் எங்களது உறவும், நட்பும் வலுவாகவே இருக்கிறது என்று கூறியுள்ளார் தங்கபாலு. ஆனால் தமிழகத்தில் காங்கிரஸ்-திமுக கூட்டணி 2004 ஆம் ஆண்டு தொடங்கி, அது இன்றும், அதைத் தொடர்ந்து நாளையும் ஒருவருக்கொருவர் நல்லுறவோடு – புரிதலோடு தொடர்கிறது, தொடரும் என்பதுதான் உண்மை. அகில இந்திய அளவில் சோனியாவோடு கருணாநிதியும், தமிழக அளவில் அவரோடு,  நானும் ஒருமித்த கருத்தோடு உள்ளன்போடு ஒன்றுபட்டு மிகச் சிறந்த கூட்டணியாக செயல்பட்டு வருகிறோம். எனவே எதிர்காலம் என்பது காங்கிரஸ்-திமுக, முஸ்லீம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய மகத்தான கூட்டணிக்கேயன்றி அதிமுக  போன்ற மற்றவருக்கு கிடையாது.

அரசியலில் காதல் ஜிஹாத்: காதலர் தினம் என்று இன்று பார்த்தால், இத்தகைய செய்திகள்தாம் உள்ளன. வேகமாக, மிகவும் பலமாக, அழுத்தமாக இத்தகைய அறிக்கைகள் வந்துக் கொண்டிருக்கின்றன. அரசியலே போராகத்தான் உள்ளது. அந்நிலையில், இக்காதல், சரசங்கள், உறவுகள், சல்லாபங்கள் முதலியவற்றை சேர்க்கும்போது, “லவ்-ஜிஹாத்” இதிலும் உள்ளதுபோலும்! அதே தீவிரவாதம். அதாவது பெற்றே தீருவோம், அடைந்தே தீருவோம் என்ற கொள்கை, கோட்பாடு, செயல்பாடு.