Archive for the ‘நரேந்திர மோடி’ Category

பால் தினகரன் நரேந்திர மோடியை சந்தித்தது – தீர்க்கதரிசன மாநாடு ஒழுங்காக நடக்கவேண்டும் என்பதாலா, மோடி ராஜாவாக வேண்டும் என்பதலா, ஏசுவின் ராஜ்யம் வரவேண்டும் என்ற ஆசையினாலா?

ஒக்ரோபர் 12, 2013

பால் தினகரன் நரேந்திர மோடியை சந்தித்தது – தீர்க்கதரிசன மாநாடு ஒழுங்காக நடக்கவேண்டும் என்பதாலா, மோடி ராஜாவாக வேண்டும் என்பதலா, ஏசுவின் ராஜ்யம் வரவேண்டும் என்ற ஆசையினாலா?

பால் தினகரன் நரேந்திர மோடியை சந்தித்தாராம்!

பால் தினகரன் நரேந்திர மோடியை சந்தித்தாராம்!

பால்தினகரன்நரேந்திரமோடியைசந்தித்தது: குஜராத் முதல்வரும், பா.ஜ., பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியை, பிரபல கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரன் சந்தித்தார். காந்தி நகரில் உள்ள மோடியின் அலுவலகத்தில் நடந்த இந்த சந்திப்பின் போது தேசிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன[1]. மோடியின் நலனுக்காகவும், குஜராத் மக்களுக்காகவும் பால் தினகரன் சிறப்பு பிரார்த்தனைகளை செய்தார். இந்த சந்திப்பின் போது, கல்வி, ஆன்மிகம் மற்றும் சமூக சேவையில் பால் தினகரன் ஆற்றி வரும் சேவைகளை மோடி வெகுவாக பாராட்டினார்[2].

தேசிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப் பட்டனவாம்!

தேசிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப் பட்டனவாம்!

பால்தினகரன்சொன்னதாகஉள்ளவை: “அந்த 15 நிமிட சந்திப்பு மிகவும் சுமுகமாக இருந்தது. அவர் என்னை வரவேற்ற விதம் மிகவும் அபரீதமாக இருந்தது. நான் அவரது காரியங்களுக்காகவும், நமது நாட்டிற்காகவும் வேண்டிக்கொண்டேன். அவரது வெற்றிகரமான கொள்கைகள் மற்றும் திட்டங்கள் மற்ற எல்லா மாநிலங்களிலும் எடுத்துச் செல்லப்படவேண்டும். நான் எந்த ஒரு பிரிவினையும் சேர்ந்தவன் இல்லை. மோடியிடம் எனக்கு எந்த வெறுப்பும் இல்லை. நாம் நமது தேசிய தலைவர்களை ஆதரிக்க வேண்டும். வாழ்க்கையில் எனக்கான குறிக்கோள் பிரார்த்தனையாகும். பொதுவாக நான் நமது தலைவர்களுக்காக பிராத்தனை செய்வேன்……….இப்பொழுது மோடி தேசிய தேர்தலின் பலிபீடத்தின் அருகில் உள்ளார். ஆகையால் நான் அவருக்காக பிரார்த்தனை செய்து கொண்டேன். தொடர்ந்து பிரார்த்தனை செய்வதாகவும் சொல்லியிருக்கிறேன்”, என்று பால் தினகரன் சொன்னார்[3].

தில்லியில் ஷீலா தீக்ஷித்தை சந்தித்தாராம்!

தில்லியில் ஷீலா தீக்ஷித்தை சந்தித்தாராம்!

ஏசுவின்ராஜ்யம்ஏற்படவேஜெபித்தேன்: கோயம்புத்தூரில் உள்ள காருண்ய பல்கலைக்கழகத்தின் வேந்தரும் ஆவர். மோடி பிரதம மந்திரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டப் பின்னர், முதன் முதலாக, ஒரு சிறுபான்மையின மதப்பிரச்சாரகர் சந்திப்பதாக உள்ளது. “பைபளில் ஆட்சி செய்கின்ற ராஜாக்களுக்காக ஜெபியுங்கள், என்றுள்ளதால் மோடிக்காக ஜெபித்ததாக” பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளார்[4] [Today I met with Shri Narendra Modi ji .Prayed with him to the Lord to bless his efforts for the people.Discussed national issues. As the Bible asks us to pray for the rulers so did I.]. மேலும் தொடர்கிறார், “மேலேயுள்ள புகைப்படம் குஜராத்தில் உள்ள அரங்கதினதாகும். அங்கு 2200 பேர் தீர்க்கதரிசன மாநாட்டில், தீர்க்கதரிசனமாக கடவுளிற்காகவும், நாட்டிற்காகவும், மக்களுக்காகவும், அவரது சாம்ராய்யம் அமைக்கக் கோரியும் ஜெபிக்க பயிற்சி கொடுக்கப்பட்டது,” [The photo in the Auditorium is in Gujarat where 2200 people are being trained in the Prophetic Conference to prophetically pray for God’s plan for the nation, the people and the ministries to build His kingdom . I am enjoying ministering and being with these saints who have sacrificially served the Lord. ACTS 2:17 IS HAPPENING!]. அது மிகவும் சக்தி வாய்ந்ததாகவும், சிறந்ததாகவும் இருந்தது. ………ஏற்படுகிறது. எவாஞ்சிலின் மற்றும் நான் இந்த செயின்டுகளுடன் ஆசிர்வதிக்கப்பட்டவராக உள்ளோம். [It was powerful and glorious. Acts 2:17 is happening.Evangeline and I are blessed being with these saints].

குஜராத்தில் நடத்தப் பட்ட தீர்க்கதரிசன மாநாடு

குஜராத்தில் நடத்தப் பட்ட தீர்க்கதரிசன மாநாடு

Paul Dinakaran prayed against BJP in 2009

மதசார்பற்ற சமூக விரோத சக்திகளிடமிருந்து காங்கிரஸ் இந்தியர்களைக் காப்பாற்றியதா என்று பால்தான் சொல்லவேண்டும்!

பால் தினகரின் தேர்தல் ஜெபிப்புகள் மற்றும் தீர்க்க தரிசனங்கள்: 2008 தேர்தல்களிலும் காங்கிரஸுக்கு ஆதரவாக உள்ளது[5]. Paul Dinakaran prophecy about elections2009 இவரது தீர்க்க தரிசனம் என்றுள்ளது[6]. அதில் சோனியா காங்கிரஸைத்தான் ஆதரிக்கப்பட்டுள்ளது[7]. மன்மோஹன் சிங் சமாதானத்தை கொண்டுவருவார் என்றுள்ளது[8]. இணைதளப் படத்தில் பிரதானமாக மன்மோஹன் சிங், சோனியா, கருணாநிதி, லல்லு பிரசாத் யாதவ், மாயாவதி என்றுதான் உள்ளது.

கந்நாகத்தில் பிஜேபிக்கு எதிரான பிரச்சாரம்!

கந்நாகத்தில் பிஜேபிக்கு எதிரான பிரச்சாரம்!

ஆகவே, இப்பொழுது 2013ல் மோடிக்காக ஜெபிக்கிறேன் என்றால், அவ்வாறே, தனது இணைதளத்தில் போடுவாரா அல்லது வெறுமனே, “இன்று நான் மோடிஜியை சந்தித்தேன்” என்று பேஸ்புக்கில் போட்டு, சோனியாவை ஆதரிப்பாரா?

உபியிலும் பிஜேபிக்கு எதிரான பிரச்சாரம்!

உபியிலும் பிஜேபிக்கு எதிரான பிரச்சாரம்!

பிறகு மோடியை ஏன் பார்க்க வேண்டும்?

© வேதபிரகாஷ்

12-10-2013