Archive for the ‘ரஹ்மத் நிஷா’ Category

தனிப்பட்ட நபர்களின் விஷயங்களும், ஊடகங்களின் செயல்பாடுகளும்!

செப்ரெம்பர் 17, 2010

தனிப்பட்ட நபர்களின் விஷயங்களும், ஊடகங்களின் செயல்பாடுகளும்

மாஜிஅமைச்சர்மருமகள்தற்கொலை : தூண்டியதாகமகன்மீதுவழக்கு[1]: மாஜி அமைச்சர் அன்வர் ராஜாவின் மருமகள் தற்கொலை புகாரில், “அவரது மகன் தூண்டியதாக,’ போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ராமநாதபுரத்தை சேர்ந்த அ.தி.மு.க., மாஜி அமைச்சர் அன்வர் ராஜாவின் மகன் முஜ்பூர் ரகுமான் ராமநாதபுரத்தில் பல்பொருள் அங்காடி வைத்துள்ளார்[2]. இவருக்கும், ராமாநதபுரம் ஈசா பள்ளிவாசலை சேர்ந்த ரஹ்மத் நிஷா (24) என்பவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் 2006ல் திருமணம் நடந்தது.

குடும்ப சச்சரவு, வரதட்சிணை புகார்: இடையில் குடும்ப பிரச்னைகள் இருந்து வந்த நிலையில், ரகமத் நிஷா நேற்றிரவு ராமநாதபுரத்தில் உள்ள அன்வர் ராஜாவின் வீட்டில் விஷம் குடித்து கவலைக்கிடமான நிலையில் கிடந்தார். பூச்சிக்கொல்லி மருந்து சாப்பிட்டு மயக்கமடைந்தார்[3] என்றும் சொல்லப்பட்டது. உடனடியாக அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிறகு, நேற்று ரஹ்மத் நிஷா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக[4] அவரது குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் வரதட்சணை தராததால் ரகமத் அடித்துக் கொல்லப்பட்டதாக ரஹ்மத் நிஷாவின் அண்ணன் ஜமீன் கேணிக்கரை போலீசில் புகார் செய்தார்.

அன்வர்-ராஜா.முன்னாள்-அமைச்சர்

அன்வர்-ராஜா.முன்னாள்-அமைச்சர்

அன்வர் ராஜாவின் மகனை கைது செய்ய போராட்டம்: இதைத்தொடர்ந்து இறந்தவரின் சடலத்தை, பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்றனர். “குற்றவாளியை கைது செய்யக்கோரி,’ ரஹ்மத் நிஷாவின் உறவினர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். கைது செய்தாலொழிய பிணத்தை வாங்க மாட்டோம் என்று போராட்டமும் நடத்தினர். இதைத்தொடர்ந்து, மாஜி அமைச்சர் அன்வர் ராஜாவின் மகன், முஜ்பூர் ரஹ்மான் மீது 306 பிரிவின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

ஜெயாவின்-காலில்-விழுந்து-வணங்கும்-அன்வர்ராஜா

ஜெயாவின்-காலில்-விழுந்து-வணங்கும்-அன்வர்ராஜா

முன்பு லெட்டர்பேடுசர்ச்சையில்சிக்கிய அன்வர் ராஜா[5]: அரசு ‘லோகோ’ மற்றும் தலைமை செயலகத்தின் முகவரி அச்சிட்ட ‘லெட்டர் பேடு’ உபயோகிப்பதாக அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா சர்ச்சையில் சிக்கி உள்ளார். அ.தி.மு.க., ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் அன்வர் ராஜா. சிறுபான்மை பிரிவு மாநில செயலராகவும், ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளராகவும் தற்போது உள்ளார். ராமநாதபுரத்தில் சில நாட்களுக்கு முன்பு துவங்கப்பட்ட, உள்ளூர் இதழ் ஒன்றில், இவரது வாழ்த்து மடல் இருந்தது. இதில் , தமிழக அரசு ‘லோகோ’ மற்றும் தலைமை செயலக முகவரியுடன் அச்சிடப்பட்டிருந்தது.

அன்வர்-ராஜா

அன்வர்-ராஜா

சன்-டிவி முந்தி கொண்டது: சன்-டிவி, நேற்று மாகையிலிருந்தே (16-09-2010), இதைப் பற்றிய செய்தியை ஒளிபரப்பிக் கொண்டிருந்தது. மாஜி அதிமுக அமைச்சர் என்பதனால், முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால் அல்லது, முஸ்லீம் என்பதனால், மற்ற ஊடகக் காரர்கள் அடக்கி வாசித்தார்களா என்று தெரியவில்லை.

இஸ்லாத்தில் வரதட்சிணை உண்டா? என்று இப்படி கேள்விகள் கேட்டுக் கொண்டு ஆராய்ச்சியில் இறங்கவில்லை. ஆனால், சில குறிப்படவர்களின் கொலை, கொள்ளை, திருட்டு என்றால், “விளாவாரியாக” விளக்கமாக செய்திகள் வரும். ரஜினியின் மகளின் திருமணம் என்றால், தேவையில்லாத பரபரப்பு, ஒளிபரப்புகள். ஆனால், மற்றவர்களின் திருமணம் என்றால், அதை விவரமாகக் காட்டுவதில்லை, ஏன்?

தனிப்பட்ட நபர்களின் விஷயங்களும், ஊடகங்களின் செயல்பாடுகளும்: இருப்பினும் ஊடகங்களின் போக்கு விசித்திரமாகவே உள்ளது. தனி அபர்களின் விஷயங்களைப் பற்றி ஊடகங்கள் எந்த அளவிற்கு செய்திகளை பிடித்துக் கொண்டு வந்து ஊடகங்களில் சேர்த்து பரப்புவர் அல்லது வெளியே வரமுடியாதபடி மறைத்து விடுவர் என்பது, அவர்களின் கைகளில் தான் உள்ளது. பிஷப் விஷயத்திலும், ஏதோ கொஞ்சநேரம் சாலை மறியல் என்று ஈடுபட்டாலும், அதைப் பற்றி பிறகு மூச்சுக் கூடவிடவில்லை. மற்ற விஷயத்திற்கு எல்லாம், நாள் முழுவதும், திரும்ப-திரும்ப ஒளிபரப்பு செய்யும் டைம்ஸ்-நௌ இந்த விஷயத்தில் அடங்கி விட்டது வேடிக்கையாக இருந்தது. இதே நித்யானந்தா விஷயத்தில் இன்று கூட, நக்கீரன் உற்சாகமாக, ஊக்குவிக்கும் வகையில், தூண்டி விடும் முறையில், தலைப்புகள் கொடுத்து வியாபாரம் செய்து வருகிறது. ஆனால், அவர்களது ஒழுங்கீனங்கள், அசிங்கங்கள், முதலியவை வரும்போது அடக்கி வாசித்து, அமுக்கப் பார்க்கின்றனர். இது ஏன்?


[1] தினமலர், மாஜிஅமைச்சர்மருமகள்தற்கொலை : தூண்டியதாகமகன்மீதுவழக்கு, செப்டம்பர் 17, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=86784

[2] தட் ஈஸ் தமிள், முன்னாள்அதிமுகஅமைச்சர்அன்வர்ராஜாமருமகள்தற்கொலை, வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 17, 2010, http://thatstamil.oneindia.in/news/2010/09/17/former-admk-minister-anwar-raja-daughter-in-law.html

[3] தினமலர், மாஜிஅமைச்சர்மருமகள்தற்கொலை, செப்டம்பர் 17, 2010,
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=86305

[4] http://www.dinakaran.com/LN/latest-breaking-news.aspx?id=6900

[5] http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=17958