Archive for the ‘குஷ்புவை வரவேற்கும் இளங்கோவன்’ Category

குஷ்பு திமுகவில், சேகரும் துடிக்கிறாராம்!

மே 15, 2010

குஷ்பு திமுகவில், சேகரும் துடிக்கிறாராம்!

கொள்கை பிடித்ததால் தி.மு.க.,வில் இணைந்தேன்: குஷ்பு
மே 15,2010,00:00  IST
Front page news and headlines today

சென்னை :”மக்களுக்கு சேவை செய்யும் கட்சியில் தி.மு.க., தான் சிறப்பாக உள்ளது. தி.மு.க.,வின் கொள்கை பிடித்ததால், அக்கட்சியில் சேர்ந்தேன்,” என நடிகை குஷ்பு கூறினார்.

சென்னை அறிவாலயத்தில் நேற்று மாலை முதல்வர் கருணாநிதியை சந்தித்து, நடிகை குஷ்பு, தி.மு.க.,வில் இணைந்தார்.

பின்னர் முதல்வர் கருணாநிதி கூறும்போது, ”குஷ்பு தி.மு.க.,வில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். அவர் முற்போக்கான கொள்கையுடையவர் என்பதை அறிவேன். திராவிட இயக்க கொள்கைகளில் ஆழ்ந்த பற்று இருந்ததால் தான், ‘பெரியார்’ திரைப்படத்தில் குஷ்புவால், மணியம்மை கதாபாத்திரத்தில் சிறப்பாக நடிக்க முடிந்தது. தி.மு.க.,வின் மகளிர் அணியினர், கட்சி வளர்ச்சிக்காக எத்தகைய பணிகளை ஆற்றுவார்களோ, அத்தகைய பணிகளை குஷ்புவும் ஆற்றுவார்,” என்றார்.

நிருபர்களின் கேள்விகளுக்கு முதல்வர் அளித்த பதில்:

குஷ்புவுக்கு ராஜ்ய சபா எம்.பி., பதவி கொடுக்கப்படுமா?

நானோ, பேராசிரியரோ, ஸ்டாலினோ, எவரும் ஒரு பொறுப்பு கொடுக்கப்பட்ட பிறகு தான் கட்சியிலே எங்களை இணைத்துக் கொண்டோம் என்று இல்லை. எங்களுடைய உழைப்பையும், ஆர்வத்தையும் பார்த்து, கட்சியில் உள்ளவர்கள் எங்களை இந்த இடங்களில் அமர்த்தியிருக்கின்றனர்.

காங்கிரஸ் கட்சியில் குஷ்பு சேரப்போவதாக செய்தி வந்திருந்ததே?
பேப்பரில் தானே, (சிரிப்பு) காங்கிரஸ் கட்சியும், தி.மு.க.வும் தான் இப்போது கூட்டணியிலே இருக்கிறதே!

குஷ்புவை திடீரென்று கட்சியில் சேர்த்துள்ளது பற்றி?
மாலை 4 மணிக்கு சொன்னதால், உங்களுக்கு திடீரென்று தெரிகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே அவர் கட்சியில் சேரும் முயற்சியில் ஈடுபட்டு அதை பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம்.

தி.மு.க.,வில் குஷ்பு சேர வேண்டும் என நிர்பந்தம் செய்யப்பட்டதா?
யாரையும் நிர்பந்தப்படுத்தி கட்சியில் சேர்க்கும் கேவலமான ஒரு முறையை நாங்கள் கடைபிடிப்பதில்லை. குஷ்புவும் அந்த முறைக்குப் பணியக்கூடியவர் அல்ல. விரும்பி வந்து சேர்ந்திருக்கிறார்.

தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து குஷ்புவை போட்டியிட வைப்பீர்களா?
அப்படி ஏதும் ஐடியா இல்லை.இவ்வாறு கருணாநிதி பேசினார்.

நடிகை குஷ்பு நிருபர்களிடம் கூறியதாவது:மக்களுக்கு சேவை செய்யும் கட்சிகளில் தி.மு.க., தான் சிறப்பாகச் செயல்படுகிறது. அதன் கொள்கை பிடித்திருந்ததால் சேர்ந்திருக்கிறேன். கட்சியின் அடிமட்ட தொண்டர்களுக்கும், அவர்களின் கருத்தை எடுத்துச் சொல்ல முழு சுதந்திரம் கொடுக்கும் கட்சி தி.மு.க., தான். நடிப்பு எனது தொழில். தொடர்ந்து ‘டிவி’யிலும், சினிமாவிலும் நடிப்பேன். தி.மு.க., கட்சிக்கு முழு ஈடுபாட்டோடு உழைப்பேன்.காங்கிரஸ் மீது பற்று இருக்கிறது என்று தான் சொன்னேன்; அதில், சேரப் போகிறேன் என்று நான் சொல்லவில்லை.இவ்வாறு குஷ்பு கூறினார்.

குஷ்புவை வரவேற்கிறேன்!-ஈவிகேஎஸ் இளங்கோவன்

திங்கள்கிழமை, மே 3, 2010, 13:41[IST]

http://thatstamil.oneindia.in/news/2010/05/03/evks-elangovan-welcomes-kushboo.html

நடிகை குஷ்பு கவர்ச்சியானவர், நல்ல புத்திசாலி… அவரது வருகை காங்கிரஸ் கட்சிக்கு மேலும் நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும் என்று காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். மும்பையில் வசித்தபோது குஷ்பு குடும்பத்தினர் காங்கிரசில் இருந்தனராம். தனது படுக்கையறையில் ராஜீவ் காந்தி படங்கள் வைத்திருந்ததாகவும் அவரின் தீவிர ரசிகை நான் என்றும் குஷ்பு கூறியிருந்தார். இதையடுத்து அவர் காங்கிரஸ் கட்சியில் சேருவார் என்ற எதிர்பார்ப்பு மேலும் அதிகமாகியுள்ளது. சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் குஷ்புவின் வருகை காங்கிரசுக்கு பலம் சேர்ப்பதாக அமையும் என்று அக்கட்சி தலைவர்கள் கருதுகிறார்கள். தேர்தல் பிரசாரத்துக்கும் அவர் உதவுவார் என்று நம்புகின்றனர். குஷ்பு காங்கிரசில் இணைவது பற்றி தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவரான இளங்கோவனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: குஷ்பு காங்கிரசில் சேர்ந்தால் அவரை வரவேற்கும் முதல் ஆளாக நான் இருப்பேன். முற்போக்கு சிந்தனையாளர்களுக்கும் சுதந்திரமாக பேசுபவர்களுக்கும் காங்கிரஸ் சிறந்த இடம்.குஷ்பு போல் புத்திசாலித்தனமான பெண்கள் சமூக பிரச்சனைகள் சம்பந்தமான தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கு காங்கிரஸ்தான் சிறந்த இடம். பொதுவாக நடிகைகள் கவர்ச்சியாக இருப்பார்கள். ஆனால் குஷ்பு கவர்ச்சியும், புத்திகூர்மையும் உள்ளவர் என்றார்.

தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் சுதர்சனம் கூறுகையில், நடிகை குஷ்பு புத்திசாலித்தனமான பெண். காங்கிரசில் அவர் சேருவதை முழு மனதோடு வரவேற்கிறேன். குஷ்பு பிரபலமானவர். அவர் காங்கிரசில் இணைவது கட்சி வளர்ச்சிக்கு உதவும். சட்டமன்ற தேர்தலுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

கோபண்ணா கோபம்: ஆனால், தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளில் ஒருவரான கோபண்ணா குஷ்புவின் கருத்தை விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், திருமணத்திற்கு முன்பு உறவு கொள்வதில் தவறில்லை என்று கூறுவதற்கு நடிகை குஷ்புவுக்கு இருக்கும் உரிமையை உச்ச நீதிமன்றம் உறுதிபடுத்தியுள்ளது. சமூகத்தில் சில மரபுகள், பண்பாட்டின் அடிப்படையில் இப்படித்தான் வாழ வேண்டும் என்று கூறுகின்றன. எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று கூறுபவர்களை சட்டம் ஏற்றுக் கொண்டாலும் அந்த கருத்தை சமூகம் ஏற்றுக் கொள்ளாது என்றார்.

நான் ராஜீவ் ரசிகை- குஷ்பு

மும்பையில் நான் வசித்த போது காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கம் இருந்தது. எனது குடும்பத்தினர் காங்கிரசில் இருந்தனர். என் படுக்கை அறையில் ராஜீவ்காந்தி படங்களைத்தான் வைத்திருந்தேன். காங்கிரஸ் தலைவர்கள் சுசில்குமார் ஷிண்டே, சுனில்தத் போன்றோரை அப்போது சந்தித்து இருக்கிறேன். நான் ராஜீவ்காந்தியின் தீவிர ரசிகை. எனது கணவர் சுந்தரோ பிரியங்கா காந்தியின் ரசிகர். சமூக சேவை பணிகளில் தொடர்ந்து ஈடுபடுவேன்…” என்றார் குஷ்பு.

ஞாயிற்றுக்கிழமை, மே 2, 2010, 10:09[IST]

http://thatstamil.oneindia.in/movies/heroines/2010/05/02-kushboo-sex-tamilnadu-politics-rajiv-gandhi.html

அரசியலில் ஈடுபட ஆர்வத்துடன் உள்ளேன். எங்கள் குடும்பமே காங்கிரஸ் குடும்பம். என் படுக்கை அறையில் ராஜீவ் படங்களைத்தான் வைத்திருப்பேன், என்றார் நடிகை குஷ்பு. திருமணத்துக்கு முந்தைய செக்ஸ் பற்றி கருத்து வெளியிட்டு பெரும் சர்ச்சையில் சிக்கினார் நடிகை குஷ்பு. அவர் மீது வழக்குகள் தொடரப்பட்டன. தற்போது அவருக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இதனால் மகிழ்ச்சியில் இருக்கிறார். லண்டனுக்கு குடும்பத்தோடு ஓய்வுக்கு சென்ற அவர் தற்போது சென்னை திரும்பியுள்ளார்.

குஷ்புவின் படுக்கையறையில்………………….!

மே 4, 2010

குஷ்புவை வரவேற்கிறேன்!-ஈவிகேஎஸ் இளங்கோவன்

திங்கள்கிழமை, மே 3, 2010, 13:41[IST]

http://thatstamil.oneindia.in/news/2010/05/03/evks-elangovan-welcomes-kushboo.html

நடிகை குஷ்பு கவர்ச்சியானவர், நல்ல புத்திசாலி… அவரது வருகை காங்கிரஸ் கட்சிக்கு மேலும் நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும் என்று காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். மும்பையில் வசித்தபோது குஷ்பு குடும்பத்தினர் காங்கிரசில் இருந்தனராம். தனது படுக்கையறையில் ராஜீவ் காந்தி படங்கள் வைத்திருந்ததாகவும் அவரின் தீவிர ரசிகை நான் என்றும் குஷ்பு கூறியிருந்தார். இதையடுத்து அவர் காங்கிரஸ் கட்சியில் சேருவார் என்ற எதிர்பார்ப்பு மேலும் அதிகமாகியுள்ளது. சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் குஷ்புவின் வருகை காங்கிரசுக்கு பலம் சேர்ப்பதாக அமையும் என்று அக்கட்சி தலைவர்கள் கருதுகிறார்கள். தேர்தல் பிரசாரத்துக்கும் அவர் உதவுவார் என்று நம்புகின்றனர். குஷ்பு காங்கிரசில் இணைவது பற்றி தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவரான இளங்கோவனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: குஷ்பு காங்கிரசில் சேர்ந்தால் அவரை வரவேற்கும் முதல் ஆளாக நான் இருப்பேன். முற்போக்கு சிந்தனையாளர்களுக்கும் சுதந்திரமாக பேசுபவர்களுக்கும் காங்கிரஸ் சிறந்த இடம்.குஷ்பு போல் புத்திசாலித்தனமான பெண்கள் சமூக பிரச்சனைகள் சம்பந்தமான தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கு காங்கிரஸ்தான் சிறந்த இடம். பொதுவாக நடிகைகள் கவர்ச்சியாக இருப்பார்கள். ஆனால் குஷ்பு கவர்ச்சியும், புத்திகூர்மையும் உள்ளவர் என்றார்.

தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் சுதர்சனம் கூறுகையில், நடிகை குஷ்பு புத்திசாலித்தனமான பெண். காங்கிரசில் அவர் சேருவதை முழு மனதோடு வரவேற்கிறேன். குஷ்பு பிரபலமானவர். அவர் காங்கிரசில் இணைவது கட்சி வளர்ச்சிக்கு உதவும். சட்டமன்ற தேர்தலுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

கோபண்ணா கோபம்: ஆனால், தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளில் ஒருவரான கோபண்ணா குஷ்புவின் கருத்தை விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், திருமணத்திற்கு முன்பு உறவு கொள்வதில் தவறில்லை என்று கூறுவதற்கு நடிகை குஷ்புவுக்கு இருக்கும் உரிமையை உச்ச நீதிமன்றம் உறுதிபடுத்தியுள்ளது. சமூகத்தில் சில மரபுகள், பண்பாட்டின் அடிப்படையில் இப்படித்தான் வாழ வேண்டும் என்று கூறுகின்றன. எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று கூறுபவர்களை சட்டம் ஏற்றுக் கொண்டாலும் அந்த கருத்தை சமூகம் ஏற்றுக் கொள்ளாது என்றார்.

நான் ராஜீவ் ரசிகை- குஷ்புஞாயிற்றுக்கிழமை, மே 2, 2010, 10:09[IST]

அரசியலில் ஈடுபட ஆர்வத்துடன் உள்ளேன். எங்கள் குடும்பமே காங்கிரஸ் குடும்பம். என் படுக்கை அறையில் ராஜீவ் படங்களைத்தான் வைத்திருப்பேன், என்றார் நடிகை குஷ்பு. திருமணத்துக்கு முந்தைய செக்ஸ் பற்றி கருத்து வெளியிட்டு பெரும் சர்ச்சையில் சிக்கினார் நடிகை குஷ்பு. அவர் மீது வழக்குகள் தொடரப்பட்டன. தற்போது அவருக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இதனால் மகிழ்ச்சியில் இருக்கிறார். லண்டனுக்கு குடும்பத்தோடு ஓய்வுக்கு சென்ற அவர் தற்போது சென்னை திரும்பியுள்ளார்.

வெள்ளிக்கிழமை நிருபர்களை சந்தித்தார் குஷ்பு. அப்போது அவர் கூறியதாவது: கற்பு விஷயத்தில் நான் தவறாக ஏதும் பேசவில்லை. உண்மையைத்தான் பேசினேன். அதற்காக நான் சந்தித்த போராட்டங்கள் கொஞ்சமல்ல. ஆனால் இனி என் மனதில் பட்டதை தொடர்ந்து தைரியமாகப் பேசுவேன். எனக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். எனவே என்னிடம் இருந்து பொறுப்பற்ற அறிக்கைகள் வராது. சிந்தனைகளும் எழாது. எனது நோக்கங்கள் பெண்கள் சம்பந்தப்பட்டதாகவே இருக்கும். அவர்களுக்காக குரல் கொடுப்பேன்.

பரந்த மனப்பான்மை கொண்ட தமிழ் ஆண்கள்: தமிழ் ஆண்கள், பெண்களுக்கு எதிரானவர்கள் அல்ல. அவர்கள் ரொம்ப பரந்த மனப்பான்மை உள்ள வர்கள். பெண்களை மதிக்க தெரிந்தவர்கள். மரியாதை கொடுப்பவர்கள். தமிழ் பெண்கள் மனதில் இருப்பதை வெளிப்படையாக பேசுவது இல்லை. எதற்கும் பயப்படக்கூடாது. மனதில் இருப்பதை ஆணித்தரமாக சொல்ல வேண்டும்.

அரசியலில் ஈடுபடும் எண்ணம் இருக்கிறது. ஆனால் எந்த கட்சியில் சேருவது என்று இன்னும் முடிவு செய்யவில்லை. மும்பையில் நான் வசித்த போது காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கம் இருந்தது. எனது குடும்பத்தினர் காங்கிரசில் இருந்தனர். என் படுக்கை அறையில் ராஜீவ்காந்தி படங்களைத்தான் வைத்திருந்தேன். காங்கிரஸ் தலைவர்கள் சுசில்குமார் ஷிண்டே, சுனில்தத் போன்றோரை அப்போது சந்தித்து இருக்கிறேன். நான் ராஜீவ்காந்தியின் தீவிர ரசிகை. எனது கணவர் சுந்தரோ பிரியங்கா காந்தியின் ரசிகர். சமூக சேவை பணிகளில் தொடர்ந்து ஈடுபடுவேன்…” என்றார் குஷ்பு.