Archive for the ‘முதுநிலை கோவில் பணியாளர்கள் சங்கம்’ Category

செம்மொழி மாநாடு, இந்து அறநிலையத்துறை, கோவில் ஊழியர்கள், பக்தி………….

ஜூன் 7, 2010

செம்மொழி மாநாடு, இந்து அறநிலையத்துறை, கோவில் ஊழியர்கள், பக்தி………….

நாத்திகர்களின் கைகளில் கோவில்கள், கோவில் சொத்துகள்: இவை கொள்ளையடிக்கப் படுவது, தெரிந்த விஷயமே, ………

இத்தனை கோவில் குழுக்குகள், சங்கங்கள், பேரவைகள்…: இந்து ஆலய பாதுகாப்பு குழு, தமிழ்நாடு திருக்கோயில் பக்தர்கள் பேரவை, முதுநிலை கோவில் பணியாளர்கள் சங்கம்…………………இப்படி இத்தனை குழுக்குகள், சங்கங்கள், பேரவைகள்……………….எல்லாம் இருப்பது கண்டு பூரிக்கிறது, புல்லரிக்கிறது…………………பிறகு, எதற்கு கோவில் கொள்ளை? விக்கிரங்கள் திருட்டு……………எல்லாம்?

இவர்கள் எல்லோரும் நாத்திகர்களா, இந்துக்களா? டாஸ்மார்க் கடைக்கு வேலைக்கு வருகிறார்போல, கோவில்களில் கண்ட பொறுக்கிகள், ரௌடிகள், காவாலிகள், ………………..இப்படி ஊழியர்கள், சேவகர்கள், குருக்கள்……………….என்று வந்து நுழைந்து விட்டால், எப்படி கோவில்கள் ஒழுங்காக நடக்கும்? முதலில், இவஎகள் எல்லோருமே இந்துக்களா என்ற சந்தேகமே வருகின்றது.

60 ஆண்டுகள் கால நாத்திக, திராவிட, நவீன ஔரங்கசீப்புகள், மாலிக்காஃபூர்கள் கொள்ளையாட்சி: ஏற்கெனவே, இந்த 60 ஆண்டுகள் கால நாத்திக, திராவிட, நவீன ஔரங்கசீப்புகள், மாலிக்காஃபூர்கள் கொள்ளைகளில், ஏராளமன கோவில்கள் சிதிலமடைந்துள்ளன, சிலைகள் திருடிபோயுள்ளன. சொத்துகள்  பறிபோயுள்ளன.

பக்தியை பரப்பி கோயில்களையும் மக்களையும் பாதுகாக்க வேண்டும்’

தினமலர், பதிவு செய்த நாள் : ஜூன் 07,2010,04:47 IST

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=14405

அம்பாசமுத்திரம் (06-06-2010): பக்தியை பரப்பி கோயிலையும், மக்களையும் பாதுகாக்க வேண்டும் என பக்தர்கள் பேரவையினரை தமிழ்நாடு திருக்கோயில் பக்தர்கள் பேரவை ஸ்தாபகர் சண்முகநாதன் கேட்டு கொண்டார். அம்பாசமுத்திரத்தில் காசிநாத சுவாமி கோயில் பக்தர்கள் பேரவை சார்பில் கூரத்தாழ்வார் 1000வது ஜெயந்தி விழா, கிருஷ்ண தேவராயர் பட்டமேற்ற 500வது ஆண்டு விழா, தஞ்சாவூர் பெரிய கோயிலின் 1000வது ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது.

இந்து ஆலய பாதுகாப்பு குழு, தமிழ்நாடு திருக்கோயில் பக்தர்கள் பேரவை: அம்பாசமுத்திரம் மூத்த வக்கீல் ராமநாதன் தலைமை வகித்தார். இந்து ஆலய பாதுகாப்பு குழு அம்பை தாலுகா செயலாளர் ஆறுமுகம் இறைவணக்கம் பாடினார். காசிநாத சுவாமி கோயில் பக்தர்கள் பேரவை அமைப்பாளர் சுடலையாண்டி வரவேற்றார். தமிழ்நாடு திருக்கோயில் பக்தர்கள் பேரவை ஸ்தாபகர் சண்முகநாதன் பேசுகையில், “”ஒவ்வொருவரும் ஆலய பாதுகாப்பு பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும். பக்தியை பரப்ப வேண்டும். கோயிலையும், மக்களையும் பாதுகாக்க வேண்டும். தேசம், மதம், தர்மம், கோயில்களை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வை சமுதாயத்திற்கு ஏற்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கு தேவாரத்தை கற்று கொடுக்க வேண்டும். அவர்களுக்கு வழிபாட்டு முறைகளை விளக்கி கூற வேண்டும். இந்துக்களின் பலகீனத்தை ஒற்றுமை மூலம் போக்க வேண்டும். கைலாய மலை நமக்கு கிடைக்க வேண்டும்” என்றார். முன்னதாக இந்து ஆலய பாதுகாப்பு குழு மாநில அமைப்பாளர் சுதாகரன், மாநில செயலாளர் சங்கரநாராயணன் ஆகியோர் பேசினர். இந்து ஆலய பாதுகாப்பு குழு மாநில செயல் தலைவர் கணபதி சந்தானம் உட்பட பக்தர்கள் பேரவையினர் பலர் கலந்து கொண்டனர். இந்து ஆலய பாதுகாப்பு குழு அம்பை தாலுகா தலைவர் நடராஜன் நன்றி கூறினார்.

முதுநிலை கோவில் பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம்
பதிவு செய்த நாள் : ஜூன் 07,2010,01:52 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=14010

முதுநிலை கோவில் பணியாளர்கள் சங்கம்: சென்னை : “கோவை செம்மொழி மாநாட்டில், தமிழ்நாடு முதுநிலை கோவில் பணியாளர்கள் சங்கத்தினர் குடும்பத்தினருடன் 20 ஆயிரம் பேர் கலந்து கொள்வர்’ என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதுநிலை கோவில் பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. மாநிலத்தலைவர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். ராமமூர்த்தி வரவேற்றார். மாநில பொதுச்செயலர் நல்லத்தம்பி, ரவிக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

போராட்டம், பேரணி: கோவையில் நடக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், முதுநிலை கோவில் பணியாளர்கள் குடும்பத்தினருடன் 20 ஆயிரம் பேர் கலந்து கொள்வர். ஊதிய உயர்வு கேட்டு விரைவில் சென்னையில் பேரணி நடத்தப்படும். தற்போது வழங்கப்படும் மாத ஓய்வூதியம் 800 ரூபாய் மிகவும் குறைவாக இருக்கிறது. தற்கால விலைவாசிகளை கருத்தில் கொண்டு, கோவில் பணியாளர்களுக்கு அந்தந்த கோவில்களிலேயே பெறும் வகையில், ஒரு மாத அடிப்படை ஊதியத்தை ஓய்வூதியமாக வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு போலவே பணிக்கொடை வழங்க வேண்டும். தினக்கூலி மற்றும் தொகுப்பூதியப் பணியாளர்களை நிரந்தரப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.