Archive for the ‘தொல்’ Category

திருமணம் செய்வதாக ஏமாற்றி விட்டார்: திருமாவளவன் மீது போலீஸ் கமிஷனரிடம் பெண் புகார்!

ஓகஸ்ட் 25, 2013

திருமணம் செய்வதாக ஏமாற்றி விட்டார்: திருமாவளவன் மீது போலீஸ் கமிஷனரிடம் பெண் புகார்!

 

புகார் கொடுத்த பெண்ணுடன் திருமாவளவன்

புகார் கொடுத்த பெண்ணுடன் திருமாவளவன்

விளம்பர ஆசைக் கொண்ட திருமாவளவன்: சிறுவயது முதலே, திருமாவளவனுக்கு விளம்பர ஆசை உண்டு. மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்று டீக்காக உடையணிந்து கொண்டு செல்வார். தன்னிடம் கவன இல்லை என்றால் பிகு செய்து கொள்வார். ஒருமுறை, சோனியாவுடன் மேடையில் இருந்தபோது, புகைப்படம் எடுக்கும் போது, ஓரங்கட்டப் பட்டபோது, முகத்தில்/முகத்தைக் காட்டிக் கொண்டார். புரிந்து கொண்ட சோனியா அருகில் அழைத்து புகைப்படம் எடுக்க சொன்னார். பிறகு சினிமா ஆசையும் வந்தது. விளம்பரத்தில் தாராளமாக தன் புகைப்படம் உபயோகப்படுத்தப் பட்டது. அதுமட்டுமல்லாது, கிராமப் புறங்களில், சிவாஜி போல பேனர்கள், கட்-அவுட் வைக்கப்பட்டன. இப்பொழுது இந்த புகாரில் சிக்கியுள்ளார். தினமலர் பெயரைக் குறிப்பிடாமல் செய்தியை வெளியிட்டது[1].

 

நடிகரான திருமாவளவன்

நடிகரான திருமாவளவன்

திருமணம்செய்வதாகஏமாற்றிவிட்டார்: திருமாவளவன்மீதுபோலீஸ்கமிஷனரிடம்பெண்புகார்[2]: கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு 24-08-2012 அன்று மதியம் 33 வயது மதிக்கத்தக்க கவிதா என்ற பெண் வந்தார். அவர் போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது: “நான் கோவையில் உள்ள கவிதா தியேட்டர் உரிமையாளரின் மகள். எனக்கும் செந்தில் என்பவருக்கும் திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டோம். அதன் பின்னர் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறேன். குழந்தையை தத்தெடுப்பது தொடர்பாக டெல்லி சென்ற போது திருமாவளவனுடன் நட்பு ஏற்பட்டது. அவர் என்னை திருமணம் செய்வதாக கூறியிருந்தார். கோவை ரேஸ் கோர்சில் உள்ள எனது வீட்டுக்கு வந்து செல்வார். இந்த நிலையில் சில காரணங்களைக் கூறி என்னை திருமணம் செய்ய முடியாது என்று கூறுகிறார். இதனால் நான் ஏமாற்றம் அடைந்துள்ளேன்[3]. மேலும் எனக்கு மிரட்டல்களும் வருகிறது. எனவே எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுகிறேன். எனது சொத்துக்களை திருமாவளவனின் பெயரைக்கூறி விஜயகுமார், சீனிவாசன், கார்த்தி, ஜெயந்தி ஆகியோர் ஆக்கிரமித்துக் கொண்டனர். இதனால் மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது”, மேற்கண்டவாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது[4].

 

சினிமாக்காரர்களுடன் திருமாவளவன்

சினிமாக்காரர்களுடன் திருமாவளவன்

விடுதலைசிறுத்தைகள்கட்சிஅறிக்கைஅபாண்டமானஅவதூறு: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை[5]: கோவை மாநகர கமிஷனரிடம் கவிதா என்பவர் கொடுத்த புகாரில் எந்த இடத்திலும்  திருமாவளவன் பெயரை கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பேட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பற்றியும், திருமாவளவன் பற்றியும் அவதூறு செய்திகளை கூறியிருக்கிறார். தான் எடுத்து வளர்க்கும் குழந்தையின் பிறந்த நாளுக்கு கவிதா அழைத்ததன் அடிப்படையில், ஒரு கட்சியின் தலைவர் என்கிற முறையில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.  கவிதா கட்சியின் கொடியை தனது காரில்  கட்டிக்கொண்டு, தன்னுடன் வியாபாரத் தொடர்பில் உள்ளவர்களை மிரட்டியிருக்கிறார். இது தெரிய வந்த போது, கட்சியினர் இது தவறு என்று கூறி அவரை அனுப்பி வைத்துள்ளனர்.  அவர் கூறியபடி, கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் யாரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் இல்லை. எனவே கவிதா கூறுவது முற்றிலும் அபாண்டமான அவதூறாகும். இதனால் கவிதா மீது கட்சி சார்பில் புகார் கொடுக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது[6].

 

பல முகங்களுடன் திருமாவளவன்

பல முகங்களுடன் திருமாவளவன்

புகார் – புகாரின் மீது புகார் – தொடரும் புகார்கள்: கட்சியின் பெயரையும், தலைவரின் பெயரையும் கவிதா என்பவர் தவறாகப் பயன்படுத்தி வந்தது தாமதமாகவே தெரிய வந்தது. அவர் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மீது கூறியுள்ள புகார்கள் அபாண்டமானவை, அவதூறு ஏற்படுத்தும் நோக்கில் அமைந்தவை. எனவே, இது தொடர்பாக காவல்துறையினரிடம் கட்சியின் சார்பில் கவிதா மீது புகார் கொடுக்க முடிவு செய்துள்ளோம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னி அரசு கூறியுள்ளார்[7]. இதுதொடர்பாக வன்னிஅரசு வெளியிட்டுள்ள அறிக்கை: “கோவையைச் சார்ந்த கவிதா என்பவர் 24-08-2013 அன்று கோவை மாநகரக் காவல் ஆணையர் அவர்களைச் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். அப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மீதும் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் மீதும் அவதூறான செய்திகளைக் கூறியிருக்கிறார். காவல்துறையினரிடம் கொடுத்த புகாரில், கோவையைச் சார்ந்த கார்த்திக், அவரது மனைவி ஜெயந்தி, வழக்கறிஞர் விஜயகுமார் மற்றும் அவரது உதவியாளரான லதா, லதாவின் கணவர் சந்துரு ஆகியோர், கவிதாவுக்குச் சொந்தமான எஸ்.டி.கே.எஸ். நர்சரிப் பள்ளியை குத்தகைக்குக் கேட்டதாகவும், பின்னர் மிரட்டிபவர்எழுதி வாங்கிக் கொண்டதாகவும் கூறியிருக்கிறார். புகாரில் எந்த இடத்திலும் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் பெயரைக் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்”.

 

நடிகரான திருமாவளவன்

நடிகரான திருமாவளவன்

பலமுறை கொடுத்துள்ள புகார்: “ஏற்கனவே சில வாரங்களுக்கு முன்பு தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரின் தனிப் பிரிவிலும், பாண்டிச்சேரி காவல் நிலையத்தில் ஒருமுறையும், பின்னர் சென்னையில் காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் இரண்டு முறையும் இதே புகாரை கவிதா அளித்திருக்கிறார். மேற்கண்ட ஐந்து புகார்களிலும் எமது கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களைப் பற்றி அவதூறாக எதையும் குறிப்பிடவில்லை. ஆனால், அதற்கு நேர்மாறாக, கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கட்சியைப் பற்றியும், தலைவரைப் பற்றியும் அபாண்டமான அவதூறு செய்திகளைக் கூறியிருக்கிறார். தான் எடுத்து வளர்க்கும் குழந்தையின் பிறந்த நாளுக்கு கவிதா அழைத்ததன் அடிப்படையில், ஒரு கட்சியின் தலைவர் என்கிற முறையிலும், தலித் அல்லாத சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி தன் குழந்தையின் விழாவுக்கு வரும்படி விடுத்த வேண்டுகோளை மதிக்க வேண்டும் என்கிற அடிப்படையிலும் அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு குழந்தையை வாழ்த்தினார். இது சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அதன் பின்னர் கட்சிக்குத் தொலைக்காட்சி தொடங்குவதற்கு தாம் நிதி உதவி அளிக்க விரும்புவதாகச் சொல்லி சென்னையில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தலைவரைச் சந்தித்திருக்கிறார். ஆனால், அவ்வாறு நிதி உதவி எதுவும் தேவையில்லை என்று எமது கட்சியின் தலைவர் மறுத்து விட்டார். அதன் பின்னர் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக அவருடன் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால், கட்சியின் கொடியை தனது காரில் கட்டிக்கொண்டு தன்னுடன் வியாபாரத் தொடர்பில் உள்ளவர்களை மிரட்டியிருக்கிறார். கட்சியின் பெயரையும், கட்சித் தலைவரின் பெயரையும், கட்சியின் கொடியையும் தொடர்ந்து அவர் தவறாகப் பயன்படுத்தி வந்தது மிகவும் காலதாமதமாகவே தெரிய வந்தது.

 

நடனமாடும் திருமாவளவன்

நடனமாடும் திருமாவளவன்

கவிதா கட்சியின்பெயரையும், கொடியையும்பயன்படுத்தியது: ஒரு முறை கட்சிக் கொடி கட்டிய காரில், கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு, தலைவர் இல்லாத நேரத்தில் வந்தார். அங்கிருந்த பொறுப்பாளர்கள் விசாரித்தபோது அவர் கட்சியைச் சேர்ந்தவர் இல்லை என்பதும், கட்சியின் பெயரையும் கட்சியின் தலைவரின் பெயரையும் தவறாகப் பயன்படுத்துவது அவர்தான் என்பதும் தெரிய வந்தது. கட்சியில் இல்லாத ஒருவர் கட்சியின் பெயரையும், கொடியையும் பயன்படுத்துவது தவறு என்று மிகுந்த கனிவோடு அறிவுறுத்தி அனுப்பி வைத்திருக்கிறார்கள். இனி அவ்வாறு பயன்படுத்த மாட்டேன் என்று சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார். இந்நிலையில், கட்சிக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று நர்சரி பள்ளியை வாங்கிய கார்த்திக் மற்றும் அவரது நண்பர்களுக்குத் தெரிந்ததால்தான், தரவேண்டிய பணத்தைத் தராமல் இழுத்தடிக்கிறார்கள், ஏமாற்றப் பார்க்கிறார்கள் என்று கவிதா கருதியிருக்கிறார். அதனால் தலைவரின் ஓட்டுநர் முத்துப்பாண்டியைத் தொடர்புகொண்டு, உங்கள் தலைவரிடம் சொல்லி கார்த்திக்கை மிரட்டிப் பணம் வாங்கித் தாருங்கள்என்று கேட்டிருக்கிறார். இதுபோன்ற விஷயங்களில் கட்சியோ, கட்சித் தலைவரோ தலையிட மாட்டார்கள் என்று சொல்லி முத்துப்பாண்டி மறுத்திருக்கிறார். அதற்கு, அப்படியா உங்களைத் தலையிட வைக்கிறேன் பார். உங்களை அசிங்கப்படுத்துகிறேன் பார் என்றெல்லாம் முத்துப்பாண்டியிடம் ஆவேசமாகப் பேசியிருக்கிறார். அதன் பின்னரே இவ்வாறு புகார் கொடுக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருக்கிறார் என்று தெரிய வருகிறது.

 

மின்சாரம் சிடி வெளியிடும் திருமாவளவன்

மின்சாரம் சிடி வெளியிடும் திருமாவளவன்

பிரச்சினை யாருடன் – விளக்கும் விசிகே: அவர் கூறியுள்ளபடி, கார்த்திக் மற்றும் அவர்களது நண்பர்கள் யாரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர் இல்லை; கட்சிக்குத் தொடர்புடையவர்களுமில்லை. அத்துடன் இந்த விவகாரத்தில் கட்சியோ, கட்சியின் தலைவரோ, தலைவரின் ஒட்டுனரோ யாரும் தலையிடவேயில்லை. கவிதா என்பவர் கூறியிருப்பது முற்றிலும் அபாண்டமான அவதூறாகும். கட்சியின் பெயரையும், தலைவரின் பெயரையும் கவிதா தவறாகப் பயன்படுத்தி வந்தது தாமதமாகவே தெரிய வந்தது. எனவே, இது தொடர்பாக காவல்துறையினரிடம் கட்சியின் சார்பில் கவிதா மீது புகார் கொடுக்க முடிவுசெய்துள்ளோம்”, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது[8].

மின்சாரம் போஸ்டரில் திருமாவளவன்

மின்சாரம் போஸ்டரில் திருமாவளவன்


[1] தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சியின் தலைவரிடம் இருந்து தனக்கு கொலை மிரட்டல் வருவதாக கோவை போலீஸ் கமிஷ்னரிடம் புகார் அளித்துள்ளார். கோவையில் 2005-2009ம் ஆண்டு முதல் நர்சரி பள்ளி வைத்து நடத்தி வந்தவர் கவிதா. இவர் பள்ளி நடத்திய போது லதா மகேஷ்வரி என்ற பெண் வீட்டு வேலைக்காக சேர்ந்துள்ளார். அவர் மூலம் கார்த்திக் என்பவர் அறிமுகமாகி உள்ளார். இவர் பள்ளியை தன்னிடம் ஒப்படைக்குமாறும், பள்ளியை விரிவுபடுத்தி முன்னேற்றி தருவதாகவும் தெரிவித்துள்ளார். பின் சிறிது நாட்களிலேயே பள்ளியை தன் பெயருக்கு பதிவு செய்து தருமாறு கொலை மிரட்டல் விடுத்ததுடன் பாலியல் தொந்தரவும் அளித்துள்ளார். இது தொடர்பாக கவிதா, போலீஸ் கமிஷ்னர் விஸ்வநாதனிடம் புகார் அளித்துள்ளார். அதில் தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர் ஒருவர் தான் தன் மீதுள்ள தனிப்பட்ட விரோதம் காரணமாக கார்த்திக்கை வைத்து தனக்கு கொலை மிரட்டல் விடுவதாகவும், அதனால் தனக்கு பாதுகாப்பு தர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். http://www.dinamalar.com/news_detail.asp?id=787988

[2] மாலைமலர், பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, ஆகஸ்ட் 24, 3:35 PM IST

http://www.maalaimalar.com/2013/08/24153534/thirumavalavan-against-woman-c.html