Archive for the ‘சிலை கடத்தல்’ Category

சேதப் பட்ட, பின்னப் பட்ட / க்ஷீணப்பட்ட சிலைகள் / விக்கிரங்கள் இருந்தால் / வைக்கப் பட்டால் / மாற்றினால் என்ன விளைவு ஏற்படும்? (3)

ஜூன் 16, 2022

சேதப் பட்ட, பின்னப் பட்ட / க்ஷீணப்பட்ட சிலைகள் / விக்கிரங்கள் இருந்தால் / வைக்கப் பட்டால் / மாற்றினால் என்ன விளைவு ஏற்படும்? (3)

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் உள்ள சோமாஸ்கந்த மூர்த்தி: மறைந்த தொல்லியல் வல்லுனர் ஆர். நாகசாமி இதைப் பற்றி விவரமாகக் கூறியுள்ளது: “காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் உள்ள சோமாஸ்கந்த மூர்த்தி, 1,000 ஆண்டுகளுக்கும் மேலாக வழிபாட்டில் உள்ள புகழ் வாய்ந்த உற்சவமூர்த்தி. எழிலே உருவான இதற்கு அழகிலோ, வரலாற்று சிறப்பிலோ, சமய மரபிலோ, பொருள் விலையிலோ ஈடிணையான உற்சவமூர்த்தி ஏதும் இல்லை. கச்சி ஏகம்பரத்தில் உரைகின்ற இப்பரமன், கலை வரலாற்றில், ஆயிரத்து நுாறு ஆண்டுகளுக்கு முன் வடிக்கப்பட்டு இவ்வளவு காலமாக, அதாவது ராஜராஜன் நுாற்றாண்டுக்கும் முன்பிருந்தே வீதி உலாவில் வந்த உத்தமத் தெய்வம். இந்த மாபெரும் தெய்வத்தை, தமிழகத்தை ஆண்ட பெருமன்னர்கள் எல்லாம் வந்து கண்டு, பக்திப் பெருக்கோடு வணங்கி சென்றிருக்கின்றனர். இத்தெய்வத்தை தாங்கி உலா வருவதற்காக, அருமையான வேலைப்பாடுகள் அமைந்த வெள்ளியினால் செய்யப்பெற்ற ரிஷப வாகனத்தை கொடுத்தான், விஜயநகர மாமன்னன் கிருஷ்ண தேவராயன்.”

கம்பீரமாக உலா வரும் 500 வருட சிலை: ஆர். நாகசாமி எடுத்துக்காட்டுவது, “பல கோடி ரூபாய் பெருமானமுள்ள அந்த வாகனம், இன்றும் அக்கோவிலில் உள்ளது. இந்த சோமாஸ்கந்த பெருமான், அதன் மீது தான் இன்றும் கம்பீரமாக உலா வருகிறார். கிருஷ்ண தேவராயன், இக்கோவிலில் உள்ள மாபெரும் தெற்கு கோபுரத்தை கட்டுவித்து, அக்கோபுர வாயிலின் வழியாக வெள்ளி ரிஷப வாகனத்தில் சோமாஸ்கந்தர் உருவை உலாவாக எழுந்தருளச் செய்து, பக்திப் பெருக்கோடு வணங்கினான். இவ்விழாவானது, இன்றைக்கு சரியாக, 500 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. அப்போதும் இக்கோபுர வாயில் வழியாக வெளிப்போன இப்பெருமானை, பக்தி பெருக்காலே வணங்கிய அடியார்கள் கோடான கோடி பேராவர். அக்கோபுரம் கட்டிய, 25 ஆண்டுகளுக்குள் மற்றும் ஒரு சிறந்த நிகழ்ச்சி இங்கு நடந்தது. சேக்கிழார் பெருமான், திருத்தொண்டார் புராணம் என்னும் பெரிய புராணத்தை எழுதினார். அந்த அற்புத காப்பியத்தை அப்படியே சமஸ்கிருத மொழியில் மொழிபெயர்த்த ஒரு கவிஞன், ‘உபமன்யு பக்த விலாசம்என்ற பெயரில், சோமாஸ்கந்தர் முன்னிலையில் இவ்விழாவிலே அரங்கேற்றினான். அதைப் போற்றிய அன்றாண்ட மன்னன், அக்கவிஞனுக்கு சிறப்பு செய்ததை குறிக்கும் கல்வெட்டானது இக்கோவிலில் இன்றும் உள்ளது.மகா சுவாமிகள், அக்கல்வெட்டைப் பற்றி பெருமையாக குறிப்பிடுவார். அவர் போன்ற எத்தனையோ முனிவர்கள் எல்லாம், உச்சிமேல் கரம் கூப்பி வணங்கி பேறு பெற்ற பெருந்தெய்வம் இந்த சோமாஸ்கந்த மூர்த்தி”.

சோமாஸ்கந்த மூர்த்தியை மாற்ற திட்டம்: ஆர். நாகசாமி எடுத்துக்காட்டுவது, “ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, காஞ்சி மாநகருக்கே அருள்பாலித்த இத்தெய்வ உருவுக்கு இப்போது ஆபத்து வந்துள்ளது. நமது நாளிதழில், 2016 ஜன., 4ல் ஒரு செய்தி வெளிவந்தது. அச்செய்தியில், இவ்வுருவத்தின் ஒரு கரத்திலுள்ள விரலில் சிறு பின்னம் ஏற்பட்டிருப்பதாலும், பீடத்தில் சற்று அசைவு உள்ளதாலும் இதை வழிபடாது, வேறு சிலை செய்து வைக்க வேண்டும் என்று, அரசின் தலைமை ஸ்தப்தி முத்தையா ஸ்தபதியாரின் அறிவுரைப்படி, இந்த சிலையை ஒதுக்கிவிட்டு புதிய சிலையை செய்து வைக்க அவரே எற்பாடு (கான்ட்ராக்ட்) செய்துள்ளதாகவும், ஊர் மக்கள் இதை எதிர்த்துள்ளதாகவும் செய்தி வந்துள்ளது[1]. அக்கோவில் அறநிலையத்துறை நிர்வாக அதிகாரி, இத்தகவலை அறிக்கையாக வெளியிட்டதாகவும் செய்தி வந்துள்ளது. இதை மாற்றுவதற்கு, முத்தையா ஸ்தபதியார் கூறுவதற்கான காரணம், ஆகம சாஸ்திரத்தின் படியும் சிற்ப சாஸ்திரத்தின் படியும், பின்னமான மூர்த்தியை பூஜிக்கக் கூடாது என்பது கொள்கை என்று கூறி உள்ளார்”.

காலம் காலமாக இருந்த தெய்வ உருவத்தை ஒதுக்கிவிட்டு புதிது செய்தால், அரசனுக்கும், ஆட்சிக்கும் மட்டுமல்லாது மக்களுக்கும் பேராபத்து[2]:  “தெய்வ உருவங்கள் பின்னமானால் என்ன செய்ய வேண்டும் என, ஆகம நுால்களும், சிற்ப நுால்களும் தெளிவாக கூறியுள்ளன. தெய்வ உருவங்களின் அங்கங்களை பெரும் அங்கம் என்றும், சிறு அங்கங்கள் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. அவற்றில் தலை, கழுத்து முதல் இடுப்பு வரை உள்ள இரண்டு அங்கங்கள் பெரு அங்கங்கள் என்றும், மற்றவை சிறு அங்கங்கள் என்றும் கூறுகின்றன. தலை அல்லது உடல் பகுதியைத் தவிர மற்ற எந்தப் பகுதியில் பின்னம் ஏற்பட்டாலும் அதை சீர்திருத்தி, அந்த பழைய உருவத்தைத் தான் பயன்படுத்த வேண்டும். இதை மீறி, காலம் காலமாக இருந்த தெய்வ உருவத்தை ஒதுக்கிவிட்டு புதிது செய்தால், அரசனுக்கும், ஆட்சிக்கும் மட்டுமல்லாது மக்களுக்கும் பேராபத்து விளையும் என்று தான் ஆகம சாஸ்திரங்களும், சிற்ப சாஸ்திரங்களும், மதம் முதலிய அனைத்து நுால்களும் கூறுகின்றன[3]; ஏனைய சிற்ப சாஸ்திரங்கள் எதுவாகிலும் இதையே வலியுறுத்துகின்றன. இதே கேள்வி, லண்டன் நடராஜர் வழக்கில் லண்டன் நீதிமன்றத்தால் கேட்கப்பட்டது. ஆகமங்களிலிருந்து மேற்கோள்கள் காட்டி, சிறு பின்னங்கள் இருந்தால் சிலைகளை ஒதுக்கினால் ஆபத்து விளையும் என்று, நான் என் சாட்சியத்தில் காட்டியுள்ளேன்[4].

நீதிக்காக எடுத்த முடிவு: “அந்நுால்களை வாங்கிப் பார்த்த லண்டன் மேல் நீதிமன்றம், அதை ஏற்றுக் கொண்டு தம் தீர்ப்பிலும் இதைக் குறிப்பிட்டுள்ளது. இது, நீதிக்காக அங்கு எடுத்த முடிவு. இங்கு யாம் கேட்பதெல்லாம், எந்த சிற்ப சாஸ்திரத்தில் அல்லது அதே போல் எந்த ஆகம சாஸ்திரத்தில், சிறு பின்னம் உடைய உருவத்தை ஒதுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது என ஆராய, அறநிலையத் துறை கடமைப்பட்டு உள்ளது. அறநிலையத்துறை ஓர் ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. அதில், அரசின் தலைமை ஸ்தபதியார், ஆகமம் என்றே ஒரு சாஸ்திரம் கிடையாது; எல்லாம் எங்கள் சிற்ப சாஸ்திரத்தில் உள்ளது என வாதாடினார். அவ்வாறெனில், ஆகம சாஸ்திரத்தின் அடிப்படையில் இவர் அரசின் ஆலோசகராக எவ்வாறு செயலாற்றுகிறார் என்பது தெரியவில்லை[5].

பண்டைய வரலாற்று சிறப்புமிக்க கோவில்களை இடிப்பதற்கும், புதுப்பிப்பதற்கும் வல்லமை கிடையாது[6]: “அதேபோல், பண்டைய வரலாற்று சிறப்புமிக்க கோவில்களை இடிப்பதற்கும், புதுப்பிப்பதற்கும் இவருக்கு வல்லமை கிடையாது; புதுக்கட்டடங்கள் கட்டுவதில் மட்டும் இவருக்கு வல்லமை உண்டு. பழம்பெரும் கட்டடங்களை புதுப்பிக்க, புதிய விஞ்ஞான முறைகளை உலக விஞ்ஞானிகள் வகுத்துள்ளனர்; அதற்கான பரிசோதனைக் கூடங்கள் ஏற்பட்டுள்ளன. அத்துறையில் வல்லமையும், முறையே பயின்றவர்களையும் தான் அப்பணியில் ஈடுபடுத்த வேண்டுமென நான், நம் சென்னை நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தேன். அதை, கனம் நீதிபதிகள் ஏற்றுக் கொண்டு ஆணை பிறப்பித்துள்ளனர். வழிபாட்டில் இருக்கும் சிலைகளை அப்புறப்படுத்துவதும், கல் மண்டபங்களை இடிப்பதும், கோவில்களையே முற்றிலும் இடித்து விடுவதும், அரசுத் துறையே அரைகுறை ஆலோசகர்களை கேட்டு செயல்படுவதும், அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும். இது குறித்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி, கோவில்களுக்கு ஏற்பட்டு வரும் அவலநிலையையும், சான்றுகளுடனான படங்களையும் கண்டு மனம் பதறி, ஒருவர் கருத்தை மட்டும் கேளாது பல அறிஞர்களையும் கேட்டு, அரசு ஏன் செயல்படக்கூடாது எனவும், நிலைமை சீராகும் வரை எவ்வித புதுப்பிக்கும் திருப்பணியும் மேற்கொள்ளக் கூடாது எனவும் தீர்ப்பு வழங்கி உள்ளார். அரசு, மக்கள் நலனுக்காக மேற்கொள்ளும் பணிகளை, இடைத்தரகர்கள் சீரழித்து விடாது பார்த்துக் கொள்வது அதிகாரிகளின் கடமையன்றோ!,” நாகசாமி இவ்வாறு 2016ல் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

பழனி பாலதண்டாயுதபாணி கோவில் சிலை ஊழல்: 1984-ஆம் ஆண்டில் நீதிபதி சதாசிவம் தலைமையில், மடாதிபதிகள், விஞ்ஞானிகள், ஆகம நிபுணர்கள் அடங்கிய குழுவினர் பழனி பாலதண்டாயுதபாணி கோயிலில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, நவபாஷானத்தால் ஆன மூலவர் சிலையை ஆய்வு செய்த பின்பு அளித்த பரிந்துரையின்படியே, இன்றளவும் நாளொன்றுக்கு 6 கால பூஜை மட்டுமே மூலவருக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தொன்மையான உற்சவரின் பழையசிலை அகற்றிவிட்டு புதிய உற்சவர் சிலையை செய்ததற்காக ஸ்தபதி அருணாச்சடேஸ்வரர் என்பவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். அவர் இறந்த பின்னர், விதிகளை மீறி 2004-ஆம் ஆண்டு 200 கிலோ எடையில் மேலும் ஒரு புதிய பஞ்சலோக சிலை செய்ய வேண்டும் என்றும், அதில் 10 கிலோ தங்கம் இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. இதற்காக திருத்தணி கோயிலில் இருந்து 10 கிலோ தங்கமும் பெறப்பட்டுள்ளது. சிலையை ஆகம விதியையும் மீறி கேளம்பாக்கத்தில் உள்ள ஸ்தபதி முத்தையாவுக்கு சொந்தமான ஸ்வர்ணம் என்ற சிற்பக் கலைக் கூடத்தில் உற்சவர் சிலை செய்யப்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டதுடன் நிர்ணயிக்கப்பட்ட 200 கிலோவுக்கு பதில் 221 கிலோ எடையில் சிலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனால், புதியதாக செய்யப்பட்ட உற்சவர் சிலை கருத்துப் போனதால் கோயிலின் பூட்டிய இருட்டறையில், பூஜையே செய்யாமல், தன்னந்தனியாக 14 ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்தது.

 2004-2018 – 14 ஆண்டுகளா இருட்டில் இருந்த விக்கிரகம் / சிலை: ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் உத்தரவின்பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சிலையை பரிசோதனை செய்த தொழில்நுட்ப நிபுணர் குழுவினர், 22 கிலோ தங்கத்தால் செய்யப்பட்ட அந்த சிலையில் 10 சதவீதம் தங்கம் கூட இல்லை, எள்ளவும் வெள்ளி இல்லை என்றும் சிலை ஐம்பொன்னால் செய்யப்படவில்லை என்று தெரிவித்தனர். இதையடுத்து சிலை செய்வதற்கு கூடுலாக 12 கிலோ தங்கம் எங்கிருந்து வந்தது? அதற்கான ஆவணங்கள் எங்கே?, ஒரு வேளை சில ஆண்டுகளுக்குப் பின் அதை வெளிநாட்டுக்கு கடத்தும் நோக்கத்தில் செய்யப்பட்டதா? என பல்வேறு கோணத்தில் விசாரணை முடுக்கி விடப்பட்டது. உற்சவர் சிலைக்காக பழனி கோயிலில் ஒரு கோடியே 31 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், சிலை செய்வதில் கையாடல் நடந்தது தெரிந்தும் 14 ஆண்டுகளாக கோயிலின் தரப்பில் இருந்து எந்தவொரு புகாரும் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, பொதுமக்களிடம் இருந்து நம்பிக்கை மோசடி செய்து தங்கம் கையாடல் செய்யப்பட்டதாக வழக்குப் பதிவு செய்த சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார், தலைமை ஸ்தபதி முத்தையாவை அதிரடியாக கைது செய்துள்ளனர்[7]. இந்த வழக்கில் பழனி கோயில் நிர்வாகி கே.கே.ராஜா என்ற மற்றொருவரும் சம்பந்தப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஸ்தபதி முத்தையா மீது ஏற்கெனவே, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சிலை செய்ததில் தங்கம் கையாடல் செய்ததாக சிவகாஞ்சி காவல்நிலையத்தில் வழக்கு உள்ளது[8].  இதை 2016லேயே நாகசாமி எடுத்துக் காட்டுகிறார். அதாவது, பழைய சிலைக்கு பதிலாக, புதிய சிலை செய்ததில் தான் ஊழல் நடந்தது.

© வேதபிரகாஷ்

15-06-2022


[1]  இதுதான், பிறகு ஊழலாகி மாறி, வழக்குகளில், கைதுகளில் முடிந்துள்ளது.

[2] தினமலர், உயிரோடு ஒன்றிய சிலையை அகற்ற வேண்டாமே,  Updated : பிப் 21, 2016  01:50 |  Added : பிப் 20, 2016  20:24.

[3] எம். முத்தையா ஸ்தபதி, ஆலய நிர்மாண பிம்பலக்ஷண சிற்பநூல், அருள்மிகு கபாளலீஸ்வரர் கோவில், சென்னை, 2003, பக்கம்.161, 260, 289, 278,

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=1461522

[5]  எம். முத்தையா ஸ்தபதி அரசின் தலைமை ஸ்தபதியாக இருந்தார், அந்நேரத்தில் இருந்தாரா, இல்லையா என்று தெரியவில்லை, ஆனால், அவர் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதை, மேலே அடிக்குறிப்பில் கொடுக்கப் பட்டுள்ளது.

[6] டாக்டர் இரா. நாகசாமி, முன்னாள் இயக்குனர், தொல்லியல் துறை (ஓய்வு) –

தினமலர், உயிரோடு ஒன்றிய சிலையை அகற்ற வேண்டாமே,  Updated : பிப் 21, 2016  01:50 |  Added : பிப் 20, 2016  20:24.

[7] தினமணி, பழனி பால தண்டாயுதபாணி கோயில் உற்சவர் சிலை முறைகேடு: தலைமை ஸ்தபதி முத்தையா கைது, By DIN  |   Published On : 25th March 2018 10:02 PM  |   Last Updated : 25th March 2018 10:02 PM.

[8] https://www.dinamani.com/latest-news/2018/mar/25/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2887271.html

இரண்டே நாளில் ராமானுஜர், முருகன், முனிவர், சித்தர், வீரமா முனிவர், மனிதன் என்றெல்லாம் அறிவிக்கப் பட்ட சிலை  – வாதிராஜர் ஆனது! (2)

ஜூன் 16, 2022

இரண்டே நாளில் ராமானுஜர், முருகன், முனிவர், சித்தர், வீரமா முனிவர், மனிதன் என்றெல்லாம் அறிவிக்கப் பட்ட சிலை  – வாதிராஜர் ஆனது! (2)

சிலைகள் உடுப்பி சோடே வாதிராஜ மடத்தின் தி.நகர் கிளைக்கு சொந்தமானது: 14-06-2022 அன்று சென்னை, பட்டினப்பாக்கம் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு சிலைகளில் ஒன்றைப் பற்றி விதவிதமாக செய்திகளை 15-06-2022 அன்று ஊடகங்கள் வெளியிட்டன. அந்நிலையில், சம்பத்தப் பட்ட மடம் என்னவாயிற்று என்று தெளிவு படுத்தியுள்ளது. இரண்டாவ்து சிலை ஶ்ரீவாதிராஜ தீர்த்தர் என்பவருடைது. ஆஞ்சநேயர், வாதிராஜர் சிலைகள், தி.நகர் வாதிராஜ மடத்திற்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது. சென்னை, பட்டினப்பாக்கம் கடற்கரையில் உள்ள துலுக்கானத்தம்மன் கோவில் எதிரே மணல் பரப்பில், இரண்டு சுவாமி சிலைகள் கிடந்தன. கருங்கல்லாலான இந்த சிலைகளை, பட்டினப்பாக்கம் போலீசார் மீட்டனர். அதில், ஒன்று பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை; மற்றொன்று வாதிராஜர் சிலை.இரண்டையும் மீட்ட போலீசார், காவல்நிலையம் எடுத்து சென்று விசாரிக்கின்றனர். இந்நிலையில், அந்த சிலைகள் உடுப்பி சோடே வாதிராஜ மடத்தின் தி.நகர் கிளைக்கு சொந்தமானது என தெரிய வந்து உள்ளது. தினமலர் மட்டும் தான், இதுவரை, இந்த செய்தியை வெளியிடுள்ளது. இது குறித்து அம்மடத்தினர் தரப்பில் கூறியதாவது:

Sode Mutt, T. Nagar

Sode Mutt, T. Nagar 09-06-2022 function

28 ஆண்டுகளுக்கு முந்தைய சிலைகள்[1]: “கடந்த 1994ல் நிறுவப்பட்ட இந்த மடம், மூல மடத்தின் பீடாதிபதியால் நிர்வகிக்கப்படுகிறது. இதற்கு பரம்பரை அறங்காவலர் இல்லை. அம்மடத்தில் கோவில் ஒன்றும் உள்ளது. அதில், 28 ஆண்டுகளுக்கு முன் நிர்மாணிக்கப்பட்ட பஞ்சமுக ஆஞ்சநயேர் சிலை, வாதிராஜர் பழைய கற்சிலைகள் இருந்தன. இந்நிலையில், அக்கோவில் கும்பாபிஷேம், 9ம் தேதி நடந்தது.இதில், உடுப்பி சோடே ஸ்ரீ வாதிராஜ மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஸ்வவல்லப தீர்த்த சுவாமிகள் பங்கேற்று நடத்தி வைத்தார். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மடத்தின் கோவிலில் ஹயக்ரீவர், பஞ்சமுகி ஆஞ்சநேயர், வாதிராஜர் மற்றும் பூதராஜரின் புதிய சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பழைய கற்சிலைகள் மென்மையான கற்கள் மற்றும் அரிக்கும் தன்மை கொண்டதாக இருந்தது. புதிய சிலைகளை பிரதிஷ்டை செய்ததால், பழைய சிலைகளை நமது பாரம்பரியத்தின்படி, இயற்கையான வகையில் நீர்நிலைகளில் விசர்ஜனம் செய்ய வேண்டும். எனவே, 12ம் தேதி பட்டினபாக்கம் கடற்கரையில் பழைய கற்சிலைகளை விஜர்சனம் செய்தோம். பட்டினப்பாக்கம் கடற்கரையில் போலீசாரால் கண்டெடுக்கப்பட்ட பஞ்சமுக ஆஞ்சநேயர், வாதிராஜர் கற்சிலைகள் எங்கள் மடத்தைச் சேர்ந்தவை. அதில், திருட்டுச் சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. அந்த சிலைகளை மீண்டும் மரபுப்படி விசர்ஜனம் செய்ய எங்களிடம் ஒப்படைக்க காவல் துறையை கோர உள்ளோம்,” இவ்வாறு அவர்கள் கூறினர்[2].

Installation Ceremony of Dieties, Sri Hayagriva ,Sri Panchamukhi Anjaneya, Bhavi Sameera Sri Vadiraja Gurusaarvabhoumaru, and Sri Bhootharajaru was performed by Sri Vishwavallabha Thirtha Swamiji ,at newly renovated Sri Hayagriva Vadiraja Mandira, T Nagar Chennai , a unit of Sode Sri Vadiraja Matha, on 8th June. Swamiji also performed Brahmakumbhabhishek to the Deities on 9th June. 2022
Sri Vadiraja Tirth

ஆக, இதனால் அறியப் படுவது என்னவென்றால்: செக்யூலரிஸம் என்றுசொல்லிக் கொண்டு, என்ன வேண்டுமானாலும் எய்யலாம், தப்பித்துக் கொள்ளலாம்.

1. அது வாதிராஜர் சிலைதான், எங்களுடையது, பழையது, விசர்ஜனம் செய்யப் பட்டது: உடுப்பி சோடே வாதிராஜ மடத்தின் தி.நகர் கிளை அறிவித்தது.

2. புதிய சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டதால், பழைய சிலைகளை நமது பாரம்பரியத்தின்படி, நீர்நிலைகளில் விசர்ஜனம் செய்ய வேண்டும்…

3. ஜூன் 12ம் தேதி பட்டினபாக்கம் கடற்கரையில் பழைய கற்சிலைகளை விதிகளின் படி விஜர்சனம் செய்தோம் – உடுப்பி மடம்.

4. அந்த சிலைகளை மீண்டும் மரபுப்படி விசர்ஜனம் செய்ய எங்களிடம் ஒப்படைக்க காவல் துறையை கோர உள்ளோம் – உடுப்பி சோடே வாதிராஜ மடம்.

5. அதற்குள் அச்சிலை வீரமாமுனிவர், சித்தர், நாயன்மார், முருகன்….. …என்றெல்லாம் கற்பனையில் ஊடகங்கள் கதை விட ஆரம்பித்தன!

6. அது மட்டுமா, தலைப்புகள் – கடத்தப்பட்ட சிலைகள், கரை ஒதுங்கிய மர்மம் ……கடத்தல் சிலிகள் போலீஸார் விசாரணை………., மணலில் புதைந்து கிடந்த சிலைகள் மீட்பு….

7. ஆக தமிழக ஊடகங்களுக்கு ஒன்று என்றால், அதனை ஒன்பதாக ஊதி பெரிதாக்கி, பொய் என்றாலும் கவலைப் படாமல் செய்தியாக்கும் திறமை உள்ளது!

8. அச்சிலை வீரமாமுனிவர் என்ற போது கூட, எந்த இந்துத்துவ வாதியும் பொங்கவில்லை, ஒருவேளை அந்த அறியப் படாத கிறிஸ்தவ மயக்கத்தில் இருந்தனர் போலும்[3].

9. இந்து மதம், இந்துக்கள் நலன், இவற்றையும் மீறிய ஏதோ ஒன்று ‘இந்துத்துவ வாதி’களைக் கட்டுப் படுத்துகிறதா?

10. ராமானுஜர், முருகன், முனிவர், சித்தர், வீரமா முனிவர், மனிதன் என்பதில் உள்ளதும், இந்துத்துவ வாதிகளின் அமைதியும் ஒன்றுதான்! இனி க்ஷீணமான, சேதப் பட்ட சிலை / விக்கிரகத்தை உபயோகப் படுத்தலாமா, கூடாதா என்பதை பார்ப்போம்.

கற்சிலைகளில் ஏற்படும் பிழைகள், தவறுகள், குறைகள், சேதங்கள்: பொதுவாக கற்களில் சிற்பம் செய்யும் போது, சில பிழைகள், தவறுகள், குறைகள் முதலியவற்றால், சேதம் / சேதங்கள் ஏற்படும். சிறந்த கைதேர்ந்த சிற்பி, அதனை / அவற்றை அணிகலன், அலங்கார வேலைப்பாடு, துணி இருப்பது போல, என்று சேர்த்து, மாற்றி வடிவமைத்து, சரிசெய்து விடுவர். கற்களில் உள்ள குறைகளாலும் அத்தகைய பிழைகள், தவறுகள், குறைகள், தேதங்களில் முடிவதுண்டு. அந்நிலையில், அச்சிலைகள் பயன்பாட்டிற்கு ஏற்றுக் கொள்வதில்லை. தூர வைப்பது, புதைப்பது, ஆற்றில் போடுவது என்று அப்புறப்படுத்தி விடுவர். நல்ல சிற்பி செய்யும் போது, கண் திறக்கும் வரை எந்த பிழையும் ஏற்படாது. இப்பொழுது, வியாபார ரீதியில் செய்வதாலும், மிஷின்கள் (machines) பயன்படுத்துவதாலும், கொஞ்சம் கவனம் சிதறினால், தவறினால் குறை ஏற்பnட்டு விடும். இப்பொழுதெல்லாம், குறை ஏற்பட்ட பக்தியை தனியாக செய்து, அடிசிவ் (adhesive) என்கின்ற ரசாயன பசை வைத்து ஒட்டியும் விடுகிறார்கள். ஏமாந்தால், குறைந்த விலைக்கு விற்றுவிடுகிறார்கள். இந்து அறநிலையத் துறையினர், பழைய விக்கிரங்கள் / சிலைகளை மாற்றி புதியதாக வைக்கிறேன் என்று பல கோடி ஊழல்களில் சிக்கியுள்ளதாக செய்திகள், வழக்குகள் உள்ளன.

விக்கிரகம், சிலை மாற்றங்களுக்கு / மாறுதலுக்கு உபயோகப் படுத்துவதை தடுக்க வேண்டும்: ஒருவேளை இத்தகைய பின்னப் பட்ட, சேதப் பட்ட, க்ஷீணப்பட்ட சிலைகள், விக்கிரங்கள் முதலியவற்றை மாற்றும் பின்னணியில், சிலை கடத்தல் போன்றவை இருப்பதால், போலீஸார் ‘அலர்ட்’ ஆகி விட்டனர் போலும். ஊடகக் காரர்களும் உசுப்பேற்றி விட்ட மயக்கத்தில் உச்சத்தில் சென்று செய்திகளை போட்டு விட்டனர் போலும். இப்பொழுது, ‘புஷ்’ என்று ஆகி விட்டாலும், நாளைக்கு மற்றவற்றிற்கும், இதே லாஜிக்கை (modus operandi) போல குற்றங்களுக்குப் பயன்படுத்தலாம். கடத்தல், கடல் தாண்டிய குற்றங்களுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். அல்லது அவ்வாறு செய்து, மாற்றி வைப்பது (duplicates / போலிகள் தயாரிப்பது) வெளியாகுமே என்றும் அச்சப் படலாம். இந்த நவீன காலத்தில், எல்லாமே நல்லதிற்கும் உபயோகப் படுத்தலாம், கட்டடற்கும் பயன்படுத்தலாம். ஒழுக்கம், நாணயம், நியாயம், தர்மம் எல்லாம் சும்மா பேசிக் கொண்டு, பணத்திற்காக வேலை செய்து கொண்டு இருந்தால், கோவில், என்றெல்லாம் பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை எனலாம். இரட்டை வேடம் போடுபவர்கள் நிச்சயமாக ஒரு நாள் மாட்டிக் கொள்வார்கள்.

© வேதபிரகாஷ்

15-06-2022


[1] தினமலர், கடற்கரையில் மீட்கப்பட்டசிலைகள் அடையாளம் தெரிந்தது, Added : ஜூன் 15, 2022  22:58; https://www.dinamalar.com/news_detail.asp?id=3054113

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=3054113

[3]  கலெக்டர் கவிதா, ஸ்டாலினுக்கு “அறியப் படாத கிறிஸ்தவம் – தமிழ்நாட்டில் ஒரு வரலாற்று தேடல்,” என்ற புத்தகத்தைக் கொடுத்ததால், இந்து அமைப்பினர், அவருக்கு, “இந்துமதம் பதில் சொல்கிறது,” என்ற புத்தகத்தைக் கொடுத்ததாக, பேஸ்புகில் பதிவுகள் போட்டனர். ஆனால், வேடிக்கை என்னவென்றால், நிவேதிதா லூயி என்ற அடிப்படைவாத கிறிஸ்தவ பெண் எழுதிய அப்புத்தகத்தை வெளியிட்டதே, “கிழக்குப் பதிப்பகம்” தான். அதனுடன் சம்பந்தப் பட்டவர்களும் இந்துத்துவவாதிகள் தான்.

பட்டினப் பாக்கம் கடற்கரையில் கிடைத்த சிலை – ராமானுஜர், முருகன், முனிவர், சித்தர், வீரமா முனிவர், மனிதன் – எது?

ஜூன் 15, 2022

பட்டினப் பாக்கம் கடற்கரையில் கிடைத்த சிலைராமானுஜர், முருகன், முனிவர், சித்தர், வீரமா முனிவர், மனிதன் எது?

14-06-2022 அன்று பட்டினப்பாக்கம்  சீனிவாசபுரம் கடற்கரையில் கிடைத்த இரண்டு சிலைகள்: தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பழமையான கோவில்களில் இருந்து திருடப்பட்ட பழங்கால சாமி சிலைகளை மீட்கும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள அருங்காட்சியகங்களில் இருந்து பழங்கால சாமி சிலைகள் சமீபத்தில் மீட்கப்பட்டு தமிழகம் கொண்டு வரப்பட்டன. இந்த சிலை களை சம்பந்தப்பட்ட கோவில்களில் ஒப்படைக் கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சென்னை பட்டினப்பாக்கம்  சீனிவாசபுரம் கடற்கரையில் உள்ள துலுக்கானத்தம்மன் கோவில் எதிரே மணல் பரப்பில் 2 பழங்கால சாமி சிலைகள் கிடந்தன[1]. கடற்கரையில் ஒதுங்கின என்றும் சில ஊடகங்கள் குறிப்பிடுகின்றன[2]. அதை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்[3].  கருங்கல்லினால் ஆன இந்த சிலைகள் பற்றி பட்டினப்பாக்கம் போலீசுக்கு தகவல் கிடைத்தது[4]. காலை சுமார் 8.30 மணியளவில் காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்[5].  அப்போது அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் 2 சிலைகள் கரை ஒதுங்கியுள்ளது என காவல் துறையினரிடம் தகவல் கூறியுள்ளனர்[6]. இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி மற்றும் போலீசார் விரைந்து சென்று சிலைகளை மீட்டனர்.

போலீஸார் கைப்பற்றி தாசில்தாரிடம் ஒப்படைத்தது: இதில் ஒரு சிலை சுமார் இரண்டரை அடி உயரம் கொண்ட சிலை ஆகும். இன்னொரு சிலை ஒன்றரை அடி உயரம் கொண்ட ராமானுஜர் சிலை போன்ற தோற்றத்தில் உள்ளது[7]. ஆனால் சிலையின் வலது புரத்தில் பாம்பு மற்றும் வேல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த சிலை முருகர் சிலையாக இருக்கலாமோ என்றும் சந்தேகிக்கப்படுகிறது[8]. 2 சிலைகளையும் போலீசார் பட்டினப்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் சிலைகளுக்கு மாலை அணிவித்து பூஜைகளையும் செய்தனர். இந்த சிலைகள் பட்டினப்பாக்கம் கடற்கரைக்கு எப்படி வந்தன? என்பது தெரிய வில்லை. கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் இந்த சிலைகளை பழமையான கோவில்களில் இருந்து திருடி வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 2 சிலைகளையும் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, அப்பகுதியைச் சேர்ந்த தாசில்தாரிடம் ஒப்படைத்தார்.

விவரங்கள் தெரியாதலால் விசாரணை தொடர்கிறது: 2 சிலைகள் பின்னணி குறித்தும், சிலைகளை கடத்தி வந்தவர்கள் பற்றியும் முழுமையாக விசாரணை நடத்த வேண்டி உள்ளது[9]. சிலை தடுப்பு பிரிவு போலீசாரிடம் 2 சிலைகளும் விரைவில் ஒப்படைக்கப்பட உள்ளன[10]. இதை தொடர்ந்து சிலை தடுப்பு பிரிவு போலீசார் கடத்தல்காரர்கள் யார்? சிலைகள் எந்த கோவில்களில் திருடப்பட் டவை? என்பது குறித்து விரிவாக விசாரணை நடத்த உள்ளனர். இதுதவிர எந்தவித தொடர்பும் இல்லாமல் பட்டினப்பாக்கம் கடற்கரையில் இரண்டு சிலைகள் மீட்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மீனவர்களிடமும் போலீசார் சிலைகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்[11]. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில் அரிய வகை சிலைகள் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது[12]. இது தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறைக்கும், தொல்லியல் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது[13]. அவர்கள் வந்து ஆய்வு செய்து எத்தனை ஆண்டுகளுக்கு முந்தைய சிலைகள் என கண்டறிவார்கள் என வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்[14]

சிலைகள் அங்குகடற்கரைக்கு எப்படி வந்தன?: தமிழக ஊடகக் காரர்கள் பொதுவாக தமக்கு எல்லாம் தெரியும் என்ற போக்கில் தான் இருப்பார்கள். அரசியல், சித்தாந்தம் போன்றவற்றாலும் பிரிந்தும், கட்டுப் பட்டும் வேலை செய்து கொண்டிருக்கின்றன. இப்பொழுது, இந்த விசயத்தை வைத்து கற்பனையில், எப்படி தவறான ஏன், விசமத் தனமான செய்திகளை பரப்புகிறார்கள் என்பதை கவனிக்கலாம். ஊடகங்கள் கிடைத்தது பற்றி தெளிவாக இல்லை என்பது, அவற்றின் வெளியிடப் பட்ட செய்திகள் மூலமாகவே அறிந்து கொள்ளலாம்:

  1. பட்டினப்பாக்கம் கடற்கரையில் 2 கற்சிலைகள் கண்டெடுப்பு
  2. கடத்தப்பட்ட சிலைகள், கரை ஒதுங்கிய மர்மம்
  3. வீசிச் சென்றது யார் என போலீஸ் விசாரணை,
  4. சிலைகள் கடற்கரையில் கிடந்தன,
  5. யாராலோ வீசப் பட்டிருந்தன.
  6. கடலலைகளால் ஒதுக்கப் பட்டன.
  7. துலுக்கானத்தம்மன் கோவில் எதிரே மணல் பரப்பில் கிடந்தன.
  8. புதைத்து வைக்கப் பட்டன.
  9. விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் பார்த்தனர்.
  10. பொதுமக்கள் பார்த்தனர்

சிறுவர்கள் பார்த்து, பெரியர்களிடம் சொல்லி, எல்லோருமே பார்த்து விட்டதால், போலீஸாருக்குத் தெரிவித்துள்ளனர். போலீஸாருக்கு முழு விவரங்கள் தெரியாதலால், ஊடகக் காரர்களுக்கு விவரங்களைக் கொடுக்கவில்லை என்றாகிறது.

கிடைத்த இன்னொரு சிலை என்ன, விவரம் யாது?: ஒரு குறிப்பிட்ட சிலை பற்றியும் யாருக்கும் ஒன்றும் தெரியாமல் இருப்பது, வேடிக்கையாக, வியப்பாக, திகைப்பாக இருக்கிறது. இரண்டு சிலைகள் கிடைத்துள்ள போது, அவற்றிற்கு இடையில் சம்மந்தம் இருக்கிறதா என்று பார்க்கலாம். ஒன்று உறுதியாக ‘பஞ்சமுக ஆஞ்சநேயர்,’ எனும்போது, மற்றதிற்கும், இதற்கும் என தொடர்பு என்று யோசிக்கலாமே? அந்த ‘டைம்ஸ் ஆப் இந்தியா.தமிழ்’ செய்தி தமாஷாக உள்ளது.

  1. மாலை மலர் – ராமானுஜர்,
  2. மாலை மலர் – முருகன்.
  3. தினகரன் – தவம் இருக்கும் முனிவர் சிலை
  4. தினமணி – ராமானுஜா் சிலை போன்று உள்ள ஒரு சிலை
  5. தினத்தந்தி – இன்னொரு சிலை சித்தரின் சிலை போன்று காணப்பட்டது.
  6. தமிழ்.இந்து – ராமானுஜர் போன்று உள்ள சிலை.
  7. டைம்ஸ் ஆப் இந்தியா.தமிழ் – வீரமா முனிவர்
  8. Times of India  – A man with a snake and ‘vel’ [பாம்பு மற்றும் வேலை வைத்திருக்கும் ஒரு மனிதன்].

இவ்வாறு ஊடகங்கங்கள், ஊடக வல்லுனர்கள், மெத்தப் படித்த நிருபர்கள் முதலியோர்களின் ஞானம் புல்லரிக்க வைக்கிறது. நிச்சயமாக, இதில் ஊடக தர்மம், போன்றவை இல்லை என்று தெரிந்து கொள்ளலாம்.

ஊடகங்கள் சரித்திர ரீதியில் உண்மையான செய்திகளை வெளியிட வேண்டும்: மைலாப்பூரில் 300 ஆண்டுகளுக்கு முன்னர், போர்ச்சுகிசியர் பிறகு ஆங்கிலேயர் கடற்கரைப் பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டபோது, பல புராதன கட்டிடங்களை ஆக்கிரமித்துக் கொண்டனர், மாற்றிக் கட்டினர், உடைக்கவும் செய்தனர். பல கோவில்களும் இடிக்கப் பட்டன. அந்நிலையில் அங்கிருந்த மாடவீதிகள், மடங்கள் முதலியவை என்னவாயிற்று என்று தெரியவில்லை. அம்மடத்து விக்கிரங்கள் என்னவாயிற்று என்று கவனிக்க வேண்டும். ஆகவே, சரித்திர ரீதியில், இப்பிரச்சினையை அணுகவேண்டும். ஏற்கெனவே கடற்கரையில் இருந்த கபாலீஸ்வரர் கோவில் இடிக்கப் பட்டு, சாந்தோம் சர்ச் கட்டப் பட்டது என்ற விசயம் பலருக்குத் தெரிந்து விட்டது. ஆகவே, அப்பிரச்சினை பெரிதாகி விடக்கூடாது என்று பார்த்துக் கொள்கின்றனர். அந்நிலையில், உண்மையறியாமல், அறிந்து கொள்ளாமல் தவறான கற்பனையான யூகங்களை செய்திகளாக வெளியிடக் கூடாது.

© வேதபிரகாஷ்

14-06-2022


[1] தினமணி, கடற்கரையில் ஒதுங்கிய கற்சிலைகள்: போலீஸார் விசாரணை, By DIN  |   Published On : 15th June 2022 01:58 AM  |   Last Updated : 15th June 2022 01:58

[2] https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2022/jun/15/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-3862276.html

[3] தினத்தந்தி, பட்டினப்பாக்கம் கடற்கரை மணலில் புதைந்து கிடந்த சாமி சிலைகள் மீட்பு, Jun 15, 8:35 am.

[4] https://www.dailythanthi.com/News/State/recovery-of-sami-idols-buried-in-the-sand-of-pattinapakkam-beach-723015

[5]  இ.டிவி.பாரத், தசாவதாரம்பட பாணியில் பட்டினப்பாக்கம் கடற்கரையில் கரை ஒதுங்கிய கற்சிலைகள் மீட்பு!, ஜூன் 14 2022 3:00 PM

[6] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/city/chennai/two-ancient-statues-were-found-at-chennai-pattinapakkam-beach/tamil-nadu20220614210550506506106

[7] மாலை மலர், பட்டினப்பாக்கம் கடற்கரையில் 2 பழங்கால சாமி சிலைகள் கண்டெடுப்பு, By Maalaimalar  ஜூன் 14 2022 3:37 PM;  (Updated: 14 ஜூன் 2022 3:37 PM).

[8] https://www.maalaimalar.com/news/state/tamil-news-2-ancient-sami-idols-found-pattinapakkam-beach-were-the-hijackers-dumped-472497

[9] டைம்ஸ் ஆப் இந்தியா.தமிழ், கடத்தப்பட்ட சிலைகள், கரை ஒதுங்கிய மர்மம்பட்டினப்பாக்கத்தில் பரபரப்பு, Divakar M | Samayam TamilUpdated: 14 Jun 2022, 5:27 pm

[10] https://tamil.samayam.com/latest-news/crime/two-ancient-statues-were-found-at-chennai-pattinapakkam-beach/articleshow/92207031.cms

[11] தினகரன், பட்டினப்பாக்கம் கடற்கரையில் பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை உட்பட 2 கற்சிலைகள் மீட்பு: கடத்தல் சிலைகளா என போலீசார் விசாரணை, | dotcom@dinakaran.com(Editor), Jun 14, 2022, 03:31 pm.

[12] https://m.dinakaran.com/article/news-detail/773753

[13] தமிழ்.இந்து, பட்டினப்பாக்கம் கடற்கரையில் 2 கற்சிலைகள் கண்டெடுப்பு: வீசிச் சென்றது யார் என போலீஸ் விசாரணை, செய்திப்பிரிவு, Published : 15 Jun 2022 06:13 AM; Last Updated : 15 Jun 2022 06:13 AM.

[14] https://www.hindutamil.in/news/tamilnadu/814055-2-statues-found-on-pattinapakkam-beach.html