Archive for the ‘கொக்கி போட்டு எடுப்பது’ Category

மழை, பெரும்மழை, புயல், வெள்ளம் வந்தால், மாம்பலம், பழைய மாம்பலம், மேற்கு மாம்பலம், மா-பள்ளம் பிரச்சினை என்ன? நீர் தேங்குவது ஏன்? (2)

திசெம்பர் 2, 2023

மழை, பெரும் மழை, புயல், வெள்ளம் வந்தால், மாம்பலம், பழைய மாம்பலம், மேற்கு மாம்பலம், மாபள்ளம் பிரச்சினை என்ன? நீர் தேங்குவது ஏன்?  (2)

அதிகமாக உள்ள ஏரி நீரை திறந்து விட்டுதான் தீர்வு காண வேண்டுமா?: அதிகப்பட்சமாக ஆவடியில் 19 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஆகவே, முன்பு போல, இத்தண்ணீர் பள்ளமான இடங்களுக்குத் தான் சென்று தேங்கும். மேற்கு மாம்பலம் பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதற்கு மாம்பலம் கால்வாயில் உள்ள பிரச்சனையே காரணம்[1]. சென்னையில் மாம்பலம் பகுதியில் இருந்து வரும் மழைநீர், அடையாறு வழியாக வங்காள விரிகுடாவிற்கு செல்லும். ஆனால், அடையாறு ஆற்றுக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறந்துவிடப்படுவதன் காரணமாக மழைநீர் அதிகமாக வந்து தேங்கும் நிலை உருவாகி உள்ளது[2].

பழையமாம்பலம்அதே சோகக் கதை தான்: பழைய மாம்பலம் ஏரிக்கரைத் தெரு, புஷ்பவதி அம்மாள் தெரு போன்ற தெருக்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது[3]. தவிர மற்ற பகுதிகளிலும் சாலை, தெருக்கள் எல்லாம் வெள்ளக்காடாக உள்ளது[4]. மேற்கு மாம்பலம், தி. நகரில் பசுல்லா சாலை, வடக்கு உஸ்மான் சாலை ஆகிய இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. மாம்பலம் கால்வாயில் உள்ள பிரச்சினையே மழை நீர் தேங்க காரணம் என்று கமிஷனர் தெரிவித்தார். சென்னையில் மேற்கு மாம்பலம், தி.நகர் உள்ளிட்ட இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளில் கீழ்தளத்தில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் 30-11-2023 அன்று இரவு அப்பகுதி மக்கள் தூக்கத்தை தொலைத்து விடிய, விடிய தவித்தனர். வீடுகளுக்குள் நாற்காலிகளை போட்டு அமர்ந்திருந்தனர்.  

பழைய/மேற்கு/கீழை மாம்பலம் பிரச்சினை பழைய கதைதான்: மேற்கு மாம்பலத்தில் இருக்கும் நான்கு சுரங்கப் பாதைகளிலும் நீர் தேங்கி, போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டது. ரங்கராஜபுரம், துரைசாமி ரோடு, மேட்லி ரோடு, அரங்கநாதன் சாலை என்ற சுரங்கப் பாதைகளில் மழைநீர் நிறந்தது. உடனடியாக அங்கிருக்கும் மோட்டார்களின் மூலம் தண்ணீரை இறைத்து அப்புறப் படுத்தும் பணியில் தொய்வு ஏற்பட்டது. ஏனெனில், அந்நீரை எங்கு இறைப்பது என்பது தான் பிரச்சினை. எங்கு இறைத்தலும், பள்ளமான இடத்தில் தான் சென்று சேரும். பிரச்சினை தொடரும். இவையெல்லாம், கால்வாயில் இறைத்து, அதன் மூலம், கடலுக்குள் சென்று கலக்குமாறு அமைத்திருக்கப் பட்டுள்ளது. அவ்வாறு செய்தால் தான், பள்ளங்களில் இருக்கும் நீரை அப்புறப்படுத்த முடிகிறது. இதற்காக, அங்கங்கு ”பம்பிங் ஸ்டேஷன்” களும் இருக்கின்றன. ஆனால், இந்த சுரங்கப் பாதைகளில் மழைநீர் நிறைந்து, தேங்கி கிடந்தது[5]. கனமழையால் சென்னை தியாகராய நகர் ரங்கராஜபுரம் சுரங்கப்பாதையில் 2 நாட்களாக தேங்கி இருந்த மழை நீர் அகற்றப்பட்டுள்ளது[6].  இதேபோல, பிருந்தாவனம் தெரு, தம்பையா ரோடு, ஏரிக்கரை என்று அருகில் இருக்கும் தெருக்களில் நீர் தேங்கியது, வீடுகளிலும் நீர் நுழைந்தது[7]. பிறகு, நீர் இறைக்கப் பட்டு, நிலைமை கொஞ்சம்-கொஞ்சமாக சீரடைந்தது[8].

மா.சுப்பிரமணியன் ஆய்வு, ஊடகக்காரர்களுக்கு அளித்த பேட்டி: சென்னையில் 30-11-2023 அன்று இரவு முழுவதும் பெய்த கனமழையால் தியாகராய நகர், மாம்பலம், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியிருக்கிறது. இதனால் மக்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அதிகாலை தொடங்கி சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ள பாதிப்புகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து முதல்வருடனான ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டார். இதற்கிடையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “கடந்த 12 மணி நேரத்தில் சென்னையின் மழையளவு சராசரியாக 10 -11 செ.மீ பதிவாகியிருக்கிறது என்றாலும், கொளத்தூர், அடையாறு பகுதிகளில் 25 செ.மீ அளவு கனமழை பெய்திருக்கிறது. ஆனால், முதல்வரின் மழைநீர் வடிகால் திட்டம் இன்று பெருமளவில் கைகூடியிருக்கிறது. மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 800 கி.மீ மழைநீர் வடிகால் கால்வாய் கட்டப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு கட்டப்பட்ட 2,100 கி.மீ மழைநீர் வடிகால் கால்வாய் தூர்வாரப்பட்டிருக்கிறது[9]. சென்னையில் இருக்கும் அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் போன்ற நீர்நிலைப் பகுதிகளும் தூர்வாரப்பட்டிருக்கின்றன[10]. அதனால், மழைநீர் வேகமாக வெளியேறிக்கொண்டிருக்கிறது[11].

மா.சுப்பிரமணியன் தொடர்ந்து விளக்கம் அளித்தது: “செம்பரப்பாக்கத்திலிருந்து 3,000 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டாலே, அடையாறு கரையோர குடிசைப் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படும்[12]. ஆனால், தற்போது 6,000 கன அடி நீர் வெளியேற்றிய பிறகும் அந்தப் பகுதி பாதிக்கப்படவில்லை என்றால், தூர்வாரும் பணி சிறப்பாக மேற்கொள்ளப்பட்டதுதான் அதற்குக் காரணம் [13]. சைதாப்பேட்டை அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று ஆய்வுசெய்தோம். அங்கிருக்கும் பல்வேறு குடிசைப் பகுதி மக்களுக்குப் பெரிய அளவிலான பாதிப்பு இல்லை[14]. ஆனால், மேற்கு மாம்பலம் கால்வாயில், செம்பரம்பாக்கத்திலிருந்து திறந்துவிடப்படும் 6,000 கன அடி நீர் பாதிப்பை ஏற்படுத்தும் சூழல் ஏற்பட்டிருப்பதால், அதை 4,000 கன அடி நீராகக் குறைக்க முதல்வர் உத்தரவிட்டிருந்தார்[15]. அதனால் மாம்பலம் பகுதியில் மட்டும் சிறு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அதுவும் படிப்படியாகக் குறையும். இன்னும் 1, 2, 3, 4-ம் தேதிகளில் கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது[16]. எனவே, தற்போது எங்கெல்லாம் மழையின் தீவிர பாதிப்பு இருக்கிறதோ, அங்கெல்லாம் உரிய பாதுகாப்புப் பணியை மேம்படுத்தவும், பாதாளச் சாக்கடை அடைப்புகளைச் சரிசெய்வதற்கான பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்றும் முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார்[17]. நேற்று இரவு மின்சாரம் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் பிரச்னைகளை சீர்செய்வதற்கானப் பணிகள் வேகப்படுத்தப்பட்டிருக்கின்றன,” எனத் தெரிவித்தார்[18].

© வேதபிரகாஷ்

02-12-2023


[1] தமிழ்.ஒன்.இந்தியா, சென்னையின் முக்கிய பகுதியில் வடியாத மழைநீர்.. காரணம் இதுதான்.. மாநகராட்சி ஆணையர் கொடுத்த விளக்கம்!, By Vignesh Selvaraj Published: Thursday, November 30, 2023, 12:26 [IST]

[2] https://tamil.oneindia.com/weather/chennai-corporation-commissioner-explains-about-why-rain-water-stagnant-in-some-places-561473.html?story=1

[3] தினத்தந்தி, தகர்த்தெடுத்த கனமழை.. மிதக்கும் மே.மாம்பலம்.. தண்ணீரால் மக்கள் கண்ணீர் , By தந்தி டிவி 30 நவம்பர் 2023 3:37 PM.

[4] https://www.thanthitv.com/news/tamilnadu/heavy-rains-people-are-crying-because-of-the-water-230157

[5] NEWS18-TAMIL, நியூஸ்18 தமிழ்நாடு செய்தி எதிரொலிரங்கராஜபுரம் சுரங்கப் பாதையில் மழைநீர் அகற்றம் | Chennai Rain, LAST UPDATED: DECEMBER 01, 2023, 10:13 IST.

[6] https://tamil.news18.com/videos/tamil-nadu/news18-tamil-nadu-news-echo-rainwater-removal-in-rangarajapuram-tunnel-chennai-rain-1254736.html

[7] தினத்தந்தி, புரட்டி அடித்த மழை;மிதந்த மே.மாம்பலம்மாநகராட்சியின் நான் ஸ்டாப் ஆக்சன்மொத்த ஏரியாவும் க்ளியர், By தந்தி டிவி, 1 டிசம்பர் 2023 10:22 AM.

[8] https://www.thanthitv.com/latest-news/torrential-rain-mild-may-mambalam-corporations-non-stop-action-whole-area-clear-230340?infinitescroll=1

[9] அத்திரிக்கை.காம், அதிகனமழை பெய்ததே தண்ணீர் தேங்க காரணம்மழை நீரை அப்புறப்படுத்தும் பணியில் 16000 மாநகராட்சி ஊழியர்கள்!, ராதாகிருஷ்ணன் தகவல், NOV 30, 2023

[10] https://patrikai.com/chennai-water-stagnation-reason-is-heavy-rain-16000-municipal-corporation-employees-are-working-to-dispose-of-rain-water-radhakrishnan-information/

[11] லோகலாப், ஆபத்தான நிலையில் அலுவலகம் செல்லும் குடியிருப்பு வாசிகள், By ஜீவன், Dec 01, 2023, 18:12 IST.

[12] https://tamil.getlokalapp.com/tamilnadu-news/thiruvallur/madhavaram/dwellers-going-to-office-in-dangerous-conditions-12117514

[13] நியூஸ்.360, கனமழையால் மேற்கு மாம்பலம் பகுதி பாதிப்புஊத்தும் பேய் மழை.. வாட்ஸ் அப் நம்பர் அறிவித்த மாநகராட்சி!!, Author: Udayachandran RadhaKrishnan, 30 November 2023, 11:39 am

[14] https://www.updatenews360.com/trending/west-mambalam-area-affected-due-to-heavy-rain-corporation-announced-whatsapp-number-301123/

[15] மாலைமலர், மழைநீர் வடிகால் பணிகள் பலன் அளித்துள்ளதுகனமழையையும் எதிர்கொள்ள தயார்!, By மாலை மலர், 30 Nov 2023 12:58 PM (Updated: 30 Nov 2023 2:15 PM).

[16] https://www.maalaimalar.com/news/state/ma-subramanian-says-rainwater-drainage-works-have-yielded-results-690841

[17] விகடன், மழை முன்னெச்சரிக்கைப் பணி: “முதல்வர் நேற்று இரவு முழுவதும் தூங்கவே இல்லை” – அமைச்சர் சேகர் பாபு, V.M. மன்சூர் கைரி, Published: 30-11-2023 at 2 PM; Updated: 30-11-2023 at 2 PM

[18] https://www.vikatan.com/government-and-politics/politics/chennai-rain-minister-msupramanian-and-sekar-babu-press-meet-at-chennai

மழை, பெரும்மழை, புயல், வெள்ளம் வந்தால், மாம்பலம், பழைய மாம்பலம், மேற்கு மாம்பலம், மா-பள்ளம் பிரச்சினை என்ன? (1)

திசெம்பர் 2, 2023

மழை, பெரும் மழை, புயல், வெள்ளம் வந்தால், மாம்பலம், பழைய மாம்பலம், மேற்கு மாம்பலம், மாபள்ளம் பிரச்சினை என்ன? (1)

29-11-2023 இரவு 30-11-2023 அன்று சென்னையில் பெய்த மழை: தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை வலுவடைந்து வருவதால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த 4 அல்லது 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்தது[1]. இந்நிலையில் 30-11-2023 அன்று இரவு முதல் இன்று காலை வரை விடிய, விடிய சென்னையில் பெய்து வரும் கன மழை காரணமாக மயிலாப்பூர், தியாகராய நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் தேங்கிய மழை நீரால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்[2]. சென்னையில் 30-11-2023 அன்று முதல் பெய்து வரும் கனமழை காரணமாக நகரின் பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. ஏற்கெனவே சாலைகள் குண்டும்-குழியாக இருந்ததால், ஆங்காங்கே ஆட்டோ, ஸ்கூட்டர்கள் சிக்கி கொண்டன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்தது.

பலவிதமான செய்திகளும் நிவாரண வேலைகளும்: தி.நகர் பஸ் நிலையத்தில் முழங்கால் அளவுக்கு தண்ணீர்தேங்கி இருந்தது. இதனால் பயணிகள் மிகவும் சிரமப்பட்டார்கள். கே.கே.நகர் அரசு மருத்துவமனைக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் அங்கிருந்த நோயாளிகள் கடும் அவதிப்பட்டனர். மருத்துவமனை ஊழியர்கள் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்…. சாலைகளில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். என்றெல்லாம் செய்திகள் கொஞ்சம்-கொஞ்சமாக வெளிவர ஆரம்பித்தன. ஆனால், ஊடகங்கள் அமுக்கியே வாசித்தன. வழக்கம் போல காதலியை காதலன் கழுத்தறுத்தான், கஞ்சா விற்பலை, சிலை திறப்பு, முதலியவைதான் முக்கியமாக இருந்தன. இங்கு கஷ்டப் பட்டவர்கள் பொது மக்களும் அந்த கடைநிலை ஊழியர்கள் மற்றும் உண்மையாக தெருக்களில்-சாலைகளில் போராடி வேலை செய்தவர்கள் தாம்.

2015க்கு பிறகு சென்னையில் அதிக கனமழை பெய்துள்ளது: 2015க்கு பிறகு சென்னையில் அதிக கனமழை பெய்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அப்பொழுது ஏரி நீரைத் திறந்து விட்டோம்,இப்பொழுதும் திறந்து விடுகிறோம் என்பது அறிவியல் சார்ந்த வேலையுமில்லை, தீர்வும் இல்லை. இது குழந்தைத் தனமானது, அறிவற்றது, ஏன் முட்டாள் தனமானது எனாலாம்.. 2015க்கும்பிறகும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்று தான் தெரிகிறது. குடிநீர்-வடிகால் துறையில் இருக்கும் விற்பனர்கள் ஒவ்வொரு ஆண்டும் அறிந்த, உணர்ந்த மற்றும் அனுபவித்த பிரச்சினைகளிலிருந்து, மீண்டு, முன்னேறி, நடந்தவை மறுபடியும் நடக்காமல் இருக்க வழி வகுக்க வேண்டும். பொறியியல் படித்து ஏ.இ, ஜே.இ என்றெல்லாம் பல பதவிகளில் இருப்பவர்கள் இவற்றில் கொஞ்சம் கவனம் செல்லுத்த வேண்டும். எந்த கொட்டத்தில் போஸ்டிங் கிடைத்தால் வசூலில் அதிகம் கிடைக்கும் என்று மட்டும் இருந்து வேலை செய்தால், அவதிபட்டு வரும்மக்களுக்கு எந்த விடிவு காலமும் வராது, தீர்வும் கிடைக்காது. இதனால் தான் கோடிகள் செலவழிப்பதாக கணக்குக் காட்டப் படுகிறது, ஆனால், 70 ஆண்டுகளில் நிலைமை மோசமாகிக் கொண்டுதான் போகிறது.

Photo courtesy – The Hindu

அடையாறு வழியாக கடலுக்குச் செல்லும் மழைநீர் ஏன் தடை படுகிறது?: மழை நீர் தொடர்ந்து சென்று கடலில் கலப்பது என்பது இயற்கையான விசயம். பிறகு, அது அவ்வாறு செல்லாமல், உள்ளேயே தேங்கி நிற்கிறது என்றால், அத்தகைய இயற்கைக்கு மாறாக எதையோ மனிதன் செய்திருக்கிறான் என்று தெரிகிறது. அவ்வாறிருக்கும் பொழுது, அந்த பிரச்சினையைக் கண்டு பிடித்து, சரிசெய்யாமல், மேன்மேலும், இருக்கும் கால்வாய்களை சீரமைப்பது, பெரிது செய்வது என்று திரும்ப-திரும்ப செய்வதினால் என்ன பலன் ஏற்படப் போகிறது என்று தெரியவில்லை. நீரிலைகள் ஆக்கிரமிக்கப் படுவது – அதாவது ஏரிகள்,குளங்கள் தூர்க்கப் பட்டு, குப்பை-மண் போடப் பட்டு, கொஞ்சம்-கொஞ்சமாக ஆக்கிரமிக்கப் பட்டு, அந்த இடம் விற்கப் படுகிறது.இப்படித்தான் கோவில் குளங்கள் காணாமல் போகின்றன, கோவில் நிலங்களும் ஆக்கிரமிக்கப் பட்டு, பட்டா போட்டு விற்கப் படுகின்றன.

செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்புஎச்சரிக்கை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்துவரும் நிலையில் சென்னையிலுள்ள முக்கிய அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதோடு, அணைக்கு வரும் நீரின் வரத்தும் அதிகரிக்கிறது. மேலும், தற்போது வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புயல் குறித்த முன்னெச்சரிக்கையினை வானிலை ஆய்வு மையம் அளித்துள்ளது. அதற்கேற்ப சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை செம்பரப்பாக்கம் ஏரியில் திறந்துவிடப்படும் உபரிநீரின் அளவு வினாடிக்கு 3,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது[3]. இதனால் சென்னை அடையாறு கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாறி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது[4]. மழைநீர்அதிக அளவில் தேங்கிய மேற்கு மாம்பலம் பகுதியில் நகராட்சி நிர்வாகத் துறை செயலர் தா.கார்த்திகேயன் நேற்று காலை ஆய்வு செய்தார்[5].  அடையாற்றில் வரும் செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீரால் மாம்பலம் கால்வாயில் நீர் வெளியேறாதது தெரியவந்தது[6]. இதையடுத்து, செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவை குறைக்க அறிவுறுத்தினார்[7]. மா.சுப்பிரமணியன் கூறியதாவது, “செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 6,000 கனஅடியில் இருந்து 4,000 கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது[8]. கால்வாய்கள் வழியாக மழைநீர் வடிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது[9]. செம்பரம்பாக்கம் ஏரியில் வினாடிக்கு 6,000 கனஅடி வரை உபரிநீர் திறந்த போதும், பெரிய அளவில் பாதிப்பில்லை[10]. மாம்பலம் கால்வாயில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, மேற்கு மாம்பலம் பகுதியில் வெள்ளம் சூழந்தது[11]. செம்பரம்பாக்கத்தில் நீர்த்திறப்பு குறைக்கப்பட்டதால் மாம்பலத்தில் வெள்ளம் இனி வடிந்துவிடும்[12]. பாதாள சாக்கடை அடைப்புகளை சரி செய்து, உடனுக்குடன் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது[13]. அடுத்தடுத்த நாட்களில் வரவுள்ள கனமழையையும் எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது,” எனத் தெரிவித்துள்ளார்[14].

© வேதபிரகாஷ்

02-12-2023

Photo courtesy – The Hindu

[1] மக்கள் குரல், சென்னையில் விடிய, விடிய கொட்டி தீர்த்த கன மழை, Posted on November 30, 2023.

[2]https://makkalkural.net/news/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95/

[3] தமிழ்.நியூஸ், செம்பரப்பாக்கம் ஏரியிலிருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு 3,000 கனஅடியாக உயர்வு, எழுதியவர் Nivetha P, Dec 01, 2023, 07:58 pm

[4] https://tamil.newsbytesapp.com/news/india/surplus-water-released-from-chembarambakkam-lake-to-3-000-cubic-metres/story

[5] தமிழ்.இந்து, சென்னையில் கனமழையால் குடியிருப்புகள், சாலைகளில் வெள்ளம்: 2 பேர் உயிரிழப்பு, செய்திப்பிரிவு, Published : 01 Dec 2023 08:02 AM, Last Updated : 01 Dec 2023 08:02 AM.

[6] https://www.hindutamil.in/news/tamilnadu/1161744-flood-in-chennai-flats-and-roads.html

[7] நியூஸ்.டி.எம், மேற்கு மாம்பலம் பகுதியில் வெள்ளம் சூழந்ததற்கு இது தான் காரணம்அமைச்சர்கள் விளக்கம்..!, By: Newstm Admin, Thu, 30 Nov 2023

[8]  https://newstm.in/tamilnadu/this-is-the-reason-for-the-floods-in-west-mambalam-area-the/cid12862721.htm

[9] தமிழ்.ஏபிபி.லிவ்மாம்பலம் மழைநீர் தேங்க இதுதான் காரணம். Entertainment. 30 Nov, 08:29 PM (IST).

[10] https://tamil.abplive.com/short-videos/news/chembarambakkam-lake-filled-due-to-heavy-rain-watch-now-153605?utm_source=desktop&utm_medium=top_nav&utm_campaign=tamil

[11] நியூஸ்,டிக், மேற்கு மாம்பலம் பகுதிகளில் மழை நீர் தேங்கியது ஏன்? : சென்னை மாநகராட்சி ஆணையர் ராதா கிருஷ்ணன் விளக்கம், Written by –Revathi, Last Updated : 2 days 30-11-2023.

[12] https://www.newstig.net/2023/11/30/why-is-rain-water-stagnant-in-west-mambalam-areas-chennai-corporation-commissioner-radha-krishnan-explained/

[13] ஏபிசி.நியூஸ், மழைநீர் தேங்கியது ஏன்?”- அமைச்சர்கள் விளக்கம்!, By santhosh, நவம்பர் 30, 2023 12:53 மணி.

[14] https://www.apcnewstamil.com/news/tamilnadu-news/rain-water-ministers-says/53697

Photo courtesy – The Hindu

ஜெனரேட்டர் வாங்கினால் மானியம், மின் திருட்டில் 48 கோடி ரூபாய் அபராதம் வசூல்!

மே 6, 2010
ஜெனரேட்டர் வாங்கினால் மானியம்
மே 06,2010,00:00  IST

General India news in detail

மதுரை : சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் செய்யும் நிறுவனங்கள் மின்வெட்டை சமாளிக்க, ஜெனரேட்டர் வாங்கினால், மாவட்ட தொழில் மையத்தின் மூலம் மானியம் வழங்கப்படுகிறது. தொடர் மின்வெட்டால் உற்பத்தி பாதிப்பு ஏற்படும் தொழில் நிறுவனங்கள், ஜெனரேட்டர் வாங்குவதற்கு 25 சதவீத மானியம் தரப்படுகிறது. அதிகபட்சமாக ஒன்றரை லட்ச ரூபாய் பெறலாம். இதற்கு 125 கே.வி.ஏ திறனுக்குள் ஜெனரேட்டர் வாங்க வேண்டும். அதற்கு மேற்பட்ட கேவிஏ திறன் ஜெனரேட்டர் வாங்கியிருந்தாலும், மானிய வரம்பு உயராது. கடந்த ஆறு மாதத்துக்குள் ஜெனரேட்டர் வாங்கியிருந்தாலும், அந்தந்த மாவட்ட தொழில் மையங்களை அணுகி, மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.

இது ஊழலுக்கு வகை செய்யும் என்று நன்றாகத் தெரிகிறது.

  1. சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் செய்யும் நிறுவனங்கள் மின்வெட்டை சமாளிக்க, ஜெனரேட்டர் வாங்கினால், மாவட்ட தொழில் மையத்தின் மூலம் மானியம் வழங்கப்படுகிறது.
  2. தொடர் மின்வெட்டால் உற்பத்தி பாதிப்பு ஏற்படும் தொழில் நிறுவனங்கள், ஜெனரேட்டர் வாங்குவதற்கு 25 சதவீத மானியம் தரப்படுகிறது.
  3. அதிகபட்சமாக ஒன்றரை லட்ச ரூபாய் பெறலாம். இதற்கு 125 கே.வி.ஏ திறனுக்குள் ஜெனரேட்டர் வாங்க வேண்டும். அதற்கு மேற்பட்ட கேவிஏ திறன் ஜெனரேட்டர் வாங்கியிருந்தாலும், மானிய வரம்பு உயராது.
  4. கடந்த ஆறு மாதத்துக்குள் ஜெனரேட்டர் வாங்கியிருந்தாலும், அந்தந்த மாவட்ட தொழில் மையங்களை அணுகி, மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.

இப்படி பட்டியல் இட்ம் போது, சமந்தப் பட்டவர்கள் காசு வாங்கித்தான், அத்தகைய சலுகை கொடுப்பார்கள் என்று சொல்லியாத் ட்ஹெரியவேண்டும்!

அந்த கம்பெனி – ஜெனெரேட்டை உற்பத்தி செய்யும் கம்பெனி வாழ்க!

மின் திருட்டில் 48 கோடி ரூபாய் அபராதம் வசூல்: கூடுதல் டி.ஜி.பி.,
மே 06,2010,00:00  IST

சென்னை : ”தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட மின் திருட்டு சோதனையில், 6,230 இடங்களில் மின்சாரம் திருடப்படுவது கண்டுபிடிக்கப்பட்டு, 48 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது,” என, மின்வாரிய அமலாக்கப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி., பாலச்சந்திரன் தெரிவித்தார்.

சென்னையில் கூடுதல் டி.ஜி.பி., பாலச்சந்திரன் அளித்த பேட்டி: தமிழகத்தில் இரண்டு கோடியே 12 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன. மின் திருட்டை கண்காணிப்பதற்காக, 17 மின் திருட்டு தடுப்பு குழுக்கள் செயல்படுகின்றன. கடந்த நிதியாண்டில் ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 797 மின் இணைப்புகள் சோதனையிடப்பட்டன. சோதனையில், 6,230 மின் திருட்டு கண்டுபிடிக்கப்பட்டது. இது கடந்தாண்டை விட 41 சதவீதம் அதிகம். குறைந்த அழுத்த வர்த்தகப் பிரிவில், அதிகபட்சமாக 3,009 மின்திருட்டு கண்டறியப்பட்டது. இது கடந்தாண்டை விட, இருமடங்காகும். முதன் முறையாக மின் திருட்டுக்கு வழக்கு பதிந்து, தண்டிப்பதை விடுத்து சமரச தொகை மற்றும் அபராத தொகை 48.12 கோடி ரூபாய் விதிக்கப்பட்டுள்ளது. இது கடந்தாண்டை விட, 175 சதவீதம் அதிகம். இதில், சமரச தொகை 3.65 கோடி ரூபாயும், அபராத தொகை 26 கோடியும் சேர்த்து 29.65 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. கொக்கி போட்டு மின்சாரம் திருடுவது உள்ளிட்ட பல்வேறு வகைகளில் மின்சாரம் திருடப்பட்டு வருகிறது. இதில், மின்திருட்டு தடுப்பு குழுக்களின் நடவடிக்கையால் கொக்கி போட்டு மின்சாரம் திருடப்படுவது ஓரளவிற்கு குறைந்துள்ளது. விவசாயத்திற்கு மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த மின்சாரத்தை பயன்படுத்தி, கிணற்றில், ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து விற்பனை செய்த வகையில், 317 திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

குறிப்பாக கோவையில் பல்லடம், ஈரோடு, கரூர், திருப்பூர் பகுதிகளில் இவை அதிகம் நடக்கின்றன. மதுரையில் தொழிற்சாலை மின் இணைப்புகளில் நடத்தப்பட்ட சோதனையின் போது ஒரு இரும்பு தொழிற்சாலையில் பெரிய அளவிலான மின் திருட்டு சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக ஒன்பது கோடியே 91 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அவர்கள் அத்தொகையை கட்டாததால் அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டு நிறுவனம் மூடப்பட்டது. சேலம் அருகில் ஓமலூரில் கடந்தாண்டு மின் திருட்டு கண்டுபிடிக்கப்பட்டு 5.75 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

மின் மீட்டரை ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கியது: மேலும், மூன்று பிளாஸ்டிக் நிறுவனங்களில், மின் மீட்டரை ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கியது கண்டுபிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. பொதுவாக அரசியல் விழாக்கள், திருவிழாக்களில் தான் மின்சாரம் கொக்கி போட்டு எடுக்கப்படுகிறது. இச்சம்பவம் முடிந்த பின்புதான் எங்களுக்கு தகவல்கள் தரப்படுகிறது. இதனால் சில நேரங்களில் தவறுகள் கண்டுபிடிக்க முடிவதில்லை. பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக, 2005ம் ஆண்டில் தமிழக அரசு ஒரு உத்தரவு பிறப்பித்தது. இதன் படி, கூட்ட அனுமதிக்காக விண்ணப்பிப்பவர்கள், மின்வாரியத்தில் மின்சாரம் பயன்படுத்துவதற்கான தடையில்லா சான்று பெற வேண்டும் என்று உள்ளது. இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகளிடம் மீண்டும் வலியுறுத்தப்படும். மேலும், அந்தந்த பகுதி மின்வாரிய இயக்கப் பொறியாளர்களுக்கும் தகவல்கள் தெரிவிக்கப்படும். இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.

மேலும் மூன்று தடுப்பு குழுக்கள்! மின்வாரிய விஜிலென்ஸ் கூடுதல் டி.ஜி.பி., பாலச்சந்திரனிடம், திருட்டு தடுப்பு குழுக்கள் போதுமானதாக உள்ளதா என கேட்ட போது, ”தற்போது 17 திருட்டு தடுப்பு குழுக்கள் உள்ளன. இவை போதுமானதாக இல்லை. ஒவ்வொரு குழுவிலும் ஒரு முதன்மை பொறியாளர், ஒரு போலீஸ் தலைமை காவலர் உட்பட ஒன்பது பேர் உள்ளனர். நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரிக்கு ஒரு குழுதான் உள்ளது. தற்போது தூத்துக்குடி, ஈரோடு, சேலம் ஆகிய பகுதிகளுக்கு தனித்தனியாக மூன்று குழுக்கள் வேண்டும் என கேட்க திட்டமிட்டுள்ளோம்,” என்றார்.