Posts Tagged ‘முருகன்’

பட்டினப் பாக்கம் கடற்கரையில் கிடைத்த சிலை – ராமானுஜர், முருகன், முனிவர், சித்தர், வீரமா முனிவர், மனிதன் – எது?

ஜூன் 15, 2022

பட்டினப் பாக்கம் கடற்கரையில் கிடைத்த சிலைராமானுஜர், முருகன், முனிவர், சித்தர், வீரமா முனிவர், மனிதன் எது?

14-06-2022 அன்று பட்டினப்பாக்கம்  சீனிவாசபுரம் கடற்கரையில் கிடைத்த இரண்டு சிலைகள்: தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பழமையான கோவில்களில் இருந்து திருடப்பட்ட பழங்கால சாமி சிலைகளை மீட்கும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள அருங்காட்சியகங்களில் இருந்து பழங்கால சாமி சிலைகள் சமீபத்தில் மீட்கப்பட்டு தமிழகம் கொண்டு வரப்பட்டன. இந்த சிலை களை சம்பந்தப்பட்ட கோவில்களில் ஒப்படைக் கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சென்னை பட்டினப்பாக்கம்  சீனிவாசபுரம் கடற்கரையில் உள்ள துலுக்கானத்தம்மன் கோவில் எதிரே மணல் பரப்பில் 2 பழங்கால சாமி சிலைகள் கிடந்தன[1]. கடற்கரையில் ஒதுங்கின என்றும் சில ஊடகங்கள் குறிப்பிடுகின்றன[2]. அதை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்[3].  கருங்கல்லினால் ஆன இந்த சிலைகள் பற்றி பட்டினப்பாக்கம் போலீசுக்கு தகவல் கிடைத்தது[4]. காலை சுமார் 8.30 மணியளவில் காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்[5].  அப்போது அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் 2 சிலைகள் கரை ஒதுங்கியுள்ளது என காவல் துறையினரிடம் தகவல் கூறியுள்ளனர்[6]. இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி மற்றும் போலீசார் விரைந்து சென்று சிலைகளை மீட்டனர்.

போலீஸார் கைப்பற்றி தாசில்தாரிடம் ஒப்படைத்தது: இதில் ஒரு சிலை சுமார் இரண்டரை அடி உயரம் கொண்ட சிலை ஆகும். இன்னொரு சிலை ஒன்றரை அடி உயரம் கொண்ட ராமானுஜர் சிலை போன்ற தோற்றத்தில் உள்ளது[7]. ஆனால் சிலையின் வலது புரத்தில் பாம்பு மற்றும் வேல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த சிலை முருகர் சிலையாக இருக்கலாமோ என்றும் சந்தேகிக்கப்படுகிறது[8]. 2 சிலைகளையும் போலீசார் பட்டினப்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் சிலைகளுக்கு மாலை அணிவித்து பூஜைகளையும் செய்தனர். இந்த சிலைகள் பட்டினப்பாக்கம் கடற்கரைக்கு எப்படி வந்தன? என்பது தெரிய வில்லை. கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் இந்த சிலைகளை பழமையான கோவில்களில் இருந்து திருடி வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 2 சிலைகளையும் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, அப்பகுதியைச் சேர்ந்த தாசில்தாரிடம் ஒப்படைத்தார்.

விவரங்கள் தெரியாதலால் விசாரணை தொடர்கிறது: 2 சிலைகள் பின்னணி குறித்தும், சிலைகளை கடத்தி வந்தவர்கள் பற்றியும் முழுமையாக விசாரணை நடத்த வேண்டி உள்ளது[9]. சிலை தடுப்பு பிரிவு போலீசாரிடம் 2 சிலைகளும் விரைவில் ஒப்படைக்கப்பட உள்ளன[10]. இதை தொடர்ந்து சிலை தடுப்பு பிரிவு போலீசார் கடத்தல்காரர்கள் யார்? சிலைகள் எந்த கோவில்களில் திருடப்பட் டவை? என்பது குறித்து விரிவாக விசாரணை நடத்த உள்ளனர். இதுதவிர எந்தவித தொடர்பும் இல்லாமல் பட்டினப்பாக்கம் கடற்கரையில் இரண்டு சிலைகள் மீட்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மீனவர்களிடமும் போலீசார் சிலைகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்[11]. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில் அரிய வகை சிலைகள் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது[12]. இது தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறைக்கும், தொல்லியல் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது[13]. அவர்கள் வந்து ஆய்வு செய்து எத்தனை ஆண்டுகளுக்கு முந்தைய சிலைகள் என கண்டறிவார்கள் என வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்[14]

சிலைகள் அங்குகடற்கரைக்கு எப்படி வந்தன?: தமிழக ஊடகக் காரர்கள் பொதுவாக தமக்கு எல்லாம் தெரியும் என்ற போக்கில் தான் இருப்பார்கள். அரசியல், சித்தாந்தம் போன்றவற்றாலும் பிரிந்தும், கட்டுப் பட்டும் வேலை செய்து கொண்டிருக்கின்றன. இப்பொழுது, இந்த விசயத்தை வைத்து கற்பனையில், எப்படி தவறான ஏன், விசமத் தனமான செய்திகளை பரப்புகிறார்கள் என்பதை கவனிக்கலாம். ஊடகங்கள் கிடைத்தது பற்றி தெளிவாக இல்லை என்பது, அவற்றின் வெளியிடப் பட்ட செய்திகள் மூலமாகவே அறிந்து கொள்ளலாம்:

  1. பட்டினப்பாக்கம் கடற்கரையில் 2 கற்சிலைகள் கண்டெடுப்பு
  2. கடத்தப்பட்ட சிலைகள், கரை ஒதுங்கிய மர்மம்
  3. வீசிச் சென்றது யார் என போலீஸ் விசாரணை,
  4. சிலைகள் கடற்கரையில் கிடந்தன,
  5. யாராலோ வீசப் பட்டிருந்தன.
  6. கடலலைகளால் ஒதுக்கப் பட்டன.
  7. துலுக்கானத்தம்மன் கோவில் எதிரே மணல் பரப்பில் கிடந்தன.
  8. புதைத்து வைக்கப் பட்டன.
  9. விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் பார்த்தனர்.
  10. பொதுமக்கள் பார்த்தனர்

சிறுவர்கள் பார்த்து, பெரியர்களிடம் சொல்லி, எல்லோருமே பார்த்து விட்டதால், போலீஸாருக்குத் தெரிவித்துள்ளனர். போலீஸாருக்கு முழு விவரங்கள் தெரியாதலால், ஊடகக் காரர்களுக்கு விவரங்களைக் கொடுக்கவில்லை என்றாகிறது.

கிடைத்த இன்னொரு சிலை என்ன, விவரம் யாது?: ஒரு குறிப்பிட்ட சிலை பற்றியும் யாருக்கும் ஒன்றும் தெரியாமல் இருப்பது, வேடிக்கையாக, வியப்பாக, திகைப்பாக இருக்கிறது. இரண்டு சிலைகள் கிடைத்துள்ள போது, அவற்றிற்கு இடையில் சம்மந்தம் இருக்கிறதா என்று பார்க்கலாம். ஒன்று உறுதியாக ‘பஞ்சமுக ஆஞ்சநேயர்,’ எனும்போது, மற்றதிற்கும், இதற்கும் என தொடர்பு என்று யோசிக்கலாமே? அந்த ‘டைம்ஸ் ஆப் இந்தியா.தமிழ்’ செய்தி தமாஷாக உள்ளது.

  1. மாலை மலர் – ராமானுஜர்,
  2. மாலை மலர் – முருகன்.
  3. தினகரன் – தவம் இருக்கும் முனிவர் சிலை
  4. தினமணி – ராமானுஜா் சிலை போன்று உள்ள ஒரு சிலை
  5. தினத்தந்தி – இன்னொரு சிலை சித்தரின் சிலை போன்று காணப்பட்டது.
  6. தமிழ்.இந்து – ராமானுஜர் போன்று உள்ள சிலை.
  7. டைம்ஸ் ஆப் இந்தியா.தமிழ் – வீரமா முனிவர்
  8. Times of India  – A man with a snake and ‘vel’ [பாம்பு மற்றும் வேலை வைத்திருக்கும் ஒரு மனிதன்].

இவ்வாறு ஊடகங்கங்கள், ஊடக வல்லுனர்கள், மெத்தப் படித்த நிருபர்கள் முதலியோர்களின் ஞானம் புல்லரிக்க வைக்கிறது. நிச்சயமாக, இதில் ஊடக தர்மம், போன்றவை இல்லை என்று தெரிந்து கொள்ளலாம்.

ஊடகங்கள் சரித்திர ரீதியில் உண்மையான செய்திகளை வெளியிட வேண்டும்: மைலாப்பூரில் 300 ஆண்டுகளுக்கு முன்னர், போர்ச்சுகிசியர் பிறகு ஆங்கிலேயர் கடற்கரைப் பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டபோது, பல புராதன கட்டிடங்களை ஆக்கிரமித்துக் கொண்டனர், மாற்றிக் கட்டினர், உடைக்கவும் செய்தனர். பல கோவில்களும் இடிக்கப் பட்டன. அந்நிலையில் அங்கிருந்த மாடவீதிகள், மடங்கள் முதலியவை என்னவாயிற்று என்று தெரியவில்லை. அம்மடத்து விக்கிரங்கள் என்னவாயிற்று என்று கவனிக்க வேண்டும். ஆகவே, சரித்திர ரீதியில், இப்பிரச்சினையை அணுகவேண்டும். ஏற்கெனவே கடற்கரையில் இருந்த கபாலீஸ்வரர் கோவில் இடிக்கப் பட்டு, சாந்தோம் சர்ச் கட்டப் பட்டது என்ற விசயம் பலருக்குத் தெரிந்து விட்டது. ஆகவே, அப்பிரச்சினை பெரிதாகி விடக்கூடாது என்று பார்த்துக் கொள்கின்றனர். அந்நிலையில், உண்மையறியாமல், அறிந்து கொள்ளாமல் தவறான கற்பனையான யூகங்களை செய்திகளாக வெளியிடக் கூடாது.

© வேதபிரகாஷ்

14-06-2022


[1] தினமணி, கடற்கரையில் ஒதுங்கிய கற்சிலைகள்: போலீஸார் விசாரணை, By DIN  |   Published On : 15th June 2022 01:58 AM  |   Last Updated : 15th June 2022 01:58

[2] https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2022/jun/15/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-3862276.html

[3] தினத்தந்தி, பட்டினப்பாக்கம் கடற்கரை மணலில் புதைந்து கிடந்த சாமி சிலைகள் மீட்பு, Jun 15, 8:35 am.

[4] https://www.dailythanthi.com/News/State/recovery-of-sami-idols-buried-in-the-sand-of-pattinapakkam-beach-723015

[5]  இ.டிவி.பாரத், தசாவதாரம்பட பாணியில் பட்டினப்பாக்கம் கடற்கரையில் கரை ஒதுங்கிய கற்சிலைகள் மீட்பு!, ஜூன் 14 2022 3:00 PM

[6] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/city/chennai/two-ancient-statues-were-found-at-chennai-pattinapakkam-beach/tamil-nadu20220614210550506506106

[7] மாலை மலர், பட்டினப்பாக்கம் கடற்கரையில் 2 பழங்கால சாமி சிலைகள் கண்டெடுப்பு, By Maalaimalar  ஜூன் 14 2022 3:37 PM;  (Updated: 14 ஜூன் 2022 3:37 PM).

[8] https://www.maalaimalar.com/news/state/tamil-news-2-ancient-sami-idols-found-pattinapakkam-beach-were-the-hijackers-dumped-472497

[9] டைம்ஸ் ஆப் இந்தியா.தமிழ், கடத்தப்பட்ட சிலைகள், கரை ஒதுங்கிய மர்மம்பட்டினப்பாக்கத்தில் பரபரப்பு, Divakar M | Samayam TamilUpdated: 14 Jun 2022, 5:27 pm

[10] https://tamil.samayam.com/latest-news/crime/two-ancient-statues-were-found-at-chennai-pattinapakkam-beach/articleshow/92207031.cms

[11] தினகரன், பட்டினப்பாக்கம் கடற்கரையில் பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை உட்பட 2 கற்சிலைகள் மீட்பு: கடத்தல் சிலைகளா என போலீசார் விசாரணை, | dotcom@dinakaran.com(Editor), Jun 14, 2022, 03:31 pm.

[12] https://m.dinakaran.com/article/news-detail/773753

[13] தமிழ்.இந்து, பட்டினப்பாக்கம் கடற்கரையில் 2 கற்சிலைகள் கண்டெடுப்பு: வீசிச் சென்றது யார் என போலீஸ் விசாரணை, செய்திப்பிரிவு, Published : 15 Jun 2022 06:13 AM; Last Updated : 15 Jun 2022 06:13 AM.

[14] https://www.hindutamil.in/news/tamilnadu/814055-2-statues-found-on-pattinapakkam-beach.html