Posts Tagged ‘சோணகிரி’

மெட்ராஸ் பாஷை செத்தபாடையிலிருந்து (சமஸ்கிருதம்) வந்ததா?

செப்ரெம்பர் 21, 2010

மெட்ராஸ் பாஷை செத்தபாடையிலிருந்து வந்ததா? தமிழில் உள்ள சில திட்டுக்கள் எல்லாம் செத்தப்பாடையில் இருந்து பெறப்பட்டதைக் கட்டு வியப்பாக உள்ளது. கஸ்மாலம்[1], கர்மாந்தரம்[2], துராந்துருவே[3], பேமாணி[4], சோணகிரி[5]…….இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.


[1] கஸ்மாலம் = கசு + மலம் = மனிதன் இரண்டையும் அகற்றவேண்டும். அதாவது அவற்றுடன் இருப்பவன், அவைகளாகவே ஆகிறான்.

[2] கருமம் + அந்தரம் = கருமத்தின் முடிவு, செய்த வினையின் முடிவு.

[3] துராந்துவே = காணாமல் போய் விடுவாய், அதாவது துவாரம் + அந்தரம் = துவாரந்தரம் என்பதுதான், துராந்துருவே / துராந்துவே ஆகிறது. அதாவது போய் சேரும் முடுவு தெரியாமல் போய் விடுவாய் என்ரு பொருள்.

[4] நல்ல மனிதத்தன்மைக்கு எதிர்ப்பதமாக உபயோகப் படும் கெட்ட வார்த்தை.

[5] சோணகிரி = சோணம் + கிரி = பொன்னால் ஆன மலை, அதாவது, அத்தகைய மலை எங்கும் இருக்காது. எனெவே அப்படி சொல்லி ஏமாற்றினால், அதை நம்புகிறவர்கள் தாம் “சோணகிரி”!